செவ்வாய், பிப்ரவரி 07, 2012

காதலித்தாலே அச்சமென்ன?

காதலில் எத்தனை கதைகள் வந்தாலும் சலீம் அனார்கலியின் காதல்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.பேரரசு அக்பர் வாரிசுதான் சலீம்,அனார்கலி அரசவையில் நடனமாடும் மங்கையர் வகையை சேர்ந்தவர்..சலீம் உண்மை.அனார்கலி கற்பனைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம்.இந்த கதையை மையமாக வைத்து 1960களில் இந்தியில் 'மொகலே ஆஷம்' திரைப்படம் ஆஷிப் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது.

இதில் அக்பர் வேடத்தில் பிரித்திவிராஜ் நடித்து இருந்தார்.பின்னாளில் வந்த அனைத்து அக்பர் வேடங்களும் இவர்தான் முன்னோடியாகவும் இந்த படத்தில் உருவெடுத்தார்..

சலீமாக 'திலிப்குமாரும்',அனார்கலியாக'மதுபாலாவும்' நடித்து இருந்தனர்.இந்த மூன்று கதாபாத்திரங்களும் இணைந்து நடிக்க அந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவமாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தது.

அந்த அளவு மக்களின் மனதில் இடம் பிடிக்க காரணம் திலிப்குமார்,மதுபாலாவின் நடிப்பைத்தாண்டிய ஒரு விசயம் அவர்களிடையே குடிகொண்டிருந்த காதல்..ஆம் அந்த காலகட்டங்களில் இருவருக்கும் காதல் நிகழ்ந்து அந்த காதல் மதுபாலா வின் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்படாமல்,நிராகரிக்கப்பட்டு பிண்ணனிப்பாடகர் கிஷோர்குமாரை மதுபாலா மணந்துகொண்டார்.அதன்பிறகு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்ததும் ,உணர்வுபூர்வமாக நடித்ததும் தாமாகவே நிகழ்ந்தது.

http://www.youtube.com/watch?v=plsRqFDk-2A

இந்த படத்தில் வரும் 'பியார் கியா தோ தர்ணா'பாடலில் நடனமாடியபடியே அக்பர் பார்த்து கேள்விகள் கேட்கும் பாடலில் திலிப்குமாரின் முக பாவங்கள் மிகவும் துல்லியமாக,வேதனையுடனும்,காதல் நிறைவேறாத ஏக்கமும் ஒருசேர பிரதிபலிக்கும்..

இந்த பாடல் தமிழில் 'காதல் கொண்டாளே' என்று என்று சுசிலாவின் குரலிலும்,


காதலித்தாலே அச்சமென்ன என்று{'அனார்கலி2006'} சுவர்ணலதாவின் குரலிலும் வந்துள்ளது..

படத்தில் அக்பர்,அனார்கலியை விசாரிக்க அழைத்ததும் ,அனார்கலி வரும் நடையிலும் ,அவர் அக்பரை பார்த்து கேட்பதும் கவனித்தால் அரச பெண்களுக்கேயான  பாவனை தெரியும்..

மேலும் இந்த இடத்தில் அவர் கேட்கும் கேள்விகள் தன் அப்பாவை பார்த்து கேட்பதாகதான் பட்டது..

பாடலில் மதுபாலாவின் பிம்பங்கள் தெரியும் கண்ணாடிகளின் அழகு மனதை கொள்ளச் செய்கின்றன.

அக்பர் மதுபாலாவிற்கு மரணதண்டனை அளிக்கும் முன் கடைசி ஆசை என்னவென கேட்க 'ஒரே ஒரு நாள் மொகலாய பேரரசுக்கு இராணியாக வேண்டுமென' மதுபாலா கேட்கிறார்.அதன்படியே செய்வதாகவும்,தண்டனை சலீம்க்கு தெரிய கூடாததெனவும்,தண்டனை நேரத்தில் சலீம் இருக்கக்கூடாது எனவும்,எனவே அனார்கலியே சலீமை மயங்கச் செய்யவேண்டுமெனவும்,கூறப்படுகிறது..அதன்படியே செய்தும் முடிக்கும்போது அக்பர் அனார்கலியை கொல்லாமல் நாடு கடத்திவிடுகிறார்..இவ்வாறு படம் முடிகிறது..

படத்தின் சில காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்புகளுக்காக இருந்தது.ஆனால் மதுபாலாவின் தந்தை வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு அனுப்பினால் இவர்களின் காதல் நெருக்கம் அதிகமாகும் என்று அனுப்ப மறுத்துவிட்டார்.

படம் முடிந்தாலும்,உண்மையில் திலிப்குமாரின் ஞாபகத்திலேயேயும்,தந்தைக்காக காதலை இழந்த வருத்தத்தினாலும் அதை நினைத்து ஏங்கியே மதுபாலாவின் உயிர் 32 வயதில் பிரிந்தது..திரைக்கதையின் கதை கற்பனை என்றாலும் கதாபாத்திரங்களுக்குள் காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த படம் உணர்த்துகிறது.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக