வியாழன், மார்ச் 11, 2010

வன உயிரினங்களுக்கு உதவுங்கள்

வன உயிரினங்களுக்கு உதவுங்கள் என்ற நமது ஒரு இடுகைக்கு உடனடியாக ஒரு பதிலுரையும் ,உதவும் எண்ணத்துடன் கூடிய ஒரு விசாரிப்பும் நமக்கு நண்பர் பிரதீப் அவர்களிடம் இருந்து கிடைத்தது.

வாமுகோமு அவர்களும் நம்மை அழைத்து " மான்களின் எண்ணிக்கையையும் நண்பர் பிரதீப் அவர்கள்" விசாரித்தாக கூறினார்.

மேலும் இது பற்றிய தகவல்களை உடனடியாக நாம் விசாரித்து இன்னும் தெளிவாக நண்பர் பிரதீப் அவர்களிடமும் , நமது வலையிலும் பிரசுரிக்கவுள்ளோம்.

இதுபோன்ற உதவும் எண்ணம் கொண்ட நண்பர்கள் உள்ள வரையில் மயில்களும், மான்களும் வனங்களில் கவலைகளற்று வாழலாம் என்பது நமக்கு தெளிவாகிறது.

வனம் வளர்ப்போம் , மழை பெறுவோம் , வார்த்தைகளில் அல்ல வாழ்க்கையில்.

...

1 கருத்து:

  1. குமார்,
    வால்மீகி தாப்பர் போன்ற மிக சிறந்த இயற்கை ஆர்வளர்கள் வாழும் நாடு இது.இதில் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை.ஏதோ நம்மால் முடிந்தை இயற்கைக்கு செய்வோம்.இன்னும் தமிழ் நாட்டில் விழிப்புனர்வு வர வில்லை என்பது வருத்தமான விஷயம்.

    பதிலளிநீக்கு