செவ்வாய், மார்ச் 09, 2010

வன உயிரினங்களுக்கு உதவி செய்யுங்கள்.








வணக்கம் அன்பு வலைப்பதிவர்களே ! எமது ஊரின் மிக அருகாமையில் இரண்டு மலைகள் உள்ளது. ஒன்றின் பெயர் அரசன்னாமலை, மற்றொன்று கொமரமலை. இந்த இரண்டு மலைகளிலும் இருவது வருடங்களுக்கு முன்பு நரி மட்டுமே இருந்து வந்தது, ஆனால் தற்போது மான்களும் , ம்யில்களும் அதிக அள்வில் பெருகி விட்டது. மான்கள் வந்தது எப்படி என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை.


ஏனென்றால் மலை என்பதை விட அதை ஒரு கரடு என்றே சொல்லலாம். மே மாதத்தில் வறண்டு போய் தீப்பிடித்து விடும் அளவுக்கு காய்ந்து விடும் ஒரு கரடு.

வனத்துறையும் அவ்வப்போது செடிகளை வைத்து பசுமையாக்கலாம் என்று முயற்சி செய்கிறார்கள் . ஆனால் அது என்ன நேரமோ தெரியவில்லை ,செடி வைத்தால் மழை அந்த வருடஙகளில் பொய்த்து விடுகிறது. இந்த இரு மலைகளுக்கும் இடையில் தான் ஈரோடு -கோவை- திருப்பூர் இரயில்வே பாதை செல்கிறது.




அப்ப மான்கள் தண்ணீருக்கு என்ன செய்கின்றன? . கரட்டை ஒட்டி உள்ள தோட்டங்களில் உள்ள தண்ணீர் தொட்டி , ஆடு, மாடுகளுக்கு என உள்ள தொட்டிகளில் தாகத்தைத் தணிக்கக்கூடும் என்று தெரிகிறது. மயில்களுக்கும் அதே கதைதான்.


இதைப்படிக்கும் நண்பர்கள் ஏதேனும் தொண்டு அமைப்பை தெரிந்திருந்தால்
அவர்களுக்கு இவ்விசயத்தை கூறுங்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதால் ஏதேனும் சில நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இந்த மலையை ஒட்டி தண்ணீர்த்தொட்டி வைக்க ஏற்பாடு செய்யுங்களேன்.‌


மரம் வளர்ப்போம் என்பதை விட காய்ந்து கிடக்கும் உயிரினங்களுக்கு தண்ணீர் அளிக்க முன் வாருங்களேன் !


....

3 கருத்துகள்:

  1. பிரதீப்3/09/2010 07:11:00 PM

    குமார்,
    சரியான இடத்தை சொல்லவும்.தனியார் யாரும் தொட்டி கட்டமுடியாது.வனத்துறை மட்டுமே செய்யமுடியும்.அதற்க்கு ஆவன செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி பிரதீப் அவர்களே.

    இந்த மலையானது ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுக்கா ,சென்னிமலை ஒன்றியம், வாய்ப்பாடி பஞ்சாயத்தில் உள்ளது.

    சென்னிமலை வனச்சரகத்திற்கு கட்டுப்பட்டது.

    மலையின் அருகில் உள்ள ரெயில்வே நிலையத்தின் பெயர் விஜயமங்கலம் . இது ஈரோடு-திருப்பூர் ரெயில்வே பாதையாகும்.

    சென்னிமலையிலிருந்து C4,C14 என்ற பேருத்துகள் மலையின் வழியே செல்கிறது

    பதிலளிநீக்கு
  3. பிரதீப்3/10/2010 07:48:00 PM

    நன்பர் குமார்,
    நன்றி.உங்களை போன்றவர்கள் தொடர்ந்து இது போன்ற செய்திகளை பதிவு செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு