சனி, ஜூன் 26, 2010

நண்பனின் டைரிக்குறிப்பு

காதல் ... காதல் பற்றி எழுத நானொன்றும் கவிஞன் அல்ல.. வாரணம் ஆயிரம் , விண்ணைத்தாண்டி வருவாயா என படக்கவிதை படைக்க கௌதம் வாசுதேவ் மேனனும் அல்ல...சாந்தாமணியும் காதல் கதைகளும் என எழுத வாமுகோமுவும் அல்ல நம் நாயகன் . இது போலவே நாயகனின் கதையொன்றும் கருவாச்சி காவியமும் அல்ல.

இருப்பினும் இந்த டைரிக்குறிப்பை அவன் எனக்கு தந்த போது இதே போன்றுதானே சேரனும் , இன்னும் சில டைரக்டர்களும் அவன் கதையை போன்றே கதை படைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

இருக்கட்டும். வலைப்பதிவு என்ன ? வாராந்திர பத்திரிக்கையா ! அவனது கதையை பிரசுரிக்காமல் திருப்பி அனுப்ப .

டைப் பண்ணுவது மட்டுமே சற்று கடினமான இந்த வலையுலகத்தில் அதற்க்கான தீர்வையும் tamileditor.org அளித்துவிட்டார்கள். பிறகென்ன கவலை .. அச்சிடுவோம்.

விஜய் இது அவனது தோற்றப்பெயர். அவனது அப்பாவும் , அம்மாவும் நியூமராலஜி எல்லாம் பார்க்காமல் அவனது அப்பார் சொன்ன ஒரே காரணத்துக்காக வைத்த பெயர். பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு வரப்பட்டிக்காடுதான். ஒண்ணாவது முதல் மூன்றாவது வரை உள்ளூரில் உள்ள கவர்ன்மெண்ட் பள்ளிக்கூடத்தில் தான் படிப்பு.

அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியை ஒரு நாளில் அவனிடமும், வகுப்பு மாணவர்களிடமும் கேட்ட கேள்வி " நல்லாப் படிச்சு பின்னாடி என்ன ஆகணுமின்னு ஆசை? என எல்லாரிடமும் கேட்ட போது இவனுடைய பெரியம்மா பொண்ணான அக்கா " தறிக்கு நூல் சுத்தப்போவேனுன்னு " சொல்லியதையும் , தனது ஊர் மாட்டு ஆஸ்பத்திரி டாக்டர் பொண்ணு " இன்ஜினியர் ஆவேன்" என்றும் , இவனிடம் கேட்ட போது "தானொரு விமான ஓட்டியாக போவதாகவும் " சொல்லியதையும் ஞாபகத்தில் வைத்திருந்தவன் , பிற்காலத்தில் வாழ்க்கையில் , கால ஓட்டத்தில் வளைந்து சென்றதும் , தற்போதும் தனது கணவனின் தறிக்குடோனில் தறிக்கு நூல் நூற்றுக்கொண்டு இருக்கும் அவன‌து அக்காவும் , அமெரிக்காவில் இன்ஜினியராக இருக்கும் டாக்டர் பொண்ணும் அவ்வப்போது வியப்புடன் எண்ணிப்பார்ப்பதுண்டு.

விஜய் பிறிதொரு நல்ல நாளில் தனது ஊர்ப் பள்ளிக்கு சென்ற போது அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பழனிவாத்தியார் , பக்கத்து டவுனில் ஆசிரியராக இருக்கும் தனது அப்பாவை , பள்ளி மாணவர்கள் முன் கேவலமாக திட்டியதன் காரணமாக " இனி அந்தப் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் " என்று ஆர்ப்பாட்டம் செய்து தனது அப்பாவின் அதே பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தான்.

விஜய் டவுன்பள்ளியில் சேர்ந்த போது , அந்த பள்ளிக்கு பஸ்ஸில் வரும் , அதுவும் கோபியில் இருந்து வருகின்ற‌ கூலிங்கிளாஸ் போட்ட பஸ்ஸில் வரும் ஒரே மாணவன் என்னும் தகுதியினைப் பெற்றிருந்தான். அதுவுடன் கூடவே வாத்தியார் மகன் என்ற பெயரும் தன்னுடன் படிக்கும் மாணவர்களிடமும் ,மாணவிகளீடமும் ஒரு வித மரியாதையை தந்திருந்தன. இந்த மரியாதையுடன் கூடவே காலாண்டு மதிப்பெண் ரேங்க் கார்டில் முதல் மாணவனாக வந்ததும் விஜய்க்கு கூடுதல் மரியாதையைத் தந்தன.

இந்த மரியாதையுடன் சற்று மமதையாக இருந்தவனுக்கு விதி தனது பக்கத்து வகுப்பு மாணவர்கள் வழியில் சதி செய்தது. அவர்கள் தனது வகுப்பு குப்பையை தட்டிச் சந்தில் இவனது வகுப்பில் தள்ளி விட , இவனது வகுப்புத்தோழிகள் இவனிடம் முறையிட லீடர் என்றமுறையிலும் , வாத்தியார் மகன் என்ற முறையிலும் , மாணவிகளிடம் தனது செல்வாக்கை நிலை நாட்ட பக்கத்து வகுப்பு மாணவர்களீடம் சண்டைக்குச் சென்று ஒரு மாணவனின் தலையை உடைத்து வகுப்பாசிரியர்களீடம் மிதி வாங்கியது தனிக்கதை.

அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது ஏற்படும் ரேங்க் போட்டியில் எப்போதும் இவனே முதல் ரேங்க் , மாணவிகளில் "மதி"யே இரண்டாவது ரேங்க் என எடுத்துக்கொண்டு இருக்க பொறாமைப்பட்ட மாணவிகளில் சிலர் "மதி" வாத்தியார் மருமகள் அதுனாலதான் அவளே எப்பவும் ரெண்டாவது ரேங்க் வாங்கறாள், என்று சொல்லி வாத்தியார்களிடம் கிள்ளுவாங்கியது ஒரு மலரும் நினைவாகவே விஜய்யிடம் உண்டு, இவனுக்கும் கூட மதியிடமும் , மதியை வாத்தியார் மருமகள் என்று சொல்லிய மீனாவிடமும் ஒரு வித இனம் பிரியா நட்பு ஒன்று இருந்தது. இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கடலை மிட்டாய் , சாக்லேட் என இவனுக்கு தனியே தந்தது உண்டு.

மதி ஒரு முறை வகுப்புலீடராக இருந்த போது இவன் அருகில் நின்று தோளைத் தட்டிக்கொண்டிருந்தை அருகில் இருந்த நண்பன் கவனித்து "உனக்கு யோகமடா ! மீனா சொல்றது கூட உண்மைதான்டா "என புலம்பியதுண்டு.

மதி பொங்கல் விடுப்பில் தன் தலையை மொட்டை அடித்து வந்த போது இவன் அவளிடம் ஏன் சொல்லவில்லை என வருத்தப்பட , லீவ்வா போச்சு அவளும் என வருத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

ஆண்டுக்கடைசியில் தமிழ்ப்பாடத்தில் கடைசியாக உள்ள நாடகப்பாடத்தில் மாணவர்களும் , மாணவிகளும் தனித்தனியே நடத்திக்காட்டவேண்டும் என்று வகுப்பாசிரியர் சொல்லியதால் மாணவிகளும் , மாணவர்களும் மேக்கப்போட்டு அசத்திக்கொண்டு இருந்தார்கள். இதில் விஜய்க்கு புலவன் வேட‌ம் , பக்கம் பக்கமாக வசனம் இவனுக்கு மட்டும் , இவன் அந்தக்கவலையில் உருத்தட்டிக்கொண்டிருக்க, கூட வேடம் போடும் மாணவர்கள் இவனுக்கு என வேட்டி எடுத்து வந்திருந்தார்கள்.

மாணவிகள் மேக்கப் போடும் பக்கம் சென்ற மாணவர்கள் இவனிடம் வந்து டேய் மீனாதான்டா அங்கே புலவர் வேஷம் போடறா , அவ உதட்டுல செவச்செவன்னு என்னமோ மேக்கப் போடறா , கேட்டா சொல்ல மாட்டேங்கிறா , நீ போயிப்பாரு என்றார்கள். சரி என்று இவனும் சென்ற போது மீனாதான் என்ன ? என்று கேட்டாள்,

இவன் அவளிடம் அது என்ன உதட்டில் ?என்றான் . அதுவா அது எதுக்கு உனக்கு என்றாள். இல்லை நானும் புலவன் வேசம்தான் போடுகிறேன் , அதனாலதான் கேட்டேன் என்றான் . அதுக்கு மீனா " அப்படியா , கண்டிப்பா வேணுமா என்றாள் , இவனும் ஆம் என்றான்.

சரி கொண்டுவந்தது தீந்து போச்சு , வேணுமின்னா நீயே எடுத்துக்க என்று உதட்டைக் காட்டினாள்.
"இவனும் அப்படியா உதட்டில் இருந்து எப்படி எடுக்க" என்றான். "உன் உதட்டை அப்படியே ஒட்டவை" என்றாள். விளையாடதே வைத்து விடுவேன் என்றான் . அவளும் சற்றும் பயப்படவில்லை. சற்று நெருங்கி அவளின் உதட்டருகில் சென்றான் . அந்த நேரம் பார்த்து கிட்ட இருந்த விஜயின் நண்பன் இவனை தள்ளிவிட விஜய் மீனாவின் மேல் விழுந்ததுமில்லாமல் உதட்டில் இருந்த சாயத்தையும் தன் உதட்டில் ஒட்டிக்கொண்டான்.

மீனாவும் ஒன்றும் சொல்லவில்லை. இவனும் ஒன்றும் சொல்லவில்லை. மதிதான் காச்மூச்சென்று அறிவே இல்லையா என்று திட்டினாள். நாடகத்தில் இவனும் லிப்ஸ்டிக் போட்ட புலவனாகவே நடித்தான். வாத்தியார்கள் கூட இவனிடமும் , மீனாவிடமும் அது எப்படி புலவர்கள் லிப்ஸ்டிக் போட்டுகிட்டு ஒரே மாதிரி நடிக்கறீங்க ! என்று கேட்டார்கள். மாணவர்களும் நமுட்டுச் சிரிப்புடன் இருக்க , இவனின் அடுத்த அத்தியாயம் ஆறாம் வகுப்புச் செல்வதில் ஆரம்பமாகிறது.

...

புதன், ஜூன் 23, 2010

சன்னா ? விஜய்யா ?

ஒரு விசயத்தை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது சிலரால்மறுக்கப்படும் போதும் அதன் தொடர்ச்சியாக சில நிகழ்வுகளையும் தரும் போதுஅட இப்படிக்கூட இருக்குமா என நம்மால் நம்பாமலும் இருக்கமுடியாது.தொலைகாட்சிப் போட்டி என்பது தொன்று தொட்டு இருந்து வருவது.

தமிழர்களால் முதன்முதலாக தமிழ் தொலைகாட்சி என்பது டிடி சென்னையின்வரவினால் மட்டுமே அறியப்பட்டது . தென்கடலோர மாவட்ட நேயர்களூக்குஇலங்கை ரூபவாஹினி கூடுதல் அறிமுகம்.

ஆனால் கோவை , ஈரோடு , திண்டுக்கல் , தேனி ,மதுரை மாவட்ட மக்களுக்குகொடைக்கானல் ரிலே ஸ்டேசனின் வரவால் மட்டுமே தமிழைக் கண்ணாலும் , காதாலும் கேட்க முடிந்தது. முதல் படமாக திருவிளையாடல் ஒளீபரப்பப்பட்டதுஎன்பது நான் கேள்விப்பட்ட விடயம். ஆனால் முழு நேரமும் ஹிந்தி ஆதிக்கமேஇருந்ததால் தமிழ் மக்கள் ஒரு வித வெறுப்புடனே இருந்து வந்தார்கள். அதேநேரம் வானொலியிலும் புதுப்பாடலை நாம் அவ்வளவு சீக்கிரம் கேட்க முடியாது. அதுக்கும் நமக்கு இலங்கை வானொலியின் துணை வேண்டும் . ஆனால்அப்போதே கொடைக்கானலில் எப்.எம் ஸ்டேசன் இருந்தது . ஒலிபரப்பு இல்லை . அவ்வப்போது டெஸ்ட் ஒலிபரப்பு மட்டுமே உண்டு .

இந்த வேளையில் 1992 ஏப்ரல் 14 அன்று "சி" பேண்டு வழியாக
சன் டிவி தமிழ் மாலை ஆரம்பிக்கப்பட்ட போது மாலை நேரம் மட்டுமே ஒளிபரப்பு இருந்தது. அதுவும் தமிழ் மட்டுமே பிரதானம் என்பதாலும் , சனி, ஞாயிறுகளில்திரைப்படங்கள், பிறகு 94 வாக்கில் மதியம் முதல் மாலை வரை படப்பாடல்களும்ஒளிபரப்பப்பட்டதால் மக்கள் மத்தியில் புகழ் பெற்றது.

அந்த நேரத்தில் ஜெயின் டிவி தமிழ் ஒளீபரப்பை சனி ஞாயிறுகளில் வழங்கிவந்தது.ஆனாலும் ஜெயிக்க முடியவில்லை. அதே போல்தான் ஏசியா நெட்டும்.

இந்த நேரத்தில் ஸ்டார்டிவி , பிபிசி போன்றவை விளம்பரங்களில் சிலவற்றைசில நேரங்களில் மட்டும் தமிழில் வழங்கியது . அது அப்படியே தொடர்ந்துஇருந்தால் இந் நேரம் நம்பர் 1 சேனலாக வந்திருக்கலாம். ஆனால் அவர்கள்ஹிந்தியை பிரதானமாக எடுத்து கொண்டார்கள் .

டெக்னிலாக சற்று யோசித்தால் அப்போது " சி " பேண்ட் டிஸ்ஸின் விலை ரூ 15000/= அதற்கு மேலும் . அதுவுமில்லாமல் சன் , ஸ்டார் , ஜெயின் டிவிக்கள் ஒவ்வொன்றும் ஒரு சேட்டிலைட் வழியே . எனவே கிராமங்கள் , நகரங்களில் ஒரே டைரக்சன் மட்டும் வைத்து சன் டிவியை மட்டும் வழங்கபுதிதாக கேபிள் தொழில் நுட்பம் வளர்ந்தது . இதனால்தான் சன் டிவி விசுவரூபம்எடுக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில் "கோல்டன் ஈகிள் டிவி" என வந்து அதன் பிறகு கைமாறி , பேர் விஜய் க்கு மாறி, இந்நேரத்தில் லேட்டாக சுதாரித்த ஸ்டார் குழுமம் " வடை போச்சே " அப்படின்னு நெனைச்சு விஜய் டிவியை வாங்கி புதிதாக ஒப்பேற்ற ஆரம்பித்தார்கள். அப்புறம் எப்படி முன்னேறமுடியும் . அதுவுமில்லாமல் சேட்டிலைட் டைரக்சன் வேற .

ஒன்று மட்டும் உண்மை சன் டிவி மட்டும் வரவில்லை என்றால் , தமிழ் மொழிக்கென முழு நேர ஒளிபரப்பு கொண்ட டிவி இந்தியாவில் இது வரை இருந்திருக்காது .

இப்படிதான் சன் டிவி இதுவரை தன் முதல் இடத்தை தனக்கே உரித்தான்பாணியில் பேணிவருகிறது. பிஸினஸ் என்றால் பல இடையூறுகள் ,தொழில்போட்டிகள் வரத்தான் செய்யும் , அதை நாம் ஆரோக்கியமானதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதை விடுத்து "வாசக்கடைக்காரன் சரியா டீ போடலை, வண்ணான் சரியா அயர்ன் பண்ணலைங்கற" கோபத்தை எல்லாம் நாம அவங்கமேல காட்டக்கூடாது.

விஜய் டிவி இப்பவும் மேலே எளிதாக வர " ஒரே ஐடியா, ஓஹோன்னு வெற்றி " தூர்தர்சன் டிடி டைரக்ட் பிளஸ்ஸில் தனது சேனலை
ஒளிபரப்புவதுதான்" ஒளிபரப்புவார்களா ? மாட்டார்கள் !
(ஏனென்றால் கேபிள் சேனல்காரர்கள் பணம் தரமாட்டார்கள் என்பதால்.)

அண்மையில் கேபிள்சங்கரின் பதிவொன்றை நான் படிக்க நேர்ந்தது. அதற்கு ஒரு பதில் இடுகையை லக்கிலுக் தனது பதிவில் வெளியிட்டதாக "http://saveondish.com/forum/ "என்னும் வெப்சைட்டில் நான் படித்த அவரது பதிவு,
நன்றி : http://saveondish.com/forum/another-sun-direct-gimmick-vijay-tv-removed-tamil-t-25379-2.html

Source : http://www.luckylookonline.com/2010/06/b...st_17.html

டீலா? நோ டீலா?
June 17, 2010

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் டிவி நிகழ்ச்சிகள் எதையும் குறிப்பாக பார்ப்பதில்லை. வீட்டுக்கு செல்வது என்பதே இரவு பத்து மணிக்கு மேல்தான் என்பது என்னுடைய சிறுவயது வாடிக்கை. இன்னமும் தொடர்கிறது. விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் டிவிடியில் ஏதாவது மொக்கைப் படங்கள் பார்ப்பதுண்டு. மற்றபடி இஸ்திரி செய்யும்போதோ, முகச்சவரம் செய்யும்போதோ சன் மியூசிக்கையோ, ஆதித்யாவையோ ஓட்டிக் கொண்டிருப்பேன். ஆனாலும் எனக்கு தொழில்நிமித்தமாகவும் தேவைப்படுவதால் தொடர்ச்சியாக டி.வி.க்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுண்டு.

இன்னொன்றையும் முன்னெச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். எனக்கு சன் குழுமத்தின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. சன்னுக்கு சரியான போட்டி ஒன்று அமையாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். கலைஞர் டிவி சன்னுக்கு சரியான போட்டியாக உருவெடுத்த காலத்தில் மகிழ்ச்சியும் அடைந்தவன்.

இன்று காலை நண்பர் கேபிள்சங்கர் எழுதிய பதிவொன்றினை வாசிக்க நேர்ந்தது. இவ்வளவு தகவல் பிழைகளோடு, சொந்த அபிப்ராயத்தை உண்மைபோலவே ஒருவரால் எழுதமுடியுமா என்று பெருத்த ஆச்சரியம் ஏற்பட்டது. இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் டிவி ரேட்டிங் எந்த நிலையில் இருக்கிறது என்றாவது அவர் ஒரு எட்டுப் பார்த்துவிட்டிருக்கலாம். அல்லது விளம்பரத்துறையில் பணியாற்றும் தண்டோரா போன்ற நண்பர்களிடமாவது என்ன ஏதுவென்று விசாரித்து தகவல்களை சரிபார்த்திருக்கலாம். கேபிள்சங்கர் எழுதிய பதிவுதான் காமெடியென்றால், அங்கு போடப்படும் பின்னூட்டங்கள் அதைவிட காமெடியாக இருக்கிறது. இப்படித்தான் தமிழ்ப்பதிவுலகம் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது.

சரி, கேபிள் சங்கர் பதிவின் அபத்தங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டுப் பார்ப்போம்.

//ஆனால் அதே வேளையில் இவர்களது பேக் டோர் விஷயத்தை பற்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். வழக்கப்படி திடீரென விஜய் டிவி சேனல் செட்டாப்பாக்ஸில் தமிழ் தொகுப்பிலிருந்து காணாமல் போய், ஜீ தமிழுக்கு செய்தது போல தனியாக சம்மந்தமில்லாத ஒரு பொக்கேவுக்கு முன்னால் போடப்பட்டது. மக்களின் பல்ஸ் எனக்கு தெரியும் என்றேனே.. அது இப்படித்தான் ஒரே நாளில் ஏகப்பட்ட போன்கள் மக்கள் ஏன் விஜய் டிவி வரவில்லை என்று.. உடனடியாய் நாங்கள் தேடிப்பார்க்க, தள்ளிபோடப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாய எந்த சேனலி வருகிறது என்று போன் செய்யும் மக்களுக்கு தெரிய படுத்தினோம். இம்மாதிரியான முயற்சியெல்லாம் கல்யாணத்தின் போது சீப்பை ஒளித்து வைப்பதற்கு சமம் என்றாலும் இதையும் விடாது செய்யத்தான் செய்கிறார்கள்.
// - என்கிறார் கேபிள் சங்கர்.

மக்களின் பல்ஸ் தெரிந்தளவுக்கு (?) நமது நண்பருக்கு தொழில்நடப்பு தெரியவில்லை என்று தோன்றுகிறது. இவர் குறிப்பிடும் இச்சம்பவம் நடைபெறுவதற்கு சிலநாட்கள் முன்பு வேறொரு சம்பவமும் நடைபெற்றது. ஸ்டார் குழுமம், ஜாக் குழுமத்திடம் பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்திருந்தது. அதாவது கேபிள் ஒளிபரப்புக்கு தேவையான ’ஸ்டார் பாக்ஸ்’ என்று பெயரிடப்பட்ட ஒரு இண்ஸ்ட்ரூமெண்டை மிகக்குறைந்த விலைக்கு (அல்லது இலவசமாக) ஜாக் குழுமத்துக்கு வழங்கப்படும். இந்த இண்ஸ்ட்ரூமெண்டில் சன் டிவிக்கு அடுத்ததாக இரண்டாவது சானலாக விஜய் டிவி ப்ரீசெட் செய்யப்பட்டிருக்கும்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதியையும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதியையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஜாக் மூலமாக இப்படியொரு ‘பொசிஸனிங் விளையாட்டு’ விளையாட விஜய் டிவி முடிவெடுத்திருந்தது எஸ்.சி.வி. நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. மும்பையில் எல்லாம் ஸ்டார் குழுமம் சேனல் வரிசையில் முன்னுரிமை பெற கோடி, கோடியாக செலவழித்து வருகிறது. மாறாக தமிழகத்தில்தான் குறைந்த செலவில் ப்ரைம்சேனல்களில் இடம்பெற்றிருக்கிறது. ஜாக்கோடு, ஸ்டார் விளையாடும் விளையாட்டை எஸ்.சி.வி. ரசிக்கவில்லை. என்னுடைய சேனல்களை உன்னுடைய இன்ஸ்ட்ரூமெண்டில் பின்னுக்கு தள்ளினால், நான் மட்டும் ஏன் என் இடத்தில் உனக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றுதான் பின்னுக்கு தள்ளியது. லட்சக்கணக்கானோர் கேபிள்சங்கருக்கு போன் செய்து ஏன் விஜய் டிவி வரவில்லை என்று கேட்டதற்கான பின்னணி இதுதான். இது முழுக்க முழுக்க தொழில் போட்டி அடிப்படையில் அமைந்ததே அன்றி, ரேட்டிங் பாயிண்ட் குறைந்தது மாதிரியான அச்சத்தினால் அல்ல.

ஓக்கே, அடுத்ததாக ரேட்டிங் பாயிண்டுக்கு வருவோம்.

கேபிள்சங்கருக்கு தமிழ்சேனல்களில் எது எது எந்த எந்த ரேட்டிங்கில் இருக்கிறதென்றே தெரியாது என்று தோன்றுகிறது. சன் டிவியின் சராசரி ரேட்டிங் பாயிண்ட் 1500. கலைஞர் டிவி அடுத்ததாக வரும், இதனுடைய ரேட்டிங் பாயிண்ட் சராசரியாக 200. விஜய் பொதுவாக 3 வது இடத்தில் இருக்கும். கலைஞரை விட பத்து, இருபது பாயிண்டுகள் குறைவாக வரும். கலைஞர் தொடங்கப் பட்டதிலிருந்தே 2வது இடத்தில்தான் இருக்கிறது. ஓரிரு வாரங்கள் விஜய் கலைஞரை நான்கைந்து பாயிண்டுகள் வித்தியாசத்தில் முந்தியதுண்டு. கலைஞர் - விஜய் போட்டியை விடுங்கள். இரண்டாவது இடத்துக்கும், முதலிடத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்று பாருங்கள். கிட்டத்தட்ட 8 மடங்கு வித்தியாசத்தில்தான் சன் முதலிடம் வகிக்கிறது. சன்னுக்கு போட்டி என்று சொல்லிக் கொள்ளக்கூடிய யோக்கியதை வேறு எந்த சேனலுக்குமே இல்லை. இத்தனைக்கும் கலைஞர் டிவி சமீபகாலங்களில் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களின் உரிமையை வாங்கி வைத்திருக்கிறது.

ரேட்டிங் பாயிண்டை பொறுத்தவரைக்கும் இந்தியாவிலேயே இரட்டை இலக்க பாயிண்டை பெறும் நிகழ்ச்சிகள் சன் டிவியில் மட்டும்தான் உண்டு. சன் தொலைக்காட்சியின் பிரைம் டைம் மெகா அழுவாச்சி சீரியல்கள் எல்லாம் மிகச்சுலபமாக 20 பாயிண்டுகளை பெறுகிறது. இந்தியாவெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட ஐ.பி.எல். ஒளிபரப்பின் ரேட்டிங் பாயிண்டே மூன்றிலிருந்து அதிகபட்சமாக ஆறு தான். 4 பாயிண்டு ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்டாலே வட இந்திய சானல்கள் ஆனந்தத் தாண்டவம் ஆடுவார்கள். இந்த அளவுகோலை வைத்து சன்னின் விஸ்வரூபம் என்னவென்று நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

சரி. இப்போது கேபிள் சங்கர் மிகப்பிரம்மாண்டமாக கட்டமைக்க நினைக்கும் ஜூனியர் சிங்கர் மக்கள் பல்ஸுக்கு வருவோம். அனேகமாக எனக்குத் தெரிந்து கேபிள் சங்கர் வசிக்கும் இல்லத்துக்கு எதிர்வீடு, பக்கத்து வீடு, பக்கத்துக்கு பக்கத்து வீடு ஆகிய மூன்று வீடுகளை வைத்து அவர் ஒரு ரேட்டிங் பாயிண்ட் தயாரித்து இருப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட ரேட்டிங் பாயிண்ட் வேறு கதை சொல்கிறது.

கடந்த 10ஆம் தேதி ஜூனியர் சிங்கர் பெற்ற ரேட்டிங் பாயிண்ட் 4.14. இதுதான் அந்நிகழ்ச்சி பெற்ற அதிகபட்ச் ரேட்டிங் பாயிண்ட். இரண்டு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட டீலா நோ டீலாவின் ரேட்டிங் பாயிண்ட் 8.66. இந்நிகழ்ச்சி சராசரியாக பார்த்தோமானால் 9 பாயிண்டுகளை தொடர்ச்சியாக பெறுகிறது. சன்னின் ஸ்டேண்டர்டுக்கு இது குறைவுதான் என்றாலும், செல்ஃப் எடுக்கவில்லை என்று கேபிள் சங்கரால் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி, அவர் சூப்பர்ஹிட் என்று சொல்லும் நிகழ்ச்சியைவிட இருமடங்கு அதிக பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது என்பதுதான் புள்ளிவிவரம், மக்கள் பல்ஸ், இத்யாதியெல்லாம்.

அடுத்ததாக ஏதோ மார்க்கெட்டிங், விளம்பரமென்றெல்லாம் ஏதேதோ எழுதியிருக்கிறார். இதையெல்லாம் சன் ஆபிஸில் யாராவது படித்தால் வாயால் கூட சிரிக்க மாட்டார்கள். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிகபட்ச விளம்பர வருவாய் கிடைப்பது செல்ஃப் எடுக்காத டீலா நோ டீலா நிகழ்ச்சிக்குதான். 10 வினாடிகள் 45,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரும் ஆரவாரத்தை, ஆர்வத்தை எழுப்பியிருப்பதாக கேபிள்சங்கரால் நம்பப்படும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி 10 செகண்டுகளை அதிகபட்சமாக 10,000 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது, சில கிளையண்ட்களுக்கு 2,500 ரூபாய்க்கு கூட விஜய் மார்க்கெட்டிங் டீம் விற்றதாக தகவலுண்டு.

பரபரப்பாக எதையாவது எழுதுகிறோம் என்பதைவிட பக்காவாக எழுதுகிறோமா என்பதுதான் பதிவர்களுக்கு முக்கியம்!



-------------------------------------------------------------------------------------------------
-

புதன், ஜூன் 16, 2010

கரூர் வைஸ்யா பேங்க் ஏடிஎம்


அண்மையில் கரூர் வைஸ்யா பேங்க் ஏடிஎம் மில் நண்பரொருவர் ரூ 30000/=‍ எடுக்கச் சென்று எடுத்தும் விட்டார். நோட்டை எண்ணியவர் உடனடியாக தன் தங்கையின் காலேஜ் பீஸ் கட்டச் சென்று , கவுண்டரில் கொடுத்தார். அவர்கள் அதை எண்ணியபின் அதிலிருந்து ஆறு ரூ 500 நோட்டுகளை திருப்பிக் கொடுத்தனர். வாங்கிப் பார்க்கும்போது அந்த ஆறு நோட்டும் ஒரே மாதிரி கிழிந்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

உடனடியாக பல்லடம் பேங்கிற்கு சென்று மேனேஜரிடம் கிழிந்த நோட்டுப்பற்றிக் கூறிய போது "இந்த மாதிரி கிழிந்த நோட்டெல்லாம் எங்க ஏடிஎம் மில் வராது " என்று பதிலளித்துள்ளார். அதுவுமில்லாமல் நோட்டை மாற்றித்தர மறுத்தும் விட்டார்.

அப்ப "ஏடிஎம்" இல் பணம் எடுத்த என் நண்பர் இ.வாவா?
அல்லது எங்க "ஏடிஎம்மில் இந்த மாதிரி கிழிந்த நோட்டெல்லாம் வராது" அப்படின்னு சொன்னாரே மானேஜர் , அப்படினா அந்த ஏடிஎம் என்ன பணம் பிரெஸ்ஸா அச்சடிக்கிற மெசினா ?

இல்லை இதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா ? உடனே ஸ்டேட் பாங்க் போங்கன்னு சொல்லாதீங்க. உருப்படியான வழி ஒண்ணு சொல்லுங்க.

இது மோசடியா ? இல்லையா ?

வெள்ளி, ஜூன் 04, 2010

நோக்கியாவில் தமிழ்,

செம்மொழி மாநாடு நடக்கும் வேளையில் எழுத்துச் சீர்திருத்தம் அது இது என பலரும் பல தரப்பட்ட நிலைகளில் கவலைப்பட்டுக்கொண்டிருக்க எனக்கும், என்னைப் போல பலருக்கும் ஒரு கவலை. என்ன கவலை ?

நோக்கியா என்னும் மொபைலில் ஒரு குறிப்பிட்ட விலை போன்களில் தமிழ் பார்க்கமுடிவதில்லை. இதில் என்ன வருத்தம் எனில் ரூ 1000‍ ,3000 வரை தமிழ் அழகாக வரும். அவர்கள் நமக்கு தமிழில் அனுப்பினால் நாம் படிக்க முடியாது.
இதுவரை இல்லாத ஒரு வசதி பின்வரும் ஒரு இலவச அப்ளிகேசனில் உள்ளது. இதில் டிக்சனரி வசதியும் உள்ளது.

அனைவரும் டவுன்லோட் செய்து பயன் பெறவும்.

கூடவே இன்னொரு செய்தி :அனைத்து மொபைல்களிலும் வேலை செய்யும் போல் தெரிகிறது.


இலங்கை வானொலியிலும் தமிழ்

இலங்கை வானொலி நேற்றிலிருந்து மீண்டும் தமிழ் ஒலிபரப்பை காலை 7.00 மணி முதல் 11 மணி வரை மத்திய அலை 873 ல் ஒலிபரப்ப ஆரம்பித்துள்ளது. ஆனால் என்ன குறை தமிழகம் முழுவதும் எடுக்கும் இந்த வானொலி மத்திய அலைவரிசையில் வருவதால் பல மின் சாதனங்களின் இரைச்சல் இடர்ப்பாடுகளுடந்தான் கேட்கும் என்பதால் 85‍ , 90 களில் புகழ் பெற்றதைப்போல் இப்போது பெற இயலாது.

..