நிமித்தம் என்பது என்ன?
---------------------------------
நிமித்தம் என்பது வாழ்வில் பின்நிகழவிருக்கும் நன்மை தீமைகளைச் சில நிகழ்ச்சியின் வாயிலாக உணர்த்துவதாகும்.நிமித்தங்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்றுதெட்டு இன்றுவரை நம்பப்பட்டு வருகின்றன.
நிமித்தம் என்பதை இயற்கையின் மொழி என்றும் கூறலாம. மனிதன்தான் செய்ய நினைக்கும் செயலின் பால் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கும் இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் ஒருவித தொடர்பு உண்டு.
உலகத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விசயம் ஒன்றும் இல்லை. நடக்கும் காரியங்களும் அப்படியே. சரியான கணக்குத் தெரிந்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒரே கணக்காக நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்கலாம். கை ரேகை, ஆரூடம், கிரகநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. எல்லாம் நிஜம்தான். இவற்றில் ஒன்றே நிமித்தம். அதில் ஒரு அங்கமே சகுனம் ஆகும்.
பொதுவாகவே நிமித்தங்கள் பலனை உருவாக்குவதில்லை.நடக்கபோகும் காரியங்களை மறைமுகமாக உணர்த்துவது ஆகும்.இந்த பூமிபந்தின் அமைப்புபடி நம்முடைய செயல்கள்,எண்ணங்கள்படியே காரியங்களும் நடக்கின்றன.நல்ல நேர்மறை சிந்தனைகளுடன்,எந்த வித தீயநோக்கமும் இல்லாமல் உயன்ர்ந்த எண்ணத்துடன் வாழ்ந்தாலே போதும் நமக்கும் நடக்கும் காரியங்கள் யாவும் இனிதாகவே அமையும் என்பது உண்மையாகும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.க்கம்
ஒரே நாளில் 12 பகிர்வுகள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு