புதன், நவம்பர் 11, 2009

இலங்கைத் தமிழர் நிலை ‍-ஜோசியம்

நான் இது நாள் வரை உலகம் 2010 ல் இப்படி இருக்கும், குரு பெயர்ச்சி ஒரு நாட்டுக்கு நல்லதை நடத்தும். சுனாமி வரும். சனிப்பெயர்ச்சி ஆள்பவர்க்கு ஆகாது என்று சொல்லும் ஜோதிடர்களீடம் கேட்ட ஒரு கேள்வி " இலங்கைத்தமிழர்களூக்கு விடு கிடைக்குமா என்று , அதாவது கிடைக்கும் என்றால் நாம் மனதால் சற்று கவலைப்படாமல் இருக்கலாம் என்று நினைத்துக் கேட்டால் அவர்கள் அதில் முடிந்தவரை கழன்று கொண்டார்கள்.

ஆனால் ஒரே ஒருவர் அந் நாடு சுதந்திரம் அடைந்த தேதி , நேரம் கேட்டுள்ளார்.
முடிந்தால் தாருங்கள் , இவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தெரிஞ்சவங்க நமக்கு அனுப்புங்க. நாங்க அவருக்கு அனுப்பறோம். அவரு என்ன சொல்லறாரு பாப்போம்.

(https://www.blogger.com/comment.g?blogID=367219321741694695&postID=266450498675938093)







அவருடன் நடந்த தொடர்பு பற்றி கீழே :
Blogger வாய்ப்பாடி குமார் said...

நல்லாத்தான் எழுதறீங்க. கொஞ்சம் படிக்க செரமாயிருந்தது ஆரம்பத்தில.இப்பப் பரவாயில்லை.

நமக்கு ஒரு சந்தேகம். இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா ?

மேற்படி கேள்விகளூக்கு நெறயா ஜோசியருங்க கழண்டுட்டாங்க . நீங்க எப்படி ?

November 10, 2009 3:36 AM

Delete
Blogger சித்தூர்.எஸ்.முருகேசன் said...

வாய்ப்பாடி குமார் அவர்களே,
இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா என்ற கேள்விக்கு சோதிடத்தில் பதிலை தேடுவது கோழைத்தனம். ஏற்கெனவே நான் சொன்னேன் எல்லாரும் ராஜபக்ஸே படத்தை ஏ4 சைஸ்ல பிரிண்ட் எடுத்துவச்சுக்கங்க அப்புறமா சொல்றேனு.. நிறைய பேர் கூட தேவையில்லை. ஓரளவு கான்சன்ட்ரேட் பண்ணக்கூடிய 1000 பேர் இருந்தால் போதும்.

நிற்க உங்கள் கேள்விக்கு பதில் தர இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் தேவை. கொடுத்தால் நான் முயற்சி செய்கிறேன்பாராட்டுக்கு நன்றி. அதென்ன ஆரம்பத்துல செரமமா இருந்ததுங்கறிங்க.. ஒரு வேளை சமீபத்துல பேச்சுதமிழ் அதிகமானதாலயோ ?

November 10, 2009 6:32 AM

Blogger வாய்ப்பாடி குமார் said...

ஆம் அப்படித்தான். பேச்சுத்தமிழ் வரவே படிக்கவும் சற்று எளிதாய் உள்ளது.

மற்றபடி இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் நமக்கு தெரியவில்லை. முயற்சி செய்கிறேன் முடிந்தால் தருகிறேன்.

November 10, 2009 8:35 PM

4 கருத்துகள்:

  1. நீங்க கேள்விய மாத்தி கேட்டிருக்கலாம் ... like when will sooniya step down from her post ?

    அல்லக்"கை" கள் நடத்தும் அட்டகாசங்களின் முடிவுரை பாதிக்கப்பட்ட மக்களுக்கான விடிவின் முன்னுரை என கொள்ளலாம்.

    ஜோதிடம் கேட்டு கேட்டு சும்மா இருப்பதை விட ..... வேறு வகையில் தீர்வு காண முற்படலாம் என்பது என் தாழ்மையான கருத்து. மாற்றுக்கருத்திற்கு மன்னிக்கவும் !

    பதிலளிநீக்கு
  2. கருத்துகள் எப்பேர்பட்டதாயினும் வரவேற்க்கப்படுகின்றன.

    மாற்றுத்தீர்வுக்கு நாம் யோசிக்கலாம். ஆனால் அவர்கள் கச்சத்தீவு போதாது,அந்தமான் வேண்டும் என வந்து விட்டனர். நாளையே விவேகானந்தர் பாறை எங்களது , பாம்பனும் எங்களது என்று உரிமை கொண்டாடுவார்கள்.

    அதை நாம் அப்போதும் கேட்க முடியாது.

    அதனால் கையாலாகாதவர்களின் புகலிடமான ஜோசியத்தையும் பரிட்சித்து பார்போம் என நினைக்கிறேன்.

    ஏனெனில் தொடர் தோல்வியே வரும் போது ஒரு சிறப்பான எதிர்காலம் உள்ளது
    என்பது தெரிய வரும்போது ஒரு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி ஏற்படும் அல்லவா !

    பதிலளிநீக்கு