வெள்ளி, ஜூன் 04, 2010

நோக்கியாவில் தமிழ்,

செம்மொழி மாநாடு நடக்கும் வேளையில் எழுத்துச் சீர்திருத்தம் அது இது என பலரும் பல தரப்பட்ட நிலைகளில் கவலைப்பட்டுக்கொண்டிருக்க எனக்கும், என்னைப் போல பலருக்கும் ஒரு கவலை. என்ன கவலை ?

நோக்கியா என்னும் மொபைலில் ஒரு குறிப்பிட்ட விலை போன்களில் தமிழ் பார்க்கமுடிவதில்லை. இதில் என்ன வருத்தம் எனில் ரூ 1000‍ ,3000 வரை தமிழ் அழகாக வரும். அவர்கள் நமக்கு தமிழில் அனுப்பினால் நாம் படிக்க முடியாது.
இதுவரை இல்லாத ஒரு வசதி பின்வரும் ஒரு இலவச அப்ளிகேசனில் உள்ளது. இதில் டிக்சனரி வசதியும் உள்ளது.

அனைவரும் டவுன்லோட் செய்து பயன் பெறவும்.

கூடவே இன்னொரு செய்தி :அனைத்து மொபைல்களிலும் வேலை செய்யும் போல் தெரிகிறது.


இலங்கை வானொலியிலும் தமிழ்

இலங்கை வானொலி நேற்றிலிருந்து மீண்டும் தமிழ் ஒலிபரப்பை காலை 7.00 மணி முதல் 11 மணி வரை மத்திய அலை 873 ல் ஒலிபரப்ப ஆரம்பித்துள்ளது. ஆனால் என்ன குறை தமிழகம் முழுவதும் எடுக்கும் இந்த வானொலி மத்திய அலைவரிசையில் வருவதால் பல மின் சாதனங்களின் இரைச்சல் இடர்ப்பாடுகளுடந்தான் கேட்கும் என்பதால் 85‍ , 90 களில் புகழ் பெற்றதைப்போல் இப்போது பெற இயலாது.

..

3 கருத்துகள்:

  1. நோக்கியா 2700classic தமிழ் லாங்வேஜ் போன் அருமையாக உள்ளது. விலை 3700. தமிழ்
    இணையங்களை வாசிக்க அருமையாக உள்ளது. முன்பு 3110 classic வைத்திருந்தேன். அதை விட அற்புதமாக உள்ளது. மேலும் தமிழ் லாங்வேஜ் இல்லாத போனில், தமிழ் லாங்வேஜ் சாப்ட்வேரை டவுண்லோட் பண்ணி கொள்ளலாமாம். உண்மையா.

    பதிலளிநீக்கு
  2. அதற்கான சாப்ட்வேர் அல்ல இது , இது எஸ்.எம்.எஸ் டைப் பண்ணவும் படிக்கவும் மட்டுமே உதவுகிறது. இணையத்தில் தமிழ் படிக்க சற்று சிரமமாகத்தான் உள்ளது. யாரேனும் சாப்ட்வேர் ஆட்கள்தான் இது பற்றி கூற வேண்டும்

    பதிலளிநீக்கு