சனி, மார்ச் 20, 2010

ஹெச்டி ஒலிபரப்பும், சன் டைரக்ட்டின் ஏமாற்றுதலும்.

முன்பு ரேடியோ மட்டுமே இருந்த காலத்தில் ஸ்டீரியோ என்பது தியேட்டர்களில் பாடல்களின் இடையில் தியேட்டர் சுவற்றில் உள்ள ஸ்பீக்கர்கள் மூலமாக வரும் ஒலி என்பது மட்டுமே நமக்கு தெரியும். அதுவும் 85 வரை பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு அப்போது வந்த சோனி, நேஷனல் பானசோனிக் டேப் ரிகார்டர்கள் மூலம் தெரிந்திருப்பார்கள்.

அந்த கால கட்டத்தில் நான் இலங்கை ரேடியோவின் தீவிர ரசிகன். சார்ட் வேவில் எடுக்கும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக சேவையின் ஞாயிறு தின நிகழ்ச்சிகளில் மூழ்கிக் கிடப்பதுண்டு.

பக்கத்தில் உள்ள தறிக்குடோனில் எப்போதும் இலங்கை வர்த்தக ஒலிபரப்பு " விரும்பிக்கேட்டது அப்பா, அம்மா , அப்பம்மா, மாமா , பாட்டி என வரிசையாக உறவு முறைகளைக் கூறுவது காதில் விழுந்து கொண்டே இருக்கும்.

அந்த காலகட்டத்தில் மத்திய அலைவரிசையில் புதிதாக கொழும்பு சர்வதேச வானொலி என மாலை நேரத்தில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டது. அது ஆரம்பித்து சில நாட்களிலேயே தமிழ் நாடு முழுக்க விளம்பரங்களைப் பெற ஆரம்பித்து புகழ் பெற ஆரம்பித்தது.

மேலும் அந்த நேரத்தில் நமது இந்திய வானொலிகள் புதிய திரைப்பட பாடல்களை ஒலிபரப்பாததும் கூட ஒரு காரணமே.

மேலும் சில நாட்களிலேயே காலை ஒலிபரப்பையும் , ஞாயிறு முழு நேர ஒலிபரப்பையும் ஆரம்பித்தது , மட்டுமல்லாமல் தினமலர், லலிதா ஜுவல்லரியின் "பாட்டுக்குப்பாட்டு" என ஒரே நேரத்தில் சன் டிவியிலும், தனது வானொலியிலும் ஒலிபரப்பியது.

ஆனால் இந்த வானொலியின் ஒலிபரப்பின் தெளிவு விசயத்தில்
இந்திய வானொலிகள் இதன் கிட்டே கூட நெருங்க முடியாது.

அப்போதுதான் திடிரென இலங்கை வானொலியின் சார்ட்வேவ் அலைவரிசையில் தொடர்ச்சியாக எப். எம் க்கு மாறுங்கள் , ஸ்டீரியோ ஒலிபரப்பை பெற்று ரசித்து மகிழுங்கள் என்று அறிவிக்கப்பட்டது.

வீடு வீட்டுக்கு டிவி பரவ ஆரம்பித்த கால கட்டம், ஊரில் உள்ள ஒரு சாலிடர் டிவி அல்லது டயனோரா டிவி ஓட ஆரம்பித்தால் அந்த
லைனில் உள்ள அனைத்து ரேடியோக்கள் மாவு அரைப்பது போன்ற ஒரு சத்தத்தை அளீக்க ஆரம்பித்தன. இதனால் மத்திய அலைவரிசை,சார்ட் வேவ் அலைவரிசை நிகழ்ச்சிகளை கேட்க எரிச்சல் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் சென்னையில் மட்டுமே இரண்டு எப்.எம் ரேடியோ நிலையங்கள் சாயந்திர வேளையில் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. நாங்கள் இதை இந்து அல்லது ஏதேனும் ஒரு ஆங்கில நாளீதழின் வானொலி நிகழ்ச்சி அட்டவணைகளைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.

சரி எப். எம் வானொலி ஒன்றை நாம் வாங்கினால் இலங்கை நிகழ்ச்சிகளை கேட்கலாமோ என்னவோ என்று 96 ல் ஒரு பிலிப்ஸ் டூ இன் ஒன் ரூ 4000/ க்கு வாங்கினோம். வீட்டுக்கு வந்த பிறகு சரியான ரேடியோவில் உள்ள எப்.எம் பட்டனை ஆன் செய்தால் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஒரே சொய்ங் சத்தமே கேட்டது.

அப்புறம்தான் அந்த நேரத்தில் டெல்லி டூர் போகும்போது ஒரு எப்.எம், டிவி, 10 பேண்ட் சார்ட்வேவ் என உள்ள ஒரு சிறிய ரேடியோ,எப்.எம் மைக் என ரூ 350/ க்கு வாங்கினோம்.

ஆனா டெல்லியில் சூப்பரா எப்.எம் மில் பாட்டுப்போட்டாஙக.

அப்புறம் அந்த ரேடியோவை வைத்து தூர்தர்ஷன் படங்களை வானொலியில் கேட்டுட்டு இருந்தோம். எப்.எம் மைக்க வைத்து ஊர்ல நடக்குற கிரிக்கெட் நிகழ்ச்சியில் கமெண்ட்ரிய ஒலிபரப்பினோம். மைக்கோட சின்ன ஒயரில கொஞ்சம் நிளமாக ஒயர் இணைத்து கொஞ்சம் உயரமா டிவி ஆண்டெனா அளவுக்கு வைத்து ஒலிபரப்பினா சுத்துவட்டம் 4 கிமீக்கு தெளீவாக் கேட்கும்.

ஆனா என்ன குறை , அப்ப இந்த மாதிரி எப்.எம் எல்லார் வீட்டிலும் இல்லை. அதனால் தெரிஞ்சவங்க அதாவது சோனி ரேடியோ வெச்சிருக்கிறவங்கிட்ட முந்தியே சொல்லி கேக்க சொல்வோம்.

அப்புறம் இதே முறையில ஆம்ப் வெச்சு சன்டிவியக் கூட 5 கிமீக்கு டிவியில எடுக்கறாப்புல ஒளிபரப்பியிருக்கோம்.

அதுக்கப்புறம் கொடைக்கானல் ஆரம்பிச்சு , அதே நேரத்துல சூரியன் எப்.எம் ஆரம்பிச்சதுக்கப்புறந்தான் பரணில் தூங்கீட்டு இருந்த ரேடியோப்பொட்டியெல்லாம் தூசு தட்டப்பட்டது.

அதே வேளையில் எப். எம் போர்டு ரூ 150/ க்கு எல்லா ரேடியோவிலும் மாட்ட மறுபடியும் ரேடியோ கேக்கறது அதிகமாயிருச்சு.

ஆனா அதிலயும் ஒரு வித்தியாசம் என்னன்னா ஸ்டீரியோ போர்டு மாட்டி , ஆம்ப் வெச்சா ரெண்டு சைடு ஸ்பீக்கர்லயும் மாறி , மாறி இசை வரும் போது தான் " ஆகா ரேடியோ கேட்பது இன்னைக்குத்தான் முழுமையானது "அப்படின்னு ஒரு நெனப்பு நமக்கு வந்தது.

அந்த நேரத்தில நமக்கு வில்லேஜ் பக்கத்தில ஏதோ ஒரு வீட்டில் இருந்து சன் டிவிய பெரிய கொடை வெச்சு பாப்பாங்க.

நான் ஹாஸ்டல் சேந்தப்ப புதுசா "சி" பேண்ட் - டிஸ் மாட்டி வீடியோ ரெப் அப்படின்னு மூன்று வருட மாணவர்களீல் ஒரு இயர்க்கு ஒரு ஆளா , அதில முதலாம் ஆண்டுக்கு ஒரு ரெப் அப்படின்னு நானும் செலக்ட் ஆனதால நமக்கு ஜென்ம பலன் கிட்டிய ஒரு சந்தோசம்.

பின்ன அந்த காலத்துல எல்லா வீட்டிலயும் டிவி கிடையாது. அதுதான் காரணம்.

வார்டன் என்னை ரெப்பாக எடுத்ததிலயும் ஒரு குற்றமுமில்லை. நடுச்சாமத்துல எழுப்பி " ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" அல்லது " கோல்டன் ஈகிள் " டைரக்சனுக்கு டிஸ் மாத்தச் சொன்னாலும் கரைக்டா எந்த அளவுமில்லாமல் மாற்றும் ஒரே ஆள் நாந்தான்ங்கிறது நமக்கு பெருமை.

அப்புறம் காலேஜ் முடிச்சப்புறம் கொஞ்ச நாள் அல்ல பல வருடம் கழித்துதான் டீடீ டைரக்ட் என்று கேயு பேண்ட் மூலமாக சன்டீவிய ஒளிபரப்பினாங்க. அது கொஞ்சம் பேமஸ் ஆக, நம்ம சன்காரங்ககொஞ்சம் வித்தியாசமான ஆளுங்க தானே.

