வியாழன், ஆகஸ்ட் 05, 2010

வெள்ளியங்கிரியும் ஈஷா யோகமும்










ஆடிப் பதினெட்டை முன்னிட்டு ஒரு சிறிய பயணமாக வெள்ளியங்கிரிக்கும் அருகிருக்கும் ஈஷா மையத்துக்கும் செல்லலாம் என கிளம்பி பேமிலியாக சென்றோம். கோவையின் போக்குவரத்து நெருக்கடி பேரூர் வரை தொடர்கிறது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகில் இன்னும் அதிக நெருக்கடி . அரைமணீ நேரமாகிறது கோயிலைக்கடக்க.

கடந்து செம்மேடு அடையும் போதே சற்றுக்குளிர் எடுக்க ஆரம்பிக்கிறது. வெள்ளியங்கிரியை அடிவாரம் எட்டும் போது சற்றே மழைச்சாரல் பொழிய ஆரம்பமாகியது. மழைச்சாரலின் குழுமையுடன் கோயிலில் வெள்ளியங்கிரி ஆண்டவரின் தரிசனம் மிக அருமை. சுற்றிலும் பசுமை.

சிறிது காற்று அடிக்கும் போது கூட வானுயர்ந்து நிற்கும் மரங்களின் இலைகளில் இருந்து விழும் மழைத்துளி மிகவும் குளுமையுடன் நம்மீது படுகிறது.

மலை ஏறும் படிக்கட்டை அண்ணாந்து பார்க்கும் போதே சற்று பிரமிப்பு நமக்கு. இந்த படிக்கட்டில் எப்படி ஏறி மலை உச்சி வரை கடந்த இருவருடங்களாக சென்றோம். ஒரு வேளை இரவு நேரங்களில் ஏறத்துவங்குவதால் ஒன்றும் தெரிவதில்லையோ?

அன்னதான மண்டபத்தில் இருந்து அனைவரையும் அழைத்து சாப்பாடு போடுகின்றனர். கூட்டமும் சற்றே குறைவுதான். கோயிலுக்கு வரும் அரசுப்பஸ்கள் அனைத்தும் சொகுசுப்பேருந்துதான். அதனால் பயணமும் அலுப்படையச் செய்யாது. அப்படியே செய்தாலும் கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அமைதி நம்மை அப்படியே ரிலாக்ஸ் செய்துவிடும்.

இங்கு இருந்து 1 கிமீக்கு அருகில்தான் ஈஷா யோகமையமும் உள்ளது. இங்கு இருக்கும் தியான‌லிங்கம் மிகவும் பெரியது. அமைதிதான் இங்கும் . அதனால் பெண்களை கொலுசுகளைக் கழட்டிவரச் சொல்கிறார்கள். மேலும் குழந்தைகளை தியான லிங்க மண்டபத்தினுள் அனுமதிப்பதில்லை.

இங்கும் அதே மழைச்சாரல்தான் . அதுவுமில்லாமல் குளிர் காற்று மலைஅடிவாரத்திலிருந்து வந்து செல்கிறது. ஆனால் இங்கும் ஏசி வைத்த குடில்களை காணமுடிகிறது. கேண்டீன் ஒன்றும் இங்கு உள்ளது .விலைகள் வழக்கமான சரவணபவன் தான்.

இந்த யோகமையம் சார்பாக பல ஊர்களில் மரங்களை நட்டு வைத்து பராமரித்து வருகிறார்கள். திருப்பூரிலும் நட்டுவைத்துள்ளனர். அவற்றில் சில நல்ல நிலையில் உள்ளது.

ஆனால் இவர்கள் மையம் அருகே மற்றும் செல்லும் வழியில் எங்கும் பார்த்தால் வேலிமுள் மரம்தான் அதிகம் காணப்படுகிறது. புளியமரங்களும் காணப்பட்டாலும் மிகுதி வேலிமுள்தான். இவை சூடும் கூட.

அதுவல்லாமல் வெள்ளியங்கிரி பாதையில் இருந்து இவர்கள் மையத்திற்க்கு செல்லும் பாதை மண்பாதைதான். இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு வந்து செல்லும் பார்வையாளர்களுக்காக நல்லதரமான சாலையை கோவையிலிருந்தே சொந்தமாகச் செய்யலாம்.

அதேபோல வேலிமுள்களை வெட்டிவிட்டு அல்லது ஊடாக நல்ல தரமான மரங்களை நட்டு பராமரிக்கலாம். வனத்துறை இடமாக இருந்தாலும் மையம் அருகே இருப்பதால் அவர்கள் உதவியுடனே இதைச் செய்யலாம்.

வேலிமுட்களையும்,பாதையையும் பார்த்தவுடன் நம்மனம் சற்றே உள்ளே செல்ல யோசித்தது. இன்னும் சற்று அவர்கள் முயற்சித்தால் யோக மையம் இன்னும் சிறப்படையலாம்.

..

5 கருத்துகள்:

  1. நல்லா சொன்னீங்க, குமார். போகும் வழியை திருத்தலாம். ஆனா இன்னொண்ணு, அந்த மையம் ஏதோ ஒரு மர்மமான முறையில் இயங்குவதாக எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய மனப் பிரமையாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. குமார்,
    இயற்கையை பற்றி பேசிவிட்டு மலையில் தார் ரோடு போடுங்கள் என்றால் !!!

    பதிலளிநீக்கு
  3. மலையில் தார்ரோடு அல்ல , ஈஷா யோக மையம் செல்லும் வழியைத்தான் குறிக்கிறேன். ஒரு மழை நாளில் சென்று பாருங்கள் , கடைசிக்கு சிமெண்ட் கல்களை கொண்டு பெட்ரோல் பங்குகளில் செய்வது போல் செய்யலாம் .

    எப்படியாயினும் அந்த தடத்தில், அங்கு சென்று வாகனங்களால் புல் கூட முளைக்காது. அதுவில்லாமல் வாகனங்கள் இரண்டாவது கியரில் செல்வதால் புகை மாசு வேறு அதிகமாகும். இப்படி பல காரணங்களால்தான் ரோடு அமைக்க நான் எழுதியது.

    மேலும் தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும் .

    பதிலளிநீக்கு
  4. தார் ரோடு போடுவதால் இயற்கை அழிந்து விடாது போக்குவரத்து நெருக்கடி நீங்கும் அதிக நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியதில்லை அங்கு செல்லும் வாகனங்களால் புகை மாசுகள் கட்டுப்படும்.

    பதிலளிநீக்கு