வெள்ளி, பிப்ரவரி 13, 2015

வெங்காயத்தின் விளைச்சல்.

கத்தரி, வெண்டை, மிளகாய் மற்றும் கீரைச் செடிகளோடு நட்டு வைத்திருந்த வெங்காயத்தின் விளைச்சல். 
1. இந்த வெங்காய வாசனைக்குப் பயந்தோ என்னவோ பெரிய செடிகளில் பூச்சித் தாக்குதல் இல்லை.
2. இதைதான் பேபி ஆனியன், ஸ்ப்ரிங் ஆனியன் என்று பெரிய கடைகளில் வாங்கி வந்து சூப், ஃப்ரைட் ரைஸ், ஸ்ப்ரிங் ரோல் என்று செய்கிறோம்.
3. சுவையான சமையல் குறிப்பு ஒன்று. முற்றிய
வெங்காயத்தாள்களை சுத்தம் செய்து நறுக்கி தாளித்து, கொஞ்சம் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும்.
வரமிளகாய், தனியா, சீரகம் மிளகு, கறிவேப்பிலையை எண்ணெயிட்டு வறுத்து, பொடியாக்கி, அதனோடு வறுத்த நிலக்கடலை போட்டுப் பொடியாக்கி தாள் வெந்ததும் இந்தத் தூளைத் தூவி இறக்கவும். எதனோடும் இணையும் டேஸ்ட்டி டேஸ்ட்டி யம்மி யம்மி தொடுகறி தயார்.
வாங்க சாப்பிடலாம் smile emoticon smile emoticon smile emoticon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக