புதன், செப்டம்பர் 07, 2011

சன் டிவியின் பொய் பிரச்சாரம்

சன் டிவி அரசு கேபிளால் தன் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்து வருவதால்,அதற்கு எதிராக பொய் பிரச்சாரம் ஒன்றை கட்டவிழ்த்து இருக்கிறது.

சன் டைரக்டில் எதேச்சையாக பார்த்தபோது,எமெர்ஜென்ஸி செய்தி போல ,தொடர்ச்சியாக மக்களிடம் பேட்டி எடுக்கின்றனர்.சன் குழும சேனல்கள் இல்லாமல் போரடிக்கிறது.அதனால் பழைய இணைப்புக்கே திரும்பி விட மக்கள் விரும்புவதாக சொல்கிறது.

மக்களிடம் தொடர்ச்சியாக பேட்டி எடுத்து வெளியிடுகிறது.சன் ரொம்ப பயந்து போய்தான் இருக்கிறது.உண்மையில் எனக்கும் சன் குழும சேனல் இல்லாமல் போர் அடிக்கத்தான் செய்கிறது.டிராய் சன் குழுமத்துக்கு மாதம் 7 கோடி கொடுத்து சேனல்களை அரசு வாங்கி கொள்ளலாம் என பரிந்துரை செய்திருக்கிறது.
நன்றி :astrosuper.com
ஆனால் சன் தரப்போ 15 கோடி கேட்பதாக சொல்கிறார்கள்.இன்னும் பேச்சு வார்த்தை இழுபறிதான்.டிராய் சொன்னபடி தருகிறோம் என முதல்வர் சொல்லிவிட்டார்.சன் தான் இறங்கி வர வேண்டும்.சன் தனது எஸ்.வி.ஐ மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கவே திட்டம் போடுகிறது..கேபிள் ஆப்ரேட்டர்கள் மக்கள் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.