திங்கள், ஜூலை 02, 2012

போக்குவரத்து துறை-மாறலாமே?





தமிழகத்தின் தலைநகரத்தில் ஒரு பேருந்து விபத்து ஏற்பட்டதும்,அதை ஒட்டி ஊடகங்கள் ஒவ்வொரு போக்குவரத்துக்கோட்ட வாசலில் நின்று கொண்டு போக்குவரத்து ஊழியர்சங்க நிர்வாகிகளை பேட்டி கேட்க அவர்கள் இங்கு இத்தனை பேருந்துகள் உள்ளது,பராமரிப்பு ஊழியர்கள் பற்றாக்குறை,பேருந்துகளின் தரம் சரியில்லை,அத்தனையும் மோசமான பஸ்கள் எனவும்,நிர்வாகிகள் கலெக்சன் விட டீசல் மைலேஜ் அதிகமாக கேட்பதாக புலம்பினர்.அதேபோல நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகை,பேருந்துகள் ஓடிய கிமீ' அடிப்படையில் கொடுப்பதால் அவர்கள் அனைத்துப் பேருந்துகளையும் ரெஸ்ட்டே கொடுக்காமல் இயக்குகின்றனர்.
இதையே நிர்வாகிகளிடம் கேட்டால் வசூல் குறைவு,அனைத்து கழகப்பேருந்துகளும் நட்டத்தில் இயங்குகின்றது என்கின்றனர்.

நமக்குத்தெரிந்த டிரைவர்,கண்டக்டர்களும் கொத்தடிமை மாதிரி வேலை வாங்கறாங்க,தினமும் ஷிப்ட் மாத்தும்போது,5லிட்டர் டீசல் அதிகம் பிடித்தாலும் அதற்கு என்ன காரணம் என என்ஜினியர்,மேனேஜர்களிடம் கட்டாயம் சொல்லவேண்டும் என்கின்றனர்.

ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் ஓடும் அனைத்து தனியார் பேருந்துகளும் மிக நல்ல நிலைமையில் நல்ல முறையில் கல்லா கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி என்று பார்க்கலாம். ஒவ்வொருதனியார் பேருந்தும் பேருந்துநிலையத்தில் கிளம்பும் முன் முழுமையாக 10 நிமிடம் வரை டைமிங் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும்.அதற்கு முன்பாகவும்,பின்னதாகவும் கிளம்பும் அரசுப்பேருந்து சரியாகப் பராமரிக்காத பஸ்களாகவும்,நல்ல கலர்கூட அடிக்காத பேருந்தாகவும் இருக்கும். இவர்கள் முன்னும் பின்னும் கிளம்பும் பஸ்களின் டிரைவர்,கண்டக்டர்களுக்கு மாமூல் வேறு அளிப்பதுடன்,போக்குவரத்து கோட்ட நிர்வாகிகளுக்கும் கொடுத்துவிடுவதால் அவர்களும் அரதப் பழைய பேருந்துகளையே அந்த நேரத்தில் இயக்குகின்றனர்.அப்புறம் எப்படி கலெக்சன் கல்லா கட்டும்!.

ஒரு சில ஊர்களுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நமக்கு மயக்கம்தான் வரும்.உதாரணத்திற்கு கோவையிலிருந்து சேலம் 3 நிமிடத்திற்கு ஒன்றும்,ஈரோட்டிற்கு 5 நிமிடத்திற்கு ஒன்றும் கிளம்புகிறது.பெரும்பாலும் பஸ்கள் காலியாகத்தான் செல்கிறது.இவ்வாறு செல்லும் பஸ்களும் பைபாஸ் உபயத்தால்,வழித்தட ஊர்களுக்கு வராமல் நேரே சென்றுவிடுகிறது.வழித்தட ஊர்க்களுக்கு கட்டாயம் செல்லவேண்டுமென கோட்ட மேலாளர்கள் சொன்னாலும் டிரைவர்கள்,கண்டக்டர்கள் இயக்குவதில்லை.கேட்டால் டீசல் மிச்சம்பிடிக்க பைபாஸ்வழியே இயக்குவதாக சொல்கின்றனர்.அப்படியே வழித்தட ஊர்களுக்கு சென்றாலும் மக்கள் ஏறுவதில்லை என்கின்றனர்.ஒரு சீட்,ரெண்டு சீட்களுக்காக செல்லும் போது டீசல் விரயம்தான் ஆகிறது,நாங்க பதில் சொல்லமுடிவதில்லை என்கின்றனர். இவர்கள் எண்ணம் பேருந்து நிலையத்தில் பஸ் எடுத்தால் வேறு எங்கும் நிற்க கூடாது.அங்கேயே கூட்டம் நிரம்பணும்..

அப்படி என்றால் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கலாமே,அப்படிக்குறைத்தால் பேருந்துகளும் நிரம்பும்.மேற்சொன்ன வழித்த‌டங்களில் கால் மணிக்கு ஒரு பஸ்ஸூம்,அரைமணீக்கு ஒரு தொடர் பஸ்ஸூம் இயக்கினாலே போதும்.எந்தப் பேருந்தும் நட்டத்தில் ஓடாது.இல்லையா இருக்கும் 55 சீட்களில் 45 சீட் நிரம்பிய பின்னர் வண்டியை எடுத்தால் கூட போதுமே! இது போன்றே மற்ற வழித்தடங்களும் உள்ளது,.மேற்சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே.

இவர்கள் கவர்ன்மெண்ட் ஊழியர்கள்தானே,பணிக்குதானே வந்துள்ளனர்.சும்மா இருந்தால் சம்பளம் யார் தருவார்கள்.லாபம் வருவதற்கு யார் முயற்சி எடுக்கவேண்டும்,போக்குவரத்து சங்கங்கள், துறைக்கு ஐடியா கொடுத்தால் என்ன? குறைந்தா போய்விடுவார்கள். 

புதிது புதிதாக பேருந்துகளை இயக்கினாலும் தேவை அறிந்து தேவைகேற்ப பேருந்துகளை இயக்கினாலே போதும்.. அதை விடுத்து வெறும் பேருந்தை பைபாஸ் வழியாக இயக்கும் ஊழியர்களும்,கிமீ இன்சென்டிவ்க்காக வேண்டி கண்டபடி பேருந்துகளை இயக்கும் நிர்வாகிகளும் கொஞ்சம் மனசு வைத்தால் மட்டுமே போக்குவரத்துதுறை எதிர்காலத்தில் இயங்கும்.இல்லையெனில் மொத்தமும் நட்டத்தில் காணாமல்போய்விடும் என்பதில் ஐயமேயில்லை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக