செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளால் கோவை தற்போது குறுகிய ஒரு கால இடைவெளியில் பல வசதிகளை பெற ஆயத்தமாகிக் கொண்டு வருகிறது.
துணை முதல்வர் பல நேரங்களில், பல முறை கோவை வந்துள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில் கோவை மாநாடு நிகழ்வுகள் நடந்து வருகிறது. மாநாடு நடக்கும் கோவைக்கென வழங்கப்பட்ட மாநகர பேருந்துகள் சேலம் , பொள்ளாச்சி , மேட்டுப்பாளையம், கோபி , திருப்பூர் , மதுரை , உடுமலை என சுற்றி வருகின்றன. பேருந்தைப் போலவே இன்னொரு வதந்தியும் சுற்றி வருவதை நாம் அவதானிக்க முடிந்தது.
கோவை புரூக் பாண்ட் ரோட்டில் நேற்று நடந்த ஆரெம்கேவி துணீக்கடைக்கட்டிடம் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் வசம் கைமாறியுள்ளதாகவும் , பல கல்வி நிறுவனங்கள் , ஸ்பின்னிங் மில்கள் கைமாறியுள்ளதாகவும் தகவல்.
மேலும் தமிழக முதன்மை அரசியல்வாதி ஒருவர் வடவள்ளியில் நிரந்தரமாக தங்குவதாகவும் ஒரு வதந்தி உலவி வருகிறது.
ஏதோ ஒன்று, கோவை தமிழ் மாநாட்டால் பல சிக்கல் நிறைந்த கல்லூரிகள், நிறுவனங்கள் சிக்கல் விலகி நலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
..
தம்பி நீ ஏன் ராசா எப்போ பாத்தாலும் பிரச்சனையா எழுவுற. எங்க தலிவர் ஆட்சியில நல்லதே இல்லையா? விஜயமங்கலத்துக்கு ஆட்டோ வரனுமா?
பதிலளிநீக்குகொஞ்சம் உண்மை நிலைமையை ஊருக்கு சொல்லலாம் அப்படின்னு பார்த்தோம்.
பதிலளிநீக்கு