புதன், டிசம்பர் 22, 2010

நக்கீரன்-‍ புதிய ஜோசியகதை.

இந்த வாரம் 18‍-21 தேதியிட்ட நக்கீரன் இதழில் அரசியலில் நடிகர்கள் அதிகம் வந்தாலும் குறிப்பிடத்தக்க வகையில் யாராலும் ஜொலிக்க முடியவில்லை என்பதைக் கூறி தற்போதைய டிரண்டில் விஜய், விஜயகாந்த், ரஜினி யார் ஜொலிக்க முடியும் என்று மக்கள் கருத்தை கேட்டாலும் ஒன்றும் விளங்காது என்பதால் மாயவரம் சாமி ஜோசியரிடம் கேட்டு எழுதி உள்ளார்கள்.

உன்னிப்பாக படித்தால் விஜயகாந்த் துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம், லக்கினம் அப்படின்னு சொல்லிட்டு அவருக்கு களத்திர ஸ்தானப்படி மனைவி ராசியாலதான் சீட்டுப்பிடிக்க முடியும் , என்னைக்கும் முதல்வராக முடியாது அப்படின்னும்

விஜய் கடக இராசி , பூச நட்சத்திரம், இன்ன லக்கினம் அப்படின்னு சொல்லிப்பிட்டு அவருக்கு 17 வருசம் புதன் நல்ல படியா இருந்ததால் இத்தனை ஆண்டுகளில் படம் நல்லா இருந்தது,ஆனா இப்ப புதன் நல்லபடியா இல்லாததால் படங்கள் பிளாப்புனும் சொல்லிட்டு மூணு வருடம் கழித்து அரசியலுக்கு வந்தால் நல்லதுன்னு சொல்கிறார்.

ஆனா ரஜினிக்கு உத்திராட நட்சத்திரம் , கடக ராசி , சிம்ம லக்கினம் அப்படின்னு சொல்லிட்டு அவர் அரசியலுக்கு வரவே மாட்டார்.அப்படின்னும் சொல்கிறார், இங்கேதான் ஒரு நெருடல் கடக ராசியில் உத்திராட நட்சத்திரம் கிடையாது. பிரிண்டிங் மிஸ்டேக்கா அல்லது ஜோசியர் மிஸ்டேக்கான்னு தெரியலை.

வெகுஜன ஊடகமான நக்கீரன் இப்படித்தான் ஜெகத் கஸ்பாரை வெச்சு வெகு நாள் மறக்கமுடியுமா அப்படின்னு எழுதிட்டு இருந்தாங்க. இன்னைக்கு பாத்தா அதே ஜெகத் கஸ்பார் பத்தி ஜூவியில் வேற மாதிரி இருக்கு. நிறைய பேர் படிக்கிற பத்திரிக்கைகள் இந்த மாதிரி சின்ன மிஸ்டேக் களைந்து வெளியிடுவது படிப்பவர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கும் . இல்லையெனில் என்ன தெரிஞ்சவங்க வாங்கறதுக்கு யோசிப்பாங்க.

..

3 கருத்துகள்:

 1. உண்மை தான். ஊடகங்கள் உச்சநீதிமன்றத்திற்கு இணையான விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது என்று தலைமை நீதிபதியே சொல்லும் சூழலில் ஊடகங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துக்கொள்ள வேண்டும்..
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. //அப்படின்னும் சொல்கிறார், இங்கேதான் ஒரு நெருடல் கடக ராசியில் உத்திராட நட்சத்திரம் கிடையாது. //

  :)

  நக்கீரன் செய்திகளை இன்னுமா நம்புறிங்க. 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரம் இருமுறை படித்தேன். இப்ப படித்தால் செய்தித் தரத்தின் நெடி தும்மலும் இருமலுமாக வருது

  பதிலளிநீக்கு