வியாழன், ஆகஸ்ட் 27, 2009

திருப்பூர், கோவையில் நாளை பந்த்

17.திருப்பூர், கோவையில் நாளை பந்த் இந்து முன்னணி அறிவிப்பு

திருப்பூர்: ""திருப்பூரில், விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் திருப்பூர், கோவையில் 28ம் தேதி பந்த் நடக்கும்,'' என, மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன், விசர்ஜன ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக மிக அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டு வருகிறது

. கடந்த 14 ஆண்டுகளாக வழக்கமான முறையில், எவ்வழியாக விநாயகர் ஊர்வலம் நடந்ததோ, அதே முறைப்படி இந்தாண்டும் விநாயகர் ஊர்வலம் நடந்தது. ஆனால், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் மீதும் கற்கள் வீசிப்பட்டன.அதேபோல், விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு, அமைதியாக திரும்பியவர்கள் மீதும் காங்கயம் ரோட்டில், பயங்கர ஆயுதங்களுடன் திரண்டிருந்த கும்பல், திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. விநாயகர் சிலையை கரைத்து, திரும்பிய வேனை அடித்து நொறுக்கி, அதில் இருந்த மூவரை தாக்கியுள்ளனர்.

படுகாயங்களுடன் மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பூர் மற்றும் கோவையில் 28ம் தேதி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பந்த் நடைபெற உள்ளது; அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு, சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நன்றி

தினமலர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக