திங்கள், மார்ச் 19, 2012

கிரிவலம் பற்றி ஓர் அழைப்பு-அரசு அண்ணாமலை


கிரிவலம்-அரசு அண்ணாமலை அக்னீஸ்வரர்


திரு அண்ணாமலை கிரிவலம் அனைவரும் அறிந்த  ஒன்றுதான்.அங்கே செல்லமுடியாதவர்களுக்கு ஓர் அருமையான கிரிவலம் நமது ஊர் அருகிலேயே உள்ளது,அதுதான் அரசு அண்ணாமலை.

விஜயபுரி பேரரசரால் முற்காலத்தில் கட்டப்பட்ட இந்த அரசு அண்ணாமலை ஆண்டவர் அக்னீஸ்வரர் கோயில் பல சிறப்புகளை உடையதாயினும் மக்கள் கவனத்தை பெறவில்லை என்பது உண்மை,உற்று நோக்கின் திரு அண்ணாமலைக்கும்,இந்த அரசுஅண்ணாமலைக்கும் உள்ள தொடர்பு எளிதில் விளங்கும்.

இரண்டு மலைகளிலும் இறைவன் சிவன் அக்கினி வடிவாகவே காட்சி அளிக்கிறார்,பெயரிலும் ஒற்றுமை உள்ளது.

இதன் பொருட்டே வருகின்ற பங்குனி மாதம் முதல் உள்ளூர் இளைஞர்கள்,பெரியவர்கள் தலைமையில் கிரிவலம் ஆரம்பிக்கபட உள்ளது.

கிரிவலம் வரும்  அன்பர்கள் இந்த மலையை சுற்ற 10கிமீ நடக்க வேண்டும் என்பதையும் அறிய தருகிறோம்

போக்குவரத்து வசதி;

திருப்பூர் வாய்ப்பாடி
8D மாலை 4.10
8B இரவு 9.05

ஊத்துக்குளி வாய்ப்பாடி
இரவு
C14  7.00Pm

விஜயமங்கலம்
C4 மாலை 6.30

ரெயில் 
திருப்பூர்
இரவு  7.40
ஈரோடு மாலை 3.30.4.25இம்மலையானது சிவனின் உருவமான  லிங்க வடிவத்தில் அழகிய வனப்புடன் இயற்கை எழிலோடு ரம்யமாக அமைந்துள்ளது.


பௌர்ணமி அன்று இரவு நேரத்தில் மலையை சுற்றி "ஓம்சிவ சிவஓம்” எனும் திருமந்திரத்தை சொல்லிகொண்டே கிரிவலம் வந்தால் நம் ஊழ்வினைகள், கருமவினைகள் நீங்கி வாழ்வில் சிறப்புற வாழலாம்.

இம்மலையை சுற்றி பல்வேறு வகையான சஞ்சீவீ மூலிகைகள் இருக்கின்றது இதனுடைய சக்தியானது பௌர்ணமி நாட்களில் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும் அப்போது நாம் மலையை கிரிவலம் சுற்றி வரும்போது  சஞ்சீவீ மூலிகை காற்று நம்மீது பட்டால் தீராத நோய்களும் விலகும்.இம்மலையை சுற்றிவர...  

  பௌர்ணமி தினத்தில் மூன்று முறை கிரிவலம் வந்தால் தொழில் தடை, வியாபார தடை, திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

  ஐந்து முறை பௌர்ணமி கிரிவலம் வந்தால் பஞ்சமஹா பாவங்கள் படிப்படியாக குறைந்து விலகும். (கொலை, களவு, கள், காமம், பொய் இவை பஞ்சமஹா பாவம் ஆகும்)

  ஒன்பது முறை பௌர்ணமி கிரிவலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும், நவகிரக் கோவில்களுக்கு சென்று வந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனைவரும் கிரிவலம் வருக! சிவனின் அருள் ஆசி பெருக!


கிரிவலம் சுற்றுவதன் பெருமை: நாம் உணராவிட்டாலும் கூட, ஒவ்வொரு நொடியுமே, நாமும், நம் உலகமும், அகண்டாகார பிரபஞ்சமும் சுழன்று கொண்டேயிருக்கிறோம்.

நகர்வின்றி நிகழ்வில்லை. சுழற்சியின்றி சக்தியில்லை.

சிறிய சைக்கிள் டைனமோ முதல், ஆலைகளில் உள்ள பெரிய ஜெனரேட்டர்கள் மற்றும் அணைகளில் உள்ள பிரம்மாண்டமான டர்பைன்கள் வரை, சக்தி உருவாக்கிகள் யாவுமே சுழற்சியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மின் கடத்தி இழைகளையும், காந்தத்தையும், ஒன்றை அசைவற்ற நிலையிலும், மற்றதை சுழலும் படியும் அமைக்கும் போது தான் மின்சக்தி உருவாகிறது. ஆலயத்தை வலம் வரும் வழிபாடும் இவ்வடிப்படையில் உருவானதே. ஜெனரேட்டரில், காந்தத்தின் சக்தியை அல்லது மின் இழையின் பரிமாணத்தை மட்டும் அதிகரித்தால் போதாது. இரண்டுக்குமிடையே சுழற்சி உறவை உருவாக்கினால்தான் மின்சாரம் கிடைக்கும். அது போலவே தான் இறைத் திருவுருவங்களுக்கு விரிவான பூசைகள் நடத்துவதால் மட்டுமோ, அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் மட்டுமோ, முழு நன்மையையும் பெற்றிட இயலாது. அடியவர்கள் ஆலயத்தை வலம் வரும் போதுதான் முழுப்பயனையும் அடையும் நிலை உருவாகிறது. பூசித்த பலனை பிரதக்ஷிணத்தால் அடை என்பது பழமொழி. இதனால் தான் வீட்டில் வழிபடும் போதும், திருவுருவைச் சுற்ற முடியாத இடங்களிலும் ஆத்ம பிரதட்சிணமாவது செய்யுமாறு கூறப்படுகிறோம். திருச்சுற்று கூட தெய்வீகமும் கூடும். டைனமோவை ஓரிரு முறை சுழற்றும் போது மின்னோட்டம் ஏற்பட்டாலும், அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விளக்கில் ஒளியைக் கொடுப்பதில்லை. பன்முறை சுற்றும் போதே திருப்தியான பலன் கிடைக்கிறது.

மேலும் சைக்கிளில் கால் சுழற்றுமிடத்தில் உள்ள பல் சக்கரத்தின் அளவு பெரிதாக பெரிதாக, பின் சக்கரத்தின் சுழற்சி கூடி, சைக்கிள் செல்லும் வேகம் அதிகரிப்பது போல, ஆலயங்களிலும் வெளிக்கோடியிலுள்ள பெரிய பிரகாரத்தை வலம் வரும்போது நன்மை மிக அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் தான் முன்னோர்கள், இயன்ற வரையில், பல ஆலயங்களிலும் 5சுற்று, 7 சுற்று என பல சுற்றுக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இத்தகு அமைப்பு உள்ள தலங்களை பஞ்சாவரண/சப்தாவரண/நவாவரண ÷க்ஷத்ரங்கள் என்று போற்றி வந்திருக்கின்றனர். இச்சுற்றுக்களை வலம் வருவதின் மேன்மையை நமக்கெல்லாம் நினைவுபடுத்துவதாக, இன்றும் ஒருசிலர், மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் முதலில் சித்திரை வீதியையும், அடுத்து ஆடி வீதியையும், பின்னர் 2வது உள் பிரகாரத்தையும், அதற்கும் பிறகு முதல் உள் பிரகாரத்தையும் வலம் வந்த பின்பே அம்மனையோ, சுவாமியையோ தரிசிப்பதைக் காணலாம். பணிப் பளுவினால், கால அவகாசமின்மையால், எல்லோராலும், எல்லா நாட்களிலும், எல்லாச் சுற்றையுமோ, பெரிய பிரகாரத்தையோ வலம் வர இயலாது என்றாலும் இயன்றவரை சிறிய திருச்சுற்றையாவது சில முறையாவது வலம் வருதல் நல்லது. வாரம் ஒருமுறை / மாதம் ஒரு முறையாவது பெரிய திருச்சுற்றை வலம் வருதலை எல்லோரும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

