மரம் வளர்ப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரம் வளர்ப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, பிப்ரவரி 13, 2015
வியாழன், மார்ச் 11, 2010
வன உயிரினங்களுக்கு உதவுங்கள்
வன உயிரினங்களுக்கு உதவுங்கள் என்ற நமது ஒரு இடுகைக்கு உடனடியாக ஒரு பதிலுரையும் ,உதவும் எண்ணத்துடன் கூடிய ஒரு விசாரிப்பும் நமக்கு நண்பர் பிரதீப் அவர்களிடம் இருந்து கிடைத்தது.
வாமுகோமு அவர்களும் நம்மை அழைத்து " மான்களின் எண்ணிக்கையையும் நண்பர் பிரதீப் அவர்கள்" விசாரித்தாக கூறினார்.
மேலும் இது பற்றிய தகவல்களை உடனடியாக நாம் விசாரித்து இன்னும் தெளிவாக நண்பர் பிரதீப் அவர்களிடமும் , நமது வலையிலும் பிரசுரிக்கவுள்ளோம்.
இதுபோன்ற உதவும் எண்ணம் கொண்ட நண்பர்கள் உள்ள வரையில் மயில்களும், மான்களும் வனங்களில் கவலைகளற்று வாழலாம் என்பது நமக்கு தெளிவாகிறது.
வனம் வளர்ப்போம் , மழை பெறுவோம் , வார்த்தைகளில் அல்ல வாழ்க்கையில்.
...

செவ்வாய், மார்ச் 09, 2010
வன உயிரினங்களுக்கு உதவி செய்யுங்கள்.

வணக்கம் அன்பு வலைப்பதிவர்களே ! எமது ஊரின் மிக அருகாமையில் இரண்டு மலைகள் உள்ளது. ஒன்றின் பெயர் அரசன்னாமலை, மற்றொன்று கொமரமலை. இந்த இரண்டு மலைகளிலும் இருவது வருடங்களுக்கு முன்பு நரி மட்டுமே இருந்து வந்தது, ஆனால் தற்போது மான்களும் , ம்யில்களும் அதிக அள்வில் பெருகி விட்டது. மான்கள் வந்தது எப்படி என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை.

ஏனென்றால் மலை என்பதை விட அதை ஒரு கரடு என்றே சொல்லலாம். மே மாதத்தில் வறண்டு போய் தீப்பிடித்து விடும் அளவுக்கு காய்ந்து விடும் ஒரு கரடு.
வனத்துறையும் அவ்வப்போது செடிகளை வைத்து பசுமையாக்கலாம் என்று முயற்சி செய்கிறார்கள் . ஆனால் அது என்ன நேரமோ தெரியவில்லை ,செடி வைத்தால் மழை அந்த வருடஙகளில் பொய்த்து விடுகிறது. இந்த இரு மலைகளுக்கும் இடையில் தான் ஈரோடு -கோவை- திருப்பூர் இரயில்வே பாதை செல்கிறது.

அப்ப மான்கள் தண்ணீருக்கு என்ன செய்கின்றன? . கரட்டை ஒட்டி உள்ள தோட்டங்களில் உள்ள தண்ணீர் தொட்டி , ஆடு, மாடுகளுக்கு என உள்ள தொட்டிகளில் தாகத்தைத் தணிக்கக்கூடும் என்று தெரிகிறது. மயில்களுக்கும் அதே கதைதான்.

இதைப்படிக்கும் நண்பர்கள் ஏதேனும் தொண்டு அமைப்பை தெரிந்திருந்தால்
அவர்களுக்கு இவ்விசயத்தை கூறுங்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதால் ஏதேனும் சில நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இந்த மலையை ஒட்டி தண்ணீர்த்தொட்டி வைக்க ஏற்பாடு செய்யுங்களேன்.

மரம் வளர்ப்போம் என்பதை விட காய்ந்து கிடக்கும் உயிரினங்களுக்கு தண்ணீர் அளிக்க முன் வாருங்களேன் !
....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)