உடனே சன்டைரக்ட் அப்படின்னு ஆரம்பிச்சு கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. டிஸ் டிவி அப்ப நம்பர் ஒன்னா இருந்தது. ஆனா கொஞ்சம் மாதத்திலேயே சன்டைரக்ட் நம்பர் ஒன் ஆயிருச்சு.

இப்ப அதுக்கும் போட்டியா டாடா ஸ்கை, ரிலையன்ஸ் , வீடியோகான், ஏர்டெல் அப்படின்னு பல பேர் போட்டியா வரவும் உடனே சன் டைரக்ட ஹெச்டீ அப்படின்னு ஆரம்பிச்சு அதில ஸ்டிரியோ, 5.1 அப்படின்னு நம்ம காதுல பூச்சுத்துறாங்க.

அது வேற ஒண்ணுமில்ல , இப்ப வந்த சன் டீடீஹெச் பாக்ஸ்ஸில பின்னாடி கோ ஆக்ஸில் ,ஆப்டிகல் அப்படின்னு ஒரு சிலதுல இருக்கும். அதுல அவுட்புட் எடுத்து அதை ஹோம் தியெட்டரில் இணைத்து கேட்டுப்பாருங்க ,அவங்க சொல்ற குவாலிட்டி நமக்கு நம்ம பாக்ஸில கிடைக்கும்.ஆனா அவங்க இதுக்காக குடுக்குற பாக்ஸ் விலை ரூ 10000/. ஏமாறாதீங்க. நண்பர்களே.

ஆனா சன் டைரக்ட வாங்க விரும்புறங்க அதுக்கு பதிலா வீடியோகான் வாங்கலாம் , ஏன்னா இதுல மாசம் ரூ 150/க்கு டிஸ்கவரி, அனிமல் பிளானட், நெஷனல் ஜியோகிராபிக், நியோ உட்பட அனைத்து ஸ்போர்ட்ஸ் , எம்ஜிஎம், சன் குரூப் ஆதித்தியா தவிர,கலைஞர் ,இசை அருவி, சிரிப்பொலி, ஜெயா மேக்ஸ், செட்மேக்ஸ் என பல சேனல்கள். ஆனா சன் டைரக்ட்டில செட் மேக்ஸ்க்கு தனி கட்டணம்,ஸ்போர்ட்ஸ்க்கு தனி கட்டணம்.

ஒரெ ஒரு குறை வீடியோகானில ஸ்டிரியோ சவுண்ட் குவாலிட்டி தமிழ் சேனல்களில் கொஞ்சம் கம்மி .


விளம்பரத்த பாக்காதீங்க , உள்ள பாருங்க .

..

4 கருத்துகள்:

  1. குமார்,
    சூப்பர்.....சீக்கரம் சன் குருப்பல சேர்ந்திடுவீங்க போல!!வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. Half backed. HD is not just sound. Programs to be created in HD format. Dont write unless you that.

    பதிலளிநீக்கு
  3. ஹெச்டீ , என்ன அப்படின்னா படம் மட்டும் வித்தியாசமா வரும் அப்படிங்கறது எங்களுக்கும் தெரியும். நார்மலா டீடீஹெச் ஒளிபரப்புலேயே படத்தெளிவு எல்லா ப்ளாஸ்மா, எல்சிடி , டிவிக்கும் வரும் அப்படிங்கறதும் நமக்கு அல்ல எங்களுக்கு நல்லா தெரியும். ஏன்னா சன் டீடீஹெச் பாக்ஸ் 300 இதுவரைக்கும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மாட்டிருக்கறோம்.

    நான் சொல்றது என்னன்னா 5.1 சவுண்ட்டும் வரும் ,மொத்தம் 111 + சேனல் அப்படிங்கறத பத்தித்தான்.

    ஏன்னா ஏற்கனவே ரூ 500 க்கு ஆறுமாசம் , இன்ஸ்டலேஷன் தனி அப்படின்னு ஏமாத்தி விளம்பரம் பண்றவங்கதானே.

    அதும் போக பெயரில்லாம இப்படி இங்கிலீஷ் எல்லாம் எழுதாதீங்க , நான் அர்த்தம் தெரியாமே என்னவோ ஏதுவோனு பயந்து போயிட்டேன்.

    பதிலளிநீக்கு