திங்கள், ஜூன் 27, 2011

நாடார் வரலாறு 2


இந்த கட்டுரை விக்கிப்பீடியா,தேவியர் இல்லம்,கொடுக்கி,மற்றும் பல இணைய தளங்களில் இருந்தே தொகுக்கப்பட்டது.எனவே கருத்துகள் அனைத்தும் சொந்தகருத்தல்ல என்பதையும் தொகுப்பின் முன் பதிவிலேயே தெரிவித்துக்கொள்கிறோம்.


குல வரலாறு

இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விட சற்று மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்த பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் ஜெயித்தும் காட்டியுள்ளனர். தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே நாடர்களின் தொடக்க பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்.

ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன் ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் "எல்லாமே" சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது. இந்த குழந்தைகளை பூமியில் விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்கு சென்றுவிட பெண் தெய்வமான பத்ரகாளி இந்த குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும் "நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கூடை சுமக்கமாட்டோம்" என்று எதிர்த்து நின்றனர். மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால் கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக் கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன் மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான், இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று சரித்திரங்களில் இருக்கிறது

பெயர் மாற்றம்

நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் சான்றோர் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Chanar) என்று குறிக்கப்பட்டுள்ளனர். சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர். சான்றோர் சாதியில் பின்வரும் ஐந்து உட்பிரிவுகள் உள்ளன: 1. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர், 2. முக்கந்தர் அல்லது முக்கந்த நாடார், 3. சிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள், (4) பனையேறிச் சாணார், (5) மேனாட்டார், கள்ளச் சாணார், சேதிராயர், புழுக்கை ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர். [2] ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தின் கீழ்மட்டப் பிரிவினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது. [3]

இலங்கைக் குடியேற்றம்:

ஆனால் அங்கு தமிழர்கள் குடியேறத் தொடங்கிய காலத்தில் இலங்கைத் தீவில் வேட்டுவர் மக்கள் அரசு ஏதுமின்றி ( PRIMITIVE) வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலும் இலங்கைத் தீவினை பாண்டியத் தேசத்தின் நிழலில் இருந்து வந்துள்ளது. இலங்கையின் வடக்குக் கரைப் பகுதிகள் தவிரே ஏனையப் பகுதிகள் மிகுந்தக் காடுகளாகவும், வேடுவர் உட்பட காட்டு மிராண்டிகள் வாழ்ந்தும் வந்திருக்கக் கூடும். ஆகவே பாண்டிய நாட்டின் தாமிரபரணி நதியின் எதிரே இருந்த இன்றைய புத்தளம் பகுதியில் குடியேறியப் பாண்டி நாட்டு பரதவர்கள் தாமிரபரணி என்னும் சிறுக் குடியேற்றத்தை அமைத்து குடியேறினார்கள். இலங்கையின் வடமேற்குப் பகுதியே தமிழர்கள் குடியேறிய முதல் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.

தாமிரபரணி அரசு:

தாமிரபரணி குடியேற்றம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக மாறி தாமிரபரணி என்னும் சிற்றரசாக மாறி இருக்க வேண்டும். அந்த சிற்றரசு பாண்டியப் பேரரசின் கீழ் இருந்து வந்திருக்க வேண்டும். இந்தக் குடியேற்றம் விரிவடைந்து செல்லும் போது ஏற்கனவே வாழ்ந்து வந்த வேட்டுவர்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சனைகள் வந்திருக்க வேண்டும். இந்த குடியேற்றத்தை அண்மைக் காலங்களில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெள்ளை குடியேற்றங்களுக்கு ஒப்பானவையாக இருந்திருக்க வேண்டும். தாமிரபரணி குடியேற்றத்தின் சிற்றரசுகளும், மக்களும் தமிழகத்தில் இருந்து சென்றிருக்க வேண்டும். தாமிரபரணிக்கும் பாண்டிய நாட்டுக்குமான தொடர்பினை மகாவம்சமே உறுதி செய்கின்றது.

ஆரம்பக் கால சிங்கள் மன்னர்களின் பெயர்கள் அனைத்துமே பாண்டு என்ற பெயரினைத் தாங்கி வருதலையும், விஜயன் பாண்டியன் நாட்டு இளவரசியை மணந்தத்தாக கூறும் கதைகளே இவற்றை உறுதி செய்கின்றன. அதே போல நாடார் இன மக்கள் இன்றளவும் ஈழவர் என கேரளத்தில் அழைக்கப்படுவதும். ஈழவரின் குலப் புராணத்தில் நாடார் மன்னனான நரசிம்மன் அல்லி என்னும் பாண்டிய இராணியோடு இலங்கைக்கு குடியேறியதாகவும், அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமிழகம் திரும்பியதாகவும், பின்னர் அல்லியின் தம்பி முறையிலானவன் இலங்கை சென்று நாடாண்டதாகவும் கூறப்படும் கதையும் மகாவம்சத்தின் விஜயன் கதையும் ஒன்றே போல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தாமிரபரணியை கிரேக்க அறிஞர்கள் பண்டையக் காலத்தில் தாப்ரோபனே என அழைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தொழில்கள்

நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது. ஆனால் பலர் பனையேற்றுத் தொழில் செய்தனர். அவர்கள் பனை மரங்களிலிருந்து பதனீர், கள் இறக்குதல் மற்றும் அவைகளை விற்பனை செய்தல் போன்றவைகளுடன் பனை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். பிற சாதியினரைப் போலவே நாடார்களும் கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சமுதாயத்தினர் அன்றைய நிலை

தென்மாவட்டங்களில், குறிப்பாக முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி">கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாருக்கு எதிரான சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும்; அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது; செருப்புப் போடக் கூடாது; தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது; மாடி வைத்து வீடு கட்டக் கூடாது; பசுக்களை வளர்க்கலாம்; ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்க வேண்டும்.

அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850கள் வரை தொடர்ந்தன. [4] இத்தகைய அடக்குமுறைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் (அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும்) இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார்">இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம நிலையினரே என சட்டத்தில் இருந்தாலும் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமத்துவம் பிறக்கவில்லைதான். ஆனால் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.

சமுதாயத்தினர் போராட்ட வரலாறு

இன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நாடார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த இச்சமூகத்தினர் சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறித்தவம்">கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன்குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000 கிறித்தவர் இருந்தனர்.

திருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே இன்னமும் எழுதப்படவில்லை)">Ringeltaube என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது.

நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது. நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான உயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் சமூகத்து ஆண்கள் சித்ரவதை மற்றும் கொலை போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள். நெய்யாற்றின் கரை, இரணியல்">இரணியல், பத்மனாபபுரம்">பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் திருவிதாங்கூர்">திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829) "நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் நாடார் குலமக்கள் பலத்த கோபமடையச் செய்தது. இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார் சமுதாயத்தினர் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த சமூக நீதிப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.

ஆனால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசு பணியவேண்டியதாயிற்று. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார். ஆயினும் நாடார் பெண்கள் மேல்சாதிப் பெண்களைப்போல உடுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. சமத்துவம் கோரி எழுந்த மக்கள் எழுச்சி சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வீறுகொண்டு எழுந்து போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது.
இப்படி நாடார் சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டமும் அதில் அவர்கள் வெற்றியடைந்து மீண்டு வந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது.


(முதல் பகுதிக்கு)
.


மூன்றாவது பகுதிக்கு


...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக