செவ்வாய், பிப்ரவரி 01, 2011

திருப்பூர்?

திருப்பூரின் தற்போதைய நெருக்கடி நிலவரம் பல வகைகளில்,பலதரப்பட்ட மக்களை பாதிக்கும் என்பது இன்னும் சில மாதங்கள் சாய பட்டறைகள் மூடப்படுமானால் தெரியவரும்.

முதலில் பாதிக்கப்படுவது.

1.டையிங் (சாயப்பட்டறைகள்)

2.சாயப்பட்டறைகளின் தொழிலாளர்கள்,குடும்பங்கள்.

3.சாயப்பட்டறைகளை நம்பியிருக்கும் சாயக்கடைக்காரர்கள்,இதர பொருள்கள் விற்பனையாளர்கள்,(இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு சொல்லமுடியாத அளவில் இருக்கும்)இவர்களின் மொத்த சம்பாத்தியமும் வியாபாரத்தில் வைத்திருப்பார்கள்.

4.மேற்சொன்ன கடைக்காரர்களை நம்பியிருக்கும் தொழிலாளர்கள்.

இனிமேற்க்கொண்டுதான் மற்ற வகையினர் பாதிக்கப்படுவார்கள்.

ஏனெனில் இதுவரை குறைந்த செலவில் திருப்பூர் சாயப்பட்டறைகளில் துணிகளை சாயமிட்டுக்கொண்டு இருந்த எக்ஸ்போர்ட்காரர்கள் இனிமேற்கொண்டு ஈரோடு,குமாரபாளையம்,பெருந்துறை போன்ற பகுதிகளுக்கு செல்லவேண்டும்,

அங்கு திருப்பூர் மாதிரி (90 நாள் முதல்120 நாள் வரை)கிரெடிட் கிடையாது,உடனடியாக பணம் தரவேண்டும். சரி ,இதிலென்ன கொடுக்கவேண்டியதுதானே.

கொடுக்கவேண்டியதுதான் ,யாருடைய பணத்தை,இதுவரை திருப்பூரில் சாயப்பட்டறைகளுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை இங்கு கொடுக்காமல் புதிய சாயப்பட்டறைகளுக்கு உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதால் கொடுத்து விடுவார்கள். இவர்கள் கேட்டால் என்னங்க பண்ணறது? நீங்களும் சாயப்பட்டறைகளை ஓட்டவில்லை,ஓட்டுங்க இங்கியே சாயம்போட்டுக்கறோம் ,பணத்தையும் கொடுத்துவிடுவோம் என்பார்கள்.

ஆக திருப்பூரின் மேற்சொன்ன மக்கள் தரப்பு 739 டையிங்களும் ஓடினால் மட்டுமே தப்பிக்கும், இல்லையெனில் கலைஞரின் ஒரு ரூவாய் அரிசிதான்.

இதன்பிறகுதான் சொந்தமாக டையிங் வைத்திருக்கும் எக்ஸ்போர்ட்கள் தவிர மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள், ஏனெனில் தற்போதே பெருந்துறையில் ஒரு நார்மல் கருப்பு(பிளாக்) கல்ர் டையிங் செய்ய ரூ 135/ சொல்கிறார்கள், இதெ கலர் திருப்பூரில் 85 முதல் 90 மட்டுமே.

நூல்விலையும் சொந்த எக்ஸ்போர்ட்காரர்களும்:

இந்த நேரத்தில் நூல் விலையும் கன்னாபின்னாவென்று ஏறிக்கொண்டு இருக்கிறது. இதனால் சொந்த எக்ஸ்போர்ட் காரர்களும் கூடிய விரைவில் நிற்பதென்பது சிரமமேதான். நூல் காசும் அதிகம், டையிங்காசும் அதிகம்,லேபர் காஸ்ட்டும் அதிகம், அப்புறம் எங்க லாபம் அவர்களுக்கு வருவது.அதனால் அவர்களுக்கும் கூடிய விரைவில் நட்டம் ஏற்படும்.

இதற்குமேல் பாதிப்பு ஏற்படும் துறைகள்.

1.போக்குவரத்து(சொந்த வாடகை வாகனம்& அரசுப்போக்குவரத்துதுறைகள்)
ஒவ்வொரு தீபாவளி,பொங்கல் தினங்களில் எத்தனை தென்மாவட்ட பஸ்கள் மக்கள் அடைத்துகொண்டு செல்கின்றன,என்பதை பாருங்கள்.

