வியாழன், ஆகஸ்ட் 20, 2009

திருப்பூரை மாற்ற முயற்சிக்கும் ஈஷா!


http://idhyamonline.blogspot.com/2009/08/blog-post_18.html


திருப்பூர் சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் அளவு நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர். நாட்டுக்குப் பல நூறு கோடிகள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் அந்த மண்ணுக்கும், அந்த ஊரின் 4 லட்சம் உழைக்கும் மக்களுக்கும் நஞ்சை மட்டுமே பரிசாகத் தருவது எவ்வகையில் நியாயம்? இந் நிலையை மாற்றி, திருப்பூரை அழிவில் இருந்து மீட்டு எடுக்க, சத்குரு ஜக்கி வாசுதேவ் 'பசுமை திருப்பூர் இயக்கம்' என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கி உள்ளார். 'ஈஷா' அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள், ஆகஸ்ட் 23-ம் தேதி திருப்பூரில் 25,000 மரக் கன்றுகள் நட்டு, அடுத்த 3 வருடங்களுக்கு அதைப் பாதுகாத்து நீரூற்றி வளர்க்க இருக்கிறார்கள். ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சி இது. காலை முதல் மாலை வரை தொடரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இப் பசுமைக் கரங்களின் செயல்பாடுகளுக்கு நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? இரும்பு வேலியுடன் ஒரு செடியை நட்டு 3 வருடங்கள் நீரூற்றி வளர்க்க 600 ரூபாயும், மூங்கில் வேலியுடன் ஒரு செடியை நட்டு 3 வருடங்கள் நீரூற்றி வளர்க்க 200 ரூபாயும் செலவாகிறது. இந்தத் தொகையை நீங்கள் வழங்கினால் உங்கள் பெயரால் அந்த மரம் வளர்க்கப்படும். இதற்கான வங்கி வரைவோலை (அ) காசோலை (அ) மணியார்டரை 'isha foundation' என்ற பெயரில் எடுத்து 'பசுமைக் கரங்கள்', ஈஷா ஃபவுண்டேஷன், 15, கோவிந்தசாமி நாயுடு லே-அவுட், சிங்கநல்லூர், கோயம்புத்தூர்-641005' முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு... 94860 25000, 99444 00035, 94430 57560, 0422-2580155.

நமது கருத்துகள் அவரது பதிவில் போட இயலவில்லை. எனவே அவருக்கு நன்றியுடன் நமது வலையிலேயே கொடுக்கிறோம்.

நன்றி .

திருப்பூரில் நொய்யலை ஒட்டி கழிவு நீர் மட்டுமே வெளியேற்ற ஒரு வாய்க்காலை அமைத்து , மழைக்காலங்களில் நல்ல நீர் மட்டுமே வெளியேற தேம்ஸ் நதிக்கரையை போல ஆறு முழுக்க சிமெண்ட் தளம் அமைத்தால் நொய்யல் நலமுடன் பல்லாண்டு நம்மை வாழ்த்தும் . சிமெண்ட் தளம் என்பதை இரண்டு கிலோ மீட்டருக்கு மட்டுமே அமைத்தால் கூட போதுமானது.

அதுவுமில்லாமல் கரையோரங்களை சுத்தப்படுத்தி ரோடு அமைத்து மரங்கள் நட்டால் நொய்யல் அழகிய நடை போடும் என்பதை மறுக்க முடியாது.

அதுபோலவே மண்ணரை பெரியபாளையம் குளம் முழுக்க கழிவு நீர் கலந்துள்ளது.

அதனருகில் இதேபோன்று ஒரு வாய்க்கால் அமைத்து கழிவு நீர் தனியே செல்ல வழி அமைத்தால் குளத்தில் படகோட்டி பார்க் அமைக்கலாம்.

ஆண்டிபாளையம் குளம் போல ஒரு சுற்றுலா தளம் அமைக்கலாம்.

இன்னுமொரு முக்கிய செய்தி .

ஊட்டி நகராட்சி முழுக்க பாலித்தீன் கவர் தடை செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அதை கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள்.

அதுபோல திருப்பூரிலும் செய்யலாம். அது சிரமம் எனில் நகரில் உள்ள பிரபல‌
கடைகள், ஹோட்டல்களில் ,டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பேப்பர் கவர் உபயோகப்படுத்த தானே முன்வர வைக்கலாம்.

ஏனெனில் 18.08.09 அன்று மாலை பெய்த மழையால் திருப்பூர் சாக்கடைகள் பாலித்தீன் கவர்களால் அடைத்து மக்கள் பட்ட சிரமத்தை சொல்லி மாளாது.


1 கருத்து:

  1. //நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

    பதிலளிநீக்கு