சனி, ஜனவரி 30, 2010

திருப்பூர் புத்தக கண்காட்சி 2010


படங்களை கிளுக்கினால் தெளிவாக கிடைக்கும்
















சென்னையைப் போன்று உடனடியாக புத்தக கண்காட்சியைப் பற்றி பதிவர்கள் விமர்சிக்கவில்லை என்றாலும் பதிவர்கள் திருப்பூரின் பல்வேறுபட்ட தொழில்களில் மூழ்கி விடுவதும் ஒரு காரணம் எனலாம்.

நானே கூட காலையிலிருந்து வசூல், வசூல் என்று திருப்பூரைச் சுற்றிவிட்டு மாலையின் ஒரு சிறிய இடைவேளையில் சென்ற போது சற்றே கூட்டம் கூட சென்னையை விடக் குறைவாகத்தான் இருந்தது.

டாஸ்மாக்க்குகளில் கூட கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது ,இம்மாதிரியான இடங்களில் கூட்டம் சற்று குறைவாகத்தான் உள்ளது. காரணம் நேரமின்மையே.

புத்தகம் வாங்கினாலும் படிக்க இயலாது. காலை முதல் இரவு வரை தொழில் சார்ந்தே செல்ல வேண்டியுள்ளதும் ஒரு காரணமே.

அதே போன்று குழந்தைகள் ,பெண்களின் சார்பான சமையல் குறிப்பு, தன்னம்பிக்கை புத்தகங்கள், ஆன்மிகம் சார்ந்தவை, ஆனந்தவிகடன் மற்றும்
இங்கிலீஸ் சினிமா டிவிடி கடைகளில் மட்டும் குடும்ப பெண்கள்,கல்லூரி பெண்கள் கூட்டம் காணப்படுகிறது.

அதே போன்று உயிர்மை ஸ்டாலில் ,வாமுகோமுவின் " சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்" நாவல் உள்ளது. அவரின் இன்ன பிற படைப்புகளான "கள்ளி" ,"மண்பூதம்" ," சொல்லக்கூசும் கவிதைகளும்" விற்பனைக்கு உள்ளது.

சில புகைப்படங்களையும் நாம் அளித்துள்ளோம். அது இன்னும் தெளிவாக
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பதிப்பக விபரங்களை அளிக்கும்.


........

புதன், ஜனவரி 27, 2010

கோவையின் வணிக வீதிகள் ஒரு பார்வை

நமது ஊரில் பேச்சுவழக்கில் ஒரு வாக்கியம் எல்லோருக்கும் அறிமுகம் ஆகியிருக்கும் ,அதாவது வெளி நாட்டினால் எல்லா இடங்களிலும் கிஸ் அடிக்கலாம்,பிஸ் அடிக்க முடியாது.ஆனால் இந்தியாவில் எல்லாஇடங்களிலும் பிஸ் அடிக்கலாம் ,கிஸ் அடிக்க முடியாது என்று .ஆனால் இங்கயும் இப்பல்லாம் பிஸ் அடிக்க முடியாது என்பதை கோவையின் பெரும் வணிக வீதிகளான ஒப்பணக்கார,ராஜ மற்றும் அதைச் சுற்றீயுள்ள வீதிகளில் சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இதே போல நிலைதான் தமிழ் நாட்டின் பல சுற்றுலாத்தலங்களில் உள்ளது.

இவ்வாறான ஷாப்பிங் பகுதிகளில் ஒரு மாடர்ன் பாத்ரூம் கட்டி வசூல் செய்தால் தினமும் ஆயிரமாயிராய் சம்பாதிக்கலாம். நமக்கே கூட இப்படி ஒரு எண்ணம் பல நாளாக உண்டு . ஆனால் என்ன அந்த மாதிரி பிசியான இடங்களில் நமக்கும் இடம் இருந்திருந்தால் இந்த மாதிரி டைப் அடிக்கவே நேரம் இருந்திருகாதோ என்னவோ.

ஆனால் ஒன்று இந்த வீதிகளில் பணத்துடன் நுழைந்தால் நமக்கு கிடைக்காத அயிட்டங்களே இல்லை என்னும் அளவிற்கு மொத்தமாகவோ , சில்லறையாகவோ வாங்கலாம்.

துணிக்கடைகளைப் பொறுத்தவரை சென்னை சில்க்ஸ் ,கணபதி சில்க்ஸ் போன்ற கடைகளில் விலை சற்றே அதிகம் தான். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் துணீகள் மிக அதிகம் .

சென்னை சில்க்ஸில் ரூ 345 க்கு காணப்பட்ட ஒரு ரெடிமேட் துணி பக்கத்தில் உள்ள ராஜதானி கடையில் ரூ 215 க்கு கிடைத்தது என்பதை பார்க்கும் போது
பெரிய கடைகளில் விலை அதிகம்தான் என்பதை மறுக்கமுடியாது.

அப்புறம் இந்த வீதிகளில், கடைகளை பெரும்பகுதி நடத்துவது வடக்கத்திய
ஆட்கள்தான். நமக்கு மட்டும்தான் நம் மக்களின் டேஸ்ட் தெரிந்து கடை போடத்தெரிவதில்லை.

அதிலும் இந்த சேலைக்கடைளில் ஒரு கோடு உண்டு. அதாவது விலை ஸ்டிக்கரில் குறிக்கப்பட்டு இருக்கும் ,அதற்க்கு அருகிலேயே ஒரு வரிசை எண் எழுதப்பட்டு இருக்கும், அதாவது விலை ரூ 500 என்றால் வரிசை எண் 950 என்றால் வரிசை எண்ணில் இருந்து 95 மட்டும் எடுத்து அதனுடன் 10 கூட்டி வருவதை 500 ல் கழித்து அந்த சேலைக்கு இவ்வளவு குறைக்கலாம் என்று சொல்வார்கள் . ஆனால் இன்னும் கறார் செய்தால் மேலும் ரூ 50 வரை குறைப்பார்கள்.

அதனால் இந்த வீதிகளில் பர்சேஸ் என்பது ஒரு கலைதான் என்பது ஏற்கனவே சென்றவர்களுக்கு மட்டும் பிடிபடும் என்பது மட்டும் உண்மை.


....

வெள்ளி, ஜனவரி 01, 2010

மலையாளத்தில் தமிழ்

புத்தாண்டு நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்களில் இரவு 9.00 மணீக்கு மேல் பார்க்க ஆரம்பித்தால் திரைப்படங்களை போட்டு ஒளிபரப்பிக்கொண்டு இருந்தனர்.

சரி அண்டை மாநில சேனல்கள் என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகின்றன என்று ஒரு பார்வை பார்க்கலாம் என்று கேரள சேனல்கள் பக்கம் சென்றால் ஏசியா நெட்டில் விஜய் ஏசுதாஸ் "சேவற் கொடி பறக்குதே "என்று குட்டிபையனை மேடைக்கு அழைத்து பாடியபடியே ஆடிக்கொண்டிருந்தார்.

அதேபோல் கைரளி டிவிக்கு சென்றால் " நாக்கமுக்கு" போட்டு நாலைந்து பெண்டுகள், இளைஞர்கள் ஆடிக்கொண்டு இருந்தனர்.

ஜெய்ஹிந்த் போனால் சுசித்ரா "கந்தசாமி" பாடிக்கொண்டு இருந்தார்.

அமிர்தா சேனலிலும் இதே கதைதான்.

ஆக இன்று நேற்றல்ல , சனி , ஞாயிறு இரவுகளில் கேரள சேனல்கள் தங்கள் புரோகிராம்களில் பெரும்பகுதி தமிழ் பாட்டுகள் இடம்பெற செய்கின்றன.

இப்படி தமிழ் தங்களது டிவி நிகழ்ச்சிகளில் இடம்பெறுவதை விரும்பும் கேரள மக்கள் இதே போன்று தமிழ் பண்பலை நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் பங்கு பெறுவதை கோடை பண்பலை, கோவை ரெயின்போ கேட்போர்க்கு தெரிந்து இருக்கும்.

அதே மாதிரி கோவையையும்,திருப்பூரையும் அதிகம் மலையாளிகள் பேக்கரி வைத்தே அபகரித்து விட்டனர்.

அப்புறம் என்ன தமிழ் நாட்டை அரைவாசி ஆக்கிரமிச்சாச்சு , இன்னம் போயி தண்ணி தரமாட்டேன் , முல்லைப்பெரியார் அணைகட்டியே தீருவேன்னு சபதம் போட்டுட்டு.

இந்த புத்தாண்டுலயாவது நாமல்லாம் "ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு" உணர்ந்துகிட்டு மொறைக்காம இருக்கலாமுன்னு டிரை பண்ணுங்க சாரே !

...