புதன், ஏப்ரல் 07, 2010

மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த‌

அன்பு பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும்,ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் சரி.

நம்ம ஊர்ல பப்பாளி , செம்பருத்திச்செடியெல்லாம் பட்டுப்போச்சுன்னு தெரியுமா, தெரியாதான்னு தெரியலை.

அதே மாதிரி அடுத்து கொய்யாச்செடியும் ஒரு வகை மாவுப்பூச்சியின் தாக்கத்தால் அப்படியே சுருங்கீட்டு வருது. இது அடுத்து சப்போட்டா , மாஞ்செடி, அப்படியே வயல்களிலும் பல வகையான செடிகளில் பரவீட்டு வருது.

இந்த வகையான வெள்ளை மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ஒரு நல்ல தீர்க்கமான யோசனை யாராவது சொல்லுங்க நண்பர்களே.

இப்படித்தான் முந்தா நேத்து கோடை எப்.எம். 100.5 ல் காலை 7.15 நிமிடத்துக்கு பாட்டுக்கு இடையில ஒரு அறிவிப்பு "வயல்களில் ஒரு வகையான மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக காணப்படுவதால் இந்த பூச்சியினைக் குறைக்க பூச்சி புடிச்ச செடியினைப் வேரோடு பிடுங்கி தீ வெச்சுருங்க , அல்லது அப்படியும் குறையவில்லை அப்படின்னா இரசாயன மருந்து தெளிங்க" அப்படின்னு சொன்னாங்க . அந்த மாதிரி இல்லாம நல்ல யோசனையா கொஞ்சம் சொல்லுங்க.


....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக