திங்கள், செப்டம்பர் 21, 2009

தமிழர்களுக்கு அறிவுண்டா ?

தமிழர்களுக்கு அறிவுண்டா இல்லை ,இருந்தும் இல்லையென்று மறதியா ?

நான் இத்தனை நாளா கார், கவர்ன்மெண்ட் பஸ் ஓட்டறவங்கள் எல்லாம் புத்திசாலி நெனைச்சு இருந்தேன் . ஆனா பாருங்க , கொமரபாளையத்திலிருந்து செங்கப்பள்ளி வரைக்கும் நாலு ரோடு போட்டப்பிறகு மொத்தம் நாலு டிராக் அதில போறதுக்கு 2, வாரதுக்கு 2 அப்படினு தனித்தனியா இருக்கு, ஆனா பாத்தீங்கன்னா என்ன நடக்குது ?

லெப்ட் சைட் டிராக்கில திடீருன்னு ரைட் சைடு போகவேண்டிய வாகனங்கள் ஹெட்லைட்ட போட்டுட்டு எதுக்கால வாரது.இதுனால என்னாகுதுன்னா எதோ ஒரு வாகனத்த ஓவர் டேக் எடுத்துட்டு வர கார் தீடீருன்னு வார பஸ்ஸையோ, அல்லது காரையோ பார்த்து ஒண்ணும் செய்ய முடியாம மொத்தமா கொண்டு போயீ ஒரே சாத்தா சாத்தி போகவேண்டிய நெலமை.

இப்படித்தான் போனவாரம் குறுக்க வேற ரோட்டில போன பஸ்ஸ பொதுமக்கள் குறுக்காட்டி கேட்டா ? டிரைவர் எகத்தாளம் பேச , ஒரே ரகளையாயி , கன்னாபின்னானு வார்த்தை பேசி பஸ்ஸ ஓரம் கட்டி ஒரு மணீ நேரத்திற்க்கு மேல பஞ்சாயத்து, ஹைவே பெடரோலுனு வந்து அப்புறந்தான் உட்டாங்க.

அதே மாதிரி கார்க்காரங்களும் கன்னாபின்னானு டிராக்கில குறுக்க வாரது . அதனாலதான் கேக்கறேன் , தமிழர்கள் முட்டாள்களா இல்லை அறிவாளிகளா ?

நம்ம உயிர நாமதான காப்பாத்திக்கணூம்.அதுக்குத்தானே 2 டிராக் ரோட்டை 4 டிராக் ரோடா போட்டது. அப்புறம் ஏம்பா வீணா குறுக்க போயி மண்டைய போடறீங்க.


..

சனி, செப்டம்பர் 12, 2009

ஸ்ரீநிவாச பெருமானுக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு







திருப்பூரில் திருப்பதி ;

நேற்றிரவு திருப்பூர்க்கு வந்த திருப்பதி பெருமானுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு
திருப்பூர் மக்கள் இதுவரை காணாத ஒன்று எனலாம்.

இதே போன்ற ஆர்வங்களை மக்கள் சுற்றுப்புறத் தூய்மை, மரம் வளர்ப்பு , நொய்யல் சீரமைப்பு போன்றவற்றிலும் காட்டினால் நகரம் அழகு பெறும். இன்று கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது.

படங்கள் நான் எடுத்தவை அளித்துள்ளேன். விரிவான செய்திகள் தினமலர் இணையத்தில் இருந்து அளிக்கிறோம்.

நன்றீ : தினமலர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்து தர்ம பிரச்சார பரிஷத் மற்றும் திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், ஸ்ரீநிவாச-பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம் திருப்பூரில் இன்று நடக்கிறது. இதற்காக, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட உற்சவ மூர்த்திகள் ஸ்ரீநிவாசன், பத்மாவதி தாயார், திருமகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய கலைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நேற்று மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்து தர்ம பிரச்சார பரிஷத் மற்றும் சார்பில், ஸ்ரீநிவாசன் - பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம், இடுவம்பாளையம் பள்ளியில் இன்று மாலை 4.00 மணிக்கு நடக்கிறது. திருப்பதியில் தினமும் திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது.

அதைப்போலவே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மகோற்சவத்தை நடத்தி வருகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில், இரண்டு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கல்யாண மகோற்சவத்துக்காக சிறப்பு "மொபைல்' உற்சவ மூர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளார்.திருமலையில் நடக்கும் அனைத்து பூஜை, புனஸ்காரங்களும், அதே முறைப்படி, அதே நேரத்தில் உற்சவ மூர்த்திகளுக்கும் செய்விக்கப்படும். இதற்காக, தேவஸ்தானம் சார்பில் வேதபட்டாச்சார்யார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, தமிழகத்தில் எட்டு இடங்களில் ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம் நடந்துள்ளது.ஒன்பதாவது இடமாக, திருப்பூரில் இன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் இணைந்து செய்துள்ளது. திருக்கல்யாண மகோற்சவ நிகழ்ச்சிக்காக, திருப்பதியில் இருந்து உற்சவ மூர்த்தி நேற்று திருப்பூர் வந்து சேர்ந்தார்; திருப்பூர் வந்த ஏழுமலையானுக்கு, பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இரவு 7.00 மணிக்கு திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே வந்தார். அவருக்கு, வீரராகவ பெருமாள் எதிர்சேவை செய்தார். அங்கிருந்து, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் புறப்பட்டது.

திருப்பதி சென்று திருவேங்கடவனை தரிசிக்க வாய்ப்பின்றி மனமுருகியவர்களின் ஏக்கத்தை போக்க, அத்திருமாலே மணக்கோலத்தில் திருப்பூரில் எழுந்தருளினார். ஒரு குட்டி யானையும், ஐந்து யானைகளும் முன்னே செல்ல... ஸ்ரீநிவாசப் பெருமாள் அழைத்து வரப்பட்டார். விண்ணதிர வாண வேடிக்கைகள் போடப்பட்டன. கும்பகோணத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் மங்கள வாத்தியங்களை முழங்கினர். பஜனை பாகவதர்கள் இன்னிசை பாட, சாய் பக்தர்கள் இசை மழை பொழிந்தனர்.

விஷ்ணுவின் மகா பக்தர்களான கோத்தகிரி கக்குல்லா, அரவேணு பகுதி படுகர்களின் பாரம்பரிய நடன இசையுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. விவேகானந்த நிலைய அன்பு இல்ல மாணவர்கள் கோதண்ட நாமாவளி சங்கீர்த்தனம் பாடினர்.மங்கள வாத்தியங்கள், கேரள சிங்காரி மேளம், பஞ்சவாத்தியம், செண்டை மேளம், கதகளி நடனம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பம்பை, தவில், நாதசுரம், காவடியாட்டம், நாலாயிர திவ்ய பிரபந்தம் இசைக்கும் கலைஞர்கள், வேதபாராயணம் படிக்கும் வேதியர்கள், நடனமாடும் குதிரை, கோலாட்டம், கும்மி என 25க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலைகள் மூலம் உற்சாகமாக மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.மாப்பிள்ளை அழைப்புக்காக, 52 தட்டுகளில் சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது; நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இறைவனின் கல்யாண ரதம் திருப்பதியில் இருந்து தருவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பிடித்தமான இசையை வாசிக்க, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து இசைக்கலைஞர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படிக்க, நான்கு வேதபண்டிதர்கள், வேத ஆகம முறைப்படி செயல்பட 35 வேதபட்டாச்சார்யார்களும் திருப்பதியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர்.மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் வீரராகவ பெருமாள் கோவிலில் துவங்கி, காமராஜ் ரோடு வழியாக, ஊர்வலம் பல்லடம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தை அடைந்தது.

வழியெங்கும் பொதுமக்கள் பக்திப்பரவசத்துடன் கண்டுகளித்தனர். திருமண மண்டபத்தில், பொதுமக்கள் வழிபாட்டுக்காக சிறிது நேரம் அனுமதிக்கப்பட்டது. பின், பெருமாளுக்கு இரவு நேர வழிபாடுகள் மற்றும் ஏகாந்த சேவை நடந்தது. ஸ்ரீவாரி டிரஸ்ட் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

..

வியாழன், செப்டம்பர் 10, 2009

பூவாடைக் காற்று... ஜன்னலைச் சாத்து!




தம், தூள், கில்லி, டமால், டூமீல் என்று தலைப்புகள் திரைப்படங்களுக்கு வைக்கப்பட்டு கூட்டம் கூட்டமாகத் தெருவில் நடனம் ஆடுகிறார்கள். அடிதடி பொறி பறக்கிறது. தலைப்பின் நீளத்தைக் குறைத்த மாதிரி பஞ்ச் டயலாக்குகளையும் குறைத்தால் தேவலை என்று நினைக்கும் வண்ணம், ஆளாளுக்கு ஷூவின் அடிப்பாகத்தையோ ஆள்காட்டி விரலையோ காமிராவுக்குக் க்ளோசப்பில் காட்டி நம்மை எச்சரிக்கிறார்கள்.

அபூர்வமாகச் சில தலைப்புகளே கவிதை போன்று இனிமையாக இருக்கும். அப்படி வைக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று "ஒரு ஓடை நதியாகிறது" Well. Reality is the other way around! நாமெல்லாம் கடலையே ஓடையாக்கிவிடும் வல்லமை பெற்ற மகானுபாவர்கள் அல்லவா?

பின்னணிப் பாடகிகளின் அதீத இனிமைக் குரல் எதுவும் கிடையாது. நம் வீட்டுப் பெண்ணில் ஒருவர் சாதாரணமாகப் பாடுவது போன்ற மிக மிக அந்நியோன்யமான குரல். ஆனால் வசீகரமான குரல். ராஜேஸ்வரி பாலுவுடன் பாடியிருக்கிறார் (நான் இத்தனை நாள் உமா ரமணன் என்றே நினைத்திருந்தேன்).

இன்றுவரை இப்பாடலை எப்படிப் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரியாது. ஒளிவடிவத்தில் பார்த்ததில்லை. ஆனால் பாடலைக் கேட்டாலே போதும்; பார்க்கத் தேவையே இல்லாதபடியான ஒரு பாட்டு. கேட்கும்போதே மொத்தச் சூழ்நிலை, நாயகன், நாயகியின் மனநிலை, நிலவரம், என்று அனைத்தையும் மனமே எழுப்பிக்கொண்டுவிடும். அவ்வளவு அருமையான இசை; குரல்; பாடல் வரிகள். மயங்கிப் போகச் செய்த மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று. வெறும் பாடலாக இல்லாமல் செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் பாடல்!

புதிதாக மணமான ஆணும், பெண்ணும், அதீத வெட்கத்துடனும், பரபரப்புடன், இனம்புரியாத பயத்துடன், ஆர்வத்துடன், காதலுடன், காமத்துடன், புதிய வாழ்க்கையொன்றைத் துவங்குவதற்காக, ஏகமான கற்பனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும், முதலிரவன்று அறைக்குள் காத்திருக்கும் நாயகனை, நாணத்துடன் தலைகுனிந்து வரும் நாயகி சந்திப்பதும், தாம்பத்யம் தொடங்குவதையும், முடிவில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதையும் - ஆனந்தமாக மனதில் காட்சிகளாக விரித்து, உணரச் செய்கிறது இந்தப் பாடல்.

இந்த இனிய கற்பனைகளும், உணர்வுகளும் சோப்புக் குமிழ் போலக் கலைந்துவிடக் கூடாது என்ற பயத்தாலேயே இப்பாடலை இதுவரை ஒளிவடிவமாகப் பார்க்கும் தைரியம் எனக்குக் கிடையாது. அருமையான பாடல்களைப் படத்தில் கொத்துப் புரோட்டா போட்டிருப்பார்கள் சில கிறுக்கர்கள். அந்தமாதிரி இப்பாடலுக்கும் செய்திருந்தார்களென்றால் அதை என்னால் தாங்க முடியாது என்பதால் கேட்கும் சுகமே போதும் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன்.

திருமணத்தைக் குறிக்க (அலறாத) மங்கல வாத்திய இசையுடன் துவங்கி, வீணையின் நாதம் எழுப்பும் நெகிழ்வான உணர்வுடன் (Bachelor பசங்களெல்லாம் ஒத்துங்க. உங்களுக்கு இந்த மொழி புரியாது ;) !) ராஜாவின் பலமான வாத்தியமான வயலினும், பின்பு புல்லாங்குழலும் சேர்ந்தொலிக்க, பாடல் முழுவதிலும் குழைத்துக் குழைத்துப் பாடியிருப்பார்கள் பாலுவும், ராஜேஸ்வரியும்.

கணவன்:

"தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து வந்தபின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்"

மனைவி:

"பாற்கடலின் ஓரம், பந்தி வைக்கும் நேரம்"

க:

"அமுதம் வழியும் இதழைச் சுவைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து"

ம:


"தலையைக் குனியும் தாமரையே"

"காத்திருந்தேன் அன்பே - இனி
காமனின் வீதியில் தேர் வருமோ?"


:

"பூ மகள் கன்னங்கள் - இனி
மாதுளம் போல்நிறம் மாறிடுமோ?"


:

"ஆயிரம் நாணங்கள் - இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா?"


:

"நீயொரு பொன்வீணை - அதை
நுனிவிரல் தொடுகையில் பல சுரமா?"


:

"பூவை நுகர்ந்தது முதல் முறையா?"

:

"வேதனை வேளையில் சோதனையா?"

:

"புதுமுறையா?"

:

"இது சரியா?"

:

"சரிசரி.. பூவாடைக் காற்று ஜன்னலைச் சாத்து"

:

"உத்தரவு தேவி... தத்தளிக்கும் ஆவி"

:

"இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்"

: பெருமூச்சுடன்

"தலையை....க் குனியும்....தாமரையே "

மஞ்சமும், மலர்களும், படுக்கையும், இரவின் குளிர்ச்சியும், நிசப்தமும், அதில் கேட்கும் இதயங்களின் துடிப்பையும் உணரமுடிகிறது!

படம் : ஒரு ஓடை நதியாகிறது
இசை: இசைஞானி இளையராஜா


நன்றி :




http://video.google.com/videoplay?docid=-2674086247281555859#

http://www.musicplug.in/blog.php?blogid=1195
...


தர்மபுரி எப்.எம். 102.5

இன்று காலை எங்கள் ஊரில் எடுக்க ஆரம்பித்துள்ளது.

ஈரோடு முழுக்க ஒலிபரப்பு கேட்கும் எனத் தெரிகிறது.

பாடல்களும் செய்திகளும் மட்டுமே ஒலிபரப்பாக ஆரம்பித்துள்ளன.

இந்த ஒலிபரப்பு உங்கள் ஊரிலும் கேட்டால் எமக்கு பதில் அனுப்புங்கள்.

கோடை எப்.எம் பின் ஏற்காடு ( 103.7 ) அஞ்சலுக்குப் போட்டியாகும் இந்த வானொலி எனலாம்.

உஷாரய்யா ! கோடை எப்.எம்.

இல்லையெனில் சேலம் ஏரியா விளம்பரங்கள்
கைமாறி விடும்.

...