வெள்ளி, மே 28, 2010

கவர்ன்மெண்ட் பஸ் ஓனர்கள்நாம எழுதோணுமின்னு நெனைச்ச ஒரு மேட்டரு நம்ம நண்பரு ஒருத்தரு பழனி -மணப்பாறை அப்படின்னு எழுதியிருக்கிறாரு. எல்லா ஊரிலயும் இதே பிரச்சினைதான் இருக்குமாட்டத்தோணுது. (http://sirippupolice.blogspot.com/2010/05/blog-post_27.html)

நம்ம ஊரிலயும் அப்படித்தான் கோயமுத்தூரு ‍ஈரோடு போற கவர்ன்மெண்ட் பஸ்ஸில செங்கப்பள்ளி, விஜயமங்கலம் , பல்லகவுண்டன்பாளையம் அப்படின்னு கேட்டா கண்டக்டர் நம்மளப்பாத்து "என்னமோ அவரு சொத்த எழுதிக்கேட்ட மாதிரி அப்படியே ஒரு பார்வையை நம்ம மேல விசிறிப்போட்டு , இது பைபாஸ் ரைடர் போகாது அப்படின்னு படக்குன்னு சொல்லமாட்டாரு , ரெண்டு, மூணு டைம் நாம கேட்டதுக்கு அப்புறம்தான் சொல்வாங்க"

அதுல பாருங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி பெரிய பிரச்சினை எல்லாம் பண்ணி பஸ்ஸ நிறுத்தி , மறிச்சு போலிஸ் ஸ்டேசனுக்கு எல்லாம் போயி பஞ்சாயத்து ஆகி அப்புறம் எல்லா கவர்ன்மெண்ட் பஸ்ஸிலயும் செங்கப்பள்ளி, விஜயமங்கலம் , பல்லகவுண்டன்பாளையம் அப்படின்னு ஊர்ப்பேர கண்ணாடியில் ஒட்டச் சொல்லி ஒட்டி உட்டாங்க.இப்ப பாத்தா ஒரு ஸ்டிக்கரயும் காணோம் ,

இதுல வேற நாலு ரோடு(பைபாஸ்) ஊருக்கு வெளியில போட்டுட்டாங்களா , நைட்டு 6 மணீக்கு ஆரம்பிச்சா காலைல 6 மணீ வரைக்கும், ஒரு பஸ்காரன் கூட ஊருக்குள்ள வாரது இல்ல.எல்லாரும் அவனவன் அப்பிச்சி ஊட்டு பஸ் மாதிரி ஒரே புடுங்காப்புடுங்கிட்டு பைப்பாஸ்ல போயிரது.

நம்ம எங்காவது போலாமுன்னுட்டு பஸ் ஸ்டாப்புக்கு போயி , கெத்து கெத்துனு நின்னுட்டு இருந்தா ஒரு பஸ் கூட வராது. இதுல வேற அவினாசியிலயோ, பெருமானல்லூரிலயோ நின்னு விஜயமங்கலம் அப்படின்னு ஈரோடு போற பஸ்ஸில கேட்டமுன்னா , இந்த கறிக்கடையில நாய் கறித்துண்டுக்கு கெஸ் வாங்கீட்டு நிக்கும் பாருங்க, அப்படித்தான் நிக்கோணும். இந்த கவர்ன்மெண்ட் பஸ் ஓனருங்க யாராவது நாலு வண்டிக்கு ஒரு மவராசன் மனசு மாறி ஏறு அப்படின்னாத்தான் உண்டு. இல்லைன்னா பத்து வண்டிக்கப்புறம் ஏதாவது ஒரு வண்டியில ஊர்ப்பேரைச் சொல்லாம பத்தோட பதின்னொன்னா ஏறி டிக்கட் வாங்கும் போது பஸ் ஓனருங்ககிட்ட நல்ல வார்த்தை நாலு வாங்கிக்க வேண்டியதுதான்.

என்ன செய்ய ? அவங்க காட்டுல மழை.

இதுக்கெல்லாம் விடிவு காலம் உண்டா ? அல்லது மக்கள் உரிமைகள் கழகத்தில் மனுப்போடலாமா ? ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்களேன்.

இந்தப் பதிவை மற்றவருக்கும் சொல்லுங்கள், யாராவது ஒருவரேனும் வழி சொல்வார்கள். இல்லையென்றால் முந்தைய எமது பதிவொன்றின் முடிவைப் போன்று நான் முதல்வராக வேண்டும்.

..........

1 கருத்து: