திங்கள், மார்ச் 29, 2010

மூன்று மணி நேரம் கரண்ட் கட்

இலவசம், இலவசம், தமிழ் நாட்டின் பெரும்பகுதி இலவசங்களால் நிரம்பி வழிகிறது.

விவசாயிகளுக்கு கரண்ட் இலவசம், நெசவாளர்களுக்கு 600 யூனிட் கரண்ட் இலவசம், குடிசைகளூக்கும், ஏழைகளுக்கும் கரண்ட் இலவசம்.

அப்புறம் கரண்ட் எங்கே பத்தும்? எப்படின்னு கேக்கறீங்களா ? இலவசம் இல்லைன்னா விலைவாசியெல்லாம் ஏறிப்போயிரும் அப்படினு சொல்லறீங்களா ?

அது எல்லாம் ஒண்ணும் இல்லைங்க , எல்லாமே முடியாதவனோட பேச்சு.

நல்லா கேட்டுக்கோங்க!

இலவச மின்சாரம் கிணத்துக்கு கொடுத்ததுக்கு அப்புறம் தான் மக்கள் நிறைய போர் போட்டு தண்ணீர் எடுக்க ஆரம்பிச்சாங்க. கம்பரஸர போட்டா கொஞ்ச நாளுக்கு தண்ணி மள மளனு வந்தது. அப்புறம் பக்கத்து தோட்டக்காரனோட கெணறு வத்த ஆரம்பிச்சுது. பாத்தான் அவன்,அவனும் ஒரு போரப்போட்டான்.

உடனே முதல்ல போட்டவன் போருல தண்ணி குறைய ஆரம்பிச்சுது. மறுபடியும் வேற போர் உன்னொருத்தன் போட ரெண்டு பேருக்கும் தண்ணி குறைய அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா தண்ணி சிணுங்குன்னு வந்து ஊத்தும். ஆனா கம்பரஸன மட்டும் நிறுத்தவே மாட்டானுங்க நம்ம ஆளுங்க.

இது எவனோ ஒருத்தன் கெணத்துல, தோட்டத்துல அல்ல , எங்க அப்பிச்சி ஊட்டுத் தோட்டத்துலேயே இதுதான் நடக்குது. இதே கரண்ட் பில்லு யூனிட்டுக்கு 50 பைசான்னு குறைஞ்ச கட்டணமா இருக்கட்டும், எவனாவது வெறும் போர ஓட்டுவானா ?

மேல சொன்னது வானம் பாத்த பூமியில. இதே வாய்க்கால் பாத்த பூமியில எப்படித்தெரியுமா ?

அதையும் சொல்றன் கேளுங்க.

வாய்க்கால்ல தண்ணி பவானிசாகர்ல்ல இருந்து தொறந்து உட்டுட்டாங்க, தண்ணியும் வயலுக்கு பக்கத்துல வருது , வந்தா என்ன ஆகும் , கிணறு பதமாகும், இதே வாய்க்கால் மேலேயும் , கிணறு கீழேயும் இருந்தா என்ன ஆகும் , கெணறு நெம்ப தண்ணி சீக்கிரம் ஊறும்,அப்ப என்ன பண்ணோனும் ?

உடனே பம்ப் செட்ட மேல தூக்கோணும், இல்லைன்னா மோட்டரு தண்ணியில மூழ்கிரும், நம்மாளு மோட்டர தூக்க மொடை, உடனே என்ன பண்றாரு ? பம்ப ஆன் பண்ணி தண்ணீ வாய்க்கால்ல உடறாரு. அது தண்ணி வெட்டியா போகுது , போனாப் பரவாயில்லை , ஆனா வெடியவெடிய மோட்டரு ஓடுது , கரண்ட் தண்ணியா மூயுது. கரண்ட் யாருது , இவங்க அப்பிச்சி ஊட்டுதா ? இதே யூனிட்டுக்கு 50 பைசான்னா ஓட்டுவானா ?.... சில்லிப்பசங்க !

இதுல வேற கரண்ட் பில்ல வெவசாயத்துக்கு போட்டா காய்கறி வெலையெல்லாம் ஏறீப்போயிரும்முன்னு கதை வேற உடறாங்க. ஒரு மண்ணும் ஏறாது.

நெசவாளர்களூக்கு அதே கதைதான், 600 யூனிட் விசைத்தறீகளுக்கு இலவசம் அப்படின்னு , ரெண்டு தறீ போட்டுட்டு இருக்கறவனுக்கு ஓகே. ஒரே தறி போட்டுட்டு இருக்கறவன், மிச்சமான கரண்ட எப்படி செலவு செய்யலாம் , அப்படின்னு யோசிக்கறான் !.

சோறாக்குறதுக்கு கேஸ் எதுக்கு செலவு செஞ்சுட்டு , பேசமா கரண்ட் அடுப்ப போட்டா செலவு மிச்சமுன்னு எகத்தாளமா யோசிக்கறாங்க.

இதுல நேத்து இருந்து மூணு மணீ நேர கரண்ட் கட்டுன்னு வேற அறிவிச்சுட்டாங்க ! அரசாங்கம் கொடுத்த இலவச டீவியை ஞாயித்துக்கிழமையிலாவது பாக்கலாமுன்னு, மத்தியானம் போட்டா போட்டப்ப போன கரண்ட் படம் முடிஞ்சுதான் வந்தது.

நீங்களே சொல்லுங்க ! இலவசம் வேணுமா , வேண்டாமா?

இன்னும் நெறயா சொல்லலாம், ஒட்டுக்கா சொன்னா எதுவுமே வெளங்காது!

...

6 கருத்துகள்:

  1. குமார்,
    விவசாயத்தின் இன்றைய நிலைமை தெரியாமல் பேசதீர்கள்.நாட்டின் உணவு உற்பத்தியை புரிந்து கொண்டு பிறகு பதிவு இடுங்கள்.நாம் சந்திக்கும் சவால்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?மெனபொருள் சோரு போடாது.

    பதிலளிநீக்கு
  2. நன்றீ நண்பரே , நான் சொல்ல வருவது விவசாயம் இந்த அளவு கூறு கெடக் காரணமே இந்த இலவச கரண்ட் , கடன் தள்ளுபடி போன்றவைகள் தான்.

    இலவசக் கரண்ட் இல்லையென்றால் விடிய விடிய தண்ணி இல்லாத கம்பரசர் ஓடுமா, 3 நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணிர் வரும் போர்தான் ஓடுமா ? அதிக போர்கள் இல்லையென்றால் என்ன நடக்கும் , கிணற்றுக்கு தண்ணீர் வருமா , வராதா ? ஏன் கிணறுகள் காய்ந்தன , சிந்தியுங்கள் , ஆழமாக யோசியுங்கள்,

    காரணம் போர்வெல்கள்தான்.போர்வெல் தொடர்ந்து ஓட என்ன காரணம் , இலவசக் கரண்ட்.

    எங்கள் கிணற்றில் இன்ஜின் வைத்து ஓட்டிக் கொண்டு இருந்தோம். பக்கத்து தோட்டத்தில் போட்ட போர்வெல் காரணமாக,எங்கள் கிணற்றின் தண்ணீர் ஊற்று வற்றிப்போனதால் தென்னை மரங்கள் 50 பட்டுப்போனது , காரணம் என்ன இலவசக் கரண்ட். போர் போட்ட தோட்டம் எங்கள் கிணற்றுக்கு அரை கிமீ முன்னால் . ஆனால் அங்கும் தண்ணீர் ஆறு மாதத்திற்க்கு பின்னால் வரவில்லை. (அதற்க்கு முன்னால் அவர்களும் இலவசக் கரண்ட் வைத்து இருந்தார்கள் , ஆனால் கிணற்றின் மோட்டார் மட்டும் ஓடியது ,போர் போட்ட பிறகு போருக்கும் அதே கரண்டை இணைத்து ஓட்டினார்கள்.)இது எதனால் ?

    நீங்களும் போர் போடலாம் என்பீர்கள்.

    கிணறு பங்குக்கிணறு, அதுவில்லாமல் கரண்ட் கனெக்சன் பெற ஒரு கிமீ லைன் இழுக்க வேண்டும்.

    இன்னும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் ! எங்கள் கிணற்றீன் தண்ணீர் ஊற்று , அதாவது ஜலம் என்பார்கள் அது நான்கு இடங்களில் வந்து கொண்டு இருந்தது.
    அந்த ஜலத்தில் ஊற்றும் இடத்தில் எப்போது பார்த்தாலும் சிறு கூழாங்கற்களூம், கிளிஞ்சல்களும் தென்படும். இந்த கூழாங்கற்களையும், கிளிஞ்சல்களையும் நான் பவானி காவிரி ஆற்றின் கரையில் மட்டும்தான் கண்டுள்ளேன். கிணற்றை தூர்வாரியவர்களூம் இதைத்தான் சொன்னார்கள்.

    அதுவில்லாமல் அந்த தண்ணீர் சுவை அந்த ஒரு ஊற்றில் மட்டும் மிகவும் சுவையாக இருக்கும்.

    இதனால்தான் உண்மையை சொன்னேன் , உண்மை சற்று உரைக்கத்தான் செய்யும்.

    கிணத்து மோட்டரை மேலே எடுக்க சிரமப்பட்டு அல்லது சோம்பல்பட்டு தண்ணிரை விடிய விடிய காட்டின் அருகே உள்ள பள்ளத்தில் விடும் நடத்தை ஏன் வருகிறது?

    இலவசக் கரண்ட்தானே?

    இல்லையன்றால் சும்மா மோட்டரை ஓட விடுவீர்களா ?

    கசப்பு மருந்து வேண்டும், காய்ச்சல் தானாக ஆறும். விவசாயம் போகும் போக்கு சீராக வேண்டுமெனில் மான்சான்டோக்களை துரத்தவும் , அதே சமயம் கசப்பு மருத்துகளை பழக்கப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

    நன்றி பிரதீப் அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. பிரதீப்3/30/2010 10:53:00 AM

    குமார்,
    குறைந்து வரும் விவசாயிகள்!பணம் விவசாயத்தில் முக்கியமானது.குறைந்து வரும் நீர் ஆதாரம்... இது தான் தற்போதைய நிலை.கரும்புக்கு எல்லோரும் ஏன் மாறினார்கள் என்று பயிரிட்டவரிடம் கேட்டுப்பாருங்கள்.உண்மை சுடும்!!

    பதிலளிநீக்கு
  4. பிரதீப்3/30/2010 10:55:00 AM

    விவாயி இன்று social enterprises ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
  5. கருத்துக்கள் பலவிதமாக இருந்தாலும் நான் என் அனுபவம் , எங்கள் வேளாண்மை இவற்றை மையப்படுத்தி எழுதியுள்ளேன். இது சற்று ஆழமாக சிந்திக்கவேண்டிய ஒன்று. பவானி சாகருக்கும் , அவினாசிக்கும் எவ்வளவு தொலைவு , ஆனால் ஒரு வாய்க்கால் திட்டம் அவினாசி அத்திக்கடவு இன்றுவரை கனவாகவே உள்ளது.

    இதே பவானிசாகர் வாய்க்கால் எவ்வளவு தொலைவு தாண்டிப் பாய்கிறது தெரியுமா? பழையகோட்டை, மற்றும் சென்னிமலையின் பிற்பகுதி, அரச்சலூர், முத்தூர் .பெருந்துறை, காஞ்சிக்கோயில்.

    ஆனால் 30 கிமீட்டருக்குள் உள்ள அவினாசி,புளியம்பட்டி , அன்னூர், ஊத்துக்குளி , வாய்ப்பாடி , செங்கப்பள்ளி ,குன்னத்தூர் பாவம் செய்த ஊர்களா?

    இதுபோல தமிழ் நாட்டின் பல திட்டங்கள் உள்ளது. இதில் அக்கறை காட்ட வேண்டும், நீர் நிலைகளை பெருக்க வேண்டும், காசுக்கு என்ன செய்ய , இலவசங்களை குறைக்க வேண்டும். யூனிட்டுக்கு 50 பைசாவாவது போட வேண்டும். அப்பொழுதுதான் பொதுப்பணித்துறையின் திட்டங்களை நிறைவேற்ற நிதி ஆதாரங்கள் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  6. வாய்க்கால்கள் , நீர் நிலைகள் பெருகும் போது கண்டிப்பாக எந்த ஒரு விவசாயும் சும்மா இருக்க மாட்டான். விவசாயம் பெருகும். விலைவாசியும் குறையும், தக்காளி சீசனில் தக்காளி கிலோ ரூ 1 , 2 கிலோ ரூ 1 எனக் கிடைப்பதுவே இதற்க்கு உதாரணம்.

    அமல்படுத்திய ஓரிரு ஆண்டுகளுக்கு வேண்டுமானால் சிரமம் தெரியலாம், ஆனால் அதற்கு பிறகு அனைத்தும் சுபமாகவே நடக்கும்.

    பதிலளிநீக்கு