செவ்வாய், ஏப்ரல் 13, 2010

சம்போ சிவ சம்போ

பல சாமியார்களைப்பற்றியும் கடந்த சில நாட்களின் பரபரப்பில் படித்திருப்பீர்கள்.

ஆனால் ஒரு சாமியாரைப்பற்றி யாரும் படித்திருக்கமாட்டீர்கள். அவரைப் பற்றிய ஒரு சுவராசியமான வெப்சைட் இன்று படிக்க நேர்ந்தது. நீங்களும் படிக்க கீழே முகவரி உள்ளது ............


குமுதத்தின் ஆள்தூக்கும் வேலைக்கும் ஒரு நல்ல உதாரணம் இந்தக் கட்டுரை.



“இருபது வருடங்களுக்கு முன் முதன் முதலில்
அவர் எனக்கு அறிமுகமானது சஹஜஸ்திதி யோகா
என்னும் யோகாசனத்தை கற்றுக்கொடுக்கும்
மாஸ்டராக. பங்களூர் ரெஸ்டாரண்ட் ஒன்றில்
கோழி இறைச்சி சாப்பிட்டுக்கொண்டிருந்த
அதே ஜக்கி தான் இவர் என்பதை நினைத்துப்
பார்க்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. “

“தன் மனைவி விஜியின் கொலை அல்லது
தற்கொலைக்கு காரணமாக இருந்தவர் என்று
10 -12 வருடங்களுக்கு முன் இவர் மீது
போடப்பட்டு இருந்த வழக்கு எப்படி
முடிக்கப்பட்டது என்றே வெளியில்
தெரியவில்லையே “

“இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில்,தப்பித்தவறி யாராவது
கேள்வி கேட்டு விட்டால், கேள்வி கேட்டவரை அதே
நிகழ்ச்சியிலேயே அவமானப்படுத்தாமல் விடமாட்டார்.
மூர்க்கமான (arrogance), குதர்க்கமான
பதில்கள் தான் வரும்.ஏன் தான் கேட்டோமோ என்று
கேட்டவர் நொந்துக்கொள்ளவும், அடுத்தவர் யாரும்
கேள்வி கேட்கத் துணியாமல் இருக்கவும் தான்
இத்தகைய பதில்கள் என்பது எனக்கு புரிந்தது.

“வன விலங்குகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள
விரும்பிய ஒரு அமைப்புக்கு சுற்றுப்புற சூழல்
பாதிக்கப்படும் என்று காரணம் கூறி சிறிய அளவிலான
இடம் கூடத்தர மறுத்த அரசாங்கம்
ஆயிரக்கணக்கான பசுமரங்களை வெட்டிச்சாய்த்து
நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஹால்களும், குடியிருப்பு
பகுதிகளும், விருந்தினர் விடுதிகளுமாக
கான்க்ரீட் காடுகளாக இந்த ஆசிரமம் அமைய
வெள்ளியங்கிரி மலைக்காட்டில் அனுமதி கொடுத்தது
எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது.”

“ஆசிரமத்திற்கு போகும் வழியிலும், உள்ளேயும்
ஆயிரக்கணக்கான மின் விளக்குகளும்,
எக்கச்சக்கமான டெசிபல் ஒலிகளுடன் ஒலிபெருக்கிகளை
அமைத்து நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளும் சூழ்நிலையை
மாசுபடுத்துவது அரசுக்கு தெரியவில்லையா ?”

“வருடந்தோரும் சிவராத்திரி அன்று இங்கு நடக்கும்
நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வருவதும்,
வனத்தை மாசுபடுத்தும் வகையில் அவை பெட்ரோல்,
டீசல் புகையை வெளியிடுவதும் எப்படி பொறுத்துக்
கொள்ளப்படுகிறது ?”

“லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடுவதாக போலியாக
மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களைச் செய்வதும்,
வெள்ளியங்கிரி மலையை சுத்தப்படுத்துவதாக வரும்
பக்தர்களுக்கு குப்பை பை கொடுப்பதும் எந்த அளவிற்கு
இவர் செயலை நியாயப்படுத்தும் ?”

இனி முக்கியமான ஒரு விஷயத்திற்கு வருகிறேன்.
குமுதம் பத்திரிகை எதைச் செய்தாலும் அதில் ஒரு
வியாபார நோக்கு நிச்சயமாக இருக்கும். அது
வியாபாரம், விளம்பரம் என்பது வெளியே தெரியாத
அளவிற்கு சூட்சுமமாகச் செய்வார்கள் !
நித்யானந்தாவை நம்பி பல தமிழர்கள் மோசம்
போனதற்கு குமுதமும் ஒரு முக்கிய காரணம்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இதில் ப்ரியா
கல்யாணராமன் என்பவர் ( பெண் பெயரில் எழுதும்
ஆண் தான் ) எழுதும் ஆன்மிகத் தொடர் ஒன்றை
“சம்போ சிவ சம்போ” என்ற பெயரில் ஆரம்பித்தனர்.
(அது இன்னும் தொடர்கிறது )

கடந்த 3 ஜென்மங்களின் நினைவு
எனக்கு இன்னும் இருக்கிறது ….

20,000 கோடிக்கு சொத்துக்கு அதிபதி ….
(பகுதி -4 )

சென்னையிலும், டெல்லியிலும் கைலாசம்-மானசரோவர்
யாத்திரைக்கு வழக்கமாக அழைத்துச்செல்லும் யாத்திரைக்
குழுக்கள் நிறைய இருக்கின்றன. இவை வர்த்தக
ரீதியில் செயல்படுகின்றன.அதை விளம்பரம்
கொடுத்தும் செய்கின்றன.

இவை சாதாரணமாக அனைத்துச் செலவுகளும் உட்பட
வசூலிக்கும் கட்டணம் -

ரூபாய் 61,000/- முதல் 65,000 வரை.


தொடர்ந்து படிக்க ..........

(http://vimarisanam.wordpress.com/2010/04/07/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81/#comment-95)


....

1 கருத்து:

  1. என்னங்க....நீங்களும் கோமுவும் சாமியார்கள ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல.....பாத்துங்க சூனியம் வெச்சிரப் போறாங்கெ!

    பதிலளிநீக்கு