இந்த கட்டுரை விக்கிப்பீடியா,தேவியர் இல்லம்,கொடுக்கி,மற்றும் பல இணைய தளங்களில் இருந்தே தொகுக்கப்பட்டது.எனவே கருத்துகள் அனைத்தும் சொந்தகருத்தல்ல என்பதையும் தொகுப்பின் முன் பதிவிலேயே தெரிவித்துக்கொள்கிறோம்.
நாடார்
நமது பாரத நாட்டின் தொன்று தொட்ட குடிமக்களில் நாடார் வகுப்பினர்களும் ஒரு சாரார். பாரதம், பழைய காலத்தில் "அல்ஹின்ட்", என்று அராபியர்களால் அழைக்கப்பட்டது, பைபிள் தோன்றிய காலத்தில், அவர்கள், நான்கு ஆறுகளின் மக்கள் என்று அறியப்பட்டனர். ஆனால், அவர்கள் தோற்றம், தெற்குப்பகுதியாம் "குமரிக்கண்டம்" என்பதாகும்.
தமிழ்நாட்டில் நாடார் என்ற சாதிப் பட்டம் கொண்ட சான்றோர் சமுதாயத்தினர் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் உள்ளனர். திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இவர்கள் பெரும்பான்மையினர். மேலும், மதுரை, தேனி,சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் இவர்கள் பல தொழில்களிலும் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். வட மாவட்டங்கள் மற்றும் புதுவையைப் பூர்விகமாகக் கொண்ட சான்றோர் சமுதாயத்தவர் கிராமணி என்ற பட்டம் கொள்வர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவரே.திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.
வரலாறு
நாடாள்வார் போன்ற பட்டங்களைக் கொண்ட சான்றோர் சமூகத்தினர் பூர்விகத் தென்னிந்திய அரச குலத்தவர் ஆவர். இதற்கு ஏராளமான கல்வெட்டு, செப்பேடு மற்றும் இலக்கியச் சான்றுகள் உண்டு. சால்பு என்ற பண்பின் அடிப்படையில் தோன்றிய சான்றோர், சான்றார் என்ற சொற்களே சாணார் என்ற வழக்குச் சொல்லின் மூல வடிவங்களாம்.
சோழநாட்டிலுள்ள காவேரிப்குதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்த நாடார் இன மக்கள் உருவானதாக கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில் தென்னிந்திய கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எளிதாக புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர். ஆனால் 'உள்ளே வெளியே' என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும் உண்டு. அது போல ஈழத்தில் வடக்கு கடற்கரையோரத்தில் வாழ்ந்து வந்தவர்களின் ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் சான்றார் என்று அழைக்கப்பட்டு பிறகு சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில் இருந்து வந்தவர்கள் இந்த பனைவிதைகளை கொண்டு வந்து இங்கே பனை மரங்களை உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள்.
நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்கு பனைமரம் ஏராளமாகத் தெரியும். கேரளாவைப் போலவே கண்களுக்கு குளிர்ச்சி தரும் பச்சைபசேலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை எங்கும் நிலவும். இராமநாத புரத்தை வறப்பட்டிக்காடு என்பது போல மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் போன்றவைகள் வறண்ட பூமியாக கண்ணுக்கு எட்டியவரையில் பொட்டல்காடாகவே தெரியும்.
மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக, கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும் மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும். தென் மேற்கு சுழற்சி காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த காற்றும், நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள், கிராமங்கள் கூட அமிழ்ந்து போயுள்ளன. இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும் நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டு புராண இதிகாச சம்பவங்களைக் கூறினால் இந்த சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. பொருளாதாரம் மற்றும் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை அடிப்படையாக வைத்து தான் இந்த சாதி ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக நகர்ந்து கொண்டு வந்தது. நாடார் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு. குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம்,
சேரநாடு, வில்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு அவர்கள் நாடார்கள் அல்லது சாணார்கள் என்று அறியப்பட்டனர். அவர்களது சின்னம், பனைமரத்தின் பூ விக்ரம சோழ உலாவில், ஒட்டக்கூத்தன் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை என்பவரை வில்லவன் அல்லது நாடார், என்ற குறிப்பிடுகின்றார்.
துரதிர்ஷ்டவசமாக பண்டைத்தமிழர்களின் வரலாறு, வரலாற்றுக்கால நாடார்களை, அன்னார் தம் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, திருத்தி, புனைந்து, படை எடுத்து வந்த ஆரியர்களின் பெயருக்குப்புகழ் சேர்த்திட, ஏற்படுத்திவிட்டது. இத்தகைய மாற்றங்கள், பெரும்பகுதியும், முகலாய படையெடுப்பிற்கும் பின்னர், ஆரியப் பார்ப்பனர்களின் துணை கொண்டு செய்யப்பட்டவை ஆகும். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, ஆதியில் நாட்டை ஆட்சி செய்து வந்த வகுப்பினரை- நாடார்களை அவர்தம் பெயர்க்கு இருந்த பெருமையைக் குறி வைத்து அழித்து, ஒழித்து விட்டனர்.
12-ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இங்கே வாழ்ந்த நாடார்கள் தங்களின் இந்துக் கோயில்களுக்கு இருந்த மிகப்பெரும் சொத்துக்கள் அனைத்தும். பார்ப்பனர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டுவிட்டன. நாடார்களின் வீழ்ச்சி தொடங்கியது. பாரத பூமியில் முழுவதும் பன்மொழிப் புரட்சிகள் ஏற்பட்ட போது, தமிழ் நேர்மையற்ற முறையில் பின்னடைவுக் கொணரப்பட்டு, சமஸ்கிருதம், வலுவான இடத்தைப் பெற்றுவிட்டது. இவ்வாறாக, தஞ்சாவூர் - தமிழ் நாடார்களின் முக்கியப் குதியின் புகழ் மங்கச் செய்யப்பட்டுள்ளது. வலங்கைமாலை, நாடார்களின் ஓலைச்சுவடிகள் ஒன்று. அவர்களது வரலாற்றினைப் பேசுகிறது.
15-ஆம் நூற்றாண்டு வாக்கில் நாடார்கள், நாயக்கர்களால், வலிமை குறைக்கப்பட்டனர். ஏனெனில், நாடார்களிடையே உட்பூசல்களும் ஒற்றுமையின்ையும் மேலோங்கி இருந்தன. 1664-ஆம் ஆண்டு, நாடார்கள் அவர்தம் கோயில்களினின்றும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். நாடார்களுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமைகளால், 13 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், கிறித்துவ சமய ஞானிகள், நாடார் ஆதித்தம் செலுத்திய பகுதிகளில், சிறந்த மதமாற்றம் செய்வதற்கு தகுதியான இடமாகக் கண்டனர். இந்த கிறிஸ்தவ ஞானிகள் இல்லா திருப்பின், நாடார் இனம் முற்றிலுமே, ஆரிய ஏஜென்டுகளின் திட்டப்படி அழிக்கப்பட்டிருக்கும். ,
தமிழ் மரபுவழி சாதியினர் என்பது மட்டுமில்லாமல், நாடார்களின் புறத்தோற்றம் அவர்கள் கலப்பு குறைந்த தமிழ் சாதி என அடையாளம் காட்டுகிறது. நாடார்கள் தமிழகத்தின் தெற்கிலும், கேரளாவிலும் இலங்கையிலும் வாழ்கிறார்கள். நாடார்கள் கேரளாவின் ஈழவரும் ஒரே சாதியினர் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆதிக் காலங்களில் இலங்கையில் குடியேறிய தமிழ் சாதியும் இவர்களே ! வேடுவர்களுக்கு அடுத்து இலங்கையில் குடியேறிவர் மீனவரும், நாடாருமே ஆகும். காலப் போக்கில் அவர்கள் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து கேரளம் வந்தததால் என்னவோ அவர்கள் ஈழவர் எனவும் தீயார், தீவார் என அழைக்கலாயினர். அது மட்டுமில்லாமல் இலங்கையின் நழவர் என்னும் பிரிவும் நாடார் இனமாக இருக்கக் கூடும். இலங்கையின் உணமை வரலாறாய் ஆய்வு செய்ய நாடார்களின் இன ஆராய்சி மிக அவசியமாகும்.
நாடார்கள் தான் தென் தமிழ்நாட்டின் நிலத்தின் சொந்தக் காரர்கள் ஆவார்கள் ! பின்னாளில் அங்கு குடியேறிய வேற்று சாதி வேளாளர், நாயர், நாயக்கர் போன்றோர் அவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை இழி நிலைக்கு தள்ளியது. இருப்பினும் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்து சமூக அந்தஸ்தைப் பெற்று இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களில் பலர் கிருத்துவத்தை தழுவியதும், அதனால் அவர்கள் பெற்ற ஆங்கில கல்வியும், உழைப்பும் ஒரு காரணம்.
சமஸ்கிருத அகராதி நாடார்களை, அரச இனம் (Royal race) எனக்காட்டுகிறது. சமயப்பரப்புக் குழுக்களைச் சேர்ந்த ஞானிகள் நாடார்களுக்கு, பொருளாதார ரீதியில் உதவி அளித்து வாழ்வித்த போதிலும் அவை மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலுள்ள நாடார்களின் உயர்ந்த குணநலன்களையும், விலை மதிப்பில்லா "சாஸ்திரங்கள்". அவர்களிடம் இருந்ததைப்பற்றி எதுவுமே கூறவில்லை. குறிப்பாக குமரி மாவட்ட நாடார்களின் உயர்ந்த குணநலன்களையும். விலைமதிப்பில்லா சாஸ்திரங்கள் அவர்களிடம் இருந்ததைப்பற்றியும் எதுவுமே கூறவில்லை. குறிப்பாக, குமரி மாவட்ட நாடார்களின் அரிய ஆவணங்களாம், வர்ம சாஸ்திரம், காலரி வைத்யம், வானியல் மற்றும் தர்க்க சாஸ்திரம் போன்றவை ஆகும். இவற்றை, சமஸ்கிருத மொழியிலும் காண இயலாது, சிறப்பாக கன்னியாகுமரி வாழ் நாடார்களிடமுள்ள வர்மசாஸ்திரம் போன்றவற்றை வேறு எங்கிலும் காண முடியாது.
தொடரும்..
...
http://velvetri.blogspot.in/2012/10/blog-post_24.html
பதிலளிநீக்குமேற்கண்டதை சொடுக்கி உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
தங்களின் ஆய்வு வரவேற்க படுகிண்றன...
பதிலளிநீக்குஇறந்தவர்களுக்கு சங்கு ஊதுதல் தமிழர்களின் பண்பாடு. அதில் இரட்டை சங்கு ஊதுவது மன்னர்களுக்கு மட்டும். அந்த நடைமுறை இன்றளவும் தொடர்வது நாடார் சமுதாயத்தில் மட்டுமே. அதை விரிவாக ஆராய்ந்து விளக்குக.... நன்றி
நாயக்கர் வரும் முன் இங்கே வரி வசூலித்தவர்கள் நாடார்கள்...
பதிலளிநீக்குதொழில் போட்டி வரும் என்று தான் எதிர்த்தார்கள்...
ஒருவரிடம் உள்ள உரிமைகள் பரிக்கப்படும்போதுதான் போராட்டம் வெடிக்கிரது அவ்வாறு தோன்றியதுதான் தோள்சீலைப்போராட்டம் வரலாற்றை திரிக்காதீர்
பதிலளிநீக்குவில்லவர் மற்றும் பாணர்
பதிலளிநீக்குபாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.
இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.
பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.
சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.
மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
வில்லவர் பாணர்
பதிலளிநீக்குநாகர்களுக்கு எதிராக போர்
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு