ஓரை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்த ஒரைகளில் சந்திரன், புதன், குரு, சுக்கிர ஓரைகள் சுபமானவை. நல்லது செய்ய உகந்தவை. சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் நல்லவை அல்ல.
சூரிய ஓரை : இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழு,பெரியோர்களைஸ் சந்திக்க நல்லது. சந்திர ஓரை : இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது. செவ்வாய் ஓரை : எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது. புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும். குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னலே போதுத் உடனே கிடைதிதுவிடும். சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும். சனி ஓரை : எந்தவித சுபகாரிய்ங்களும் செய்யக்கூடாது. புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் நிலபுலங்கள் பற்றி பேசவோ சட்டபூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ நல்லது.இந்த ஓரையில் காணாமல் போன பொருள் கிடைக்காது.ஒருவேளை இரண்டு மூன்று வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம். "பட்சி தெரிந்தவனை பகைகாதே என்பது பொதுமொழி" பட்சியின் மூல மந்திரமும்,மூலிகைகளும் கிடைக்கும்
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது
பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர். சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர். சூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும், அது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்) அதற்கு 2வது இடம் வழங்கினர். இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு, 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர். இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம். இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது. சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war) வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது. செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும், வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது. இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள். |
செவ்வாய், டிசம்பர் 17, 2013
மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு
கோயிலில் வழிபடும் முறை;
----------------------------------------
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறைகள்..,
*தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
*கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.
*பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.
இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.
*விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.
தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.
*சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.
+தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.
+தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.
*அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.
*முருகன்,நடராஜர்,தட்சிணாமூர்த்தி,துர்க்கை,சண்டிகேஸ்வரர்
மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.
*கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும்.
*வழிபாடு முடிந்ததும் சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்வது மிகுந்த நலமாகும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
தானங்களால் ஏற்படும் பலன்கள்;
---------------------------------------------
தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு.அதாவது தர்மம் என்பது தனக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவருக்கு கூறி நல்வழிக்காட்டி அவரை வாழ்வில் உயர்த்துவது தர்மம் ஆகும்.தானம் என்பது தனக்கு தேவைக்கு மீறிய செல்வங்களை இலவசமாக கொடுப்பது.
1.ஆடைகள் தானம்:
ஆயுள் விருத்தியாகும்.புத்திர தோசம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.
2.தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
3.நெய்தானம்:
பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.
4.தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை,எளியவர்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
5.அரிசிதானம்:
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது வாழ்வில் நலிந்தவர்களுக்குஅரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உணடாகும்.
6.கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)