புதன், செப்டம்பர் 01, 2010

வாழ்க்கை இவ்வளவுதானா !

ரெண்டு நாளுக்கு முன்னாடி திங்கள்கிழமை காலையில் திருப்பூர் பரபரப்பு தொற்றிக்கொண்ட அதிகாலை மணி 8.20 க்கு வீட்டிலிருந்து கிளம்பி ஈரோடு ‍திருப்பூர் சாலையை மேட்டுக்கடையில் தொட்டு திருப்பூரை நோக்கி பயணித்தோம் . உடன் வழக்கம்போல எனது நண்பரொருவரும் வர சற்று தூரத்திலேயே ஒரு கூட்டம் சாலையின் அருகில் காணப்பட நாமும் அங்கு வண்டியை நிறுத்தினோம். என்னவென்று பார்க்கும் போது ஒரு ஆண் வயது 40 இருக்கும், ஸ்பெலண்டர் பைக்கை நிறுத்திவிட்டு அருகில் படுத்தவாக்கில் இறந்து கிடந்தார். விசாரித்தபோது மனிதர் இரவே அதிக மப்பில் வண்டி ஓட்ட முடியாததால் வண்டியை நிறுத்திவிட்டு தூங்கியவர் தூங்கியே விட்டார்.

இதைப்பார்த்து விட்டு நாம் நமது பயணத்தை சற்று கவலையுடன் ஆரம்பித்தோம். ஊத்துக்குளியை நெருங்கும் போது ரோட்டில் ஸ்கூல் பிள்ளைகளை பஸ்ஸில் ஏற்றிய மக்கள் சற்றே பரபரப்புடன் "மேட்டுக்கடை பக்கத்தில்" என்று பேசிக்கொண்டனர்.

சரி , நாம் பார்த்த நிகழ்வைத்தான் பேசுகிறார்கள் என்று வண்டியை ஸ்லோ செய்தபோது அவர்கள் பேசுவது அதுவல்ல, மற்றொரு விபத்தைப்பற்றி என்று தெரிந்தது.

அதுவும் மேற்க்கூறிய நிகழ்வுக்கு மிக அருகாமையில் 8.30 க்கு நடந்தது. எப்படி ?

டூவீலர் பைக்கில் பவானி குமாரபாளையத்தில் இருந்து திருப்பூர் வேலைக்கு இரண்டு நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பைக்கின் முன்சக்கரம் திடீரென பஞ்சர் ஆகிவிட , ஓவர்ஸ்பீடு வண்டி கன்ட்ரோல் ஆகவில்லை. வழுக்கிவிட அந்த நேரம் பார்த்து எதிரில் ஒரு ஸ்விப்ட் வர , அவர்கள் அதில் மோத இருவரும் ஸ்பாட் அவுட்.

ஹெல்மெட் தெறித்து ஓடிவிட்டது. இருவரும் நண்பர்கள், ஒரே கம்பெனியில் மெர்ச்சண்டைசர்களாப் பணீபுரிபவர்கள்.

இருவரும் நான் படித்த அதே ஜவுளித்தொழில் நுட்பப் பயலகத்தில் 2004 ஆம் ஆண்டு படித்தவர்கள் என்பது கூடுதலான ஒரு வருத்தம் .

எப்படி, எப்படி எல்லாம் வாழ்க்கை எளிதாக முடிந்து விடுகிறது . இதற்குள் எத்தனை கலகங்கள் , வருத்தங்கள், மகிழ்ச்சிகள்!

இன்னுமொரு கூடுதல் வருத்தம் என்னவெனில் இந்த ஒரு பத்து மாதங்களில் இந்த பாதையில் இதே இடங்களில் குறைந்தது பதினைந்து பேர்கள் விபத்துகளில் மரணமடைந்துள்ளனர்.

ஏன் ? ரோடு மோசமா? கவனக்குறைவா? ஓவர் ஸ்பீடா? எதுவென இதுவரை தெரியவில்லை . எனக்கு தெரிந்து ஓவர் ஸ்பீட் என்றுதான் தெரிகிறது.

3 கருத்துகள்:

  1. ஸ்ரீ.கிருஷ்ணா9/01/2010 02:53:00 PM

    1.கவனக்குறை.....2.ஓவர் ஸ்பீட்...
    நல்ல விழிப்புணர்வு பதிவு...

    பதிலளிநீக்கு
  2. வருத்தப்பட வேண்டிய விசயங்கள்....

    பதிலளிநீக்கு
  3. ஓவர்ஸ்பீடுக்கு காரணம் இப்போ வரும் வாகனங்கள் 4 வழி சாலைகளில் ஓடும் திறன் கொண்டது...
    ஆனால் நம்ம ஊரு ரோடுகள் இன்னும் பழசாவே இருக்கு...
    இதில் யாரைக் குற்றம் சொல்வது...

    பதிலளிநீக்கு