வியாழன், நவம்பர் 30, 2017

ஆளுநர்கள் ஆடும் கூத்து! -பழ.கருப்பையா

Thanks nakeeran nov 26-28

ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு அரசின் ஆட்சிப் போக்கு குறித்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.
எகிறியிருக்க வேண்டும் அ.இ.அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசு.
ஒரு கணவன், மனைவியின் குடுமியைப் பற்றி இழுத்துப் போட்டு அடிக்கும்போது, எகிறிப் பாய வேண்டிய மனைவி, “அவருக்கில்லாத உரிமையா?’ என்று அடிபட்ட இரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, அவிழ்ந்த கூந்தலை அமைதியாக அள்ளி முடிந்துகொள்கிறாள் என்றால்… “அவனிடமும், இவனிடமும் உனக்கென்னடி இளிப்பு’ என்றெல்லாம் தோண்டாமல் இத்துடன் விட்டானே’ என்னும் மகிழ்ச்சி அவளுக்கு. அதே நிலைதான் நம்முடைய எடப்பாடி அரசுக்கும்.
சசிகலா குடும்பத்தில் மைய அரசால் நடத்தப்படும் அலங்கோலங்களையெல்லாம் பார்த்து அரண்டு போயிருக்கும் எடப்பாடிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் மாநில உரிமைகள் பற்றிக் கவலைப்பட நேரம் எங்கே இருக்கிறது?
ஒரு விபத்தினால் ஆட்சிக்கு வந்தவர்கள்; “அரித்தது வரை மிச்சம்’ என்னும் அரிய கொள்கையை ஆட்சிக் கொள்கையாகக் கொண்டவர்கள்; அவர்கள் வேறெப்படி நடந்துகொள்ள முடியும்?
தமிழ்நாட்டின் தலையாய எதிர்க்கட்சியான தி.மு.க.வும் பிற கட்சிகளும் “எங்கள் வீட்டில் உனக்கென்ன வேலை?’ என்று மைய அரசின் மீது பாய்கின்றன.
அவர்களின் பாய்ச்சலுக்குக் காரணம், கேவலமான எடப்பாடி அரசு குறித்த கவலை அல்ல; “இன்றைக்கு நடப்பதுதானே நாளைக்கும் நடக்கும்’ என்னும் மாநில நலன்கள் சார்ந்த கவலையால்!
ஆளுநர், அதிகாரிகளை அதிகாரபூர்வமாக அழைத்து ஆட்சி முறை குறித்து விசாரணை செய்வது, ஆய்வு மேற்கொள்வது என்பன போன்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு அரசியல் நிருணயச் சட்டத்தில் இல்லை. இந்த மீறலை ‘Constitutional impropriety’  என்று சட்ட வல்லுனர் கூறுவார்கள்.
தன்னுடைய எல்லையை, வரம்பை மீறி நடந்துகொள்கிறார் ஆளுநர் புரோகித்.
இந்தச் சட்டமீறலை இத்துடன் முடித்துக்கொள்ளப் போவதில்லை; அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அத்துமீறல் விரியும் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார் ஆளுநர்.
ஆளுநர் பதவி என்பது அலங்காரப் பதவி; அவருக்கென்று தனி அதிகாரம் எதுவுமில்லை.
ஆளுநர் உரை என்று சட்டமன்றத்தில் அவர் படிக்கின்ற உரை அந்தந்த அரசுகளால் எழுதிக் கொடுக்கப்படும் உரைதான். அவர் “என்னுடைய அரசு’ என்று குறிப்பிடுவது நிகழ்கால மாநில அரசைத்தான்.
“என்னுடைய அரசு “கழுதை விட்டையை’ வியாபாரம் செய்வதாக முடிவெடுத்திருக்கிறது’ என்று ஆளுநர் தன்னுடைய உரையில் படித்தால், அது அந்த அரசின் கொள்கை என்பது அதன் பொருள். கழுதை விட்டை வியாபாரம்  இலாபமானதா?, நட்டகரமானதா என்று கேள்வி கேட்க ஆளுநருக்கு  உரிமையில்லை.
அப்படியிருக்கும்போது அரசின் அன்றாடச் செயல்களை ஆராய்வதற்கு இவர் யார்? இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் பெருமையும் சிறுமையும். நியமனம் செய்யப்படும் ஆளுநருக்கு வேடிக்கை பார்க்கத்தான் உரிமையுண்டு.
ஆயினும் நெருக்கடியில் ஓர் ஆளுநர் செயல்பட முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று தன்னுடைய பெரும்பான்மையை இழந்துவிடும்போது… “மாற்று அரசுக்கு வழிவகுப்பதா? இருக்கும் அரசைக் கலைத்துவிடுவதா?’ என முதன்மையான முடிவுகளை எடுக்கும் மாபெரும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
அவற்றையெல்லாம் விட்டு விட்டு,  நம்முடைய ஆளுநர் புரோகித், “தாசில்தார் பட்டா கொடுத்தாரா? கிராம முன்சீப் நிலத்தை ஒழுங்காய் அளந்து கணக்கு வைத்திருக்கிறாரா?’ என்றெல்லாம் ஆகாத வேலைகளையெல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்.
இப்போது உள்ள அ.இ.அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஏற்கெனவே மெலிதான பெரும்பான்மையைக் கொண்டுள்ள எடப்பாடி அரசு, தன்னுடைய சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதினெட்டு பேர், “எங்களுக்கு எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை இல்லை’ என்று ஆளுநரையே நேரில் கண்டு, தங்கள் நம்பிக்கையின்மையை கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்த பின்னரும், ஆளுநர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அவர் செய்யவேண்டிய வேலையை அவர் செய்தாரா?
பெரும்பான்மையை இழந்துவிட்ட ஓர் அரசு தொடர்ந்து ஆண்டுகொண்டிருக்கிறது! அதை ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்!
ஆளுநர் செயலற்றுப்போன காரணத்தினால், எடப்பாடியின் விருப்பத்திற்குச் செயல்படும் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அரசின் மீது நம்பிக்கையின்மை தெரிவித்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதினெட்டுப் பேரையும் பதவியிலிருந்தே நீக்கம் செய்துவிடுகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை ஒரு பேனாவின் கீறலால் ஒன்றுமில்லாமல் ஆக்கமுடியும் என்றால், இது தேர்வு செய்த மக்களைக் கோமாளிகளாக்கும் செயல்தானே?
ஆளுநர்களைச் சொல்லி ஆகப்போவதென்ன? அவர்கள் வெறும் இரப்பர் முத்திரைகள்தாமே! இந்த இரப்பர் முத்திரைகளை மையில் தோய்த்துக் குத்துவது மைய அரசுதானே!
புதுச்சேரி ஆளுநராக இருப்பவர் கிரண்பெடி. புதுச்சேரியில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுபவர் இவர். முதல்வர் நாராயணசாமி பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவைக்கு நியமனம் வேண்டிய மூன்றுபேரை தன்னுடைய விருப்பப்படி பாரதிய சனதா கட்சியிலிருந்து நியமனம் செய்துவிட்டார். இவரென்ன பாரதிய சனதா கட்சியின் பகுதிச் செயலாளரா? ஆனால் அந்த நியமனம் செல்லாதென்று சட்டப்பேரவைத் தலைவர் சட்டமன்றத்திற்குள் நுழைய அவர்களை அனுமதிக்கவில்லை என்பது வேறு.
மக்களிடம் பெரும்  செல்வாக்குப் பெற்ற டில்லி முதல்வர் கெசரிவாலின் கதையும் இதுதான். “முதல்வரை ஆளுநர் ஓர் எடுபிடி போல் நடத்துகிறார்; செயல்முடக்கம் செய்கிறார்’ என்று கெசரிவால் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்.
இப்படியெல்லாம் அத்துமீறிச் செயல்படுவதற்கும், நியாயமான நாராயணசாமி ஆட்சியையும், கெசரிவால் ஆட்சியையும் செயல்முடக்கம் செய்வதற்கும் பெரும்பான்மையை இழந்துவிட்ட, ஊழலிலே புழுத்த புழுவான எடப்பாடி ஆட்சியை முட்டுக்கொடுத்துக் காப்பாற்றி வைப்பதற்கும் காரணம் ஆளுநர்கள்தானா? இல்லை, அவர்களைப் பொம்மலாட்டப் பொம்மைகளைப் போல் ஆட்டி வைக்கும் மோடியா?
“யாமறியோம் பராபரமே; எல்லாமே மோடியின் உத்தரவுப்படிதான்’ என்று வெளிப்படையாகவே போட்டு உடைத்துவிட்டார் புதுச்சேரி ஆளுநர் கிரண்பெடி.
‘Whatever we are doing is what has been reiterated by Prime Minister Narendra Modi’  என்கிறார் கிரண்பேடி. (Express 18-11-2017)
இத்தோடு கிரண்பேடி விட்டிருந்தால்  குற்றமில்லை;  “ஏதோ கூலிக்கு மாரடிக்கிறவர்கள்’ என்று விட்டுவிடலாம்.
புரோகித் போன்றவரில்லை கிரண்பேடி; அவர் இரண்டு ஆண்களுக்குச் சமமானவர்;  வெடிப்பானவர்.
அந்தப் பாங்கில் பேசுகிறார் கிரண்பேடி. “மோடி ஆட்டுவிக்கிறார்; நான் ஆடுகிறேன்’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்ட பிறகும், சுயமரியாதை உறுத்துகிறது.
‘What is otherwise the Governor for?’  “தலையிடக் கூடாதென்றால், வேறு எதற்கு ஆளுநர்?’ என்று கிரண்பேடி கேட்கிறார்.
தலையிடக்கூடாதென்று நாங்கள் சொல்லவில்லை. பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி அரசுக்கு எதிராக ஆளுநர் ஏன் தலையிடவில்லை என்றுதான் கேட்கிறோம்.
பெரும்பான்மையோடு ஒழுங்காக நடக்கும் புதுச்சேரி  நாராயணசாமி ஆட்சியில் ஏன் தலையிடுகிறீர்கள் என்றும் கேட்கிறோம்.

புதன், நவம்பர் 01, 2017

*தமிழகம்- 61*

தமிழகம் 61
—�—�—�—�—�—�—�—�
தற்போதைய தமிழக எல்லைகளை கொண்ட மொழிவாரி மாநிலமாக தமிழகம் அமைக்கப்பட்டு நேற்றுடம் 61 ஆண்டுகள் நிறைவுற்று 62வது ஆண்டில் அடியெடித்து வைக்கின்றோம்.
இன்றைய தமிழகம் தெற்கில் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டாரம், கேரளத்திடம் நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு பகுதியில் சில கிராமங்கள், கர்நாடகத்திடம் கொள்ளேகால், கோலார் பகுதிகள், ஆந்திரத்திடம் சித்தூர் ,நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, பழவேற்காடு ஏரியில் சில பகுதிகள் போன்றவற்றை நாம் இழந்துள்ளோம். இதனால் ஆந்திரத்திடம் பாலாறு, பழவேற்காடு ஏரி பிரச்சனையிலும், கர்நாடகத்திடம் காவிரி, ஒகேனக்கல், தென்பென்ணையாறு பிரச்சனையிலும், கேரளத்திடம் பரம்பிக்குளம் - ஆழியாறு, சிறுவாணி, அமராவதி, புன்னம்புழா, பம்பாறு, முல்லை பெரியாறு, அழகர் அணை, செண்பகவல்லி, அடவிநயினார், நெய்யாறு போன்ற நீராதாரப் பிரச்சனைகள். தமிழக மண்ணை இழந்து ஏறத்தாழ 61 ஆண்டுகள்ஆகிறது. தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து கூடி கலைகிறோம். 61 ஆண்டுகள் கழித்தும் நம் மண்ணை இழந்தோம் என்று நாம் இன்னும் உணரவில்லை. இறுதியாக 1976ல் கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியான நிலையில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது மலையாளிகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. இதனை நினைவில் கொள்ளும் வகையில் 10, 15 ஆண்டுகளாக கருத்தரங்கும், நூல் வெளியீடும் நடத்தி கொண்டு வருகிறேன்.
தமிழகம் 50, பொன்விழா நூல் வெளியிட்டேன். தமிழகம் 60, தமிழகம் 61 என ஏற்கனவே நான் எழுதிய கட்டுரைகளை இங்கே இணைந்து பதிவு.
இது தொடர்பான மீள் பதிவு வருமாறு...
*தமிழ்நாடு – 50 – பொன்விழா 1956 – 2006*
*தமிழ்நாடு -60*
—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—
இன்றைய தமிழ்நாடு அமைந்து வருகிற நவம்பர் 1ஆம் தேதி அன்று 60 ஆண்டுகள் நிறைவு பெறும். இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை இராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் ‘தமிழ்நாடு’ என்று பெயரிடப்பட்டது. தமிழருக்குச் சொந்தமான பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இந்த ஆண்டு கடந்த காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்துக்கு பொன்விழா ஆண்டு ஆகும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளையொட்டி ஆண்டுதோறும் அந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’ என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையாமல் இருந்த நிலை ஏற்பட்டு விட்டது. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் கடுமையாக இச்சூழ்நிலையை எதிர்த்தது. இந்நிலையில், ஐக்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952இல் அக்டோபர் 13ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15இல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்துக்குச் சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் ‘மெட்ராஸ் மனதே’ என்ற கோஷம் வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள். சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை.
தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்துக்குப் பெற சிலம்புச்செல்வர் ம.பொ.சி-யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சாரப் பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வட எல்லைப் பகுதிக்கு புகை வண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார். ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்போது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்னை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.
09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி-யைத் தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி-யைக் காப்பாற்றியதாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றார் ம.பொ.சி..
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்னை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ம.பொ.சி. அவர்கள் திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.
கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர் குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி – அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக்கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்தபோதும்கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களுடைய ஆதரவு கிடைக்கப் பெற்றது. 1954இல் ஜுனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச்சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.
1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக்கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதலமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக்கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்துக்கும் தயார் இல்லை என்று தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்னையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக்கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீஸாரின் குண்டர் தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்த போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.
இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் – கொச்சி உள்ளடக்கிய கேரள முதலமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேசிய பின் தேவிக்குளம் – பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் – பீர்மேடு கேரளத்துக்குச் சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கன்னியாகுமரி – செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபோது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில புனரமைப்புக் குழு பசலிக் கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் – பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1ஆம் தேதி காமராஜர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவுக்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவுக்கு தியாகி பி.எஸ்.மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சுந்தரலிங்கனார் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறைவேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரிடக் கோரி நாடாளுமன்ற மக்கள் அவையில் பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஆதரித்து பூபேஷ் குப்தா குரல் கொடுத்தார்.
தட்சணப்பிரதேசம் என்று தக்கண பீடபூமி மாநிலங்கள் ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கைகள் எடுத்தபோது முதல் கண்டனக்குரல் அன்றைய முதல் காமராஜரிடம் இருந்து எழுந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் குரல் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.
தமிழகத்துக்கும் கேரள மாநிலத்துக்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. ஆகும். கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை – கொல்லங்ககோடு வரை நீண்டுள்ளது. தமிழக கேரள மாநிலங்கள் எல்லை தூரம் 203 கி.மீ. அளவில்தான் இதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கிறது. இதற்கு கேரளா அரசு ஒத்துழைப்புத் தரவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்தாலும் தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல்துறையினரால் அத்துமீறி தாக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களோடு நதிநீர் பிரச்சினையிலும், சமீபத்தில் கர்நாடகத்தோடு ஒக்னேக்கல் பிரச்னையில் தமிழகத்தின் நியாயங்களை வெளிப்படுத்தினாலும் கர்நாடகத்தின் எல்லை அத்துமீறல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகாவிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள தாளவாடி கர்நாடகத்தில் சேர்க்க வாட்டாள் நாகராஜ் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே கொள்ளேகால், பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்து உள்ளோம். 1956இல் தமிழகத்தின் விருப்பத்துக்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் – பீர்மேடு கேரளத்தில் முறைகேடாக சேர்த்துவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு இழந்ததால் இன்றைக்கு காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததால் முல்லைப் பெரியாறில் கேரளா முரண்டு பிடிக்கிறது. அது மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தின் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை திட்டம், பாலக்காடு பகுதிகளை இழந்ததால் கொங்கு மண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு - புன்னம்புழா, பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்னைகள் இன்றைக்கும் கேரளாவோடு தலைதூக்கி நிற்கிறது.
கர்நாடகத்தோடு கொள்ளேகால், மாண்டியா, கோலாறு இழந்ததால் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்னை, ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி இழந்ததால் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்னை. கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. இவ்வளவு நதிநீர் ஆதாரங்களும், இயற்கை ஆதாரங்களும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் இழந்த மண்ணால். இந்தத் தருணம் கொண்டாட்டமா? சிந்திக்கவா? என்று தெரியவில்லை. ஆனால், தென் மாவட்டங்களில் தமிழகத்தின் கலாச்சார பண்டைய தலைநகரம் ஏதென்ஸ், ரோம் நகர்களைப் போன்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் ஏன் அமையக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இன்னொரு மாநிலம் அமைந்தால் பல சலுகைகளும், கிடைக்கும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் பகுதியான புதுச்சேரிக்கே சிறப்புச் சலுகை இருக்கும்போது, தமிழ் பேசும் இன்னொரு மாநிலம் அமைந்தால் சில உரிமைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த வகையில் தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதத்துக்கு உரிய பொருளாகும். தென் தமிழகம் அமைந்தால் நிர்வாகம், மக்கள் நலப் பணிகள் என பல நன்மைகளும் உள்ளன. காலப் போக்கில் அரங்கன் பள்ளிகொண்ட காவிரியின் தென்கரை திருவரங்கரத்திலிருந்து குமரி முனையில் ஐயன் வள்ளுவன் சிலை வரை தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற சிலரின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நீர்பூத்த நெருப்பாக உள்ளன. 1998லிருந்து மத்திய அரசு சிறு மாநிலங்கள் அமைய வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திட்டங்கள் தீட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு உத்தராஞ்சல், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வரை பல மாநிலங்கள் அமைந்தன. தற்போது தெலங்கானாவும் தனி மாநிலமாகி விட்டது. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாக ரீதியாக பிரிக்கலாம் என்று மத்திய அரசும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தியாகங்கள் செய்து மீட்டுத் தந்த தணிகை, குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளோடு தமிழகத்தோடு இணைக்க போராடிய தியாகச் செம்மல்களின் கீர்த்தியை நினைவில் கொள்வோம். நாம் இழந்த மண்ணை எப்படி மீட்பது என்பதும் இப்போது சிந்திக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
அக்டோபர் 27-2016 அன்று பதிவு செய்தது.
*தமிழகம்- 61*
—�—�—�—�—�-
தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு நாளையோடு 61 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2017 ) ஆகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.
'தமிழகம் 50' விழாவை 10 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். 'தமிழ்நாடு 50' என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.
அவர் விழாவில் வடக்கு எல்லை போராட்ட தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார் போன்றோரும், தெற்கெல்லை குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட பி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார், போன்றவர்களையும், நெல்லை மாவட்ட செங்கோட்டையை தமிழகத்தோடு இணைய போரிட்ட கரையாளர் அவர்களையும், தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் படங்களும் திறக்கப்பட்டது.
இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்படவில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியான பின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். நாளை ( 01/11/2017 ) நடக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் நானும், நண்பர் ஆழிசெந்தில்நாதனும் கலந்து கொள்ளவிருக்கிறோம்.
அனைவரும் வருக.
#தமிழகம்
#மொழிவாரிமாநிலம்
* மொழிவாரி மாநிலம் *
*KSRadhakrishnanpostings*
*KSRpostings*
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
01-11-2017
No automatic alt text available.Image may contain: 1 person

சனி, செப்டம்பர் 16, 2017

புதியதோர் வானொலி உலகம்

drm_30
தொண்ணூற்றி ரெண்டில். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன்.”காமாட்சி அக்கா ஊர்லேர்ந்து வந்திருக்காங்க” என்றான் முத்துமாரி.”நேத்துதான் பாத்தேன். நீ எங்கிட்டு இருக்கன்னு கேட்டாங்க”
“பாக்கணுமே, வரியாடே? போவம்” என்றவாறே அவன் ஸ்கூட்டரில் தொத்திக் கொண்டேன். அக்கா கொஞ்சம் பூசியிருப்பதாகப் பட்டது. தமிழ் தவிர வேறொன்றும் அறிந்திராத அவள், வார்த்தைக்கு வார்த்தை “ சல்த்தாஹை, டீக் ஹை” என்றது ,வீட்டிலிருந்தவர்களுக்கு விசித்திரமாகப் பட்டிருக்க வேண்டும். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நானும் கிட்டத்தட்ட அதே நிலைதான். பொதுவாக என்ன பேசிப் பழகுகிறோமோ, அது அனிச்சையாக வேறு தளங்களிலும் ப்ரதிபலித்து விடுகிறது.
“ஒரு குறைதான் அங்கிட்டு.. கேட்டியா?” என்றாள் அக்கா, முறுக்கும், வெங்காய வடையும் ஒரு தட்டில் நீட்டியபடி. “ நம்மூர் மாரி இலங்கை ரேடியோ கேக்க மாட்டேக்கி. அப்துல் ஹமீது குரல் கேட்டு நாளாச்சி. ’இரவின் மடியில்’ ப்ரோக்ராமை விவித் பாரதில எதாச்சும் ஒண்ணு, அடிக்க முடியுமால? அதான் நாலு கேசட்டுல பழய பாட்டு பதிஞ்சு கொடுக்கச் சொல்லியிருக்கேன். சோனி சி-90 நல்ல கேசட்டுதானடே?”
மனம் விரும்பிய ரேடியோ நிகழ்ச்சிகள் பொன் சங்கிலிகளாகக் கால்களைக் கட்டிப்போட்ட தினங்கள் அவை. அருமையான பழைய பாடல்களை ஒரு லிஸ்ட்டில் எழுதி, கேஸட்டில் பதிந்து வாங்கிச்செல்வது , வெளி மாநிலங்களில் உள்ளவர்களின் பொழுதுபோக்காவும் இருந்தது. பண்பலை என்பது பெரும் நகரங்களில் சில மணிகள் மட்டும் கேட்ட ஒன்று. ஏ.எம் எனப்படும் பரப்பலைகள் ஏதோ கொஞ்ச தூரம் போகும். அவ்வளவுதான்., வானொலி நிலையங்கள் தொலைபேசித் தொடர்பு, இணையங்களை நம்பியிருந்தன. இதன் மூலமே திருச்சி , திருநெல்வேலி, கோயமுத்தூர் வானொலி நிலையங்கள் சென்னையுடன், தேசியச் செய்திக்காக தில்லியுடன் இணைந்தன. இத்தனை தொலைவுக்கு , வானொலியின் பரப்பலை துல்லியமாக வந்துவிடாது.
இன்றும் இதன் நிலை அப்படித்தான். புற்றீசல்களாக பண்பலை நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டனவே அன்றி, சென்னை பண்பலை நிகழ்ச்சியை மும்பையில் நேராக வானொலிப்பெட்டியில் கேட்டுவிட முடியாது. இணைய தளம் மூலம் அது பரப்பப்பட்டு, கேபிள் அல்லது வயர்லெஸ் பரப்பான் மூலமே கேட்க வேண்டியிருக்கிறது. இதற்கு பேண்ட்வித் தேவைப்படுகிறது. வானொலியின் பரப்பாற்றல் சிற்றலைகளில் அதிகமென்றாலும், அதில் ஒலி தெளிவாகக் கேட்பதில்லை. பின்புல ஓசை அதிகமிருக்கும். வளிமண்டல பாதிப்புகள் செய்தியைத் தாக்கும்.
நாம் இன்று கேட்கும் வானொலி, சிற்றலைகள் (short wave), நடுத்தர அலைநீள அலைகள் ( medium wave) நீளலைகள் (long wave) பண்பலை ( Frequency Modulation) அதிக அதிர்வெண் அலைகள் ( Very High Frequency) என பல பட்டைகளாகப் பிரிக்கப்பட்டு வகுக்கப்பட்டு , பரப்பப்படுகின்ற அலைகளின் தொகுப்பு. குறுகிய அலைகள் நீண்ட தொலைவு வரை கேட்கும். இதனால்தான் 70, 80களில் நம்மால் லார்ட்ஸ் மைதானத்தில் கவாஸ்கர் நூறு அடித்ததை நள்ளிரவில் ரேடியோ ஸ்பீக்கரில் காது வைத்துக் கேட்டு , உற்சாகமாக கத்த முடிந்தது. ஆனால் ஸ்பீக்கரில் உன்னிப்பாக காது வைத்துக் கேட்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. பலரும் கேட்டதாக பாவனை செய்ததாகவே எனக்கு நினைவு., அடிப்படையில் , அதிர்வெண் பரப்பு எல்லைகளை வானொலியின் தொழில் நுட்பம் இன்றுவரை கடக்கவில்லை. இதைத் தாண்டிய உலகளாவிய ட்ஜிட்டல் வானொலி என்ற அமைப்பு, அடிப்படை தொழில் நுட்பத்தை அசைக்க முயன்றுகொண்டிருக்கிறது.
நாம் தொலைதூர தேசத்து வானொலியைக் கேட்க வேண்டுமானால், சிற்றலைப் பட்டை (short wave band)யைப் பிடித்து, ட்யூனிங் செய்து அலைவரிசையைப் பிடிக்கவேண்டும். டிஜிட்டல் வானொலி, இந்த பட்டைகளை விலக்கி, ஒரே பட்டையில் அனைத்து வீச்சு மாற்ற அலையேற்றி தொழில் நுட்ப ( amplitude modulation) ஒலிபரப்புகளையும் ஒருங்கிணைத்து ஒலிபரப்பும். இதன்மூலம், தூத்துக்குடியில் கேட்டுக்கொண்டிருந்த இலங்கை வானொலியை, காமாட்சி அக்கா, ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன், தெளிவாகக் கேட்கலாம்.
1989ல் ஜெர்மெனியில் பெர்லின் சுவர் வீழ்ந்ததோடு, வானொலி, தகவல் தொழில்நுட்பத்தில் சில மாறுதல்கள் நிகழ்ந்தன. அதுவரை சில நாடுகள் மட்டுமே பயன்படுத்தியிருந்த சில அதிர்வெண் பட்டைகள், இராணுவத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த பெருமளவிலான அதிர்வெண் அலைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. இந்நிலையில் , பல பட்டைகளாக வானொலி தகவல் தொழிநுட்பத்தை துண்டாடாமல், ஒரே பட்டையாக பயன்படுத்தினால் என்ன? என்ற சிந்தனை வளர்ந்தது,. பழக்கத்தில் இருந்த இயற்பண்பு சார்ந்த தகவல் ( analog signal ) அலைவரிசையில் , வீச்சு மாற்ற தகவல் அலை (amplitude modulation)வரிசையை, டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டமாக அச்சிந்தனை உருவெடுத்தது.
இதன் முதற்கூட்டம் பாரீஸ் நகரில் 1996ல் நடந்தது. அதில் டிஜிட்டல் அலைவரிசை, எல்லையற்ற தகவல் பரிமாற்றத்தை வானொலிமூலம் கொண்டுவர உத்திகள் செய்யப்படவேண்டுமென நிறுவப்பட்டது.1997ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 40 பேர் கொண்ட கூட்டம் அதிகாரபூர்வமாகக் கூடி, மேற்கொண்டு வளர்க்கும் திட்டத்தை விவாதித்தது. 1998ல் உலகளாவிய டிஜிட்டல் ரேடியோ என்ற அர்த்தத்தில் Digital Radio Mondiale என்ற பெயரும், குழுவின் அடிப்படை நோக்கமும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குவாங்ஷூ மாநாடு இதன்பின் நடத்தப்பட்டு, பல வானொலி நிலையங்கள், கம்பெனிகள் ஆதரவளித்தது. பன்னாட்டு ரேடியோ தொலைதொடர்பு நிறுவனம் டி.ஆர்.எம் என்பதை அதிகாரபூர்வமாக, 30 மெகாஹெர்ட்ஸ்க்குக் கீழான அதிர்வெண் அலைவரிசையை டிஜிட்டலாக இணைக்கும் தொழில்நுட்பனென அறிவீத்தது.
இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கை ஒலிபரப்பை, ஒலிநீள, அதிர்வெண் அடிப்படையான பாகுபாடில்லாது, ஒரே பட்டையில், டிஜிட்டல் உருவாக தருவதென்பதாக இருந்தது. முப்பது மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் வரையான அலைகளை ஒரே பட்டையில் கொண்டுவரும் வகையில் DRM30 என்று ஒரு திட்டத்தைத் தொடங்கியது. 2001ல் “ மிகத் துல்லியமான ஒலி பரப்பை, உலகெங்கும், பண்பலையின் ஒலித் தரத்துக்கு இணையாக அளிப்பது, செய்திகளை, தகவல் நிலைகளை தொலைக்காட்சிக் கட்டுமானமின்றி வானொலி மூலம் அளிப்பது, இடர்நிலைக் காலச் செய்திகளை, உடனுக்குடன் உலகெங்கும் துல்லியமாக, இடையூறுகளின்றி பரப்புவது” என்பன அதில் சேர்ந்தன. 2005ல் மிக அதிக அதிர்வெண் அலைகளை(Very High Frequency -VHF ) DRM+ என இதில் இணைத்தார்கள். இதன்மூலம் பண்பலைகள், டிஜிட்டல் ஒலிபரப்பில் சேர்ந்தன. பதினைந்து வருடங்களாகிவிட்டது, இன்னமும் இத்தொழில் நுட்பம் , சோதனைக் கட்டம் தாண்டி மக்களுக்கு பெருமளவில் பயன்படுமளவில் வந்து சேரவில்லை. மன்னிக்கவும், வந்துகொண்டிருக்கிறது.
குவாங்ஷூ கூட்டத்தின் முடிவில் உலகளாவிய வானொலி ப்ராஜெக்ட், பீட்டர் செங்கர் என்ற ஜெர்மானியரின் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட அது அவரது வீட்டிலேயே இருந்தது எனலாம். அடிப்படையான தொழில்நுட்ப அளவிலான மாற்றம் அத்தனை எளிதல்ல. பரப்புமானிகளும்( ட்ரான்ஸ்மிட்டர்), வாங்குமானிகளும் (ரிசீவர்) உருவாக்கப்பட வேண்டும். அதோடு, நடைமுறையில் இருக்கும் வானொலி பரப்பு சேவையினை இது சிதைக்காமல், இது நடைமுறைப்படுத்தப் படவேண்டும். உலகெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்களும், கோடிக்கணக்கில் இருக்கும் வானொலி வாங்குமானிகளும் மாற்றப்பட வேண்டும். இப்போது வானொலி , மொபைல் போனில் கேட்கிறது. மாற்றக்கூடிய விகிதாசாரமா, நாம் பேசுவது?
பீட்டர் செங்கர் பொறுமையாக முன்னேறினார். வழியில் பல தடங்கல்கள். எதெல்லாம் சேர்க்கப்படவேண்டும் என்ற ஒரு பட்டியல், தொலைக்காட்சியில் வரும் மாமியார் மருமகள் சீரியல்களும் இடம் பெற் வேண்டும் என்ற ரேஞ்சில் நீளவே, அவற்றை வெட்டிச் சுருக்கி, இன்றைய, நாளைய தேவைகளை மட்டும் எடுத்துச் செல்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை. தொழில்நுட்பம் பத்து வருடங்களில் பல விகிதங்களில் மாறிவிட்டது. அதனை ஒருங்கிணைத்துச் செல்வது ஒரு தலைவலி.
செங்கர், அறிவியல், தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக இருந்தாலும், அதில் மட்டுமே கவனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டு இன்றும் இருக்கிறது. கம்பெனிகளுக்கு அவர் இந்த தொழில்நுட்பத்தை போதிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை என்பது உண்மை. இதனால் , தொழில் நுட்பம், அவரது வீட்டின் ஹாலைத் தாண்டி வெளி வரவில்லை. இருவருடங்களுக்கு முன், ஜெர்மானிய சட்டத்தின்படி, அவர் ஓய்வு பெற்றேயாக வேண்டிய சூழ்நிலை வர, இத்திட்டம் பி.பி.ஸி ஆதரவுடன் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது. புதிய தலைவர் சந்தைப்படுத்துவதில் தீவிரமாக முனைய, மெல்ல மெல்ல , உலகத்தின் கவனம் டி.ஆர் எம் மின் மீது திரும்பியது. பல தனியார் வானொலி நிலையங்கள், அரசு நிலையங்கள் டி.ஆர்.எம் குறித்து சிந்திக்கத் தொடங்கின. ஆல் இந்திய ரேடியோவும் அதில் ஒன்று.
குவாங்ஷூவில் இத்திட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்ட பல நிறுவனங்கள், இதற்குத்தேவையான கருவிகளை பெருமளவில் உருவாக்கவோ, சந்தைப்படுத்தவோ முயலவில்லை. சோனி, பானஸானிக் போன்ற நிறுவனங்கள் இத்தொழில் நுட்பத்தை முதலில் இருந்தே கவனித்து வளர்த்து வந்தாலும், பொதுமக்கள் அளவில் கொண்டு செல்ல மலிவான கருவிகளை உருவாக்கவில்லை. இத்திட்டம் பெருமளவில் மக்களிடம் சென்று சேராததற்கு இது ஒரு முக்கிய காரணம்.
air
வானொலி நிலையங்களை இயக்கிவரும் நாடுகள், பெரும் கம்பெனிகள், தன்னார்வல நிறுவனங்கள் போன்றவை இன்றும் இயற்பண்பு சார்ந்த முறையிலேயே செயல்படுகின்றன. விதிகள் மாற்றப்படாத நிலையில் அவை முன்னேற்பாடாக ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க இயலாத நிலையில் நிற்கின்றன. மேலும் டி.ஆர்.எம் ஒலிபரப்பு பற்றி பல எதிர்மறையான விவாதங்களும், கருத்துக்கணிப்புகளும் வெளியிடப்பட்ட நிலையில் அவர்களின் தயக்கத்தில் ஒரு நியாயத்தைக் காண முடிகிறது.
மோடி அரசில், ஆல் இந்திய ரேடியோ , டி.ஆர்.எம் தொழில்நுட்பத்தை, மாறி வரும் சமுதாயத்தின் தேவையாகக் கண்டு, தீவிரமாக அதனை சோதனை செய்து, செயல்படுத்த முயன்று வருகிறது. 2017ல் , டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை ஆல் இந்திய ரேடியோ முழுதுமாக செயல்படுத்தும். தற்போது பழக்கத்தில் இருக்கும் அனலாக் முறை ஒலிபரப்பும் தொடர்ந்து செயல்படும். டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டிருப்போர் சோதனை நிகழ்ச்சிகளைக் கேட்டு, பின்னூட்டத்தை ஏ.ஐ.ஆர் நிறுவனத்திற்குத் தெரிவிக்கலாம்.
சென்னை, தில்லி வானொலி நிலையங்கள், டி.ஆர்.எம் சேவைக்கெனவே குறிப்பிட்ட அலைவரிசைகளை வைத்திருக்கின்றன. இவை தவிர 23 வானொலி நிலையங்களில் டி.ஆர்.எம் சேவை, சோதனைக் கட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டியலை உசாத்துணையில் இருக்கும் நிரலியில் கண்டு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தற்போது, நம்மால் சோதனை செய்துவிடமுடியுமா? என்றால், ரிசீவர் கருவிகள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை பயமுறுத்துகிறது. க்ரோமா-வின் கடையொன்றில் டி.ஆர்.எம் ரிசீவர் இருக்கிறதா? என்றேன். “ அவரெல்லாம் பாக்க முடியாதுங்க. வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கு எழுதுங்க.” என்றார், ஏதோ பெரிய மேனேஜரை அழைக்கிறேன் என்று நினைத்து. சரி, ஆன்லைன் கடைகளில் வாங்கலாமென்றால், ஒரே இந்திய டி.ஆர்.எம் கருவித் தயாரிப்பான ஏவிட்ட்ரானிக்ஸ் ரூ 14999 என்றது அமேசான். “ரைட்டு விடு’
இன்னும் ஓரிரு வருடங்களில் மலிவான சீனத்தயாரிப்புகள் மார்க்கெட்டில் வந்துவிடும் என்கிறார்கள். எப்படியும் ஒரு ரிசீவரின் விலை, ரூ 3000க்குக் கீழே சிலகாலம் குறையப்போவதில்லை. சேடிலைட் ரேடியோ என மோட்டோரோலா தொடங்கி, பி.பி.எல் (BPL) , சந்தைப்படுத்திய சேவை மூடிக்கொண்டுவிட்டதில், பலருக்கு இதில் முதலீடு செய்வதில் தயக்கம் இருக்கும். எனினும், அரசாங்கம் இதில் மும்முரமாக ஈடுபடுவதால், பொதுமக்கள் துணிவுடன் சில வருடங்களில் டி.ஆர் எம் கருவிகளை வாங்குவார்கள் என நம்பிக்கை வருகிறது.
அருகிய எதிர்காலத்தில், காமாட்சி அக்கா, நரைத்த முடியைக் கோதிவிட்டவாறே ”இரவின் மடியில்” கேட்டபடி நிம்மதியாக உறங்குவாள்.

வெள்ளி, ஜூன் 30, 2017

‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை

கைபர், போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்தவர்களே ‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை. நான் பலவிடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இருந்தும், 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்துக்குசு மலைகளைக் கடந்து வந்த ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றினரென நம்மவரும் கிளிப்பிள்ளைப்போல் ஒப்புவிக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த வரையில், கைபர், போலன் கணவாய்களின் ஊடாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையைக் கடந்துவந்து சிந்துவெளி பகுதிகளின்மேல் போர் தொடுத்தவன் மாசிடோனியக் கிரேக்கன் அலெக்சாண்டர் மட்டுமேயாவான். இதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.
கி. மு. 326ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பகுதியின்மேல் அலெக்சாண்டர் நடத்திய படையெடுப்பு இத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. சிந்துவெளியிலிருந்த தமிழரசுகளை அலெக்சாண்டர் ஒழித்துக்கட்டினான். அங்குப் பேச்சு வழக்கிலிருந்த தமிழ்மொழி கட்டு குலைந்து கெட்டுத் திரிந்ததும், அலெக்சாண்டரின் படையெடுப்பால் வந்த வினை. அதன் விளைவாக, கந்தார நாட்டில் தமிழ் வரிவடிவத்தைத் தழுவிக் ‘கரோத்தி’(Karoshti) வரிவடிவம் தோன்றியது. வடஇந்தியாவைத் தமிழர்கள் இழக்க அலெக்சாண்டரின் படையெடுப்பே முற்றுமுதல் காரணம்.
பாக்கித்தானிலிருக்கும் பலுச்சித்தானில் போலன் கணவாய்க்கு அருகில் ‘மெஃகர்கர்’ (Mehrgarh) எனும் நகரம் இருக்கிறது. அங்கு தோன்றிய ‘மெஃகர்கர் நாகரிகம்’, கி. மு. 7000க்கும் கி. மு. 3200க்கும் இடையில் சிந்து ஆற்றின் மேற்குப்புறத்தில் விளங்கிய உழவு நாகரிகமெனச் சொல்லப்படுகிறது. ‘மழவர்கள்’ அல்லது ‘மள்ளர்கள்’ (Malava/Malloi/Mallis) எனும் தமிழ்ப் பழங்குடிகள் சிந்துவெளியில் அரண் சூழ்ந்த நகரங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டதாகவும் கிரேக்க, உரோமானிய வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பாக்கித்தானின் ‘சுவாத்’ பள்ளத்தாக்கிலிருக்கும் ‘அசுப்பசுயோய்’ (Aspasioi) பழங்குடிகளை எதிர்த்துப் போரிட்டபோது, அவர்களில் ஒருவன் எய்த ஈட்டியால் அலெக்சாண்டர் புண்பட்டான். ‘அசகெனோய்’ (Assakenoi) பழங்குடியினருடன் பல நாட்கள் போரிட்டு ‘மாசகம்’ (Massaga), ‘அரணம்’ (Aornos) முதலான கோட்டைகளைப் படாத பாடுபட்டுப் பிடித்த அலெக்சாண்டர், அங்கெலாம் கொலைவெறியாடினான்.
சீலம் ஆற்றங்கரையில் ‘போரசு’ (Porus) எனும் மன்னன் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றதாகவும் சொல்கின்றனர். அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, ‘சமற்கிருதம்’ எனும் மொழியே இல்லை. ஆயினும், போரசின் உண்மையான சமற்கிருதப் பெயர் ‘புருசோத்தமன்’ என்று இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் கதை விடுகின்றனர். போரசு, உள்ளபடியே ஒரு தமிழ் மன்னனென ஆய்வுகள் காட்டுகின்றன. தக்கசீலத்தை ஆண்டுவந்த ‘அம்பி’ (Omphis) எனும் மன்னன் தம் சொந்த இனத்தாரையே காட்டிக்கொடுத்துவிட்டு அலெக்சாண்டருக்குத் துணைபோனதாக கிரேக்க, உரோம வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர்.
போரசுடன் நடத்திய போருக்குப்பின் பாக்கித்தானிலிருக்கும் சீனாப் ஆற்றங்கரையில் ஆண்டுவந்த ‘மழவர்’ அல்லது ‘மள்ளர்’களின் ‘மழவர்தானத்தை’ அலெக்சாண்டர் தாக்கினான். அம் ‘மழவர்தானம்’தான் இன்று ‘முல்தான்’ எனப்படுகிறது. மழவர்களுடன் போரிடும்போது, முறிந்த கோட்டைச் சுவரிலிருந்து கீழே குதித்த அலெக்சாண்டரின்மேல் மழவன் ஒருவன் அம்பு எய்தான்; சுருண்டு விழுந்த அலெக்சாண்டரை அவனது மெய்க்காவலர்கள் காப்பாற்றினர்.
சிந்துவெளித் தமிழ்ப் பழங்குடிகள் காட்டிய கடும் எதிர்ப்பாலும், போரில் புண்பட்டதாலும் கீழைக்கங்கைக்கரை நாடுகளின்மேல் படையெடுக்கும் அலெக்சாண்டரின் எண்ணம் கைகூடவில்லை. மேலும், மாசிடோனியப் படைஞர்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டுமெனக் கலகம் செய்தனர். இதனால், தம் படையெடுப்பைச் சிந்துவெளியுடன் நிறுத்திக்கொண்டு நாடு திரும்பும் வழியில் பாபிலோனில் அவன் இறந்தான். சுருங்க சொல்லின், அலெக்சாண்டரை முறியடித்து நாடு திரும்ப வைத்தவர்கள் தமிழர்களேயாவர்.
அலெக்சாண்டர் படையெடுப்பின்போது, கீழைக்கங்கைக்கரைப் பகுதியில் கங்கையாற்றில் ஒரு தீவாயிருந்த ‘கங்கரிடை’ (Gangaridae) நாட்டை ‘நந்தர்கள்’ ஆண்டுவந்தனர். ‘கங்கரிடை நாடு’ என்பது தமிழ்ப்பெயர். கங்கரிடை நாட்டைத்தான் ‘மகதநாடு’ என்கின்றனர். ‘நன்னர்’ எனும் தமிழ்ப் பெயரின் திரிபே ‘நந்தர்’ என்பதாகும். நன்னர்கள் தமிழ் வேளிர்க்குடியினராயிருந்திருக்க வேண்டும். அந் நந்தர்களை ‘ஆந்திரக்கோட்டசு’ அல்லது ‘சந்திரக்கோட்டசு’(Andracotus or Sandracotus) என்பான் கைப்பற்றி ‘மோரிய’ அரசை நிறுவியதாக கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 'ஆந்திரக்கோட்டசு' (ஆந்திரக்கோட்டை) ஒரு வடுகன் என்பதைத் ‘தமிழரின் தொன்மை’ எனும் நூலில் நான் விரிவாக எழுதியுள்ளேன்.
கடை விரித்தேன், கொள்வாரில்லை!
அலெக்சாண்டருக்குப்பின் - அதாவது, அலெக்சாண்டர் இறந்த 323ஆம் ஆண்டுக்குப்பின் - கி. மு. 180ஆம் ஆண்டில் ‘டெமெட்ரியசு’ (Demetrius) எனும் ‘கிரேக்கப் பாக்டீரிய’ (Greeco-Bacteria) அரசன் சிந்துப்பகுதியின்மேல் படையெடுத்து ‘இந்தியக் கிரேக்கப்’ பேரரசை (Indo-Greek Empire) அங்கு நிறுவினான். அவனது ஆட்சிப்பரப்பு இன்றையை குசராத் உள்ளிட்ட சிந்துவெளிப் பகுதி முழுமையையும் உள்ளடக்கியிருந்தது. (வரைபடம்)
‘இந்தியக் கிரேக்க’ ஆட்சியின்கீழ்ச் சிந்துவெளியில் கிரேக்கருடன் இனக்கலப்பும் மொழிக்கலப்பும் ஏற்பட்டது. சிந்துவெளியில் பேசப்பட்டுவந்த தமிழும் திரிந்து கலப்புமொழிகள் உருவாயின. அதேபோழ்து, கீழைக்கங்ககைக்கரையிலிருந்து கங்கரிடை (மகத) நாட்டிலும் தமிழ் கெட்டுத் திரிந்தது. ‘அரைமகதம்’, ‘சூரசேனி’ முதலான பாகத (பிராகிரத) மொழிகள், கொச்சையான பேச்சு வழக்கு மொழிகளாகத் தோன்றின. புத்தர்களும் அருகர்(சைனர்)களுமே அதற்குக் காரணமாயினர். புத்தர்கள் ‘பாழி’ எனும் செயற்கை மொழியையும் தோற்றுவித்தனர்.
சிந்துவெளிப் பகுதியிலும் கீழைக்கங்கைக்கரையிலும் தமிழரசுகள் வீழவும் தமிழ் வழக்கொழிந்து பாகத மொழிகள் தோன்றவும் முதற்பெரும் காரணம் அலெக்சாண்டரின் படையெடுப்பேயாகும். ஆரியக் கோட்பாடும் திராவிடக் கோட்பாடும் கைகோத்துக்கொண்டு அந்த மாபெரும் உண்மையை மூடி மறைத்தன.
கொச்சையான பாகத மொழிகளைத் திருத்தமுறச் செய்ய எண்ணி (‘செவ்வனே செய்யப்பட்டது’ எனும் பொருள்படும்) ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. மகாயான புத்தர்களாலும் அருகர்(சைனர்)களாலும் வடுகப் பிராமணர்களாலும் அது முனைப்புடன் போற்றி புரக்கப்பட்டது; வளர்க்கப்பட்டது.
சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்றுவிக்கப்பட்டதாக பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார். (எந்த நூலில் அது வருகிறது என்பது நினைவில் இல்லை.) வேறு சிலரோ, குமரி மாவட்டத்தில்தான் சமற்கிருதம் தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.
மேற்போந்த மெய்ம்மைகளை யெல்லாம் திறந்த மனத்துடன் அலசி ஆராய்ந்து தமிழரின் உண்மையான வரலாற்றைப் புத்தமைக்க வேண்டும்.
-- குணா

No automatic alt text available.

புதன், ஜூன் 21, 2017

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)!!!


கடன் பட்டிருந்தால்…
“கடனானதற்குப் பிறகு சிலர், இப்படியாகி விட்டதே, நான் என்ன பாவம் செய்தேனோ’ என்று புலம்பிக் கொண்டிருப்பர்.
இன்னும் சிலர் ‘இப்படி செய்திருக்க வேண்டும் இப்படி செய்திருக்கக் கூடாது, இப்படி செய்ததால் தான் இப்படி ஆனது’ என்று பழைய சம்பவ ஆராய்ச்சிகளிலேயே மீண்டும் மீண்டும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பர்.
இன்னும் சிலர் “கோபம், டென்சனாகி யார் இவ்வாறு நடக்கக் காரணமாக இருந்தார்களோ அவர்களைத் திட்டிக் கொண்டும், சபித்துக் கொண்டும் இருப்பர்.
இன்னும் சிலர், கவலைப்பட்டுக் கவலைப்பட்டு கடன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக வேண்டாத பழக்கங்களில் ஈடுபடுவர்.
நண்பர்களே! கடந்தவை கடந்தவைதான். அவற்றிலிருந்து பாடங்களை எடுத்துக் கொள்க. இந்த அனுபவத்தை வைத்து மீண்டும் தொடர்ந்து செயல்பட்டால் கடன்களிலிருந்து மீளமுடியும். செல்வம் குவிக்க முடியும். அந்த ஆற்றல் எல்லோரிடமும் இருக்கிறது. இதை உணருங்கள்.
கடனுக்குக் காரணமானவரையும் ஏமாற்றியவரையும் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால், எதிர்மறைஎண்ணங்கள் அதிகமாகும். மனச்சக்தி வீணாகும். அது உங்கள் ஆக்க அறிவு செயல்படுவதைத் தடை செய்யும்.
கடன் நினைவுகள் வரும்பொழுதெல்லாம், அதை ஒரு சவாலாக மாற்றுங்கள். எழுந்து நில்லுங்கள். உங்களால் ஜெயிக்க முடியும்!
(என்னுடைய “தோல்வியிலிருந்து வெற்றிக்கு’ நூலில் இன்னும் பல விளக்கங்கள் உள்ளன)
கடன் அதிகமாய் இருந்தால், வட்டி அதிகம் கட்ட வேண்டியது வந்தால், உங்களது சொத்துக்களை விற்றும் கட்டுங்கள். சமுதாய அந்தஸ்து என்றபோலி கௌரவம் பார்க்க வேண்டாம். கடன்களைக் கட்டியபிறகு மனச்சிக்கல் இல்லாமல் உற்சாகமாகத் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள். பணம் வந்துவிட்டால் எல்லா மதிப்பும் தானே வந்துவிடும்.
கடன் பட்டதற்குப் பிறகு சிலர் கடன் கொடுத்தவர்களை சந்திக்கப் பயந்து கொள்வர். “சொன்ன தவணைக்கு கொடுக்க முடியுமோ, முடியாதோ, என்னாகுமோ’ என்ற மன உளைச்சலில் இருப்பர்.
நீங்கள் 5ஆம் தேதி பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லி, 5ம் தேதி உங்களால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுமானால், 4ம் தேதியே கடன் கொடுத்தவரைச் சந்தித்து நிலையை விளக்கி விடுங்கள். மீண்டும் திருப்பிக் கொடுக்க சற்று அவகாசம் வாங்கி வாருங்கள். இதனால் கடன் கொடுத்தவர் சற்று சங்கடப் பட்டாலும் அது பிரச்சனையாகாது.
ஆனால் 5ம் தேதி பணம் இல்லை என்று பிரச்சனையில் போகாவிட்டால், அவர் 6ம் தேதி உங்களை சந்திக்க வந்தால் வரும்போது எப்படி வருவார்? அது உங்களுக்கே தெரியும்.
ஆகவே, சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்தியுங்கள்.
மீண்டும், மீண்டும் எண்ணுங்கள். “பணத்தை சம்பாதித்துக் கடனைக் கட்டியே தீருவேன்’ என்று செயல்படுங்கள். உங்களால் முடியும்!
கடனிலிருந்து விடுபடும் பயிற்சி
‘Think Yourself Rich’ என்றநூலில் டாக்டர் ஜோசப் மர்ஃபி கூறுகிறார்.
அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள். பணம் உங்களுக்கு நிறையக் கிடைப்பது போலவும், அதை எடுத்துச் சென்று கடன் கொடுத்தவரிடம் கொடுப்பது போலவும், அவர் மகிழ்ச்சியாக பெற்றுக் கொள்வதைப் போலவும், நீங்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு, நிம்மதி சந்தோசத்துடன் வீடு திரும்புவது போலவும் போன்ற காட்சிகளை மனத்திரையில் பாருங்கள். இப்பொழுது கண்களை விழித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பயிற்சியைக் காலையிலும், மாலையிலும் செய்து வரவர இந்தக் காட்சிகள் மேல் மனதிலிருந்து உள் மனத்தில் பதிந்து வெற்றியாக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும்.
கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனைகளைச் செய்து விட்டுத் தொடர்ந்து செயல் புரியுங்கள்.
வாழ்த்துக்கள்!
கடனை வசூலிக்கும் முறைகள்
1. கடன் பெற்றபணத்தை என்றைக்குத் திருப்பித் தருகிறார்கள் என்று கேட்டு நாளைக் குறித்துக் கொள்ளவும். அந்த நாளில் சரியாக அவர்களிடம் கேட்கவும். மாறாக, இந்தப் பணம் வராது, இவர் திருப்பிக் கொடுக்க மாட்டார் என்றஅனுமானத்தில்கேட்காமல் விடக்கூடாது.
ஒருமுறைT.V. பேட்டியில் ஒரு Finance சொன்னார், நம் முன்னோர்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பது பற்றி பழமொழி ஒன்றைக் கூறியுள்ளார்கள். “கறக்காத பாலும், கேட்காத கடனும் திரும்ப வராது’ அதேபோலக் கொடுத்த கடனைக் கேட்பதை நிறுத்தாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்தப் பணம் திரும்பி வரும்’.
2. “இப்படிக் கடனை வாங்கித் திரும்பக் கொடுக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக் கிறார்களே, இப்படி இருந்து கொண்டிருக் கிறார்களே’ என்று எரிச்சலடையாமல் அவரை சபிக்காமல் கீழ்க் கண்டவாறு அவர்களை வாழ்த்த வேண்டும்.
நம்மிடம் பணம் வாங்கியவரை மனதில் கொண்டு வந்து “அவரிடம் செல்வம் பெருக வேண்டும். அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கும் நிலையை அடைய வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும்’ என்று தினமும் வாழ்த்துங்கள். இந்த வாழ்த்து எண்ண அலைகள் அவருடைய மனதில் பதிந்து, பணம் சம்பாதிக்கும் எண்ணங்களைத் தூண்டி செயல்படுத்த வைத்து, பணத்தைத் திருப்பிக் கொடுக்க வைக்கும். நல்ல எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.
இந்தப் பயிற்சி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித குலத்திற்கு அளித்த மாபெரும் பரிசு.
வசூல் செய்யும் மனக்காட்சிப் பயிற்சி ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்க. ஒவ்வொரு முறையும் வசூல் செய்யப் போகும் முன்பும் இந்தப் பயிற்சியைக் செய்துவிட்டுப் போகவும்.
அமைதியாக அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்க. மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்க. 10லிருந்து 1 வரை தலைகீழாக எண்ணிக்கொள்க. இப்பொழுது மனக்காட்சியில் உங்களிடம் கடன் வாங்கியவருடைய உருவத்தைக் கொண்டு வருக.
நீங்கள் அவரிடம் செல்வது போலவும், அவரிடம் பணம் கேட்பது போலவும், அவர் சந்தோசமாக பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவது போலவும், நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாழ்த்துச் சொல்லி திரும்புதல் போலவும் காட்சிகளை மனத்திரையில் பார்க்கவும். பின் மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளவும்.
இந்தப் பயிற்சியைத் திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது, ஆழ்மனத்தில் பதிந்து அது நடைமுறையில் சாத்தியமாகும் சூழ்நிலை உருவாகும்.
இன்னொன்று எதை எதிர்பார்க் கிறோமோ அதுவே நடக்கிறது. எதிர்பார்ப்பு விதி (Law of Expectation) அதைத்தான் சொல்லுகிறது.
கொடுத்தது திரும்பிவரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் பொழுது அந்தப்பணம் திரும்பி வரும். இப்பொழுது செய்த மனக் காட்சிப் பயிற்சி அந்த நம்பிக்கையை பலப்படுத்தும்.
பணத்தைக் கேட்கும் முறை
கொடுத்த பணத்தைக் கேட்கப் போகும் பொழுது, பணம் வசூலாகாத பட்சத்தில் திரும்பி வருவதற்கு முன்பு சிலர் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர்.
“எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு, நீ கொடுக்க மாட்டே, இந்தப் பணம் போனது போனதுதான். இனிமேல் எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லை. நீ அநியாயமா ஏமாத்தற, இப்படியெல்லாம் செய்தால் நீ உருப்பட மாட்ட….’இவ்வாறு சொல்லக்கூடாது. ஆனால் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.
‘உங்களை நம்பித்தான் கொடுத்தேன். அடிப்படையில் நீங்கள் ரொம்ப நல்லவர். அடுத்தவர் காசை ஏமாற்றும் எண்ணம் உங்களுக்குக் கிடையாது. அது எனக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு உங்கள் தேவைக்கு உதவத்தான் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது பணம் எனக்கு மிக அவசரத் தேவையாக இருக்கிறது. பணத்தை வாங்கிய உங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது, நாணயம் காப்பாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆகவே, இதையெல்லாம் எண்ணிப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் நிச்சயம் சீக்கிரம் கொடுத்து விடுவீர்கள் என்று 100% நம்பிக்கைக் கொண்டு எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன். நீங்கள் திருப்பிக் கொடுக்கும் நிலைமைக்கு பணம் உங்களுக்கு வருவதற்கு நல்வாழ்த்துக்கள்!
ஆகவே, நண்பர்களே! இவ்வாறு கடனைக் கேட்டுவிட்டுத் திரும்பிவரும் போது சொல்கிறசொற்கள் உடன்பாட்டுச் சொற்களாக நல்ல எதிர்பார்ப்புடன் சொல்லிவிட்டு வரவேண்டும்.
“யாரை நாம் எப்படி நடத்துகிறோமோ அதுபோலவே ஆகிறார்கள்’. நாம் இவ்வாறு பெருந்தன்மையுடன் நடத்தும்பொழுது பணம் அவர்களுக்கு வருகிறகால கட்டத்தில் முதலில் நமக்குக் கொடுப்பார்கள்.
பணம் வசூலாகாவிட்டால்…
மேற்கூறிய பணத்தை வசூலிக்கும் முறைகள் அனைத்தையும் உபயோகித்தும் பணம் வசூலாகாவிட்டால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உழைத்துச் சம்பாதித்து சேர்த்த பணம் வீண் போகாது. வேறொரு ஏதேனும் ஒரு ரூபத் திலோ, தொழில் வாய்ப்பாகவோ திரும்பி விடும்.
ஏனென்றால் சில அடிப்படைப் பிரபஞ்ச நியதிகளின் படி இந்த உலகம் இயங்குகிறது. ஒருவர் உழைத்த உழைப்பினால் சேர்த்த பணம் எந்த வகையிலும் வீண் போகாது. பணமாக வராவிட்டாலும், அது வேறு ஏதேனும் நன்மையாகவாவது மாறும். ஓர் உதாரணத்திற்கு உங்கள் உடல் நலம் அல்லது சந்ததியாருக்கு நன்மை இப்படி ஏதேனும் ஒருவகையில் திரும்பக் கிடைக்கும். ஆகவே, இழந்ததை நினைத்துக் கவலைப்படாமல் அதையே எண்ணி மனம் சோர்வடையாமல் தொடர்ந்து அவர்களுக்குத் திரும்பச் செலுத்த போதிய அவகாசம் கொடுங்கள்.
புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். இழந்தது 5 இலட்சம், ஆனால் 50 இலட்சம் சம்பாதிப்பேன். அது என்னால் முடியும் என்று இழந்த நினைவு வரும்போதெல்லாம், ஏமாற்றப்பட்ட நினைவு வரும் போதெல்லாம் அதைச் சவாலாக மாற்றுங்கள். வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்!
Author: சூரியன்
http://thannambikkai.org/2009/08/01/2850/

புதன், மார்ச் 08, 2017

உணவு அரசியல் !அரிசி அரசியல், கோதுமை அரசியல்.. இதில் அரிசி தென்னாட்டு அரசியல், கோதுமை வடநாட்டு அரசியல்.. தென்னாட்டவன் எதைச் சொன்னாலும், அதைப் புரிந்துகொள்ளாமல் தனது நினைப்பையே தமிழர்கள் மேல் திணிப்பதற்கு முயல்பவன் வடநாட்டவன்.இதற்கு காரணம் புத்தி கூர்மை குறைவு. இதற்கான காரணம் அவர்கள் சாப்பிடும் உணவில் உள்ளது.

ஆம்!. கோதுமை,ஓட்ஸ்,மைதா, பார்லியில் உள்ள‌ ஒரு விதமான பசைத்தன்மையுடைய "குளூட்டன்" எனப்படும் புரோட்டின்.


பசைத்தன்மை "குளூ" இருப்பதால்தான் இதனை புரோட்டாவில் சேர்த்து மாவை இழுத்த இழுப்புக்கெல்லாம் பிசைகின்றனர்.இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும் ஒரு சிலருக்குக் குடல் புற்றை யும் பரிசளிக்கும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், தூக்கம் கண்டிப்பாகக் கெடும். வெயில் கால இரவுகளில் கொஞ்சம் பழத் துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சோறு சாப்பிட்டுப் பாருங்கள். கடைசி உருண்டை சாப்பிடுகையில் கொட்டாவியும் கூடவே சேர்ந்து வரும்.

இந்தக் குளூட்டனைச் சாப்பிடுவதால் மனிதனின் மனம் சோம்பலடையும். மேலும் புத்தி மந்தத்தன்மையடையும். நாம் சொல்வதை ஒரு முறைக்கு, பலமுறை சொல்லும்போதுதான் விளங்கும்.

கோதுமையில் குளூட்டன் என்ற பொருள் இருப்பதால்தான் அரிசி சாப்பிடுவர்களுக்கும், கோதுமை சாப்பிடுவதற்கும் உள்ள அறிவு வித்தியாசத்தை நாம் உணரமுடிகிறது.

தமிழர்கள் அரிசியையே பெரும்பாலும் சாப்பிடுவதால்தான் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

ஆனால் வட இந்தியர்கள் கோதுமையைச் சாப்பிடுவதால்தான் மந்தத்தன்மையுடன் காணப்படுகின்றனர், மேலும் தமிழர்களின் பிரச்சினையை பலமுறை சொல்லும்போது மட்டுமே அவர்களுக்கு விளங்குகின்றது.

உதாரணத்திற்க்கு ஜல்லிக்கட்டு , இதில் காளையை வனவிலங்காகவும், மாட்டை வீட்டுவிலங்காகவும் வகைப்படுத்திய நிகழ்வு.

இதன்காரணமாகவே தமிழர்களை அறிவில் மட்டுப்படுத்தவே தற்போது ரேசன் கடைகளில் அரிசிக்குப் பதில் கோதுமையை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக‌ மக்கள் கோதுமைக்கு தாவ ஆரம்பிப்பர். அரிசியை விரும்பாமல் கோதுமையை நாடுவர். குளூட்டன் வேலை செய்ய ஆரம்பிக்கும். வரும் தலைமுறைகள் வட இந்தியன் போல மந்தமாக ஆரம்பிக்கும்.

மக்களை கோதுமையை நாடவைத்து வடவிந்தியர்களிடம் கையேந்தவே அரிசி  விளைச்சலைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அரிசி விளைச்சலைக் கட்டுப்படுத்தவே  மீத்தேன்,ஹைட்ரோகார்பன் என்று பலதிட்டங்களை ஆரம்பித்து ஒட்டுமொத்த நெற்களஞ்சியத்தை நரகமாக்கிவிடலாம் என்ற  உணவு அரசியலை வடவிந்தியர்கள் பன்னெடுங்காலமாகவே ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஆரம்பகட்ட துவக்கம்தான் மக்களுக்கு சர்க்கரை, பிரசர் நோய்கள் வந்தால் மருத்துவர்கள் கோதுமை சாப்பிடச்சொன்னது.தற்போது பேலியோ வரை வந்து  ரேசனில் அரிசிப்பற்றாக்குறையில் நிற்கிறது.

தமிழா! உன்னைச் சுற்றி பல்வேறு வலைகள் விசிறப்படுகிறது..விழித்துக்கொள் !!!!

பரம்பரை பழக்கத்தை மாற்றாதே.. உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம்..அது உணவு அரசியலாக தலைதூக்க துணைபுரியாதே!

திங்கள், டிசம்பர் 12, 2016

ம.நடராசனின் மறுபக்கம்...

இருவருக்கு பின்.....
ம.நடராசனின் மறுபக்கம்... -- By Soma Sundara Prabhu M
சசிகலாவின் கணவன் ம.நடராசனின் வாழ்க்கை வரலாறு நமக்கு தேவையற்றது எனும் போதிலும், அரசியலில் எந்தெந்த வகையில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிந்து கொள்வது அவசியம். ஏற்றிவிட்ட ஏணிகளான கலைஞர், ஜெயலலிதா, சந்திரலேகா மற்றும் பொதுமக்கள் என்று அனைவருக்கும் துரோகத்தையும், வஞ்சத்தையும் பரிசாக தந்த உத்தமன் இந்த நடராசன் என்பதை விளக்கவே இந்த தொகுப்பு.
1967இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவராய் இருந்த காலத்தில் பங்கெடுத்திருக்கிறார் தஞ்சையில் (மாணவர் தலைவராய் தலைமை தாங்கியதாக கூட கதைகள் உண்டு), இதற்கு பிற்பாடு சில ஆண்டுகளுக்கு பின் ஆர்.டி.ஓ. வேலைக்கு தேர்வெழுதி தோல்வியுறுகிறார், (பின்னாளில், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, "மகளிர் மேம்பாட்டில் இதழ்களின் பங்கு" என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெறுகிறார்😝). இதனிடையே, ஆர்.டி.ஓ. வேலை கேட்டு எஸ்.டி.சோமசுந்தரம் மூலமாக முயற்சி செய்கிறார், முடியாமல் போகவே எல்.கணேசன் மூலமாக முயற்சி செய்கிறார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர் என்பதால், ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ.என்ற பதவியை முதல் முறையாக உருவாக்கி, ஆர்.டி.ஓ. 90பேருடன், பி.ஆர்.ஓ. என்ற பொறுப்பில் நடராசன் உட்பட்ட 11பேரை கலைஞர் மு.கருணாநிதி எழுபதுகளின் தொடக்கத்தில் நியமிக்கிறார். இடஒதுக்கீடு முறையில் புழக்கத்தில் இருந்து வந்த தவறான கொள்கையையும் களைகிறார்.(தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களையும், இடஒதுக்கீடு சதவிகிதத்திற்குள் கொண்டு வந்து விடுவர், ஆரிய அதிகாரிகள்)
பின்னர் நடராசனுக்கும் சசிகலாவுக்கும் கலைஞரே தலைமை தாங்கி திருமணம் முடித்து வைத்தார். கடலூர் மாவட்டத்தில் அப்பொழுது ஆட்சித்தலைவர் சந்திரலேகா அவர்கள், எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருகிறார் 77ல் வந்ததும் முதல் கையெழுத்து நடராசன் உள்ளிட்ட 11பேரின் பி.ஆர்.ஓ.பதவி நீக்க கோப்பில் தான். இதனால் சந்திரலேகா நடராசன் குடும்பத்தின் மேல் அனுதாபப்படுகிறார்.
பிழைப்புக்கு வழி தெரியாமல், வீடியோ கேசட்டுகளை சென்னையின் முக்கிய பணக்கார தெருக்களில் வீடு வீடாக மாலையில் கொடுத்து காலையில் வாங்கி பிழைப்பு நடத்த துவங்குகிறார் சசிகலா. நடராசனோ நீக்கப்பட்ட மீதமுள்ள 10பேரிடமும் பணம் வாங்கிக் கொண்டு, ஸ்டேட் ட்ரிப்யூனலில் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் ஆஜராகும் வக்கீலின் வீட்டு அவுட் ஹவுஸில் தங்கி, அவருக்கு குமாஸ்தாவாக காலம் கழிக்கிறார். இதுவே இந்த தம்பதியினர் சென்னை வந்ததற்கான காரணம்.
1981ல் சந்திரலேகாவை சந்தித்து உதவி கேட்கிறார்கள், அரசு விழாக்களின் வீடியோ உரிமையை பெற்றுத் தரக் கோரி. தனக்குக் கீழ் பணி செய்து வேலையிழந்தவர் என்ற அனுதாபம் இருக்கவே, எம்.ஜி.ஆரிடம் இன்னாரின் மனைவி என்று சொல்லாமல் விசயத்தை சொல்கிறார். எம்.ஜி.ஆரோ, "இது கொ.ப.செ. ஜெ. முடிவெடுக்க வேண்டிய ஒன்று" என்று கூறி ஜெ.விடம் அனுப்பி வைக்கிறார். இப்படியாக ஜெ.யிடம் செல்ல, ஜெ. வீட்டுக்கும் தான் வீடியோ கேசட்டை செக்யூரிட்டியிடம் கொடுக்கும் விவரத்தை தெரிவிக்கிறார் சசிகலா. பரிதாபப்பட்டு வீட்டுக்குள்ளேயே வந்து கொடுக்க அனுமதித்து, தினமும் பேச்சுத் துணையாக சசிகலாவை வைத்து திரும்ப அனுப்பியவர், வீட்டிலேயே சேர்த்தும் கொண்டார்.
இவர்களின் ஓதுதல் கேட்டே எம்.ஜி.ஆருக்கு எதிராக சில வேலைகளை செய்தார், கட்சியிலிருந்து ஒதுக்கியும் வைக்கப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதா கொடுத்த குடைச்சலாலும், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமானதாலும், திமுகவோடு கட்சியை இணைத்து விடும் முயற்சியை எம்.ஜி.ஆர் எடுத்ததாகவும், அதை ஆர்.எம்.வீ., சோலை உள்ளிட்டவர்கள் தடுத்ததாகவும், அவர்களே நக்கீரன் தொடரில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழல் வருமென்று தெரிந்திருந்ததால் தான், அன்றே அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரே கலைத்துவிடவும் முடிவெடுத்தார். தடுத்தவர்கள் பின்னாட்களில் வருந்த வேண்டி வந்தது...
எம்.ஜி.ஆரின் இறப்புக்கு பின், ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி மீண்டும் இழந்த செல்வாக்கை பெறலாம் என்று ராஜீவ் காந்திக்கு இங்குள்ள சிலர் தூபம் போட, ஜானகி தலைமையிலான ஆட்சி கலைக்கப்படுகிறது (அன்று ஆட்சிக் கலைப்பு சாதாரணமான நிகழ்வு, கலைஞர் ஆட்சி இரு முறையும், எம்.ஜி.ஆர். ஜானகி ஆட்சி தலாஒரு முறையும் கலைக்கப்பட்டிருக்கிறது).
1989 தேர்தலில் திமுக கூட்டணி 165 தொகுதிகளில் வென்றது, ஜா.அணியுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரசின் திட்டம் பலிக்கவில்லை வெறும் 35தொகுதிகளையே வென்றது. இந்த வேளையில் ஜானகி அரசியலை விட்டு விலகி, ஜெ.வுக்கு கட்சிக்குள் ஓரளவு செல்வாக்கு பெருகி, இரட்டை இலைச் சின்னமும் கிடைத்தது. வரவு செலவு கணக்குகளை பார்த்த ஜெயலலிதா உறைந்து போய், கோவத்தின் உச்சிக்கே சென்றார். பாதிக்கும் மேற்பட்ட பணம் கையாடப்பட்டிருந்தது நடராசனால். இதனால் கோவமுற்று, அரசியலை விட்டு விலகிப் போகப் போவதாக தெரிவித்து நடராசனையும் கார்டனை விட்டு விரட்டியடித்தார், எனினும் சசிகலா தொடர்ந்து அவருடனேயே இருந்தார்.
மிக மிக முக்கியமான காலகட்டம் இது தான், இந்த காலகட்டத்தில் தான் இலங்கை சென்ற அமைதிப்படை சென்னை வந்திறங்கி, டெல்லி சென்றது. மரபுப்படி, கலைஞர் அமைதிப்படையை வரவேற்க வேண்டும், இலங்கையில் அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரவேற்க செல்லவில்லை கலைஞர். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணிய நடராசன், இதைச் சொல்லியே ஜெ. மனதை கரைத்தார்.
இதற்காக லாபி செய்ய டெல்லி புறப்பட்ட நடராசனுக்கு, அங்கே ராஜிவ் கொலைக்கான அசைன்மெண்ட் குறித்து தெரியவருகின்றது. 😡😡😡 ஆனால் இதனை செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள், இடம், சூழல் குறித்தெல்லாம் சரியான யோசனை கிடைக்காமல் குழம்பி இருந்தனர் திட்டமிட்டவர்கள். நடராசனுக்கு யோசனை உதித்தது, ஏற்கனவே கோவத்தில் உள்ள விடுதலைப் புலிகளை வைத்து செய்தால் என்ன என்று. இது வெறும் அனுமானமல்ல, சந்திரலேகா மூலமாக சு.சாமியிடமும்(ப்ராஜெக்ட் ப்ரோக்கர்), நெடுமாறன் மூலமாக விடுதலைப் புலிகளுடனும், ஜெ.வை ஆட்சிக்கு வர வைத்து, நேரடியாக ஆதாயம் பெறப் போகும் ஆள் தான் தான் என்ற முறையிலும், மூவருடனும் தொடர்புடைய ஒரே ஆள் நடராசன் மட்டுமே.
இதற்கான பிரதி உபகாரமாக தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு செய்ய வேண்டும் என்ற உடன்படிக்கையுடன் துவங்கியது ப்ராஜெக்ட். ஆட்சி கலைப்பு, விடுதலை புலிகளுக்கு(திமுகவின் நிதியை வாங்க மறுத்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது) இரகசியங்களை தாரை வார்க்கின்றது திமுக தலைமையிலான அரசு என்ற சப்பையான காரணத்தை வைத்து நடத்தப்பட்டது. மீதி திட்டங்களை எல்லாம் வகுத்து, விடுதலைப் புலிகளை அணுகி கொலைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, ராஜீவையும் தமிழகம் வரவைத்தாயிற்று. திட்டம் குறித்து நாட்டில் பலருக்கும் இரகசியம் கசிந்திருந்த பொழுதும், யார் எதற்காக செய்யப் போகின்றார்கள் என்று அறியாததால், வதந்தி என்றே எண்ணியிருந்தனர்.
ராஜீவின் வருகையை அன்றைய தமிழக ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங் தடுத்துப் பார்த்தார், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி. பின்னாளில், பாதுகாப்பு சரியாக இருந்ததாகவும், அதனை காங்கிரசாரே உடைத்தாகவும் தெரிவித்தார் அன்றைய ஆளுனர். மேடையில், முக்கிய புள்ளிகள் எவருமில்லை, எல்லோருக்குமே ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதாக தெரிந்திருந்தது, என்ன, எப்படி என்று மட்டும் தெரிந்திருக்கவில்லை. இதன் தீவிரத்தையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
அந்த கருப்பு தினமும் வந்தது, கொலைக்கு முன்னதாகவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் தொடர்பு கொண்ட நடராசன், "இன்று இரவு திமுகவினர் அனைவருடைய இல்லங்களையும் (குறிப்பாக திமுக வேட்பாளர்களின் இல்லங்களை) இரவோடு இரவாக முற்றுகையிட வேண்டும்" என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இல்லையெனில், விடிவதற்குள்ளாகவே ராஜீவை கொலை செய்த பழி திமுக மீது எப்படி விழுந்திருக்கும்????
😭கொலையாளிகள் தேன்மொழி ராஜரத்தினம் என்கின்ற காயத்ரி மற்றும் தாணு இணைந்து மேடையேறி குண்டை வெடிக்கச் செய்தனர். அய்யகோ, நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் 14அப்பாவிகள் கருகிச் சிதறினர். நோக்கம் ராஜீவ் காந்தியை மட்டும் கொல்வதாக இருந்திருக்குமேயானால் துப்பாக்கியால் சுட்டிருப்பார்கள். அவர்களது நோக்கம் பெருங்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதாகவும் இருந்ததாலேயே தான் குண்டு வைத்துக் கொன்றனர். திட்டமிட்ட படி, திமுகவினரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன, திமுகவினர் தத்தமது குடும்பத்தினர், குழந்தைகள் உயிரை காப்பாற்ற ஓலமிட்டனர், கெஞ்சினர், கசியுமா வஞ்சகர்களின் மனது??? பெருங்கலவரம் மூண்டது. இத்தகைய கொடிய மனம் கொண்டவர் தான் நடராசன். இந்த கொலையில் தொடர்புடைய ம.நடராசன், சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி எல்லாம் விசாரணை வளையத்திற்குள் சிக்காதது, பெரும் விந்தை தான். நடராசன் பெயர் இதில் அடிபடக் கூட இல்லை.
நாடெங்கிலும் ராஜீவின் உடல் சிதறிய மற்றும் ஜெ.வின் தலைவிரி கோலமும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன, செய்யாத குற்றத்திற்காக தண்டனையும் பெற்றது திமுக. மக்கள் யோசிக்க தவறி விட்டார்கள், தேர்தல் வேளையில் எளிதில் ஆட்சியமைக்க இருக்கும் ஒரு கட்சி எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் என்று. நடராசன் போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி அதிமுக வென்றது, ஹிட்லராட்சி துவங்கியது. நாமெல்லாம் எண்ணியிருக்கிறோம், நம்புகிறோம், ஜெ. தான் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டிருந்தார் என்றும், சிலவற்றுக்கு காரணம் சசிகலா என்றும், அது தான் இல்லை. எல்லாமே கொலையரசன் நடராசனின் சதிச்செயல்.
1991 அதிமுக ஆட்சி அமைந்து ஆடிய ஆட்டம் மக்கள் அனைவருக்கும் தெரியும், எனினும், எப்படி எப்படியெல்லாம் அராஜகமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்தால் தான் புரியும், நினைவுக்கு வரும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சொந்த பலத்தில் வென்றதாகவும், ராஜீவ் கொலை செய்யப்பட்ட அனுதாபத்தால் அல்ல என்றார் ஜெயலலிதா. இது ஜெ.வின் குரல் அல்ல, நடராசனின் குரலை ஜெ. ஒலித்தார். பிரதமர் நரசிம்மராவ் தான் கொள்ளையர்களை அனுப்பி தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கிறார் என்றார்.
கொலைகொலையா முந்திரிக்கா.... அதிமுக அரசு குறித்து விமர்சித்த தராசு பத்திரிகை ஊழியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் ப.சிதம்பரத்தின் வாகனத்தை 400பேர் தாக்கினர் திருச்சியை சேர்ந்த இளவரசன் என்ற அதிமுக பிரமுகர் தலைமையில். எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க ஒரு பட்டியல் தயார் செய்து கொடுத்தார் நடராசன், அதன்படி ஒட்டுக்கேட்கப் பட்டது. இவ்விரு நிகழ்வையும் தோலுரித்து எழுதிய நக்கீரன் அலுவலகத்தில் ரைடு நடத்தி மிரட்டியது நடராசன் உத்தரவின் பேரில். வாட்டர் கேட் ஊழல் என்று தலையங்கமிட்டு எழுதிய நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட நக்கீரன் ஊழியர்கள் மூவரை கைது செய்தது ~ஜெ~நடராசன் போலீஸ். இது போல பல வழிகளில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டனர்.
இப்படி நடராசனால் செய்யப்பட்ட ஹிட்லர் ரூலிங், ஜெ.வின் ஸ்டைலாகவே மாறிப் போனது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணனை வீடு புகுந்து தாக்கியது, திருத்துறைப்பூண்டி இ.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பழனிச்சாமியை தாக்கியது, அன்றைய பா.ம.க. எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரனை தாமரைக்கனியை விட்டு தாக்கியது, என்று பட்டியல் நீள்கிறது.
மன்னார்குடி மாஃபியா லிஸ்ட்--------- 1)சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம், மனைவி சந்தானலட்சுமி, பிள்ளைகள் அனுராதா(தினகரனின் மனைவி), டாக்டர் வெங்கடேஷ். 2) சகோதரி வனிதாமணி, கணவர் விவேகானந்தன், பிள்ளைகள் தினகரன், சுதாகரன்(ஜெ.வின் வளர்ப்புப் பிள்ளை), பாஸ்கரன். 3)அண்ணன் வினோதகன், மகன் மகாதேவன். 4)அண்ணன் ஜெயராமன், மனைவி இளவரசி, மகன் விவேக். 5)சசிகலா, கணவன் நடராசன், நடராசனின் தம்பி ராமச்சந்திரன். 6)தம்பி திவாகரன். ஆத்தாடி, மேம்போக்கா சொன்னதே எத்தா பெருசு!!!!!!
இந்த கும்பல் வைத்தது தான் சட்டம், தாக்குதல் பட்டியலை தொடர்வோம். ஜெ.அரசின் நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்களின் மருமகன் மீது கஞ்சா வழக்கு. திமுகவினர் மீது தடா சட்டம், டி.என். சேஷன் மீது விமான நிலையத்திலும், தாஜ் ஹோட்டலிலும் தாக்குதல் நடத்தினர் ரவுடிகள்.
நன்றிகெட்ட தனத்தின் உச்சமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்பிக் நிறுவனத்தின் 26% பங்குகளை குறைந்த விலைக்கு, அதன் நிறுவனர்களான ஏ.சி.முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் இருவருக்கும் கொடுப்பதை தட்டிக் கேட்ட, டிட்கோ தலைவர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மீது ஆசிட் வீச்சு (அழகுச் சண்டை வேறு காரணமாம்) இந்த முறைகேட்டால், அன்றே 40கோடி இழப்பு, அரசுக்கு. ஆசிட் வீசியது ரவுடி சுடலை என்கின்ற சுருளா, ஏவியது நத்தம் விஸ்வநாதன், நத்தத்தை ஏவியது திண்டுக்கல் சீனிவாசன், சீனிவாசனை ஏவியது மதுசூதனன், மதுசூதனனை ஏவியது சாட்சாத் நடராசனே தான். பின்னாளில் இந்த சுருளா, தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள, நீதிபதையையே தாக்கி, சிறைக்குள்ளேயே இருக்க முடிவு செய்கிறார்.
ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கை(காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்) கைக்குள் போட்டுக் கொண்டு, அவர் தேவைகளை நிறைவு செய்ய, தேவாரத்தின் கீழ் பணிபுரிந்த பெண் காவலர் லால் என்பவரை நியமித்ருந்தனர். அதைக் காட்டி மிரட்டி வைத்திருந்தனர் 30/05/1993 வரை. 31/05/1993 அன்று சென்னாரெட்டி ஆளுநர் பொறுப்பை ஏற்றார், இவர்களுக்கு பெரும் குடைச்சலாக இருந்தார். ஊழல் வழக்கு தொடுக்கும் சு.சாமியின் மனுவுக்கு அனுமதி கொடுத்தார் சென்னாரெட்டி. சட்டசபையிலேயே ஆளுநர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சொல்ல வைத்தனர்.
டான்சி வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள நீதிபதியிடம் திமுக கேட்க, அனுமதி வழங்கி விட்டார் நீதிபதி. இதற்காக இம்ப்ளீட் பெட்டிசன் தயார் செய்கின்றனர் அன்றைய மாநிலங்களவை உறுப்பினர் வக்கீல் சண்முகசுந்தரமும், இன்றைய மாநிலங்களவை உறுப்பினர் அய்யா ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் தயார் செய்து முடித்துவிட்டு, பாரதி அய்யா வீடு திரும்பி விடுகிறார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசைத்தம்பி என்கின்ற ரவடி தலைமையில் வந்த ரவுடி கும்பல் வக்கீல் சண்முகசுந்தரம் அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்புகிறது. பின்னர் அதிமுக ஆட்சியிலேயே, அந்த ரவுடி ஆசைத்தம்பி என்கவுண்டர் செய்யப்பட்டார்(விசயம் வெளியே தெரியக் கூடாதுல).
2012ம் ஆண்டு துவக்கத்தில் தமிழர் திருநாள் பண்டிகை கொண்டாடிய நடராசனின் பேச்சை இன்றைய அரசியல் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால், அதிமுகவினருக்கு கூட இவர் மேல் உள்ள சந்தேகம் வலுக்கும். அந்த பேச்சு: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். நீங்கள், “முடிவெடு" என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது(என்ன ஒரு பொதுநலம்). என் மனைவி மீது வழக்கு உள்ளது;(இது தான் உங்கள் பொதுநலமா???) அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் அவசரப்பட என்னால் முடியாது. “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!" இவ்வாறு நடராசன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார் (இதுவரை, இந்த நான்கரை ஆண்டுகளில், அப்படி எதுவும் நமக்கு தெரிந்து நடக்கவேயில்லையே). தஞ்சை அருகே, விளார்(நடராசனின் சொந்த ஊர்) ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, தனது கைக்கடிகாரம், பழைய கார்கள் உள்ளிட்ட உடைமைகளை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணத்தை பழ.நெடுமாறனிடம் வழங்கினார். (ஏலம் விட்டதும் எடுத்ததும் நடராசனின் ஆட்களே....). முற்றம் தொடர்பான சிற்ப வேலைகள் செய்ய பணித்த திரைப்பட நடிகர் சைனி ஹீசைனியையும் கொன்று விடுவதாக மிரட்டினார், காவல்துறையில் புகார் கொடுத்து வைத்ததால் தப்பித்திருக்கிறார்.
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய பொழுது, குடும்ப மாநாடு நடத்தி, ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற முயற்சித்த துரோகி, தீயசக்தி தான் இந்த நடராசன்.
இன்றும் தஞ்சை உள்ளிட்ட நகரங்களில், "அதிமுக எனும் இராணுவ கட்டமைப்பு கொண்ட கட்சியை வழிநடத்த, தேவை இன்னொரு அம்மா, அது தான் எங்கள் சின்னம்மா" எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது போஸ்டர்களில். இதில் காசவளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது 18கிராமங்களை உள்ளடக்கியது, இதில் தான் நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமமும் வருகின்றது. இப்போ சொல்லுங்க இது யாருடைய வேலை????
அன்று முதல் இன்று வரை பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், நீதித் துறையினர்(ஆச்சார்யா உட்பட), பொதுமக்கள் என்று அனைவரும், சொந்த நாட்டில் அடிமைகளாக கருத்து சுதந்திரம் இல்லாமல் வாழக் காரணம், இந்த நடராசன் வகுத்துத் தந்த பாதை தான். வேலை கொடுத்து திருமணம் செய்து வைத்த கலைஞருக்கும், இரக்கப்பட்டு ஜெ.விடம் அறிமுகப் படுத்திய சந்திரலேகாவிற்கும், ஆதரவளித்த ஜெ.விற்கும், இந்த பகட்டு வாழ்க்கை கிடைக்க காரணமான பொதுமக்களுக்கும், நடரசன் துரோகம் ஒன்றையே பரிசாக தந்திருக்கிறார்.
இந்த துரோகங்களுக்கு கிடைத்த தண்டனைகளாக, நடராசன் சிறைக் கம்பிகளை எண்ணியிருந்தாலும், இன்றளவும் ஈழ வியாபாரிகள், நெடுமாறன், வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்களை, அதிமுக சார்பு நிலைப்பாடு எடுக்க வைத்து, ஓரணியில் நிறுத்தியிருக்கிறார். இது மாபெரும் நாச வேலைக்கான, இனவாத அரசியலுக்கான அறிகுறி.
இப்படிப்பட்ட தீய சக்தி நடராசன் தான் கலைஞரை தீயசக்தி என்றும், ஜெயலலிதாவை சேடிஸ்ட் என்றும், மக்களை முட்டாள்கள் என்றும் கூறி வருகிறார்.
இப்போ சொல்லுங்க, இந்த நடராசன்(சசிகலா) கையில் அதிகாரம் செல்லலாமா???, இனவாத, மதவாத அரசியல் செய்ய நினைக்கும் தீயசக்திகள் நடராசனுக்கும், மோடிக்கும் தமிழகத்தில் எந்த அதிகாரமும் கிடைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ம.சோமசுந்தர பிரபு....