கிரிவலத்தின் நன்மை: தேக ஆரோக்கியத்தை காப்பதற்காக தினமும் பலர்  மைதானத்திலும்  ரோடு ஓரங்களிலும் நடக்கின்றனர். இது மிகவும் நல்லது. ஆனாலும் உடல் நலத்துடன், அமைதியும், ஆன்ம பலமும் அடைய வேண்டும் என்று பலரும் உணரத் துவங்கியிருப்பதால் தான், இன்று ஆலயங்களையும் மலைகளையும் வலம் வருவது கூடியுள்ளது. சிலரது வீட்டருகே சுற்றி வரும் அளவிற்கு மலை இல்லாமல் இருக்கலாம். எனவே அருகில் இருக்க கூடிய கோயில் உள்ள இடங்கள் வரை இறை சிந்தனையுடன் நடந்து சென்று கோயிலையும் வலம் வந்தால், உடல் நலமும் கிடைக்கும். உள்ளமும் பலம் பெறும். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை அருகிலுள்ள கிரிவலம் செல்லக்கூடிய மலைக்கோயில் வாசல்  வரை வாகனத்தில் சென்று, அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தெய்வபலம் பொருந்திய மலையை கிரிவலம் செய்தால் உடலும் மனமும் வலிமை பெறும்.
விடுமுறையென்றால், வீட்டிலேயே இருந்து, தொலைக்காட்சியை மட்டுமே பார்க்காமல், குடும்பமாக, குழுவாக, இயற்கை வளம் மிகுந்த ஊர்களுக்கும், இறையருட்தலங்களுக்கும் சென்று வருவது மனதுக்கு நிம்மதி கிடைக்கும். இது போலவே, கிரிவலம் செல்வது கூட பவுர்ணமியில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களில் சென்று வருவது நல்லது.

கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் காலில் சிறு கல் குத்துவதில் இரத்த ஓட்டம் சீராக அமையும். கிரிவலம் செல்பவர்களின் தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

மலையை வலம் வர மனது விரியும்
நடந்து வழிபட தேக நலனும் கூடும்
நாலு பேரோடு நடக்க நல்லுறவும் பெருகும்
அவனைப் பணிய, அவனடியவரை நினைக்க
அமைதியும் கூடும், அகஒளியும் பெருகும்.

கிரிவலம் வரும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

மலையை வரும்போது வலதுபுறமாக வருவதும், மேல் சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது  உண்மை. உடையை உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதும் தவிர்க்க வேண்டியதாகும். மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்துதான் செல்ல வேண்டும். எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது. ஒரு சிலர் கிரிவலம் சுற்றுகிறேன் என்ற பேரில் பேசிக் கொண்டும், நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டும், கொஞ்சம் கூட இறை சிந்தனை இல்லாமல் சுற்றி வருகின்றனர். மேலும்  குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் கிரிவலம் சுற்றுவதற்காக கூட்டத்தை ஏற்படுத்தி அந்த ஊரை குப்பை மேடாக்குவதுடன் அந்த ஊர் மக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்துகின்றனர். கிரிவலம் சுற்றி வரும் மக்கள் கோயிலுக்குச் செல்லாமல் கிரிவலத்தை மட்டும் ஜாலியாக சுற்றி விட்டு ஊர் வந்து சேருகின்றனர். இதனால் கோயிலுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. இதற்கு பதிலாக பக்தர்கள் அவரவர் ஊரில் கிரிவலம் செல்லக்கூடிய கோயில்களில் ஏற்கனவே கிரிவலம் செல்லக்கூடிய பக்தர்களுடன் சேர்ந்து நிம்மதியாக இறை சிந்தனையுடன் கிரிவலம் சென்று கோயிலுக்குள்ளும் சென்று இறைவனை தரிசித்து விட்டு முழு பலனுடன் வீடு வந்து சேரலாம்.


கிரிவல சிறப்புகள் பற்றி மற்ற பிளாக்கர்களின் கருத்துகள்.இறைவனால் (இயற்கையாக) படைக்கப்பட்ட அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இருப்பினும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றில் கிரிவலம் வருவதற்கு சிறந்தது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களே.

கிரிவலம் வருவதற்கு மற்றொரு சிறந்த நாள் பெளர்ணமி ஆகும். இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எந்த நாளாக இருந்தாலும் சரியான முறையில், அமைதியாக கிரிவலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.


