சனி, அக்டோபர் 10, 2009

ஜெயா மேக்ஸ் இப்போது ஏர்டெல்லில்

பல டீடிஹெச் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் தமிழ் நாட்டில் முதன்மை வகிப்பது சன் டீடிஹெச் நிறுவனமே.

ஆனால் இந்த சேவையில் தன் சேனல்களையே முன்னிறுத்தி வருவதிலேயே சன் குறியாய் உள்ளது.

ஏனென்றால் டிஸ் டிவி நிறுவனம் ராஜ் டிஜிட்டல்,இசைஅருவி,ஸ்போர்ட்ஸ் சேனல்களை மாதம் ரூ 115/க்கு அளிக்கையில்

சன் இவ்வாறு அளிக்காமல் ஒவ்வொரு ஸ்போர்டஸ் சேனல்களுக்கும் தனி ரேட் வைத்துள்ளது.

அதே போல இசைஅருவி சேனலை ஒருவருட காலமாக அளிப்பதாக போக்குகாட்டினர். ஆனால் கடைசி வரை வெறும் பெயரையும் ,என்ன புரோகிராம் என்ற இபிஜீ யை மட்டும் காட்டி கடைசியில் பெயரையும் எடுத்து விட்டனர்.

ஆனால் சன்னுக்குப் பின்னர் வந்த ரிலையன்ஸ், ஏர்டெல், இவைகள் இசைஅருவி, சிரிப்பொலி சேனல்களை அளித்துவருகின்றன.

தற்போது மேலும் ஒரு சிறப்பம்சமாக ஏர்டெல் தனது சேனல் வரிசையில்
ஜெயாமேக்ஸ் சேனலையும் சேர்த்துள்ளது. இது ஒரு அருமையான, விளம்பரங்கள் குறைவாக காட்டும் ஒரு பாட்டுச்சேனல்.

இந்த சேனல் இதுவரை கேபிள் மற்றும் சி பேண்ட் டிஸ்ஸில் மட்டுமே கிடைத்து வந்தது.

ஆனால் சன் இதுமாதிரி சேனல்களை கொடுக்காமல் ஹிந்தி நியூஸ் சேனல்,ருஸ்ய நியூஸ் சேனல் எனக்கொடுத்து மக்களை ஏமாற்றமடையச் செய்கிறது.

கலைஞர் குழும சேனல்களைக் கொடுக்கும் பட்சத்தில் சன் சேனல் வியாபாரத்தில் குறையும் என்ற போட்டி மனப்பான்மைதான் இதற்கு காரணமாகக் கூட இருக்கலாம்.

அதனால் ஒரே வழி ஒரே செட்டாப் பாக்ஸ் உபயோகித்தாலே அனைத்து நிறுவனங்களின் டீடிஹெச் சேனல்களை அதற்க்குரிய கட்டணத்தை செலுத்திப்
பார்க்கலாம் என்ற நடைமுறை வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

அதுபோல சேட்டிலைட்க்கு கட்டும் பணமும் குறையும். இதையும் கவர்ன்மெண்ட் டீடீ டைரக்ட் செய்தால் இன்னும் இந்த வசதி நிறைய மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.


...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக