புதன், நவம்பர் 30, 2011

தட்டி மெஸ்-ஒரு தடபுடலான விருந்து..

நேற்று திருப்பூரிலிருந்து ஒரு வேலையாக மயிலாடுதுறை செல்ல நேர்ந்தது..ஜனசதாப்தி பஸ் கட்டணத்தை குறைவாக இருந்ததால் அதுவே நமக்கு தோதாக இருக்கும் என்பதாலும் காலை 7.30 மணீக்கு ஏறி அமர்ந்தோம்..

உருட்டல்னா உருட்டு அப்படி ஒரு உருட்டு..சராசரியாக 70ல் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.திருச்சி சென்று சேரும் போது மணி 12.அதன் பிறகு இன்னும் கொஞ்சம் உருட்டு..தஞ்சாவூர்,கும்பகோணம் வழியாக மயிலை சென்று சேரும்போது மணீ 1.45 ..பசி வயிற்றை கிள்ளியது.நெற்களஞ்சியம்


நண்பர் ஒருவர்
மயிலையில் 'தட்டி மெஸ்'என்று உள்ளது ,அதில் மீன் குழம்புடன் சாப்பாடு அருமையாக இருக்கும் \,சென்று சாப்பிடுங்கள் என்று கூறினார்..அதன்படி சென்று அமர்ந்தால் மணக்க மணக்க சாப்பாடு பரிமாறப்பட்டது..மீன்குழம்புடன் அதுவும் 3 மீன் முழுவறுவல்,2குழம்பு மீன் என வந்தது..

நன்கு கட்டிவிட்டு பில் ரூ120 வந்தது..அருகிலேயே இந்த மெஸ்ஸின் சுவை தெரிந்தே என்னவோ கவர்ன்மெண்ட் கடை வைத்துள்ளனர்....உ.பா சாப்பிடுபவர்களுக்கு சரியான மெஸ் இது...கடை உரிமையாளரே பரிமாறவும் செய்கிறார்..

நல்ல திருப்தியான சாப்பாடுதான்..இரவும் அங்கியே அருகில் சாப்பாடு முடித்துவிட்டு மறுநாள் காலை தஞ்சை பெரிய கோவில் சென்றோம்..அங்கு நாம் கண்ட காட்சி எத்தனை விருந்து சாப்பாடு சாப்பிட்டாலும் இதற்கு ஈடாகாது என்பதை பறை சாற்றியது..


ஆமாம்.வறியவர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு எவர்சில்வர் தட்டமும் கொடுத்து 4 இட்லியையும் சாம்பாரையும் ஒருவர் பரிமாறிக்கொண்டிருந்தார்..சாப்பிடுபவர்களின் மனநிலையில் யோசிக்கும் போது தட்டி மெஸ்ஸில் 120 க்கு சாப்பிட்ட சாப்பாடு கொஞ்சம் மறக்கத்தான் செய்தது....


...

சனி, நவம்பர் 19, 2011

வயக்காடு வாங்கலாம் வாங்க...


நமக்கு வயக்காடு இருந்தா இப்படி இருக்கனுமின்னு ஆசை..இல்லை என்ன செய்யலாம்..வேற யாராவது வயக்காட்ட‌ போட்டோபோட்டு பாத்துக்க வேண்டியதுதான்..........


நமக்கு வயக்காடு இருந்தா இப்படி இருக்கனுமின்னு ஆசை..இல்லை என்ன செய்யலாம்..வேற யாராவது வயக்காட்ட‌ போட்டோபோட்டு பாத்துக்க வேண்டியதுதான்..........

திங்கள், நவம்பர் 07, 2011

திருப்பூரின் நொய்யல் வெள்ளம்
திருப்பூரின் நொய்யல் வெள்ளம்,மற்றும் ஜம்மனை பள்ளம் பாலம் உடைப்பு
திருப்பூரின் நொய்யல் வெள்ளம்,மற்றும் ஜம்மனை பள்ளம் பாலம் உடைப்பு

..

வியாழன், நவம்பர் 03, 2011

வானொலி கேட்டல்

வானொலி ..வானொலி கேட்ட ஆரம்ப நாட்கள் எப்படிப்பட்டன என்பது இன்று நினைத்தாலும் மனம் மகிழ்ச்சியடையும் என்பது அந்த காலங்களில் வானொலி கேட்டவர்களுக்குதான் தெரியும்..

நான் சிறு பையனாக இருந்தபோது, எங்கள் வீட்டின் அருகில் ஒரு கைத்தறி நெசவுக்கூடம் ஒன்றில் பிலிப்ஸ் ரேடியோ,பாடிக்கொண்டிருக்கும்... அதில் காலை 6மணி முதல் 8.30 வரை திருச்சி வானொலியும் ,பிறகு 8.30 முதல் 9 வரை கோவை வானொலியும் பாடிக்கொண்டு இருக்கும்.
பிறகு 9மணி முதல் மாலை 4 மணி வரை இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிற்றலை வரிசையில் பாடிக்கொண்டு இருக்கும்,

பக்கத்து வீட்டில் இருக்கும் பெரியப்பா மர்ப்பி வானொலி ஒன்றை கிரிக்கெட் கமெண்ட்ரி கேக்கவென்றே புதிதாக வாங்கினார்.அவர் தயவால் இன்னும் கொஞ்சம் வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக கேட்க முடிந்தது.

நமது வாமுகோமு ரேடியோவில் சில சித்துவேலைகளை செய்து உலக வானொலிகளை அவ்வப்போது ஒலிக்க விடுவார்..

அதன் பிறகு எங்கள் வீட்டில் புதிதாக பிலிப்ஸ் ரேடியோ ஒன்றை எங்களப்பா எலக்சன் செய்தி கேக்கவென வாங்கி வந்தார்..அடடா அந்த ரேடியோவை காண என் நண்பர் கூட்டமாக வந்தது தனிக்கதை..

பிறகு சொல்லவா வேணும்.என் நேரமும் அந்த ரேடியோவை குடஞ்சுகிட்டே இருக்கறதுதான் நம்ம வேலை. இதில் SW 3 பேண்ட் இருந்தது...13‍மீ முதல் 90மீ வரை இருந்தது..பாதிக்குமேல் எந்த ஸ்டேசனும் வராது..பள்ளி ஆண்டு விடுமுறை நமக்கு இதில் தான்..

எந்த எந்த வானொலியில் எந்த நேரங்களில் பாட்டுப்போடுவார்கள் ..எந்த எந்த வெளிமாநில ரேடியோக்களில் தமிழ் எந்த நேரம் வரும் என்பதும் நமக்கு அத்துபடி.. திருவனந்தபுரம் ரேடியோவுல கூட தமிழ் நிகழ்ச்சி,பாட்டு போடுவாங்க..

தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பும் எல்லா நாட்டு வானொலியையும் நமக்கு அறிமுகம்.

பாகிஸ்தான் வானொலியிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவார்கள். மதியம் 2.45 முதல் 3.15 வரை. சினிமா பாடல்கள் ஒலிபரப்புவார்கள்.

இரவு 7.30 முதல் 8.30 நேரங்களில் சீன வானொலி(தற்போது காலை நேரமும் வருகிறது)அறிவிப்பாளர்கள் தமிழ் பெயரைக் கொண்ட சீனர்கள்...

மாலை 5க்கு மேல் சிங்கப்பூர் வானொலி...அருகிலேயே 7க்கு மேல் எடுக்கும் மலேசியா தமிழ்.
நம்ம ரபி பெர்னாட் முதல் முதலா வந்த பிலிப்பைன்ஸ் வானொலி,வேரித்தாஸ் வானொலி,மாஸ்கோ தமிழ், இரவு லண்டன் பி.பி.சி தமிழோசை... இப்படி பல வானொலிகளும் அதன் நிகழ்ச்சிகளும் நமக்கு அத்துபடி..


இதுபோக புலிகளின் குரல் என பல வானொலிகள் நினைத்த நேரங்களில் வந்து கொண்டு இருந்தது..இந்த வானொலியை 3 ஆண்டுகளுக்கு முன்னால் சேட்டிலை மூலமாக சி பேண்ட்டில் கேட்டதுண்டு.

இந்த நேரங்களில் இந்த நாட்டு வானொலி எனக்கு கிடைத்தது ..உனக்கு கிடைத்தா என கேட்பதற்கே நண்பர்கள் வட்டம் உண்டு..மறு நாள் அந்த வானொலி நிகழ்ச்சியை கேட்காமல் தூக்கமே வராது..

இப்படித்தான் இலங்கை வானொலியின் சிற்றலை வர்த்தக சேவையும்,ஆசிய சேவையும்,அவ்வப்போது வரும் சிறப்பு சேவைகளும்..அதிலும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் நிகழ்ச்சிகளை கேட்டிருக்காத அந்த கால நேயர்கள் யாருமேயில்லை என்று கூட சொல்லலாம்..

புலரும் பொழுது, காலைக்கதிர், ,, பொங்கும் பூம்புனல்,, என் விருப்பம்... , நேயர் விருப்பம்.,சித்திரை செவ்வானம், நெஞ்சில் நிறைந்தவை, ஒரு படப்பாடல்கள்,இசை களஞ்சியம், இன்றைய நேயர்,இப்படி பல வித்தியாசமான தலைப்புகளில் நிகழ்ச்சிகளை அளித்தது இலங்கை வானொலி என்பது மறுக்கமுடியாது..

ஞாயிறுகளில் வரும் பாட்டுக்கு பாட்டு,ஒலிச்சித்திரம்..கதையும் கானமும் அருமையான நிகழ்ச்சிகள்..இந்த பாட்டுக்கு பாட்டுதான் சிறிய மாற்றங்களுடன் இன்றும் பி.எச்.அப்துல்ஹமீது அவர்களால் சன்டிவியில வருகிறது ,தற்போது கலைஞர் என நினைக்கிறேன்.

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து கொழும்பு சர்வதேசவானொலி மீடியம் வேவில் வந்தது.. தமிழர்களுக்கு புதுப்பாடல் மோகத்தை தீர்க்கவும் ,,தமிழக விளம்பரங்களை குறி வைத்தும் வந்ததென சொல்லலாம்,6 மணியுடன் நிறுத்தி மத நிகழ்ச்சிகளுக்கு சென்று விடுவார்கள்..அதில் மாலை 5.45 தமிழ் போராளிகளை கிண்டலிக்கவும் செய்தார்கள்.இந்திய ரேடியோக்கள் புதுப்பாடல் போடவே மாட்டார்கள்.

அந்த சிறு பிள்ளை வயதுகளில் இலங்கை போக எங்கள் ஏரியாவில் மக்களை கொள்ளை கொண்டது கோவை வானொலியின் கொங்குத்தமிழ் வழக்கில் வரும் சூலூர் கணேசின் புதன் இரவு,சனி காலை நாடக‌ங்கள்தான், மக்கள் இதற்கென காத்துக்கொண்டு இருந்தது ஒரு காலம்...

அன்றைய நாளில் இலங்கை வானொலி அழகிய உச்சரிப்புடன் தமிழை சிதைக்காமல் தந்த இனிமையை கேட்ட காதுகளுக்கு, இப்போதைய பண்பலை ஒலிபரப்புகள் இனிமையை தருவதில்லை. .

அன்று வானொலி கேட்டல் மிக பெரிய பொழுது போக்கு. இன்று பல்வேறு பொழுது போக்குகள் வந்துவிட்டன.

மலை மீது இருந்து எட்டுத்திக்கும் மெட்டுப்போடும் கோடைப்பண்பலை கொஞ்சம் உயிரோட்டமான வானொலி என்பதை மறுக்க முடியாது..22 மாவட்டங்களை கொள்ளை கொண்டுள்ள கோடைப்பண்பலை தற்போது தமிழகம் தாண்டி இலங்கையின் சில இடங்கள்,கேரளாவின் பல இடங்கள் என சென்று கொண்டிருக்கும் பண்பலை ஒலிபரப்பு,இன்னும் கொஞ்சம் தன் திறனை 10 மெகாவாட்டிலிருந்து 20 மெகாவாட்டாக உயர்த்துமெனில் மைசூர்,ஆந்திரா என எட்டும் என்பது எங்கள் அவா..

ஆனால் இலங்கையில் 90களீல் பண்பலை பிரபலமாகிவிட்டதென நினைக்கிறேன்.அப்போதே தனது பரிட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்த இந்த கோடைபண்பலை மதுரை வானொலியை அஞ்சல் செய்ய ஆரம்பிக்க அதுவும் படுமோசமான ஒலிபரப்பாக 2000 ஆரம்பித்த ஞாபகம்..ஆனால் அதற்கு முன்பு இவர்களின் பரிட்சார்த்த ஒலிபரப்பை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் " புதுசா சிடி பிளேயர் எதும் வாங்கிட்டியா" என கேட்டதுண்டு.நல்ல வேலை கொஞ்ச நாளிலேயே தனது சொந்த ஒலிபரப்புக்கு மாறிவிட்டது.

வானொலிக்கும் சேவை என்பது போய் வியாபாரமாகி விட்டன. பாடல்களுக்கு நடுவே விளம்பரங்கள் போய் இப்போது விளம்பரங்களுக்கு நடுவே பாடல்கள். நல்ல பாடல் வருகிறதென்றால், சகித்து கொண்டு நாற்பது விளம்பரங்களை கேட்கலாம். விளம்பரம் முடிந்து வரும் பாடலை கேட்டால், விளம்பரமே தேவலாம் என்கிற ரீதியில் பாடல்கள் வருகிறது. ஆனால் கோடைப்பண்பலையில் அவர்கள் போடும் ஒன்றிரண்டு பாடல்களுக்காகவே விளம்பரங்களை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இன்னும் பல விசயங்களை எழுதலாம்...பிறகு ஒரு தனிப்பதிவாக எழுதலாம்..இப்போது வானொலி கேட்காவிட்டாலும், வானொலியை பெரிய விஷயமாக கருதி வாழ்ந்த நாட்களை மறக்க இயலாது.
..