2.பேக்கரிகள் (தொழிலாளிகளை நம்பி மட்டுமே இங்குள்ள அத்தனை பேக்கரிகளும் இயங்குகின்றன)

3.மளிகைக்கடைகள்

4.வாடகை வீடுதாரர்கள் (எத்தனை தோட்டங்களில் 10*10 ரூம் அளவுள்ள வீடுகள் கொள்ளை வாடகை வைத்துள்ளனர்,அவர்களுக்கு இதுதான் வருமானம்)

இப்படி நிறைய தொழில்கள் கணக்கில்லாமல் திருப்பூரை நம்பியுள்ளன.

ஸ்பின்னிங் மில்கள்:

திருப்பூரை நம்பியே ஸ்பின்னிங் மில்கள் அடிக்கடி நூல்விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்து வந்தன. ஆனால் கடந்த வெள்ளியன்று 28.01.11 கோர்ட் உத்தரவில் திருப்பூர் சாயப்பட்டரைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு வந்தவுடன் பிப்ரவரி 1 ஆம் தேதி ஏற்றவேண்டிய நூல் விலையை ஏற்றாமல் இருந்து விட்டன,

அப்ப ஒரு வாரமாக நூல் விலையேறுகிறது என்று சொல்லிவிட்டு தற்போது விலையை ஏற்றாமல் விட்டதின் காரணம் சாயப்பட்டறை மூடல்கள்தானா,

பருத்தி எக்ஸ்போர்ட் ஆகிறது ,அதனால் விலை ஏறிவிட்டது என்று குதித்தவர்களுக்கு இப்போது ஏன் விக்கிக்கொண்டது?

கடலில் கலக்கும் திட்டம் நிறைவேறாதது அரசியல் நோக்கம்:

அதிமுக கோட்டை என்பதால் திருப்பூரை கவனிக்காமல் விட்டு விட்டனர் என்று அதிமுக காரர்கள் கூறுவது ஏற்புடையது அல்ல, கடலில் கலக்கும் திட்டம் வேண்டும் என்று இதுவரை கலைஞரையோ,அல்லது தமிழக அரசையோ குரல் உயர்த்தியோ,பணிந்தோ யாரும் கேட்கவில்லை என்பதே உண்மை.

இந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களை செய்திருக்கலாம்,ஆனால் செய்யாமல் இருந்துவிட்டோம்,

இனி 4.5 இலட்சம் மக்களின் கதி அவ்வளவுதானா? இதை நம்பி எங்கு ரியல் எஸ்டேட் போட்டாலும் வாங்கிப்போட்ட நடுத்தர மக்களின் கதி?


..

3 கருத்துகள்:

  1. திருப்பூர் சாயப்பட்டறை மூடப்படுதல் நிச்சயம் நிறைய மனிதர்களின் வாழ்வில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்திவிடும் என்பது உண்மைதான்.. தொழில் நகரத்திற்கு சோதனை மேல் சோதனை..

    பதிலளிநீக்கு
  2. நன்றாக எழுதி உள்ளீர்கள். வாய்ப்பிருந்தால் 4ந் தேதி வரும் புதிய தலைமுறையில் வரும் சிறப்புக் கட்டுரையை படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி,ஜோதிஜி அவர்களே. படித்துப்பார்க்கிறேன்.

    நன்றி பாரத்... பாரதி...

    நன்றி, தற்போது பேப்ரிக் ஆர்டராகவே குஜராத்தில் மிக குறைந்த விலையில் செய்து தர துவங்கியுள்ளனர். சில எக்ஸ்போர்ட்டர்கள் இந்த வேலையை செய்து கொண்டு உள்ளனர்.

    அதாவது நமக்கு வேண்டிய துணியின் இரகம்,(நூலின் கவுண்ட்,ஜிஎஸ்எம்,)கலர்,வேண்டிய நிறை இவற்றை நாம் சொன்னதும் அவர்கள் தரும் சேம்பிள் பார்த்து ஓகே செய்தால் அடுத்த 7‍ முதல் 10 நாட்களில் கம்பெனிக்கு துணி வந்து விடுகிறது. அதை தற்போது பெரிதாக பேசிக்கொண்டு உள்ளனர்.

    ஆனால் இந்த திருப்பூர் சாயப்பட்டறைகள் தொடர்ந்து இயங்காவிடில் அவர்களும் விலையை ஏற்றி சம்பாதிக்க முனைவர். அப்போதுதான் திருப்பூர் பற்றி அனைவருக்கும் புரியும்

    பதிலளிநீக்கு