வெள்ளி, மே 07, 2010

வழியிருந்தும் செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்!

நீண்ட நாட்களாக எப்போதாவது கனரக வாகனம் வந்தால் மட்டுமே அதுவும் டிரைவரும் கிளினரும் சென்று ரெயில் நிலையத்தில் சொன்னால் மட்டுமே வந்து ரெயில்வே கேட் பற்றி பல புகார்களை எம்.எல்.ஏ , எம்.பி அனைவரிடமும் சொல்லியும் ஒரு பயனுமில்லை. மேலும் சுற்று வட்டார மக்களும் வேறு வழியின்றி அருகிலுள்ள ஒரு சிறிய நுழைவு பாலத்தை உபயோகித்து வந்தனர்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகனங்கள் செல்லமுடியாதபடி சேறு நிரம்பியதாக இந்த பாலம் காணப்படும் , இந்த பாலத்தைப் பற்றி சென்ற 05.05.10 தினமணி பேப்பரில் (ஈரோடு)வந்துள்ளது .

இதன் பிறகாவது ஒரு வழி பிறக்கும் என எதிர்பார்ப்போம்.

இணைப்பு : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=237558&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!

கோயம்புத்தூர்
வழியிருந்தும் செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்!

First Published : 05 May 2010 11:44:46 AM IST


சென்னிமலை, மே 4: சென்னிமலையிலிருந்து விஜயமங்கலம் செல்லும் சாலையில் விஜயமங்கலம் ரயில்நிலையம் அருகே ஒரு ரயில்வே கேட் உள்ளது. ரயில்வே கேட்டிலிருந்து சுமார் 100 மீட்டருக்கு அருகாமையில் குறுகிய பாலம் ஒன்றும் உள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் பாதையை கடக்க இந்த இரண்டு வழிகளில் மட்டுமே செல்ல முடியும்.÷கடந்த பல ஆண்டுகளாக இந்த ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் மூடி வைத்துள்ளது. இந்த வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள், லாரிகள், கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ரயில்வே கேட் மூடியே இருப்பதால் சிறிய பாலத்தையே பயன்படுத்தி வந்தன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழையால் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதை சேறும், சகதியுமாக உள்ளது. மழைக்காலம் தொடங்கி விட்டாலே போக்குவரத்திற்கு பெரும் பிரச்சனையாகி விடுகிறது. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் கூட ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட்டை திறக்காமல் பூட்டியே வைத்துள்ளது. போக்குவரத்திற்காக இரண்டு வழிகள் இருந்தும் இரண்டையும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பாலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிற நேரங்களில் மட்டுமாவது பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக