செவ்வாய், மே 04, 2010

குறைந்த செலவு நிறைந்த மனசு
















வனப்பத்திரகாளியம்மன் மேட்டுப்பாளையம்

மே 1 விடுமுறையமக்கள் ஊட்டி , கொடைக்கானல் , மூணாறு , ஏற்க்காடு , ஒகேனக்கல் அப்படின்னு கொண்டாடிக்கிட்டு இருக்க நமக்கு திடீருன்னு 30 தேதிநைட்டு நம்ம திருப்பூர் நண்பர்கள் போன் பண்ணி நாளை காலையிலமேட்டுப்பாளையம் வனப்பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்திருங்க , கெடாவெட்டு இருக்குதுன்னு சொன்னாங்க.

சரின்னுட்டு காலையில 7 மணிக்கு துடியலூரில் இருந்துமேட்டுப்பாளையத்திற்கு பஸ் பிடிச்சு போனாமுன்ன அங்க அந்தக்காலைநேரத்திலேயே சரியான டிராபிக் .

பஸ் உட்டு இறங்கி நண்பர்களுக்கு போனப்போட்டமுன்னா அவங்க பஸ்ஸ்டாண்ட் கிட்ட வாங்க , ஆம்னி நிக்குதுன்னு கூப்பிட்டாங்க.

சரின்னு அதில போயி ஏறி கோயிலுக்கு ஒரு 7 அல்லது 8 கிமீ தோராயமாகஇருக்கும் அப்படின்னு நெனைக்கிறேன்.

வழியில யுனைடெட் பிளீச்சர்ஸ், சாராதா டெரி பிராடக்ஸ் தாண்டிப்போனா
அப்படியே பாக்குத்தோப்பு கண்ணுக்கு குளுமையா தெரிய , கொஞ்சம்தொலைவில குன்னூர் , ஊட்டி மலைகளெல்லாம் மேகமூட்டத்துடன் தெரிய
மனம் சற்றே ரிலாக்ஸ் ஆகத் தொடங்கியது.

தேக்கம்பட்டி பிரிவுலதான் கோயில் இருக்குது.

கோயிலோட சிறப்பு

வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு செவ்வாய் புதன் ஆகிய நாட்களில்நடக்கும். ஒரு வாரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடா வரைவெட்டப்படுகிறது.ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய்வெட்டுகின்றனர். . அதும் போக புதுசா வாகனம் , எப்.சி காட்டுனவங்க , இறைநம்பிக்கை உள்ளவங்க இங்கே வராங்க.


புதிதாக தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றி கேட்கும் நபர்கள் சுவாமிமுன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளை பூக்களை தனித் தனிபொட்டலங்களில் போட்டு அவற்றை அமபாளின் காலடியில் வைத்து எடுத்துப்பார்க்கும்போது மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்த பூ வந்து விட்டால்அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்புபெற்ற ஒன்று.

அம்மனை நாம் வழிபட்டு விட்டு நம் நண்பர்கள் சேர்ந்து எடுத்திருந்தமண்டபத்திற்கு சென்றால் மொத்தம் 4 குரூப் சீட்டாட்டம் ஜோராக நடந்துகொண்டு இருந்தது. காலை இட்லி டிபனாக குடல் கறி குழம்புடன் சூடாகவழங்கப்பட்டு கொண்டு இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே நண்பர்கள் மேட்டுப்பாளையம் சென்று வந்து கூல்டிரிங்ஸ் , ஹாட் டிரிங்ஸ் என தாராளமாய் சப்ளை செய்தனர்.

மப்பு ஏறின பார்ட்டிங்க அருகிலேயே சென்று கொண்டிருந்த பவானி ஆற்றில்சென்று குளிக்க தொடங்கினார்கள்.


ஆத்துத்தண்ணி நல்ல குளிர்ச்சியா இருந்தது. ஆத்துக்குள்ள ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக குளிக்கறத பாக்கும் போதுஊட்டி , கொடை, மூணாறு போன மக்கள் கூட இந்த மகிழ்ச்சியாஇருந்துருப்பாங்களா அப்படிங்கறது டவுட்தான்.

ரூம் வாடகை ரூ 1500/௫00 மண்டபம்
கெடாய் 40 பேருக்கு 2500
மளிகை 1000
வாகன செலவு 1500
மாஸ்டர் 600

மொத்தம் 7000

சரக்கு தனி‍‍‍‍‍ **********

பத்துப்பேரு சேர்ந்தா ஒரு நபருக்கு எவ்வளவு ஆகுமுன்னு கணக்குபோட்டுக்கோங்க.

ஊட்டியெல்லாம் போறத விட இந்த அருகாமையில் உள்ள பிக்னிக் ஸ்பாட்டுக்குபோங்க , நல்லா தண்ணியில என்ஜாய் பண்ணீட்டு வாங்க.

நமக்கு மனசும் வயிறும் நெறஞ்சு போச்சு .

********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக