செவ்வாய், ஏப்ரல் 21, 2015

நீர் மேலாண்மை

பெரிய அணையில் இருந்து 200கி.மீ. தொலைவில் உள்ள சிறு சிறு குளங்களுக்கு கூட கர்நாடகத்தில் பெரிய குழாய்கள் மூலம் நீர் கொண்டுவந்து எவ்வாறு நிரப்புகிறார்கள் பாருங்கள்....
அவர்களிடம் ஆற்றின் பெருநீருக்குப் பதிலாக ,சிறுநீராவது கேட்டுப்பெற்று குடித்தாலாவது நீர் மேலாண்மை பற்றி சற்றேனும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறிவு வரும்....
இங்கு தாலி அறுப்பு போராட்டத்திலும், கைதிக்கு அபிசேகம் ஆராதனை செய்வதிலும்,தேர்தல் நிதி வேண்டும் என்று உண்டியல் குழுக்குவதிலும் நேரம் சரியாக இருக்கிறது...மக்களை பற்றி சிந்திக்க எங்கு நேரம் இருக்கிறது?!.....
இந்த மாதிரி தண்ணி கெடைக்காம விவசாய நிலங்களை சுருக்குனா தானே மீத்தேன் திட்டம் நிறைவேற்ற முடியும்,கெயில் பைப் லைன் போட முடியும், கோக் பெப்சி கம்பெனி கட்ட முடியும், இன்னும் எல்லா இடங்களிலும் சிப்காட் நிறுவனம் ஆரம்பித்து நாசமா போக முடியும்..
அணை,எரி , குட்டை போன்றவை விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்தபட்டது.. கிணறு,குளம் போன்றவை குடிநீர் ஆதரங்கள்...
விவசாயத்துக்கு சேரவேண்டிய நீரை குடிநீருக்கு கொடுத்ததால் பணம் தின்னி நாய்கள் குடிநீர் ஆதாரங்களை அழித்துவிட்டனர்...
விவசாய நீரை குடிநீருக்கு பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும்...
Like · Comment · 

தண்ணீர் பஞ்சம்ஜெ.சி.டேனியல்

ஜாதி தின்ற சரித்திரம்: ஜெ.சி.டேனியல்
-------------------------------------------------------------
காலம் 20-ஆம் நூற்றாண்டுக்குள் புகும்போதே திரைப்படம் என்னும் ஊடகத்தின் தாக்கம் உலகிற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் முதல் படம் எடுக்கப்பட்டது 1912-இல் தாதா சாகேப் டார்னே என்பவரால். அதற்குப் பிறகு இந்தியாவின் முதல் படம் என்று இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள படமான ராஜா ஹரிச்சந்திரா வெளிவந்தது 1913 மே மாதத்தில். படத்தை உருவாக்கியவர் டி.ஜி.பால்கே. பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை என பட உருவாக்கப் பணிகள் பல இடங்களிலும் தொடங்கின.
வெளிநாட்டிலிருந்து வந்த பேசாத் திரைப்படங்களை தமிழகத்தின் ஊர் ஊராகச் சென்று காட்டினார் வின்சென்ட் சாமிக்கண்ணு. தமிழ்நாட்டின் முதல் படத்தை கீசகவதம் என்ற பெயரில் உருவாக்கினார் நடராஜ முதலியார். தமிழ் பேசாவிட்டாலும் அதுதானே முதல் தமிழ்ப் படம். இத்தகைய சாதனைகளின் தொடர்ச்சியாக 1920-களின் பிற்பகுதியில் இன்றைய தென் தமிழகமும் கேரளாவும் இணைந்த அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இத்தகைய முயற்சிகளை ஒருவர் தொடங்கினார்.
தனது 22-ஆம் வயதிலேயே சிலம்பாட்டம் குறித்து ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட அவர், அந்த சிலம்பாட்டத்தின் சிறப்பை அசையும் படமாக உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார். அப்படி திருவிதாங்கூரின் முதல் அசையும் படத்தை உருவாக்க கனவு கண்டு, அதற்காக முயன்று ஒரு திரைப்படத்தையே உருவாக்கி வெற்றி பெற்ற அவர்தான் ஜெ.சி.டேனியல். (இன்று தமிழ்நாட்டில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர்.) அவரின் வரலாற்றைத் தான் செல்லுலாய்டு என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக உருவாக்கியிருந்தார் மலையாள இயக்குநர் கமல். செல்லுலாய்டு படத்தை கோவா திரைப்பட விழாவில் காணும் வாய்ப்புப் பெற்றேன். அது முதல் மலையாளத் திரைப்படத்தின் மறைக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல; ஜாதி என்னும் கொடூரத்தின் தாக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருந்தது என்பதற்கான சாட்சி; ஒடுக்கப்பட்ட மக்களின் எத்தனையோ சாதனைகள் எப்படி ஜாதி ஆதிக்கத்தால் மறைக்கப்பட்டன _- அழிக்கப்பட்டன என்பதற்கான ஒரு சோறு பதம்; ஜாதி தின்று செரித்த சரித்திரம்.
அதன் தமிழ் வடிவம் ஜெ.சி.டேனியல் என்ற பெயரிலேயே வெளியாகியுள்ளது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்
திரைப்படங்களின் மீது கொண்ட ஆர்வத்தால் படித்துத் தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல், பம்பாய் சென்று பால்கேவின் ஸ்டுடியோ உள்ளிட்ட இடங்களில் சுற்றி, அவர்களின் உதவியால் அடிப்படைத் தொழில்நுட்ப அறிவையும் பெறுகிறார் டேனியல். திருவிதாங்கூரின் முதல் படத்தை உருவாக்கும் பணியில் மனைவி ஜானட், நண்பர்களின் உதவியோடு ஈடுபடுகிறார். தன் குடும்பச் சொத்து, வளங்கள் அனைத்தையும் விற்று ட்ரவாங்கூர் நேசனல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். புராணப்படங்களில் மூழ்கியிருந்த அன்றைய இந்திய சினிமாவில் மாறுபட்டுச் சிந்திக்கிறார் டேனியல். பைபிளின் கதைகளிலிருந்து ஒன்றைப் படமாக எடுக்கலாம் என்ற நண்பர்களின் எண்ணத்தையும் ஏற்காமல் சமூகக் கதையொன்றைப் படமாக்க விரும்புகிறார். தொலைந்த குழந்தை என்று பொருள்படும் விகதகுமாரன் என்ற தலைப்பில் ஒரு சமூகக் கதையைத் திரைப்படமாக எடுக்கத் தொடங்குகின்றனர்.
எழுத்துப் பணிகளை நிறைவு செய்து முக்கியக் கதாபாத்திரங்களையும் முடிவு செய்தபின்னர், கதாநாயகியைத் தேர்வு செய்வதற்காக முயலும் போது அதற்கு யாரும் முன்வரவில்லை. பால்கேவைப் போல ஆணைப் பெண் வேடமிட்டு நடிக்க வைக்கவும் டேனியலுக்கு விருப்பமில்லை. எனவே, பம்பாயில் இருக்கும் நடிகைகளில் யாரையாவது அழைத்து வரலாம் என்ற திட்டத்தில் பம்பாய் சென்று ஆங்கிலோ இந்திய நடிகை ஒருவரை அழைத்து வருகிறார்கள். சம்பளம், ரயில் பயணம், கார், அரண்மனை என அவர்கள் கேட்ட அத்தனை வசதிகளையும் தன் சக்திக்கு மீறி செய்யத் தொடங்கினாலும், சாதாரணப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க அந்த நடிகை மறுக்கிறார். கடவுளாகவோ, அரசியாகவோதான் நடிப்பேன் என அடம்பிடிக்க, அவரை மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பிவிட்டு அடுத்த கட்டம் குறித்து யோசிக்கும்போதுதான் கூத்து, நாடகங்களில் நடிப்போர் குறித்து நண்பர்கள் சொல்கிறார்கள். கூத்தில் ரோசம்மாவின் நடிப்பு டேனியலை வெகுவாகக் கவர, ரோசம்மாவையே தன் படத்திலும் நடிகையாக்கிட விரும்புகிறார் டேனியல்.
தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ரோசம்மா, (முன்பே குடும்பத்தோடு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்த ரோசம்மாவின் பெயர் டேனியல் மற்றும் அவர் மனைவியால் ரோசி என வைக்கப்படுகிறது) விகதகுமாரன் படத்தில் நாயர் பெண்ணாக நடிக்க வைக்கப்படுகிறாள். சிறப்பான அவள் நடிப்புடன் சில நாட்களில் அவளது பகுதி படமாக்கப்பட்டுவிட, அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பையும், படத் தொகுப்பையும் முடித்து திரையிடலுக்குத் தயாராகிறது படம். இதற்கிடையில் இன்னும் சில சொத்துகளும் டேனியலால் விற்கப்படுகின்றன. 1928-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 1930-ஆம் ஆண்டு நிறைவடைந்து, விகதகுமாரன் படம் வெளியீட்டுக்குத் தயாராகிறது. படத்தின் முதல் காட்சிக்கு அழைக்கப்படுகிறாள் ரோசி. படத்தை வெளியிட வந்த நம்பூதிரிகளும், வழக்குரைஞர் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் படத்தைப் பார்க்க கொட்டகைக்குள் நுழையும் ரோசியைக் கண்டு அருவெறுப்படைகிறார்கள்.
தீண்டத்தகாதோருடன் அமர்ந்து தாங்கள் எப்படித் திரைப்படம் பார்ப்பது என மறுக்க, என்ன செய்வது என டேனியல் மருகி நிற்க, வேறு வழியின்றி படத்தின் கதாநாயகி ரோசி கொட்டகைக்கு வெளியிலேயே கண்ணீருடன் அடுத்த காட்சிக்குக் காத்திருக்க, டேனியலைப் பாராட்டி வந்தோர் பேச, படம் திரையிடப்படத் தொடங்குகிறது. சிறிது நேரத்திலேயே திரைப்படக் கொட்டகைக்குள் கூச்சல். ஒரு தாழ்த்தப்பட்ட பெண் உயர்ஜாதிப் பெண்ணாக நடிக்கவைக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஜாதி வெறியர்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அரங்கின் வாயிலில் காத்திருந்த ரோசி துரத்தப்படுகிறாள். ரோசியின் வீடு எரிக்கப்படுகிறது. ஜாதி வெறியர்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை நினைத்து, உயிருக்குப் பயந்து ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள் மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி.
சொத்துகளை சினிமாவுக்காக விற்று, அதுவும் திரையிடப்படும் இடங்களில் எல்லாம் ஜாதிவெறியர்களின் எதிர்ப்பைப் பெற, அகஸ்தீஸ்வரத்திற்கே திரும்பி, பல் மருத்துவம் கற்று மருத்துவராகிறார் டேனியல். புதுக்கோட்டையில் குழந்தைகள், குடும்பம் என்று இருப்பவரை மீண்டும் திரைப்படத் துறை நோக்கி இழுக்கிறார் தமிழ்த் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா. சென்னைக்கு திரைப்படக் கனவுகளை மீண்டும் சுமந்து கொண்டு வண்டியேறி, திரைப்பட ஏமாற்றிகளால் சொத்துகளை இழந்து, ஏழ்மை நிலைக்குச் சென்று அடையாளங்களற்று வாழ்க்கையைத் தொடர்கிறார்.
பின்னாளில் செம்மீன் படம் 1966-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்று மலையாள சினிமா பெருமையடைய, முதல் மலையாள சினிமாவை எடுத்த டேனியல் தமிழ்நாட்டின் அகஸ்தீஸ்வரத்தில் முதுமைப்பருவத்தைக் கழிக்கிறார். இதை அறியும் மலையாளத் திரைப்படப் பத்திரிகையாளரான சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், தொடர் முயற்சியில் டேனியலைச் சந்தித்து பழைய வரலாற்றை நிறுவ முயல்கிறார். டேனியலின் மகன் ஹாரிஸ் டேனியல் சிறுவயதில் விளையாட்டுப் போக்கில் விகத குமாரன் படச்சுருளை எரித்துவிட, எஞ்சியிருப்பதோ அப்படத்தின் ஒரு புகைப்படமும், விளம்பரத் துண்டறிக்கையும் தான். டேனியலுக்குப் பிறகு அவரது நண்பர் சுந்தரராஜன் எடுத்த மார்த்தாண்ட வர்மா திரைப்படமும் கடனுக்கு அடமானமாகப் போய் ஒரு கொட்டடியில் நாசமாகிக் கிடக்கிறது. அதை மீட்கிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன்.
மலையாள சினிமாவின் முதல் முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கோடு கேரள அரசின் பண்பாட்டுத் துறையை அணுகும் கோபாலகிருஷ்ணனுக்கு மறுப்புகளும், அலட்சியமும் பதிலாகக் கிடைக்கின்றன. பேசும் படமாக வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் பாலன் படம் தான் முதல் மலையாளப் படம் என அடம்பிடிக்கிறார் அய்.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான ராமகிருஷ்ணன் அய்யர். இந்த (டேனியல்) நாடார் விசயத்தில் உனக்கென்ன இவ்வளவு அக்கறை? என்று ராமகிருஷ்ண அய்யர் கேட்கும் போது இந்த மறுப்புக்குப் பின்னால் இருப்பதும் ஜாதியே என்று உணர்ந்துவிடுகிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன். பிராமணரான டி.ஆர்.சுந்தரத்தின் படம்தானே பாலன். நீங்கள்லாம் இந்த மாதிரி சிந்திக்கிறீங்கன்னு புரிஞ்சு போச்சு சார்! என்று போட்டு உடைத்துவிட்டுக் கிளம்புகிறார் பத்திரிகையாளர். எனினும் அவரது முயற்சிகள் தொடர்கின்றன.
எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் டேனியல் தன் இறுதி மூச்சை விட, அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. திரைப்படத்துறை மீது இன்று மக்களுக்கு இருக்கும் அளவற்ற மோகம் ஒரு நடிகரின் படத்துக்குச் செய்யப்படும் மரியாதை மூலம் உணர்த்தப்படுகிறது. அதைப் பார்த்தபடி பேருந்தில் பயணிக்கிறார் ஹாரிஸ் டேனியல் (ஜெ.சி.டேனியலின் இளைய மகன்). மேலே நீங்கள் படித்தது கதையல்ல; வரலாறு. அது ஜெ.சி.டேனியலின் வரலாறு மட்டுமல்ல; சமூகத்தில் ஜாதியின் இறுக்கம் எப்படி என்பதற்கான சான்று! ஜெ.சி.டேனியலையாவது இன்று நாம் அடையாளம் காண்கிறோம். ஆனால், மலையாளத்தின் முதல் கதாநாயகியான ரோசியின் நிலை? ஒளிவெள்ளத்தில் வாழும் இன்றைய திரைக்கலைஞர்கள் மத்தியில் அடையாளமே இல்லாமல் தென் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் தன் வாழ்வை முடித்திருப்பார் அந்தத் திறமைவாய்ந்த கலைஞர். படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமல், தனது கருத்தில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதைப் பதிவு செய்கிறார். ஜாதியின் தீவிரம் என்னவென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு அழுந்தச் சொல்லிப் புரியவைக்கிறது படம். அக்காட்சிகளை ஒவ்வொன்றாக விவரித்தால் நிச்சயம் புத்தகமாக நீளும். பால்கே படம் எடுக்கும் போது அதைப் பார்த்து டேனியல் கற்றுக் கொள்வதாக ஒரு காட்சி. கர்ணனின் தொடையில் பரசுராமன் படுத்திருக்கும் போது கர்ணனின் தொடையை வண்டு துளைத்து ரத்தம் வழியும் மகாபாரதக் காட்சி. வர்ணாஸ்ரமத்தின் வெளிப்பாட்டை அங்கே பதிவு செய்யத் தொடங்குகிறார் இயக்குநர்.
இயக்குநர் கமலின் பதிவுகளில் எடுத்துக்காட்டாக சிலவற்றைச் சொல்லலாம். கதாநாயகியாக நாயர் பெண் வேடமணிந்து, அனைவருடனும் அமர்ந்து மதிய உணவு உண்ணாமல், தான் தூக்கி வந்த சட்டியிலிருந்து கஞ்சியைத் தரையில் அமர்ந்து அருந்தும் மனநிலையை, தங்களுக்கு அதுதான் இயல்பென்றும், விதிக்கப்பட்டதென்றும் ஒரு சமூகத்தையே கருதவைத்த கொடுமையை அக்காட்சி உணர்த்துகிறது. தான் நடித்த படத்தின் ஒரு காட்சியைக்கூடப் பார்க்க முடியாமல் துரத்தி அடிக்கப்படுகிற வலி எத்தகையது? அதுமட்டுமா, வர்ணாசிரமத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருப்பவர்களிடையே ஜாதிப் பற்றும், தீண்டாமை உணர்வும் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் பதிவு செய்கிறார். இப்படிப்பட்ட பதிவுகள் படம் முழுக்க கதையோடு பின்னிப் பிணைந்து நம் மூளையில் அவற்றை விதைத்துச் செல்கின்றன.
படத்தில் ஜெ.சி.டேனியலாக இளம் வயதிலும், முதுமையிலும், பின்னர் ஹாரிஸ் டேனியலாகவும் நடித்துள்ள ப்ருத்விராஜ், ஜேனட்டாக நடித்த மம்தா மோகன்தாஸ், ரோசியாக நடித்த சாந்தினி, சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனாக நடித்த சீனிவாசன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் உயிரோட்டத்திற்குக் காரணம். ஒரு திரைப்படத்திற்கான அத்தனை சிறப்பம்சங்களையும் பெற்று, மலையாளத்தில் வெற்றிகரமாகவும் ஓடிய இப்படம் தமிழில் அதிகம் கவனம் பெறாமல் போனது வருந்தத்தக்கதே! ஆனால், அவசியம் தேடித் தேடி பார்க்கவேண்டிய, திரையிடப்பட வேண்டிய, தொலைக்காட்சி வழியாகப் பரப்பப்பட வேண்டிய படம் இது.
ஒரு டேனியலின் வாழ்க்கையும், சாதனையும் வரலாற்றில் நிறுவப்பட வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு கோபாலகிருஷ்ணனும், கமலும் 70 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது. இன்னும் எத்தனை டேனியல்களின் சாதனை, ஜாதிக் கொடுமையால் மறைக்கப்பட்டிருக்கிறது _- மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மீட்டெடுக்க உறுதி பூணுதலே ஜெ.சி.டேனியலுக்கு நாம் செய்யும் மரியாதை.
Like · Comment · 

ஜெ.சி.டேனியல் (2014)

ஜெ.சி.டேனியல் (2014)

   
4
 
0
SHARE 
மலபார் சினிமாவின் தந்தை என போற்றப்படும் ஜோசப் செல்லப்பா டேனியல் (ஜெ.சி.டேனியல்) என்ற சாதனை மனிதனின் வாழ்வை அடிப்படையாக வைத்து அருமையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கமல். இப்படம் நமக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால், மலையாள சினிமாவுக்கு தந்தை என போற்றப்பட்டவர் ஒரு தமிழர் என்பது தான்.
சினிமா மீது கொண்ட அளவுகடந்த காதலால் தனது சொத்துக்களை விற்று படமெடுக்க டேனியல் முடிவெடுக்கிறார். அப்போது சினிமாவில் கொடிகட்டிப் பறந்த டி.ஜி.பால்கேயையும், தமிழ் சினிமாவின் முன்னோடி என வர்ணிக்கப்பட்ட நடராஜ முதலியாரையும் சென்று சந்திக்கிறார். அவர்களிடம் ஆலோசனை கேட்டு ‘விகத குமாரன்’ என்ற மலையாள மௌன படத்தை தயாரிக்கிறார்.
பெண்கள் நடிப்பதே மிகப்பெரிய குற்றமாக கருதும் அந்த காலத்தில் இவருடைய படத்தின் கதாநாயகியை தேர்வு செய்வதற்காக மும்பைக்கு செல்கிறார். அங்கு பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கும் இவர், அவர் போடும் கண்டிஷன்களால் நொந்துபோய், தாழ்ந்த இனத்தை சேர்ந்த, கூத்துகளில் நடித்துக் கொண்டிருந்த ரோசம்மாவை கதாநாயகியாக தேர்ந்தெடுக்கிறார். அவரை தன்னுடைய படத்தில் உயர்ந்த அந்தஸ்து நாயர் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.
தனது சொத்துக்கள் முழுவதையும் விற்று ஒருவழியாக ‘விகத குமாரன்’ படத்தை எடுத்து முடிக்கிறார். மலபாரின் பிரபலமான கேபிட்டல் தியேட்டரில் மலையாள மொழியில்  உருவான இம்முதல் படத்தை திரையிடுகிறார். அப்போது திரையரங்கில் நடைபெறும் சம்பவங்களால் டேனியலின் படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் போகிறது. இதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது? அவரது படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்? என்று தனது திரைக்கதையால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கமல்.
ஜெ.சி.டேனியலாக ப்ரித்விராஜ் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, அவராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். நம்முடைய கவனத்தை ஈர்க்கும் மற்றொருவர் சாந்தினி. ரோசம்மாவாக வரும் இவருடைய சந்தோஷமும், சோகமும் கலந்த முகபாவனைகள் மிகவும் அருமை.
ஒருவருடைய வாழ்க்கையை படமாக எடுக்கும்போது, அவருடைய வாழ்க்கையின் யதார்த்தம் மீறாமல், அதே நேரத்தில் உண்மை நிகழ்வுகளை மறைக்காமல் திரைக்கதை அமைப்பது என்பது மிகப்பெரிய சவால். அதை படம் பார்ப்பவர்களுக்கு போரடிக்காமல் அருமையான திரைக்கதையால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் இயக்குனர் கமல்.
வேணுவின் கேமரா கதையின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்துள்ளது. இவருடைய அருமையான ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்றச் செய்கிறது. ஜெயச்சந்திரனின் பின்னணி இசை படத்திற்கு மேலும் ஒரு பலம்.
இந்தப்படம் மலையாளத்தில் செல்லுலாயிட் என்ற தலைப்பில் வெளியானது. அதை தமிழில் ஜெ.சி.டேனியல் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். மலையாள படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு காட்சியமைப்புகளை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து அனைவரையும் கவரும் வண்ணம் வெளிக்கொண்டுவந்துள்ள தயாரிப்பாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 
மொத்தத்தில் ‘ஜெ.சி.டேனியல்’ செல்லுலாயிட் சித்திரம்!

திங்கள், ஏப்ரல் 06, 2015

எண்ணெய் குளியல்


உடலையும் எலும்பு களையும் கண்ணே போல் காக்கும் வழிமுறைகளான எண்ணெய் குளியல் வேண்டாத செயலாகிவிட்டது . இதனால் எலும்புகள் பலமிழந்து கல கலத்து விடுக்கிறது . எலும்புகளை பலப்படுத்தும் உணவு முறைகளான கோசு, காராட்டு, முள்ளங்கி , காலிபிளவர் எடுப்பதில்லை அப்படி எடுத்தாலும் அவைகளை நன்கு வேகவைக்கப்பட்டு அவற்றில் உள்ள சத்துகளை நீக்கிவிட்டு உண்ணும் முறையை நம்மவர்கள் கண்டுபிடித்து வெற்றி பெறுகிறார்கள் . எலும்ம்பு பலப்படுமா? பலவீனமடையுமா? வெல்லம் உண்பதும் நம் நாட்டு தவச (தானியஉணவு ) உண்பதும் கேவலமாக என்னப்படுகியது . இந்த தவச (தானிய ) வகைகள் கம்பு, கேழ்வரகு , சோளம் போன்றவை எலும்புகளை பலப்படுத்த கூடியவைகள் . இவைகளை எடுக்கிறேன் என கூறுகிறவர்களும் முறையில்லாத வழியில் எடுக்கிறனர் அளவிற்கதிகமாக சர்க்கரை சேர்த்தால் அதன் பலன் முழுமையாக கிட்டுமா?
இடுப்புவலி தீர்வுகள்
ஆங்கில வைத்திய சிகாமணிகள் எலும்பு தேய்ந்து விட்டது அல்லது அலுவலகத்தில் நீண்டநேரம் உட்கர்ந்திருகிரீர்கள் , அல்லது வேகமாக வாகனம் (எல்லாவித வாகனங்கள் ) ஓட்டுகிறீர் கள் என இப்படி காரணங்களை அடுக்கி தங்களது அதி நுட்பமான கண்டுபிடிப்புகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் . இதை கேட்கும் படித்தவர்களும் பாமரார்களும் ஆ என வாயை பிளந்து கேட்பது நமக்கு நன்கு கேட்கிறது . என்ன செய்வது ? மனிதன் மரித்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் மம்மியில் (பழங்கால இடுகைகள் ) எந்த சேதமும் இன்றி எலும்புகள் இருக்கிறது . அனால் இப்போது எலும்பு தேய்வு ஏன் ? நாம் சிந்தித்தோம் இல்லை . அதுவும் இல்லாமல் நீண்டநாட்கள் பயன்படுத்தியது கெடத்தானேசெய்யும் என்கிறார்கள் பயன் படுத்தியது கெடலாம் தவறில்லை இன்று பத்து பதினைந்து அகவை (வயது )குழந்தைகள் கூட இந்த இடுப்பு வலியினால் அவதிப்படுகிரார்களே அதற்க்கு என்ன சொல்லபோகிறீர்கள் என எவரும் கேட்பதில்லை ? குறிப்பாக எல்லா நோய்களுக்கும் இன்றைய முறையில்லாத உணவுகளே காரணமாகிறது ஆக முறையான உணவு முறைகளை எடுப்போம் . எலும்புகளை பலப்படுத்துவோம் .
எப்போது உட்கார்ந்தாலும் நேரே கூனல் விழாமல் உட்காருவோம்.
எண்ணெய் தேய்த்து குளிப்போம்
வாழைக்காய் ,கொத்தவரை ,வாழைபழம் போன்றவற்றை நீக்குவோம் .
எலும்புகளை பலடுத்தும
உணவுகளான கம்பு , எள்ளு, கேரட்டு , கோசு , முள்ளங்கி ,காலிபிளவர் போன்றவற்றையும்
வெல்லம் சேர்ந்த உணவு களையும் எடுப்போம்.
இடுப்பு வலி வந்த நிலையில் நாளும் வெந்தயம் நீரில் நினையவைது நீருடன் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின்னர்நீரை அருந்துவோம்
நோய் உள்ள நிலையில் பொடுதலை என்ற மூலிகை உணவாக எடுக்கவேண்டும் நல்ல பலனை தரும்.. மேற்கண்ட மூலிகையை வதக்கி கட்டலாம்.ஒத்தடம் கொடுக்கலாம்.
நோய் நீடித்த நிலையில் முறையான சித்த மருத்துவத்தை நடுவோம் நோய் முற்றாக குணமாகும் .
சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்.
Unlike · Comment · 

தாலி

Saravana sara ;தாலி ஏன் அணிய வேண்டும்..?
தாலி மஞ்சள் கயிற்றில் அணிந்து தினமும் குளிக்கும்போது மஞ்சளை தாலியில் பூசுகின்றனர்.மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி..
மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள்.அப்போது பல்வேறு நோய் தொற்றுகளுக்கு எளிதில் உள்ளாகிறார்கள்.அதிலிருந்து காக்கும் பொருட்டே மஞ்சளும்,தங்கமும் இணைந்து ஒரு வேதி மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.அது கவசம் போல் தோல் வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது.
கிருமி நாசினி மஞ்சள் தாயையும்,சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோய் இப்போது அதிகளவில் பரவியதற்கு காரணமே கவரிங் செயினில் தாலியை கோர்த்து அணியும் பழக்கத்தால்தான்.
எம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை,உங்கள் பகுத்தறிவு அவர்களின் கால் தூசிக்கு ஈடாகாது.
அது போல் கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளி ஊர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை சொருகி வைப்பார்கள்.எதற்காக வேப்பிலை ஒரு கிருமி நாசினி..
உங்கள் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பித்கப்பட்டதன் நோக்கமே எம்மை இயற்கை வாழ்விலிருந்து அப்புரப்படுத்தி மேலை நாட்டானின் செயற்கை சேற்றில் தள்ளுவதற்கே

மேகதாடு அணை

மேகதாடு அணை விவசாயிகள் பிரச்சனை மட்டும் அல்ல தமிழகத்தில் நீர் குடிக்கும் எல்லாருக்கும் நிகழ போகும் ஆபத்து !!!! முழுவதும் படியுங்கள், நம் தாய் தமிழகத்திற்கு நேர போகும் ஆபத்தை உணருங்கள்
கவிஞர் மகுடேசுவரன்-----shared by தகடூர் ஆளவந்தார்:
கூகுள் முப்பரிமாண வரைபடத்தில், வனத்தில் பாய்ந்து தமிழ்நாட்டுக்குள் நுழையும் காவிரியை ஆராய்ந்தேன். வனத்தடத்தில் வரும் காவிரியாறு ‘ஆடுதாண்டும் காவிரி’ என்ற பகுதியில் மலைமுகடுகளுக்கிடையில் குறுகலான பாறையிடுக்குகளில் புகுந்து வருகிறது.
சிவசமுத்திர அருவியில் தொடங்கி மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிவரை காவிரி பாய்வது மலைகளுக்கிடையேதான். திருச்சிக்கருகில் அகண்ட காவிரி ஆவதும், இம்மலைப் பகுதியில் ஆடுதாண்டும் காவிரியாவதும் நாம் பள்ளியில் படித்த பாடங்கள். மேக என்றால் ஆடு. தாடு என்றால் தாண்டு.
‘மேகதாடு’ எனப்படும் ஆடுதாண்டும் காவிரிப் பகுதியில் மலை முகடுகளுக்கிடையில் தடுப்புச் சுவர் எழுப்பினால் அது அணையாகிவிடும். அங்கே எழுப்பப்படும் மிகச்சிறிய கட்டுமானத்தின் மூலம், காவிரியின் குரல்வளையை இறுக்கிக்கட்டுவது போன்ற எளிய செயல் மூலம், ஆற்றின் முழுத் தண்ணீரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தைக் கர்நாடகம் நிறைவேற்றிக்கொள்ளும்.
மேகதாடுவில் அணைச்சுவர் எழுப்பப்பட்டால், அணையின் நீர்கொள்ளும் பரப்பளவாக, நாம் கற்பனை செய்தே பார்த்திராத அளவு, மலைகளுக்கிடைப்பட்ட பள்ளங்களில் கிடைத்துவிடும். இணைப்பில் உள்ள படத்தில் எங்கே அணைச்சுவர் கட்டப்படலாம் என்பதைக் கறுப்பிலும், அணை கட்டப்பட்டால் நீர்தேங்கும் பகுதியாய் எவை இருக்கக்கூடும் என்பதை நீலத்திலும் குறித்துள்ளேன்.
இதில் தொண்ணூறு டிஎம்சிக்கும் மிகுதியான தண்ணீரைத் தடுத்துவைக்க முடியும் என்று படித்தேன். மேட்டூர் அணையின் கொள்ளளவு 93 டிஎம்சிகள்தாம். கர்நாடகத்தின் இம்முயற்சி மேட்டூர் அணையை அப்படியே தம் மாநிலத்திற்குள் கட்டிக்கொள்வதைப் போன்றதுதான். இது காவிரியின் நீர்கோள் அனைத்தையும் தன்னுடையதாக்கிக்கொள்வதேயன்றி வேறில்லை. நமக்குரியதைப் பறிக்க முயல்வதைப் போன்றது இம்முயற்சி.
மழைப்பொழிவு வற்றிக்கொண்டே வரும் தொழிற்காலகட்டமாகிய இத்தருணத்தில் ஆற்றின் நீரை, அதற்கு உரிமைப்பட்டவர்கள் நீதியின்படி பங்கு பிரித்துக்கொள்வதுதான் உடனடித் தீர்வு.
இது விவசாயியின் பிரச்சனையன்று. ஒரு மிடறு தண்ணீர் குடிக்கின்ற ஒவ்வொருவர்க்கும் நேர்ந்துள்ள ஆபத்து என்பதை உணர்க.
காவிரியில் நீர்ப்பாய்வு இல்லையேல், அவ்வாற்றின் இருமருங்கும் இருநூறு கிலோமீட்டர்கள் தொலைவு வரையுள்ள தமிழ்நிலங்கள் நிலத்தடி நீரற்றதாகும். இச்செய்தி பலர்க்கு வியப்பாக இருக்கக்கூடும். ஆனால் அதுதான் உண்மை.நிலத்தடி நீர்க்கால்களின் வலைத்தொடர்பு நாம் கருதியிருப்பதைவிடவும் அகன்று பரவியிருப்பது. ஆழ்குழாய் அகழ்கின்ற தொழிலில் இருப்பவர் கூறியதைச் சொல்கிறேன். தம் பகுதியில் ஆயிரம் அடிகளுக்குக் கீழே ஆழ்குழாய் தோண்டப்பட்டதாம். சிறிதளவே நீர் கிடைத்திருக்கிறது. அகழ்வு முடிந்தது. எல்லாரும் அகன்றிருந்த வேளையில், ஆழ்குழாய்க் கிணற்றருகே வைத்திருந்த டீசல் கொள்கலன் மண்நெகிழ்ந்து சாய்ந்துவிட்டது. டீசல் மொத்தமும் ஆழ்குழாய்க்குள் இறங்கிவிட்டது. இத்தவற்றால் ஆழ்குழாய்க் கிணறு பாழ்பட்டது என்று அகழ்ந்தவர் துயருற்று மறந்துவிட்டார். ஆனால், சில நாள்கள் கழித்து எண்பது கிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஊரொன்றின் ஆழ்குழாய்க் கிணற்றில் வெளிப்பட்ட தண்ணீரில் டீசல் மிதந்ததாம். எங்கோ கலந்த டீசல் வெகுதொலைவுக்கு அப்பால் இருந்த கிணற்றில் தோன்றியிருக்கிறது. இதுதான் நிலத்தடி நீர்க்கால்களின் பயணம். இந்த நிகழ்வில் முன்பின் இருக்கலாம். ஆனால், அதன் சாரத்தை மறுக்கவியலாது.
காவிரி மணலில் இறங்கும் தண்ணீர்தான் தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குகிறது. காவிரியில் நீரின்றேல் நம் காலடியில் நிலத்தடி நீர் இருக்காது. பற்பல மாநகரங்களுக்குக் குடிநீர் கிட்டாமல் போகலாம். காவிரிப் படுகைதான் தமிழர்களின் குருதிநாளம். இதை மறந்துவிடக் கூடாது ! நமக்குரிய உரிமையைப் பெற ஒன்றுபட்டு நிற்கவேண்டிய நேரமிது.
நன்றி : ‪#‎KamalaBalachandar‬

விநாயகரின் மகள்விநாயகரின் மகள் யார் என்று தெரிந்துகொள்வோம் !
விநாயகர் சதுர்த்தி முடிந்து, விநாயகர் நம்ம ஊர் கடவுள் இல்லை, வடக்கில் இருந்து வந்தவர், ஆரிய கடவுள் என்ற கார சாரமான பேச்சு சற்றே ஓய்ந்த நிலையில் இந்த பதிவு, வெறும் வாய்க்கு அவுல் போட்டது போல் அமையும்.
விநாயகருக்கு சித்தி புத்தி என்ற இரு மனைவிகள் என்பது ஒருவாரு எல்லோருக்கும் தெரியும்.
அவர்களுக்கு இரு மகன்கள் சுபம் மற்றும் லாபம். விநாயகர் ஒருமுறை குடும்பத்துடன் பூமிக்கு வந்தார். அன்று ரக்ஷா பந்தன், சகோதரிகள் தன் சகோதரனுக்கு ராக்கி கட்டிக்கொண்டிருப்பதை பார்த்த லாபமும், சுபமும் தங்களுக்கு ஒரு தங்கை இருந்தால், இவர்களை போல நாமும் ராக்கி கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே என்று வருந்தினர்.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த நாரத முனிவர், லாபம் மற்றும் சுபம் முகத்தில் மாற்றம் இருப்பதை அறிந்து, கவலைக்கான காரணத்தை வினவினார்.
லாபம் நாரத முனிவரிடம் காரணத்தைக் கூறினார். நாரதரும் தன்னுடைய பயணம் வீண் போகவில்லை என்று எண்ணி, இதோ இப்போதே கலகத்தை துவக்குகிறேன் என்று கூறி விநாயகப் பெருமானிடம் வந்து கூறினார். அத்துடன் பெண் பிள்ளை இருக்கும் இடம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இடம், அதை பூமியில் கண்ட அவர்கள் இப்படி நினைப்பது ஒன்றும் தவறு இல்லை என்று நாரதர் கொளுத்திப் போட்டார்.
மகன்களின் மனக்குறையை அறிந்த தந்தை, ஒரு அழகான பெண் குழந்தையை உருவாக்கினார். அன்று வெள்ளிக்கிழமை, தங்களுக்கு சகோதரி கையில் ராக்கி கயறு கட்டுவாள் என்று எண்ணி அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் சந்தோஷத்தை பார்த்த விநாயகர், இவள் பிறந்தவுடன் மற்றவைகளை ஆனந்தப்படுத்தியதால், மகளுக்கு ஸ்ரீ சந்தோஷி என்று பெயர் வைத்தார்.
ஸ்ரீ சந்தோஷி மலைமகளின் வீரத்தையும்,
அலைமகளின் செல்வம் மற்றும் மகிழ்ச்சியும், கலைமகளின் கல்வி ஞானத்தையும் பெறுவாள் என்று வாழ்த்தினார்கள். வெள்ளிக் கிழமை பிறந்த சந்தோஷிக்கு வெள்ளிக் கிழமையில் விரதமிருந்து வணங்குபவருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, செல்வச்செழிப்பு, மனதில் தைரியம் மற்றும் நல்ல குணங்களை அருள்வாள்.
ஸ்ரீ சந்தோஷியை வழிபடுபவர்கள் விரதம் இருக்கும் நாட்களில் சுனீதி கதையை படிப்பது வழக்கம். வெள்ளிக்கிழமைகளில் அன்னையை வழிபட இன்னல் துடைத்து இன்பம் அருள்வாள் ஸ்ரீ சந்தோஷி மாதா.
அப்படி அன்னையை வழிபட்ட ஒரு பக்தையின் கதை தான் சுனீதி மற்றும் போலாநாத் கதை.
ஆனந்த நகரம் என்ற ஊரில் சுனீதி போலாநாத் தம்பதியினர் வாழ்ந்தார்கள். சுனீதியின் கணவன் போலாநாத்க்கு சரியான படி வருமானம் இல்லாததால் சொந்த வீட்டிலேயே தாழ்வாக நடத்தப்பட்டனர்.
இதை சகிக்க முடியாமல், போலாநாத், கர்ப்பமாக இருக்கும் சுனீதியை விட்டு வெளியூருக்கு பொருள் தேடிச் சென்றான். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு தன் குழந்தையையும் கவனித்துக் கொண்டாள்.
கணவன் வீட்டாரின் பல கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு சுனீதி, ஸ்ரீ சந்தோஷி மாதாவை வணங்கி வந்தாள். அவளின் பக்தியைக் கண்டு ஸ்ரீ சந்தோஷி மாதா பேய் உருக்கொண்டு வந்தாள், பேய் உருவைக் கண்ட அனைவரும் சத்தம் போட்டுக்கொண்டு ஓடினார்கள். தஞ்சம் அடைய வழி இல்லாமல் தவித்தனர். சுனீதி தன் குழந்தையை மடியில் வைத்திருந்தாள். இந்த சத்தம் கேட்டு தான் வழிபடும் மாதா வந்துகொண்டிருக்கிறாள் என்று எண்ணி, மடியில் குழந்தை இருப்பதை மறந்து சட்டென எழுந்தாள். அவள் எண்ணத்தில் ஸ்ரீ சந்தோஷி மாதா நிறைந்திருந்தாள். குழந்தை கீழே விழாமல் சந்தோஷி மாதா தன் கையில் ஏந்தினாள். சுனீதிக்கு சகல சம்பத்தும் கிட்ட ஆசிர்வதித்தாள்.
தங்களுக்கு பேய் உருவாகவும், சுனீதிக்கு தெய்வமாகவும் கட்சி கொடுத்ததை அறிந்து, தம் குற்றத்தை எண்ணி மனம் வருந்தினார்கள். மனம் திருந்திய அவர்களுக்கும் தன் திருவுருவத்தைக் காட்டினாள் ஸ்ரீ சந்தோஷி மாதா. அப்போது அனைவரும் ஸ்ரீ சந்தோஷி மாதாக்கு ஜெய் !
ஸ்ரீ சந்தோஷி மாதாக்கு ஜெய் !
ஸ்ரீ சந்தோஷி மாதாக்கு ஜெய் !
என்ற கோஷங்களை எழுப்பினர்.
குடும்ப ஒற்றுமைக்காக ஸ்ரீ சந்தோஷி மாதாவை வணங்குவது வழக்கம். கடலை மற்றும் வெல்லம் ப்ரியமான உணவு. புளிப்பு ஆகாது. விரதமிருக்கும் நாட்களில் யாருக்கும் காசு கொடுக்க கூடாது.
காயத்திரி மந்திரம்
ஓம் ருபாதேவீ ச வித்மஹே; சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்!
நன்றி - கவிதாமணி நாச்சியார்.
Like · Comment · 

