சென்ற வாரம் உறவினர் வீட்டுத்திருமணத்திற்க்காக கோவையில் இரு நாள்தங்கவேண்டியிருந்தது. அங்கு நடைபெற்ற விருந்து வைபவத்தில் மூன்றுவேளை பந்தியையும் பரிமாறியவர்களைக் கண்டால் சற்றே சந்தேகம் எழுந்தது.
ஏனெனில் ஒரே வயது, முகத்தில் ஒரு தெளிவு , உடை நயம் அனைத்தையும்பார்த்தால் கல்லூரி மாணவர்கள் போன்று தோன்றியது.
அவர்களில் ஒருவரை அழைத்து கேட்ட போதுதான் ஆம் கல்லூரி மாணவர்கள் என்று கூறினார்கள். எந்தக்கல்லூரி என்ற போது அவர்கள் கோவை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள என்ஜினியரிங் கல்லூரி ஒன்றை சொன்னார்கள்.
இதற்கு என்ன தருகிறார்கள் என்ற போது ரூ 500 முதல் 600 வரை ரகங்களைபொறுத்துக்கிடைக்கும் என்றார்கள்.
பரவாயில்லை, படிக்கிற வயதில் சம்பாதிக்கிறார்கள் என்று நினைத்தால் இரவு
11.00 மணி அளவில் அனைவரும் தண்ணியில் மிதந்தார்கள். மறு நாள்விடுமுறையாக இல்லாமல் வேலை நாளாக இருந்தால் கல்லூரிக்கு லீவுபோட்டு விடுகிறார்கள்.
இவர்களின் பெற்றோர்களின் நிலை :
பையன் காலேஜ்ஜில் என் ஜினியரிங் படித்துக்கொண்டு இருப்பான் என்றுநினைத்துக்கொண்டு அவர்கள் தன் வாயைக்கட்டி ,வவுத்தைக்கட்டி பணம்அனுப்பினால் இவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் கல்யாண மண்டபங்களுக்குச் சென்று சர்வர் வேலை பார்ப்பது என்ன நியாயம் ? இது தெரிந்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும் ?
கல்லூரி நிர்வாகம் தூங்குகிறதா? கல்லூரியின் பெயர் கெடாதா ?
அவர்களுக்கு பணம் ஒன்றே குறியா ?
கல்யாண மண்டபத்தாரும் , கல்யாணசமையல்காரரும் , கல்யாணக்காரரும், கல்லூரிக்காரரும் சற்றே யோசியுங்கள்.
கல்லூரி மாணவனைக் கெடுக்காதீர்கள் !
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக