திங்கள், செப்டம்பர் 21, 2015

முருகன் யார் ?

                                       

                                          

              " இந்து சமயம் "  என இன்று நடைமுறையில் உள்ள சமயக் கட்டமைப்பானது வேந்தர்களின் வீழ்ச்சிக்கு பின்னே மாற்றியமைக்கப்பட்ட தமிழர் இறைவழிபாட்டு முறையாகும் . தமிழர்தம் இறை  வழிபாடு என்பது நன்றி நவிலும் கோட்பாடுகளையே அடிப்படையாகக்  கொண்டது . ஆதியில் மனிதனின் வாழ்வுக்கு பெரும் உதவியாக இருந்த இயற்கையை  தமிழர்கள் வணங்கினர். குடும்பம் , சொத்து , அரசு போன்ற கட்டமைப்புகளின் பரிணாம வளர்சிக்குப்பின்  தமிழர்களின் இறைவழிபாடு மேலும் சிறப்படைந்தது.            

                     கள்வர்களிடம்மிருந்து , பகைவர்களிடம்மிருந்தும்  மக்களை காக்கும் பொருட்டு அரசுகள் கட்டமைக்கபட்டன. மக்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் பொருட்டு தன்னுயிர்  ஈந்த ஈகியர்கள் அம்மக்களால் நன்றியோடு நினைவுகூறப்பட்டனர் . பகைவர்களுடான போர்களில் தன்னுயிர் ஈந்து தம்மினம் காத்த மன்னர்களையும் , படைத்தலைவர்களையும் மக்களால் மறக்கவியலாது போனது. தம் வாழ்நாள்  முழுவதும் தம்மினம், பண்பாடு மற்றும் வாழ்வாதாரம் போன்றவைகளை செம்மைப்படுத்தியும் அவற்றைப் பாதுகாத்தும் இயற்கை மரணம் எய்திய பேரரசர்களின்  மறைவுக்குபின் அம்மக்களால் நன்றியோடு வணங்கப்பட்டனர்,

         தங்களை விட்டு பிரிந்தாலும் அம்மாவீரர்களின் நினைவுகளை மட்டும் மறக்க விரும்பாத மக்கள் அம்மாமனிதர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் நடுகற்களை ஊன்றியும் பின்னர் அவர்களை சிலையாக வடித்தும் வணங்கி வந்தனர். இந்நன்றி நவிலும் நிகழ்வுகளே இன்று வரையிலும் குலதெய்வம் வழிபாடாகவும் சமய வழிபாடாகவும் நடைபெற்று வருகிறது.

                தம் குலத்தில் பிறந்து தம் குலத்திற்காக அரும்பெரும் பாடுபட்டு போரிலோ அல்லது இயற்கையாகவோ மரணமடைந்த தம் முன்னோர்களை வணங்கும் முறையே குலதெய்வ வழிபாடாகும். இக்குலதெய்வ வழிபாடுகளின் மூலம், தங்கள் குலத்திற்காக தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும், தம் முன்னோர்கள் தங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் கடமைகளையும் ஈகைகளையும் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தப்படுகிறது.தம்முன்னோர்கள் போலவே தாமும் தம் குலத்திற்காகவும், இனத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்பதை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் பொருட்டே ஆண்டுகள் தோறும் குலதெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

                அரசுகள் விரிவடைந்த காலகட்டங்களில், குறிப்பாக மருத நில ஊர்க்குடும்புமுறை  அரசுகள் தங்களின் ஆளுகையை அனைத்து வகை நிலப்பரப்புகளுக்கும் விரிவுபடுத்தின. மருதநில மன்னனானவன் நால்வகை நிலங்களுக்கும் தலைவனாகி வேந்தன் என ஏற்றப்பட்டான். இவ்வேந்தர் மரபினரே பின்னர் உலகெங்கும் பரவி தமிழையும் தமிழர்களின் ஒரே பண்டைய கால அரசான பாண்டியப் பேரரசையும் உலகம் முழுவதும் கட்டமைத்தனர். அவ்வாறாக மருதநில வேந்தர்கள் உலகின் அனைத்து வகை நிலப்பரப்புகளையும் காத்து நின்றபடியால் அவர்கள் அனைத்து நில மக்களுக்கும் அரசர் எனக் கொள்ளப்பட்டார்கள்.

                 அனைத்து நில மக்களையும் காக்கும் பொருட்டு நல்லாட்சி செய்து மறைந்த அம்மருதநில வேந்தர்கள் அவர்களின் மறைவுக்குப் பின்னால் அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டனர். தம் கொடையின் கீழ் வாழும் தம் குடிமக்களை பகைவர்களிடமிருந்தும், கள்வர்களிடமிருந்தும் காக்கும் பொருட்டு வீரமரணமடைந்த வேந்தர்களும் படைத்தலைவர்களும் அனைத்து மக்களாலும் தங்களின் ஆண்டவனாக வணங்கப்பட்டனர்.

பாண்டியவேந்தன் முருகன்  

                                                

                 தமிழ்க்கடவுள் என உலகமெங்கும் வணங்கப்பெறும் முருகக் கடவுள் பாண்டியவேந்தனாவான். மீனாட்சி எனும் தாடாதகைப் பிராட்டிக்கும், சுந்தரபாண்டியனுக்கும் பிறந்த உக்கிரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்டவனே முருகன் ஆவான். மலையத்துவசப்பாண்டியனுக்கும், சூரசேன சோழனின் மகளான காஞ்சனமாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப் பிராட்டி என்னும் மீனாட்சி ஆவாள். குறிஞ்சி நிலத்தலைவன் என பிற்காலத்தே தொல்காப்பியம் போன்ற இலக்கிய நூல்கள் குறிப்பிடும்  முருகன் மருதநிலக் கிழவனேயாவான். ஏனெனில் நால்வகை நிலங்களும் மருதநில வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தன. 
                     பழங்காலத்தில் தமிழகத்தின் மேல் நடந்த பகைவர்களின் பெரும் படையெடுப்பை ஆறு இடங்களில் படைவீடு அமைத்து தமிழினம் காத்த பாண்டிய வேந்தனே முருகன் ஆவான். அறுபடை வீடு எனக் கொள்ளப்படும் முருகனின் இன்றைய திருத்தலங்கள் எல்லாம் தமிழகம் காக்க முருகனால் அமைக்கப்பட்ட படைவீடுகளே ஆகும்.

                "திருமுருகாற்றுபடை" யில் நக்கீரர் முருகனை வேந்தர் மரபினன் எனவும் மள்ளர் (பள்ளர்) எனவும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
    "செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!"                         (செய்யுள் - 262)  
    "அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக !"            (செய்யுள் - 269) 

 இங்கு அரும்பெறல் மரபு என மள்ளர் மரபை நக்கீரர் குறிப்பிடுகிறார். 
                   மள்ளர் மரபினரைச் சேர சோழ பாண்டிய வேந்தர்களாக சங்க இலக்கியங்களில் முதல் பிற்கால சிற்றிள்ளக்கியங்கள் வரை புகழ்ந்து பாடபட்டிருப்பது குறிப்பிடத்க்கதாகும். இம்மள்ளர் மரபினரே பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர். இப்பள்ளரே தொல்காப்பியம் போற்றும் மருதநில ""வேந்தன் (இந்திரன்)"" வழிவந்த இந்திர குலத்தவர்(தேவேந்திர குலத்தவர்) எனவும் இன்றும் அழைக்கப்பட்டுவருகின்றனர். எனவே முருகன் மருத நிலத்து மள்ளர் குலத்தை சார்ந்தவன் எனும் போது அவன் மருத நிலக்  கிழவனாகவும், தமிழனாகவும் ஆகிறான் .
              முருகன்  தெய்வானையை திருமணம் செய்த இடமே  ""திருபரங்குன்றம்"" ஆகும். திருபரங்குன்றத்தில் ஆண்டுதோறும் முருகன்-தெய்வானை திருமணவிழா மரபுவழிச் சடங்காக இன்றும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சூரனை அழித்தபின் தேவேந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன் மணம் முடிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. திருமணம் முடிந்தபின் மாமனார் வீட்டிற்கு மணமக்கள் "" மறுவீடு"" செல்லுதல்  என்பது தமிழர் மரபாகும். அம்மரபுப்படியே சிவனும் பார்வதியும், முருகன்-தெய்வானை திருமணம் முடிந்தபின் மணமக்களை முருகனின் மாமனாரான  தேவேந்திரனின் இல்லத்திற்கு மறுவீடு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறான இத்திருமண சடங்கு  மரபில் முருகனும் தெய்வானையும் மறு வீட்டிற்கு வருவது இன்றைய தேவேந்தர்களின்(பள்ளர்களின்) அறமடத்திற்கே ஆகும். மறுவீடு வரும் தம் குல மக்களை தேவேந்ததிரனின் வழிவந்தவர்களாகிய  பள்ளர்கள் தங்களின் அறமடத்தில் வரவேற்று  மரியாதை செய்கின்றனர். தொல்காப்பியம் போற்றும் மருதநில வேந்தனே தேவேந்திரன்(இந்திரன்) என்பதும் அவனே, மருதநிலத் தமிழர்களான பள்ளர்களின் வழிவந்தோன் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.  
                   பள்ளர் குலத்து மரபினனான தேவேந்திரனின் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்ததிலிருந்து முருகன் பள்ளர் குலத்தவன்  என்பதையும் அவன் தமிழர் மரபினன் என்பதையும் எவராலும் மறுக்க இயலாது. நக்கீரர் தம் முருகாற்றுப்படையில் முருகன் மள்ளன் எனக்கூறும் இலக்கியச்சான்றோடு மேலே கூறப்பட்ட  முருகன்-தெய்வானை திருமணச் சடங்கை நடைமுறைச் சான்றாக  இணைத்துப்பார்க்கையில் முருகன் தமிழனே என்பது ஐயந்திரிபுர விளங்குகிறது.

                      கி.பி  1528-ல் ஏழுதப்பட்ட பழனிச் செப்புப்பட்டையம் முருகனுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகச் சுட்டுகிறது . தங்களின் முன்னோன்னாகிய முருகனுக்கு அக்காலத்திலயே ""தேவேந்திரர்  அறமடம் "" அமைத்து கோவிலுக்கு வரும் அனைவருக்கும் பள்ளர்கள் அன்னமிட்ட செய்தியும், இச்செலவிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவேந்திர  குலத்தார் மடத்திற்கு கொடைகள் வழங்கிய செய்தியும் சிறப்பாகக்  கூறப்பட்டுள்ளது.  தம் முன்னோனாகிய முருகனுக்கு கோவில் கட்டிய பள்ளர்கள், பழங்காலத்தில் இருந்து இன்று வரையும் பழனி முருகன் கோவிலில் முதல்மரியாதை பெற்று வருகின்றனர். இவ்வாறு முருகனுக்கும் தமிழருக்கும் உள்ள உறவை இச்செப்புப்பட்டயம்  மேலும் உறுதி செய்கிறது.
 
                திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு பதினெட்டு அறமடங்கள் பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன. திருச்செந்தூரில் உள்ள பிற அறமடங்களுக்கும்
பள்ளர்களின் அறமடங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பள்ளர்களின் அறமடங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை கொண்டதும் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையானதும் ஆகும்.
                     பாண்டியர்களாகிய பள்ளர்களின் வீழ்ச்சிக்குப்பின் தெலுங்கு வடுகர்களும் அவர்களின் அடியாட்களும்  கோவில்களை கொள்ளையிட்டதோடு அதைத்தொடர்ந்து கோவில்களைக் கைக்கொள்ளும் வகையில் அவர்களுக்கென மடங்களையும் உருவாக்கிக்கொண்டனர். இம்மடங்கள் அனைத்தும் 500 வருடங்களுக்கு உட்பட்டவையே ஆகும். இந்திய விடுதலைக்குப்பின் திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிர்வாகம் பள்ளர்களின் நிர்வாகத்திலிருந்து முற்றிலுமாக பறிக்கப்பட்டது.

             கழுகுமலை முருகன் கோவிலில் தேர்த்திருவிழா பள்ளர்களால் தேரோட்டப்பட்டு ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டியர் வீழ்ச்சிக்குப்பின் கோவில் நிர்வாகம் தெலுங்கு வடுகர்களால் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. எனினும் இன்றும் கழுகுமலை முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு மரபு சார்ந்த முதல் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

               முருகனுக்கும் தமிழுக்கும், முருகனுக்கும் பள்ளருக்கும் உள்ள உறவானது குருதி சார்ந்தது. முருகன் பள்ளர் வழிவந்த பாண்டியவேந்தன் என்பதாலேயே முருகனையும் தமிழையும் பிரிக்கவியலாது.எனவேதான் ஆரியம், திராவிடம், தலித்தியம் என எத்தனை எத்தனையோ பெருங்கேடுகள் மேலெழுகின்ற போதிலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து துள்ளியெழுகுது வேல்.!
                                              - செல்லப்பாண்டியன்
நன்றி : 
   ஐயா மூதறிஞர் தேவ.ஆசிர்வாதம் மற்றும் ஐயா குருசாமி சித்தர் படைப்புக