சித்திரைமாதம் வரும் பவுர்ணமியன்று,திருஅண்ணாமலையின் கிழக்குக் கோபுரத்தில் இருந்தவாறே பசு நெய்,தாமரைத்தண்டுத்திரியினால் அகல்விளக்கு ஏற்றி அதை உயர்த்திப்பிடித்து, தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து கிரிவலம் துவங்க வேண்டும்.கிரிவலத்தின் போது புனிதமான பூக்களை தானமளித்து,பூத நாராயணர் திருக்கோவிலில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.வசதியுள்ளவர்கள் 12 விதமான உணவுவகைகளை தானமளித்தவாறு கிரிவலப்பயணம் மேற்கொள்ளுவது நன்று.

அவையாவன:1.எலுமிச்சை சாதம்

            2.சர்க்கரைப் பொங்கல்

            3.மாங்காய் சாதம்

            4.தேங்காய் சாதம்

            5.புளியோதரை

            6.தயிர்ச்சாதம்

            7.அவல் உப்புமா

            8.அரிசி உப்புமா

            9.கோதுமை உப்புமா

           10.கறிவேப்பிலை சாதம்

           11.வெண் பொங்கல்

           12.பருப்புச் சாதம்

வைகாசி மாதப் பவுர்ணமியன்று  கிரிவலம் வருவதால், சனி தசை,புக்தி,மகாதிசை காலங்களில் ஏற்படும் துன்பங்களுக்குத் தக்கப் பரிகாரங்கள்கிடைத்துவிடும்.முறையாகக் கிடைக்க வேண்டிய வேலை,பதவி உயர்வு,பணி அந்தஸ்து கிடைத்துவிடும்;சுவாசம் சார்ந்த நோய்கள் விலகும்;பல காலமாக யாராலும் கண்டுபிடிக்க முடியாத தவறுகளை மனதால் நினைத்து வேண்டிட வேண்டும்.முடிந்தால் நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்திடல் வேண்டும்.இதனால்,பாவம் நீங்கிவிடும்.


ஆனிமாத பவுர்ணமியன்று செல்வத்தின் அதிபதி கிரிவலம் வருகிறார்.எனவே,செல்வச் செழிப்பை விரும்புவோர்,ஆனிபவுர்ணமிகிரிவலம் வருவது நன்று.இந்த ஆனிமாத பவுர்ணமியன்று பிருங்கிமுனிவரின் தோளில் அமர்ந்து குபேரபகவான் கிரிவலம் வருவதாக ஐதீகம்.எனவே, இம்மாதகிரிவலம் செல்வோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை ஒன்றை தோளில் வைத்து கிரிவலம் சென்றால்,16 செல்வங்களும் குழந்தைபாக்கியமும் கிடைக்கும்.

பேரக்குழந்தையை  அல்லது உறவினர்/நண்பர்களின் அனுமதியோடு அவர்களின் ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தையை தோளில் சுமந்து கிரிவலம் வரவேண்டும்.இன்று முழுவதும் வில்வ இலை ஊறிய நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருந்து ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தையை தோளில் சுமந்து கிரிவலம் வர சகல சம்பத்துகளும் உண்டாகும்.சிலருக்கு குபேரபகவானின் தரிசனமும் கிட்டும்.உங்கள் குழந்தைகள் பருவ வயதில் தடம்மாறிச் சென்றுவிட்டார்கள் எனவருந்துகிறீர்களா? ஆனிமாத பவுர்ணமியன்று கிரிவலம் நீங்கள் வந்தால் உங்களது குழந்தைகள் மனம் மாறி நல்லொழுக்கத்துடன் வாழத்துவங்குவர்.சிலர் தமது வயதான பெற்றோர்களை கவனிப்பதில்லை;சொத்தினை அடாவடி செய்து பிடுங்கி,அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது உண்டு;அல்லது வீட்டை விட்டு துரத்தி விடுவதும் உண்டு.பெற்றோர்கள் கடும்மன வேதனையடைந்தால் அது பித்ரு தோஷமாக மாறி சீரான வாழ்க்கையை சீர்குலைத்துவிடும்.இதற்கு பிராயசித்தமாக ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் செல்வது அமைந்திருக்கிறது.

தைமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் சென்றால்,உங்கள் குழந்தைகளின் மந்தகுணம் மாறும்;கல்வியில் கவனம் செலுத்தி பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள்.இதற்கு நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் கிரிவலம் வர வேண்டும்,12 தை பவுர்ணமிகளுக்கு தைமாத பவுர்ணமிகிரிவலம் வந்து,அப்படி வரும்போது கிரிவலப்பாதையில் கீரை வடையை தானம் செய்தால்,சிறுவயதில் உங்களைவிட்டு காணாமல் போன உங்களுடையரத்த உறவு தானாகவே தேடிவரும்.பிரண்டை துவையல் கலந்த சாதத்தை தைமாத பவுர்ணமியன்று கிரிவலம் செல்லும்போது அன்னதானமாக அளித்து வந்தால்,தடம் மாறிப்போன கணவன் அல்லது அப்பா மனம் மாறி தீயஒழுக்கங்களைக் கைவிட்டு,பொறுப்புள்ள குடும்பஸ்தராக மாறிவிடுவார்.நமது எந்த வித பூர்வஜன்ம கர்மவினையாக இருந்தாலும் பவுர்ணமி கிரிவலம் அதை கரைத்துவிடும்.மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசிபவுர்ணமியன்று கிரிவலம் வருவதால்,கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.

கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால் அதிலிருந்து மீளமுடியும்.

கலப்படம் செய்வதையே தொழிலாக வைத்திருப்போர்,பிறருடைய சொத்துக்களை அபகரித்திருப்போர்,அலுவலகப் பொருட்களை வீட்டில் பயன்படுத்துவதால் குடும்பத்தலைவரின் அல்லது குடும்பத்தலைவியின் ஆயுள் குறையும்;அதே சமயம் வீட்டுக்கடன் அதிகரிக்கும்;அதை தீர்க்கமுடியாது.இதுபோன்ற பாவங்களை நிவர்த்திசெய்ய மாசிமாத பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வது அவசியம்.மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்த்தால்,உங்களுடைய பல நூறு மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.பங்குனி மாதம் வரும்பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது மிகவும் விஷேசமானது ஆகும்.

உங்களுக்கு நிரந்தரமான நிம்மதியான செல்வ வளம் கிடைக்க வேண்டுமெனில்,ஏராளமான சம்பங்கிப்பூக்களை சுமந்தவாறு,கிழக்குக்கோபுர வாயில் நிலைப்படியில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சண விநாயகரை தரிசித்துவிட்டு,திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்ததரிசனத்திற்கு லட்சண திருமுக தரிசனம் என்று பெயர்.இந்தத் தரிசனம் நம்மை தூய செல்வத்திற்கு சுத்திகரிக்கும்தரிசனம் ஆகும்.அதன் பிறகு,மகாலட்சுமியின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்.எமலிங்கத்தின் அருகில் இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும்.இயலாவிட்டால் எமதீர்த்தத்தை தலையில் தெளிக்கவேண்டும்;சம்பங்கிப்பூக்களால் எமலிங்கத்தை அர்ச்சனை செய்து பிரசாதமாக அதே சம்பங்கிப்பூக்களை பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு,எமலிங்கத்தின் வாசலில்நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இதற்குஒளதும்பர தரிசனம் என்றுபெயர்.இந்த தரிசனம்,நமக்குக்கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப்பெறவைக்கும்.அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும்.கிரிவலப்பாதையில் செங்கம்சாலையிலிருந்து வலதுபுறம்திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர்.இந்த  தரிசனம் செய்யும்போதே நமக்கு தகுதியிருந்தால்,பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும்.

குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர்.அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும்.தொடர்ந்து வந்து,பூதநாராயணப்பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும்.பூதநாராயணப்பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப்பிரார்த்தனைகளை வைக்க வேண்டும்.இங்கிருந்தும்,திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர்.

இப்படி இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் முறை

கிரிவலம் செல்ல வேண்டும்.இப்படி செய்தால்,மாபெரும் செல்வ வளம் உங்களைத்தேடி வரும்.

திங்கள், மார்ச் 12, 2012

வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடந்த மாதம் வாய்பாடியில் நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்வுகள் ஒரு தொகுப்பாக,

உங்கள் பார்வைக்கு.....