உப்பு சப்பு

ோ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி,
இருக்காங்களா..?"
"அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க..."
"அண்ணனையாவது கூப்பிடு..."
" அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்."
"சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு..."
" அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..."
வந்தவர் கடுப்பேறி.... நீ மட்டும் ஏன் இருக்கே...? நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே...?'
+
+
"ஆமா.... நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்...

உங்கள் ராசியும் உங்கள் மூளையின் செயல் திறனும்

உங்கள் ராசியும் உங்கள் மூளையின் செயல் திறனும்
(கருது கோள் பொது பலன்)
1) மேசம் (லக்கின) ராசிகாரர்களின்மூளையின் செயல் திறன் :
கட்டளை, கணிதம், வாய்ப்பாடு, லாஜிக் மற்றும் தொழில் விசயங்களை பதிவு செய்யும் மூளை.
2) ரிசபம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
வர்ணஜாலத்தோடு கண்களால் பார்த்ததை, ரசித்தை, ருசித்த உணவின் சுவை தாய்மொழி அறிவு ஆகியவற்றை அப்படியே பதிவு செய்யும் மூளை.
3) மிதுனம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
முப்பரிமானமாக பார்க்கும் விஷயங்கள், ரசிக்கும் விஷங்களை, நுகரும் வாசனை அப்படியே பதிவு செய்யும் மூளை. ஒரே நேரத்தில் இருவேளைகள் செய்யும் மூளை.
4) கடகம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
அன்றாடம் பார்க்கும் ஒவியம், வரைபடம், தாங்கள் கற்பனை செய்யும் விசயம், உணர்வு பூர்வமாக அறியும் விசயங்களை பதிவு செய்யும் மூளை.
5) சிம்மம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தான் பார்த்த, கேட்ட, படித்த விசயங்களை தனது அறிவால் ஆராய்ந்து அதைவிட ஒருபடி மேலே போய் பதிவு செய்யும் மூளை.
6) கன்னி (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பல்வேறு சப்தங்கள் இசை, பாடல் மற்றும் கேட்க்கும் விசயங்கள் மற்றும் ரகசியங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.
7) துலாம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தனது காதால் பலமுறை கேட்டதை, திரும்ப திரும்ப சொல்லிபார்த்ததை, மற்றவர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே பதிவு செய்யும் மூளை.
8) விருச்சகம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தனது ஐம்புலங்களால் உணர்ந்த உணர்வுப்பூர்வமான விசயங்கள் எழுதி பார்த்த, செய்து பார்த்த, சொல்லிப்பார்த்த, விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.
9) தனுசு (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பலமொழி அறிவு, தான் படித்ததை, கேட்டதை. அறிந்ததை ஆய்வுக்கண்ணோடு கற்பனை செய்து அப்படியே பதிவு செய்யும் மூளை.
10) மகரம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பலமுறை எழுதி பார்த்த, செய்து பார்த்த, சொல்லிப்பார்த்த, நினைவு படுத்தி பார்த்த விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.
11) கும்பம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
ராகத்தோடு லயமாக படிக்கும், கேட்கும் விஷயங்கள், மனமகிழ்ச்சியுடன் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சொன்ன, தொட்டுணர்ந்த விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.
12) மீனம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தான் கனவில் கண்ட விஷயம் கற்பனை மற்றும் பலமுறை பார்த்த கண்ணில் பட்ட சார்ட், பார்முலா, புத்தக பக்கங்கள் ஆகியாவை போட்டோ போல பதிவாகும்.
உயிர்கொண்டு இயங்கும் தாவரங்கள் சிறந்தவை !
அதனினும் உணர்வு கொண்டு இயங்கும் மிருகங்கள் சிறந்தவை !!
அதனினும் அறிவு கொண்டு இயங்கும் மனிதன் சிறந்தவன் !!!
அதனினும் தன் அறிவைக் கொண்டு தன் முன் நிற்பவரின் அறிவை அறிந்து அவருக்கு நல்வழி காட்டும் ஜோதிடன் சிறந்தவன் !!!!
அவ்வாறு மிருகத்திலிருந்து அறிவின்மூலம் வேறுபடும் மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிவை கொடுத்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்தவனாக இறைவன் படைத்துள்ளான். தனக்குள்ள அறிவின் மகத்துவத்தை அறிந்தால் ஞானம் கருதினும் கை கூடும்.
உங்களுக்குள் இருக்கும் வெற்றியாளனை உங்கள் லக்கினத்திலிருந்து அறிந்து அதன்படி முயன்றால்
நீங்கள் தான் விஞ்ஞானி / ஆய்வாளர் / பகுத்தறிவாளர் / ஓவியர் / எழுத்தாளர் / டாக்டர் / மெய்ஞானி / இசையமைப்பாளர் / பாடகர் எல்லாம்
அனைத்தும் உங்கள் வசம் .
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty
Like · Comment ·