வெள்ளி, ஜூலை 13, 2012

மூலிகைப்பெட்ரோல்‍ -இராம ரகசியம்



எப்பெல்லாம் பெட்ரோல் விலை ஏறுதோ அப்ப எல்லாம் மாற்று எரிபொருள் தேவை என மக்கள் மனதில்(நன்றாக‌ கவனிக்கவும் மக்கள் மனதில்)மட்டும் தோன்றுகிறது. ஆள்பவர்கள் இதில் எல்லாம் கவனம் கொள்வதில்லை,ஆளுங்கட்சி ஏற்றுவதும்,அதை உடனே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதும் பாகிஸ்தானில் இவ்வளவு,ஈரானில் இவ்வளவு என வரைபடத்தில் கூட காணமுடியாத சில நாடுகளையும் சேர்த்து ஒப்பிடுவதிலேயே மக்களை மாற்று எரிபொருள் பற்றிச் சிந்திக்கவிடாமல் மழுங்கடித்துவிடுகின்றனர்.

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் யாரேனும் ஒருவர் நாட்டின் நலனை வேண்டாமே,மக்களின் நலனை வேண்டாம்,சொந்த நலனை முன்னிட்டு மாற்று எரிபொருள் பற்றி ஏதேனும் செய்தால் அவர்களை கேள்வி கேட்டே கொன்றுவிடுவதில் நம் விஞ்ஞானிகளை விட வில்லன்கள் வேறு யாரும் இருந்துவிட முடியாது.

அதையும் மீறி நிரூபித்தால் அரசியல்வாதிகள் விடுவதில்லை,இரகசியத்தை தெரிந்து கொண்டு நாம் சம்பாரித்துக் கொள்ளலாம் என மிரட்டல்கள் வேறு,சொல்லவில்லை எனில் அவர்கள் மீது வழக்குகள்,மோசடிக் குற்றச்சாட்டுகள் என பல வழிகளில் நோகவைத்துவிடுகின்றனர்..

இந்த வழியில் மூலிகைப்பெட்ரோல் என அறிவித்து அதை நிரூபித்தாலும் இவர்களிடம் தப்ப முடியாமல் வழக்குகளில் சிக்கி சில காலம் காணாமல் இருந்த நமது மூலிகை இராமர் மீண்டும் தனது பணியைச் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.கடந்தமுறை மூலிகைப்பெட்ரோல் என்று அறிவித்துதான் சிக்கல் ஏற்பட்டது எனவும் இந்த முறை மாற்று எரிபொருள் என அறிவித்து தனது தயாரிப்பை சந்தைப்படுத்த தயாராக அறிவித்து உள்ளார்.

இவரது தயாரிப்பை உலகின் உயர்ந்த ஆய்வுக்கூடமான டென்மார்க் ஆய்வு மையம் சிறந்த மாற்று எரிபொருள் என அறிவித்து உள்ளது.கூடவே மலேசிய,சிங்கை ஆய்வுக்கூடங்களும் அங்கீகரித்து உள்ளது.

இதுவரை இவரின் தயாரிப்பை பயன்படுத்தி ஓடிய பைக்குகளும்,எந்த வித பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை.

தண்ணீரைப் பயன்படுத்தி இவர் எப்படி மூலிகை பெட்ரோலை எப்படி தயாரிக்கிறார் என்பது பற்றிய ஒரு விளக்கத்தை இராமரே கூறியதை நாம் காண்போம்..

தண்ணீரின் மூலக்கூறுகளான ஹைட்ரஜனையும்,ஆக்சிஜனையும் தனித்தனியாக பிரித்து ஹைட்ரஜனை எரிக்க உறுதுணையாக தண்ணீரில் உள்ள ஆக்சிஜனையே பயன்படுத்துவதே இவர் கண்டுபித்துள்ள மூலிகை கலவையின் சாமர்த்தியம்.

எப்படிக்கண்டுபிடித்தார் இந்த விசயத்தை.9வகுப்பு வரை படித்த இவரால் எப்படி சாத்தியம்..அவரே அதையும் கூறுகிறார்,சிறுவயதில் கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் சமையல் செய்யும் போது அங்கிருந்த ஒரு பசுந்தழை ஒன்று குபுக் கென்று தீப்பிடித்து எரிந்ததை வைத்து மண்டையை உடைத்து இந்த விசயத்தை கண்டுபிடித்து உள்ளார்.ஆம் பசுந்தழையும் ,வெங்கச்சாம் கல் எனப்படும் நெருப்பை உண்டாக்கப்பயன்படும் சிக்கி முக்கி கல்லையும் உடைத்து சரிவிகிதக்கலவை உண்டாக்கி பவுடராக்கி,சிட்ரிக் உப்பையும்,தண்ணீரில் கலந்து அதை சூடுபடுத்தி அந்த தண்ணீரை சிறிது நேரம் ஆறவைக்கும் போது தண்ணீர் பிரிந்து பெட்ரோலாக மாறி வருவதை காணலாம்.

மேலே உள்ள நீர்மத்தை பைக்கில் ஊற்றி வண்டியை ஓட்டும் போதோ,அல்லது அந்த தண்ணீர் கலவையில் நெருப்பை வைக்கும் போதோ அதன் எரிபொருள் தன்மை நமக்கு நன்கு தெரிகிறது,,

இந்த விசயங்கள் சாத்தியமா என பழம்பொருள் ஆய்வாளர்களிடம் கேட்டபோது ஆம் மலைக்காடுகள் சில நேரங்களில் தீப்பிடிப்பதும் இது போன்ற நிகழ்வுதான் என்று கூறுகின்றனர்.அந்த வகையில் அவர்கள் சொன்ன அரிய வகை மூலிகைகள் பற்றி புறநானூறு பாடல்களில் வருவதாக கூறியுள்ளனர்.

அந்தவகையான மூலிகைகளில் ஒன்றுதான் விராலிச்செடி.இதன் இலை இரண்டு மூன்றை சேர்த்து வைத்து நெருப்பை வைக்கும்போது உடனடியாக தீப்பிடிக்கிறது.இதனுடன் அரச மர இலை சேர்த்து இராமர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது..

மேலும் பிரத்தேயகமான மெசின் ஒன்றையும் தயாரித்துள்ளார்,இதற்கு காப்புரிமை மட்டும் அரசிடம் இருந்து கேட்டுள்ளார்,அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் இந்த மாற்று எரிபொருளை ரூ5/க்கு தன்னால் அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.,இது மட்டும் சாத்தியமானால் இந்தியாவை உலக நாடுகள் திரும்பிபார்க்க வைப்பதில் இராமர் பெருமைப்படலாம்;;

அதெல்லாம் கிடக்கட்டுமுங்க என்னவோ நாதஸ்வரத்துல எல்லோரும் சேந்துட்டாங்களாமே,எல்லாத்துக்கும் மயிலுதான் காரணமாமே?பெட்ரோல் ஏறுனா என்ன? எறங்குனா என்ன? மூக்கைச்சிந்துங்க முதல்ல......

திங்கள், ஜூலை 02, 2012

போக்குவரத்து துறை-மாறலாமே?





தமிழகத்தின் தலைநகரத்தில் ஒரு பேருந்து விபத்து ஏற்பட்டதும்,அதை ஒட்டி ஊடகங்கள் ஒவ்வொரு போக்குவரத்துக்கோட்ட வாசலில் நின்று கொண்டு போக்குவரத்து ஊழியர்சங்க நிர்வாகிகளை பேட்டி கேட்க அவர்கள் இங்கு இத்தனை பேருந்துகள் உள்ளது,பராமரிப்பு ஊழியர்கள் பற்றாக்குறை,பேருந்துகளின் தரம் சரியில்லை,அத்தனையும் மோசமான பஸ்கள் எனவும்,நிர்வாகிகள் கலெக்சன் விட டீசல் மைலேஜ் அதிகமாக கேட்பதாக புலம்பினர்.அதேபோல நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகை,பேருந்துகள் ஓடிய கிமீ' அடிப்படையில் கொடுப்பதால் அவர்கள் அனைத்துப் பேருந்துகளையும் ரெஸ்ட்டே கொடுக்காமல் இயக்குகின்றனர்.
இதையே நிர்வாகிகளிடம் கேட்டால் வசூல் குறைவு,அனைத்து கழகப்பேருந்துகளும் நட்டத்தில் இயங்குகின்றது என்கின்றனர்.

நமக்குத்தெரிந்த டிரைவர்,கண்டக்டர்களும் கொத்தடிமை மாதிரி வேலை வாங்கறாங்க,தினமும் ஷிப்ட் மாத்தும்போது,5லிட்டர் டீசல் அதிகம் பிடித்தாலும் அதற்கு என்ன காரணம் என என்ஜினியர்,மேனேஜர்களிடம் கட்டாயம் சொல்லவேண்டும் என்கின்றனர்.

ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் ஓடும் அனைத்து தனியார் பேருந்துகளும் மிக நல்ல நிலைமையில் நல்ல முறையில் கல்லா கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி என்று பார்க்கலாம். ஒவ்வொருதனியார் பேருந்தும் பேருந்துநிலையத்தில் கிளம்பும் முன் முழுமையாக 10 நிமிடம் வரை டைமிங் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும்.அதற்கு முன்பாகவும்,பின்னதாகவும் கிளம்பும் அரசுப்பேருந்து சரியாகப் பராமரிக்காத பஸ்களாகவும்,நல்ல கலர்கூட அடிக்காத பேருந்தாகவும் இருக்கும். இவர்கள் முன்னும் பின்னும் கிளம்பும் பஸ்களின் டிரைவர்,கண்டக்டர்களுக்கு மாமூல் வேறு அளிப்பதுடன்,போக்குவரத்து கோட்ட நிர்வாகிகளுக்கும் கொடுத்துவிடுவதால் அவர்களும் அரதப் பழைய பேருந்துகளையே அந்த நேரத்தில் இயக்குகின்றனர்.அப்புறம் எப்படி கலெக்சன் கல்லா கட்டும்!.

ஒரு சில ஊர்களுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நமக்கு மயக்கம்தான் வரும்.உதாரணத்திற்கு கோவையிலிருந்து சேலம் 3 நிமிடத்திற்கு ஒன்றும்,ஈரோட்டிற்கு 5 நிமிடத்திற்கு ஒன்றும் கிளம்புகிறது.பெரும்பாலும் பஸ்கள் காலியாகத்தான் செல்கிறது.இவ்வாறு செல்லும் பஸ்களும் பைபாஸ் உபயத்தால்,வழித்தட ஊர்களுக்கு வராமல் நேரே சென்றுவிடுகிறது.வழித்தட ஊர்க்களுக்கு கட்டாயம் செல்லவேண்டுமென கோட்ட மேலாளர்கள் சொன்னாலும் டிரைவர்கள்,கண்டக்டர்கள் இயக்குவதில்லை.கேட்டால் டீசல் மிச்சம்பிடிக்க பைபாஸ்வழியே இயக்குவதாக சொல்கின்றனர்.அப்படியே வழித்தட ஊர்களுக்கு சென்றாலும் மக்கள் ஏறுவதில்லை என்கின்றனர்.ஒரு சீட்,ரெண்டு சீட்களுக்காக செல்லும் போது டீசல் விரயம்தான் ஆகிறது,நாங்க பதில் சொல்லமுடிவதில்லை என்கின்றனர். இவர்கள் எண்ணம் பேருந்து நிலையத்தில் பஸ் எடுத்தால் வேறு எங்கும் நிற்க கூடாது.அங்கேயே கூட்டம் நிரம்பணும்..

அப்படி என்றால் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கலாமே,அப்படிக்குறைத்தால் பேருந்துகளும் நிரம்பும்.மேற்சொன்ன வழித்த‌டங்களில் கால் மணிக்கு ஒரு பஸ்ஸூம்,அரைமணீக்கு ஒரு தொடர் பஸ்ஸூம் இயக்கினாலே போதும்.எந்தப் பேருந்தும் நட்டத்தில் ஓடாது.இல்லையா இருக்கும் 55 சீட்களில் 45 சீட் நிரம்பிய பின்னர் வண்டியை எடுத்தால் கூட போதுமே! இது போன்றே மற்ற வழித்தடங்களும் உள்ளது,.மேற்சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே.

இவர்கள் கவர்ன்மெண்ட் ஊழியர்கள்தானே,பணிக்குதானே வந்துள்ளனர்.சும்மா இருந்தால் சம்பளம் யார் தருவார்கள்.லாபம் வருவதற்கு யார் முயற்சி எடுக்கவேண்டும்,போக்குவரத்து சங்கங்கள், துறைக்கு ஐடியா கொடுத்தால் என்ன? குறைந்தா போய்விடுவார்கள். 

புதிது புதிதாக பேருந்துகளை இயக்கினாலும் தேவை அறிந்து தேவைகேற்ப பேருந்துகளை இயக்கினாலே போதும்.. அதை விடுத்து வெறும் பேருந்தை பைபாஸ் வழியாக இயக்கும் ஊழியர்களும்,கிமீ இன்சென்டிவ்க்காக வேண்டி கண்டபடி பேருந்துகளை இயக்கும் நிர்வாகிகளும் கொஞ்சம் மனசு வைத்தால் மட்டுமே போக்குவரத்துதுறை எதிர்காலத்தில் இயங்கும்.இல்லையெனில் மொத்தமும் நட்டத்தில் காணாமல்போய்விடும் என்பதில் ஐயமேயில்லை...


வியாழன், மே 24, 2012

வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில்

அண்மையில் 2012ல் நடைபெற்ற வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவின் ஒரு தொகுப்புக்காட்சிகள்



திங்கள், மே 07, 2012

மேட்டுபாளையம் வனபத்திரகாளியம்மன் ‍பட தொகுப்பு...2ஆம் பாகம்

நமது அன்பு நண்பர் சதீஷ் அவர்களின் கிடாவெட்டுக்கு மே6‍ ல் அங்கு நாம் சென்றபோது எடுத்த சில காட்சிகளின் தொகுப்பு....





















மேட்டுபாளையம் வனபத்திரகாளியம்மன் ‍பட தொகுப்பு...1ஆம் பாகம்

நமது அன்பு நண்பர் சதீஷ் அவர்களின் கிடாவெட்டுக்கு மே6‍ ல் அங்கு நாம் சென்றபோது எடுத்த சில காட்சிகளின் தொகுப்பு....