ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 17, 2013

கோயிலில் வழிபடும் முறை;


----------------------------------------
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறைகள்..,

*தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

*கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.

*பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.
இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.

*விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.
தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.

*சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.

+தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.

+தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.

*அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.

*முருகன்,நடராஜர்,தட்சிணாமூர்த்தி,துர்க்கை,சண்டிகேஸ்வரர்
மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

*கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும்.

*வழிபாடு முடிந்ததும் சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்வது மிகுந்த நலமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

தானங்களால் ஏற்படும் பலன்கள்;


---------------------------------------------
தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு.அதாவது தர்மம் என்பது தனக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவருக்கு கூறி நல்வழிக்காட்டி அவரை வாழ்வில் உயர்த்துவது தர்மம் ஆகும்.தானம் என்பது தனக்கு தேவைக்கு மீறிய செல்வங்களை இலவசமாக கொடுப்பது.

1.ஆடைகள் தானம்:
ஆயுள் விருத்தியாகும்.புத்திர தோசம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்:
பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை,எளியவர்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்:
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது வாழ்வில் நலிந்தவர்களுக்குஅரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உணடாகும்.

6.கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

புதன், நவம்பர் 20, 2013

நிமித்தம் என்பது என்ன?

நிமித்தம் என்பது என்ன?
---------------------------------
நிமித்தம் என்பது வாழ்வில் பின்நிகழவிருக்கும் நன்மை தீமைகளைச் சில நிகழ்ச்சியின் வாயிலாக உணர்த்துவதாகும்.நிமித்தங்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்றுதெட்டு இன்றுவரை நம்பப்பட்டு வருகின்றன.

நிமித்தம் என்பதை இயற்கையின் மொழி என்றும் கூறலாம. மனிதன்தான் செய்ய நினைக்கும் செயலின் பால் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கும் இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் ஒருவித தொடர்பு உண்டு.

உலகத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விசயம் ஒன்றும் இல்லை. நடக்கும் காரியங்களும் அப்படியே. சரியான கணக்குத் தெரிந்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒரே கணக்காக நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்கலாம். கை ரேகை, ஆரூடம், கிரகநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. எல்லாம் நிஜம்தான். இவற்றில் ஒன்றே நிமித்தம். அதில் ஒரு அங்கமே சகுனம் ஆகும்.

பொதுவாகவே நிமித்தங்கள் பலனை உருவாக்குவதில்லை.நடக்கபோகும் காரியங்களை மறைமுகமாக உணர்த்துவது ஆகும்.இந்த பூமிபந்தின் அமைப்புபடி நம்முடைய செயல்கள்,எண்ணங்கள்படியே காரியங்களும் நடக்கின்றன.நல்ல நேர்மறை சிந்தனைகளுடன்,எந்த வித தீயநோக்கமும் இல்லாமல் உயன்ர்ந்த எண்ணத்துடன் வாழ்ந்தாலே போதும் நமக்கும் நடக்கும் காரியங்கள் யாவும் இனிதாகவே அமையும் என்பது உண்மையாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.க்கம்