திங்கள், ஆகஸ்ட் 31, 2009

கொழும்பு சர்வதேச வானொலி

கொழும்பு சர்வதேச வானொலி தனது வானொலி ஒலிபரப்பை மீண்டும் நிறுத்தியுள்ளது . இதனைப் பற்றிய தகவல்களைப் பெற நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி :

பணிப்பாளர் நாயகம்.
இலங்கை சர்வதேச வானொலி,
போஸ்ட் பாக்ஸ் நம்பர் ;574.
கொழும்பு ‍ 7.

சிரிலங்கா ஏர் மெயில் ரூ 8.50.

கட ந்த ஒரு ஆண்டுக்கு முன்னரும் தனது ஒலிபரப்பை நிறுத்தி மீண்டும்
ஆரம்பித்த வானொலி மீண்டும் தனது ஒலி பரப்பை நிறுத்தியுள்ளது.

கட ந்த வருட நிறுத்தம் பற்றிய ஒரு இடுகை :
நன்றி :
Oct 27 2008,
http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t46084.html


இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும்எதிர்ப்புணர்வுக்கிடையே 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையைஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' ஆரம்பித்துள்ளது.

இலங்கை வானொலி நிலையத்துக்கென தனி வரலாறு உண்டு. 1925-ல் 'கொழும்புரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்தநிலையத்துக்கு உலகின்இரண்டாவது வானொலி நிலையம் (முதலாவது - 'பிபிசி' - 1922) என்றபெருமையும் ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையும்உண்டு.

காலப்போக்கில் எத்தனையோ மாற்றங்களைக் கண்ட இந்நிலையம், 1972-ம்ஆண்டிலிருந்து 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில்ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டுவருகிறது. இதில், கடந்த கால்நூற்றாண்டாக மத்திய அலைவரிசையில் ஒலிப்பரப்பாகிவந்த 'கொழும்புசர்வதேச நிலைய அலைவரிசை' கடந்த மே 31-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

தென்னிந்திய வர்த்தகத்தைப் பிரதானமாகக்கொண்டு நடத்தப்பட்டுவந்த இந்தஅலைவரிசைதான் தமிழகமெங்கும் ஒலித்துவந்தது. (இலங்கை வானொலிஇன்னும் சில தமிழ் அலைவரிசைகளை ஒலிபரப்பிவந்தாலும் அவற்றை இங்குதெளிவாகக் கேட்க முடியாது). தமிழகத்தில் பரவலாக பண்பலை வானொலிநிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள விளம்பர வருவாய் இழப்புகடும் நிதி நெருக்கடி காரணமாகவே இந்த அலைவரிசை சேவைநிறுத்தப்பட்டதாக அப்போது இலங்கை வானொலி நிலைய வட்டாரங்கள்தெரிவித்தன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வானொலியின் முன்னாள்அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீத், ''தொழில்நுட்பத்தின் விளைவு இது. எதிர்காலம் மின்னலைக்கானது. எனவே, பண்பலை நிலையங்களுக்கும்கூடநாளை இதே நிலை ஏற்படலாம். இது தவிர்க்க முடியாதது எனவும் அவர்கூறியுள்ளார்.

இனி, இலங்கை வானொலி அலைவரிசையை தமிழகத்தில் கேட்கவே முடியாதுஎன்ற சூழல் ஏற்பட்டிருந்த நிலையில், ஓசைப்படாமல் கடந்த புதன்கிழமை முதல்மீண்டும் சேவையை இலங்கை வானொலி நிலையம் ஆரம்பித்துள்ளது. இதேவேளை இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் கடும்எதிர்ப்பு நிலவிவருவதால், பதற்றத்தைத் தணிக்கும் ராஜதந்திரமாகவேவானொலி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல இந்த அலைவரிசையின் பெயரும்மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 'கொழும்பு சர்வதேச நிலைய அலைவரிசை' என இருந்த பெயர் இப்போது 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு' எனமாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இரண்டு மணி நேரம் ஒலிபரப்பாகிவந்த இந்தச்சேவை இப்போது நான்கு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 'முக்கிய அரசியல்வாதிகளிடம் இதற்கென வாழ்த்துச் செய்திகள்பெறப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவை ஒலிபரப்பப்படும் என்றும் இலங்கைவானொலி நிலைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைப் போர் தொடர்பாக தமிழகத்தில் வெளியாகும் செய்திகள் இலங்கைஅரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தன் தரப்புசெய்திகளை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகமாக வானொலியைப்பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தஅடிப்படையிலேயே மீண்டும் வானொலி ஒலிபரப்பை அந்நாட்டு அரசுஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிசெய்த இலங்கை வானொலிநிலைய தகவல்கள் தற்போது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மாத்திரமேஒலிபரப்பப்பட்டுவந்தாலும் விரைவிலேயே செய்தியும் ஒலிபரப்பப்படும் எனத்தெரிவித்துள்ளன.

மற்றுமொரு இடுகை :இலங்கைப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும்கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்புசேவையைத் தொடங்கியிருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புநிலவிவருவதால், பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திரமாகவே வானொலிசேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

1925-ல் "கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்நிலையம் 1972-ம்ஆண்டிலிருந்து "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில்ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டு வந்தது.

இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலையில் ஒலிப்பரப்பாகிவந்தகொழும்பு சர்வதேச நிலைய அலைவரிசை' கடந்த மே 31-ம் தேதியுடன்நிறுத்தப்பட்டது.

தென்னிந்திய வர்த்தகத்தைப் பிரதானமாகக்கொண்டு நடத்தப்பட்டுவந்த இந்தஅலைவரிசை தமிழகத்தில் பரவலாக பண்பலை வானொலி நிலையங்கள்தொடங்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள விளம்பர வருவாய் இழப்பு; கடும் நிதிநெருக்கடி காரணமாகவே நிறுத்தப்பட்டதாக அப்போது இலங்கை வானொலிநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இனி, இலங்கை வானொலி அலைவரிசையை தமிழகத்தில் கேட்கவே முடியாதுஎன்ற சூழல் ஏற்பட்டிருந்த நிலையில், ஓசைப்படாமல் கடந்த புதன்கிழமை முதல்மீண்டும் சேவையைத் தொடங்கியிருக்கிறது இலங்கை வானொலி நிலையம்.

http://www.tamilwin.com/view.php?2e40QHbcb3bh9ES34d3IWnp3b02h7GQe4d44Op7c00bdnLWIde2dE2hr2cc0Fj0g3e)


..

இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பதில் :
Blogger பிரபா said...

//
வாய்ப்பாடி குமார் said...
கொழும்பு சர்வதேச வானொலி தனது வானொலி ஒலிபரப்பை மீண்டும் நிறுத்தியுள்ளது .

மீண்டும் ஆரம்பிக்கப்படுமா ?

http://voipadi.blogspot.com/2009/08/blog-post_31.html

ஆரம்பிக்கப்படும் ஆனால் கால அளவு சொல்ல முடியாது..

August 31, 2009 9:33 PM

வியாழன், ஆகஸ்ட் 27, 2009

திருப்பூர், கோவையில் நாளை பந்த்

17.திருப்பூர், கோவையில் நாளை பந்த் இந்து முன்னணி அறிவிப்பு

திருப்பூர்: ""திருப்பூரில், விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் திருப்பூர், கோவையில் 28ம் தேதி பந்த் நடக்கும்,'' என, மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன், விசர்ஜன ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக மிக அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டு வருகிறது

. கடந்த 14 ஆண்டுகளாக வழக்கமான முறையில், எவ்வழியாக விநாயகர் ஊர்வலம் நடந்ததோ, அதே முறைப்படி இந்தாண்டும் விநாயகர் ஊர்வலம் நடந்தது. ஆனால், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் மீதும் கற்கள் வீசிப்பட்டன.அதேபோல், விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு, அமைதியாக திரும்பியவர்கள் மீதும் காங்கயம் ரோட்டில், பயங்கர ஆயுதங்களுடன் திரண்டிருந்த கும்பல், திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. விநாயகர் சிலையை கரைத்து, திரும்பிய வேனை அடித்து நொறுக்கி, அதில் இருந்த மூவரை தாக்கியுள்ளனர்.

படுகாயங்களுடன் மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பூர் மற்றும் கோவையில் 28ம் தேதி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பந்த் நடைபெற உள்ளது; அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு, சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நன்றி

தினமலர்



...

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

திருப்பூரை மாற்ற முயற்சிக்கும் ஈஷா!


http://idhyamonline.blogspot.com/2009/08/blog-post_18.html


திருப்பூர் சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் அளவு நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர். நாட்டுக்குப் பல நூறு கோடிகள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் அந்த மண்ணுக்கும், அந்த ஊரின் 4 லட்சம் உழைக்கும் மக்களுக்கும் நஞ்சை மட்டுமே பரிசாகத் தருவது எவ்வகையில் நியாயம்? இந் நிலையை மாற்றி, திருப்பூரை அழிவில் இருந்து மீட்டு எடுக்க, சத்குரு ஜக்கி வாசுதேவ் 'பசுமை திருப்பூர் இயக்கம்' என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கி உள்ளார். 'ஈஷா' அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள், ஆகஸ்ட் 23-ம் தேதி திருப்பூரில் 25,000 மரக் கன்றுகள் நட்டு, அடுத்த 3 வருடங்களுக்கு அதைப் பாதுகாத்து நீரூற்றி வளர்க்க இருக்கிறார்கள். ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சி இது. காலை முதல் மாலை வரை தொடரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இப் பசுமைக் கரங்களின் செயல்பாடுகளுக்கு நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? இரும்பு வேலியுடன் ஒரு செடியை நட்டு 3 வருடங்கள் நீரூற்றி வளர்க்க 600 ரூபாயும், மூங்கில் வேலியுடன் ஒரு செடியை நட்டு 3 வருடங்கள் நீரூற்றி வளர்க்க 200 ரூபாயும் செலவாகிறது. இந்தத் தொகையை நீங்கள் வழங்கினால் உங்கள் பெயரால் அந்த மரம் வளர்க்கப்படும். இதற்கான வங்கி வரைவோலை (அ) காசோலை (அ) மணியார்டரை 'isha foundation' என்ற பெயரில் எடுத்து 'பசுமைக் கரங்கள்', ஈஷா ஃபவுண்டேஷன், 15, கோவிந்தசாமி நாயுடு லே-அவுட், சிங்கநல்லூர், கோயம்புத்தூர்-641005' முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு... 94860 25000, 99444 00035, 94430 57560, 0422-2580155.

நமது கருத்துகள் அவரது பதிவில் போட இயலவில்லை. எனவே அவருக்கு நன்றியுடன் நமது வலையிலேயே கொடுக்கிறோம்.

நன்றி .

திருப்பூரில் நொய்யலை ஒட்டி கழிவு நீர் மட்டுமே வெளியேற்ற ஒரு வாய்க்காலை அமைத்து , மழைக்காலங்களில் நல்ல நீர் மட்டுமே வெளியேற தேம்ஸ் நதிக்கரையை போல ஆறு முழுக்க சிமெண்ட் தளம் அமைத்தால் நொய்யல் நலமுடன் பல்லாண்டு நம்மை வாழ்த்தும் . சிமெண்ட் தளம் என்பதை இரண்டு கிலோ மீட்டருக்கு மட்டுமே அமைத்தால் கூட போதுமானது.

அதுவுமில்லாமல் கரையோரங்களை சுத்தப்படுத்தி ரோடு அமைத்து மரங்கள் நட்டால் நொய்யல் அழகிய நடை போடும் என்பதை மறுக்க முடியாது.

அதுபோலவே மண்ணரை பெரியபாளையம் குளம் முழுக்க கழிவு நீர் கலந்துள்ளது.

அதனருகில் இதேபோன்று ஒரு வாய்க்கால் அமைத்து கழிவு நீர் தனியே செல்ல வழி அமைத்தால் குளத்தில் படகோட்டி பார்க் அமைக்கலாம்.

ஆண்டிபாளையம் குளம் போல ஒரு சுற்றுலா தளம் அமைக்கலாம்.

இன்னுமொரு முக்கிய செய்தி .

ஊட்டி நகராட்சி முழுக்க பாலித்தீன் கவர் தடை செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அதை கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள்.

அதுபோல திருப்பூரிலும் செய்யலாம். அது சிரமம் எனில் நகரில் உள்ள பிரபல‌
கடைகள், ஹோட்டல்களில் ,டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பேப்பர் கவர் உபயோகப்படுத்த தானே முன்வர வைக்கலாம்.

ஏனெனில் 18.08.09 அன்று மாலை பெய்த மழையால் திருப்பூர் சாக்கடைகள் பாலித்தீன் கவர்களால் அடைத்து மக்கள் பட்ட சிரமத்தை சொல்லி மாளாது.


திங்கள், ஆகஸ்ட் 17, 2009

பாவம் முதுமலை,மசினகுடி,தலைகுந்தா ,ஊட்டி மக்கள்.

முதுமலை,மசினகுடி,தலைகுந்தா ,ஊட்டியில் உள்ள பெரும்பான்மையான
ஏரியாக்களில் தமிழ் (FM )பண்பலைகள் எடுப்பதில்லை.மாறாக மலையாளம், கன்னடம் பண்பலைகள் அதிகம் எடுக்கின்றன.

அதேபோல் ஊட்டியில் சில இடங்களில் சூரியனின் தமிழ் மற்றும் மலையாள ரேடியோக்கள் மாறி மாறி வருகின்றன.

அதேபோல ஊட்டியிலேயே உள்ள எப்.எம் ரெயின்போ 101.8 சென்னை வானொலி எப்.எம் 101.4 ஐ அஞ்சல் செய்கிறது.அதுவும் மிகக்குறைந்த சக்தியில் ஊட்டியில் மட்டுமே எடுக்கிறது. குன்னூரில் கூட எடுப்பதில்லை.
சென்னைக்குப்பதிலாக கோடை எப்.எம் அல்லது கோவை ரெயின்போவை அஞ்சல் செய்தால் கூட ஊட்டி மக்களுக்கு பயனாக இருக்கும்.

என்ன செய்கிறார்கள் வானொலி அதிகாரிகள் ?


முதுமலை,மசினகுடி,தலைகுந்தா மக்களும் தமிழர்கள் தானே ,அவர்களுக்கும்
தமிழ் எப்.எம் கேட்கும் ஆசை இருக்கும் அல்லவா!

நிறைவேறுமா ?



..