வெள்ளி, மே 14, 2010

அரசுப் பஸ்களும் , அலற வைக்கும் ஆடியோக்களும்


நீங்கள் தினமும் அலுவலகம் செல்ல அரசுப்பஸ்களைப் பயன்படுத்துபவர்களாயின் இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

புதிதாக விடப்பட்ட ஏர்பஸ் ரூ 30 இலட்சம், ரூட் பஸ் 16 இலட்சம் இது தோராயமான மதிப்பீடு மட்டுமே . கமிசன் கவலையில்லை.

இவ்வளவு செலவு செய்து விடப்பட்ட புதிய பஸ்ஸைக்கண்டால் எவர் ஒருவருக்கும் ஏறத்தோணும். அப்படித்தான் நானும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஒரு சிகப்புக்கலரு பஸ்ஸில் ஏறீ அமர்ந்தேன். பஸ் நகர்ந்ததும் டீவி ஆன் செய்யப்பட்டது . ஆடியோ ஒலி ஸ்பீக்கர் வழியாக கர்ண கடூரமாக ஒலிக்க ஆரம்பித்தது. அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஒண்ணும் விளங்கவில்லை. இது எனக்கு மட்டுமல்ல , பயணிகள் அனைவருக்கும் .

கண்டக்டரிடம் கேட்டால் நான் என்ன செய்வது வரதே அவ்வளவுதான் என சலித்துக் கொண்டார். டிவி கண்டிப்பாக ஓடியே ஆகவேண்டும் என்பது ரூல்ஸ் என்றார்.

இதுதான் கொடுமை என்றால் இதை விடக்கொடுமை ஒன்று உள்ளது.

பொள்ளாச்சி- திருப்பூர் பஸ் ரூட்டில் பயண நேரம் 60 கிமீட்டருக்கு 2.10 மணி நேரம். இதில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். பாட்டெல்லாம் கண்டக்டர் டிக்கெட் கொடுத்து முடிக்கிற வரைக்கும் போட மாட்டாங்க. அதுக்குள்ள‌
நம்ம மக்கள் வெச்சிருக்கற சைனா செட் மொபைல்ல இருந்து பாட்டப்போட்டு கேக்க ஆரம்பிச்சிருவாங்க.

அங்கங்கே பல மொபைல்ல ஒலிக்க ஆரம்பிக்கறதால நம்ம காது பழுத்துப்போயிரும். கொடுமை !

இதே இப்படின்னா இன்னும் மதுரை, தேனி ருட் ? ஐயோ !

அதே மாதிரி இப்ப புதுசா பூம் டீவி அப்படின்னு ஒரு சைடு மட்டும் ஒரு எல்.சி.டி டிவியை வைத்து படம் போட ஆரம்பிச்சிருக்காங்க, கூட்டம் நெறைய இருந்தா டீவி இருக்கற சைடுக்கு எதிர்ப்புறம் இருக்கற மக்கள் பாவப்பட்டவங்க . அவங்களுக்கு வெறும் ஆடியோ மட்டும் கேக்கும்.

இதுக்கெல்லாம் ஒரே தீர்வு ,

பல இலட்சம் செலவு செய்து புதிய பஸ் விடும் போது மீறி மீறிப்போனால் ஒரு 20 ஆயிரம் செலவு செய்தால் நல்ல ஆடியோ சிஸ்டம் பிரைவேட் வண்டிக்கு நிகரா மாட்ட முடியும். டிவிடி பிளேயர் கூட தேவையில்லை. வெறும் எப். எம் கொடைக்கானல் வைத்தால் கூட நல்ல படியா பாடும்.

இதெல்லாம் நடக்க இன்னுமொரு எளிய வழி, நினைக்க மட்டுமே முடியும்

நான் போக்குவரத்து அமைச்சராக வேண்டும்.

கனவு காணுங்கள் , நடக்கும் என யாரோ சொன்னார்கள், கனவு காணுகிறேன் நடக்குமா என எதிர்பார்ப்போம்.

..

3 கருத்துகள்:

  1. கோயமுத்தூர்லருந்து திருப்பூர் வர்றக்கு இந்த மாதிரி டிவி, மற்ற அலறல்கள் இல்லாத பேருந்தா எதாவது இருக்கானு பாத்தேன். ம்ஹீம்....

    பதிலளிநீக்கு
  2. இந்த டிவி சவுண்ட்க்காகவே 4 அல்லது 5 பஸ்களை செல்ல விட்டு கோவைக்கு பஸ் ஏறிய அனுபவம் நமக்கு நிறைய உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. ஆனா.. நாங்க டி.வி இல்லாத பஸ்ல ஏறவே மாட்டோம்

    பதிலளிநீக்கு