செவ்வாய், ஜூலை 13, 2010

நித்தியானந்தாவும், சன் தொலைக்காட்சியும்


ஒரு விசயத்தை எப்படி வேண்டுமானாலும் திரிக்கலாம் , அதுக்கு உதாரணமாத்தான் ஒரு மேட்டரை நான் இப்ப திரிக்கப்போறேன்.

பொதுவா நம்ம ஊருல ஒரு வழக்கு மொழி உண்டு, அது என்னன்னா நல்லதனமாகவோ , கள்ளத்தனமாகவோ ஒரு ஜோடி இணைந்து இருக்கும்போது அவங்கள டிஸ்டர்ப் செய்யக்கூடாது , செஞ்சா செஞ்சவனுக்கு கொஞ்ச நாளுக்கு நடக்கறதெல்லாம் கொஞ்சம் மோசமாகத் தானிருக்கும். அது மாதிரித்தான் நம்ம சன் டிவிக்கதையும்.

நித்தியானந்தாவைப்போட்டு ஒரு நாள்ப்பூராவும் திருப்பித்திருப்பி காட்டி , நித்தியோட சாபத்தையும் , கூட இருந்த அம்மிணியோட சாபத்தையும் நல்லா வாங்கிக் கட்டிக்கிச்சு சன் டிவி. சாமியாருங்க‌ எல்லாருமே அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரைக்கும் ஒரே மாதிரித்தான். கோபப்பட்டா சாபம்தான்.

அப்புறம் அதோட கொஞ்சம் மக்கள் கோபம் வேற.

அதாவது சன் டைரக்ட் அப்படிங்கற டீடிஹெச் சேவையை ஆரம்பிச்சது முதல்
ரூ 500 க்கு 300 சேனல் அப்படின்னு சொல்லி சரி வாங்கலாமுன்னு கேட்டா கூட ரூ 1200 நிர்மாணக்கட்டணம் அப்படின்னு கொள்ளை லாபம் அடிக்கிறது. 300 சேனல் வந்தாலும் நமக்கு கெடைக்கிறது சன் சேனல் , கலைஞர் சேனல், விஜய் சேனல், மட்டுமே, இதில இசை அருவி, ஜெயா மேக்ஸ், சிரிப்பொலி கிடையாது. ஏன்னா அது வந்தா இவங்க சன் மியூசிக் படுத்துக்கும் . ஆனா ஜெயா நியூஸ் , கலைஞர் நியூஸ் வரும் .

இதெ ஏர்டெல்,ரிலையன்ஸ் , டிஸ் டிவி , டாடா ஸ்கை இவங்க இதெல்லாம் கொடுப்பாங்க. அவங்களுக்கு இவங்க கொடுக்கற சன்டிவி குருப் சேனல் ஆடியொ எல்லாம் ஒரு நார்மல் லெவல்லதான் வரும் , கேபிள் டிவியில் கூட நல்லா வரும்.

புதுசா வந்த வீடியோகான் மாசம் ரூ 150 க்கு தமிழ்ல் எல்லா சேனலும் , கூடவே டிஸ்கவரி , அனிமல் பிளானட், நேசனல் ஜியோ, நியோ, ஸ்டார், ஈஎஸ்பின், ஜீ, என 7 ஸ்போட்ஸ் , எம்ஜிஎம் உட்பட சில ஹிந்தி திரைப்பட சேனல்களையும் கொடுக்கும். இது மட்டுமல்லாமல் எந்த சேனல் தமிழ்ல் டிராண்ஸ்லேட் பண்ணீ வந்தாலும் ஆட்டோமேடிக்கா வரமாதிரியும், தமிழ் மெனுவையும் கூட வச்சுக்கற மாதிரி ஆப்சன் தந்திருப்பது இன்னும் விசேசம்.

இதானால் மட்டுமல்லாமல் அதிக விலைக்கு குறைந்த சேனல்களை அளிப்பதால் மக்களுக்கு சற்றே சன்னின் மீது கோபம் இருந்தது.

இந்த இரண்டு விசயங்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது , விண்ணீல்
இருந்த இன்சாட் 4பி சேட்டிலைட்டில் இருந்த சூரியசக்தி தகடு ஒண்ணு பொகைஞ்சு போச்சு , கூடவே வந்திட்டு இருந்த தூர்தர்சன் தப்பிச்சுகிருச்சு. சன் டைரக்ட் ஊத்திக்கிச்சு. இன்னும் ரெடியாகலை.

எப்பவுமே குவாலிட்டியிலதான் ஜெயிக்கணும் , அடுத்தவனப்போட்டு அமுக்கறதுல இல்லைன்னு எப்பத்தான் சன் புரிஞ்சுக்குமோ ?

நல்லா யோசனை பண்ணிப்பாருங்க. தூர்தர்சனும் , சன்னும் ஒரே சேட்டிலைட்டில வந்திட்டு இருந்தது. சன் மட்டும்தான் ஊத்திகிருச்சு . இப்ப தெரியுதுங்களா !

ஆண்பாவம் பொல்லாது அப்படிங்கறதை !


..

2 கருத்துகள்:

  1. சிரிப்பாக சொன்னாலும் நல்ல பதிவு, நானும் உங்கள் கட்சி தான்.

    சன் தொலைக்காட்சியின் வியாபாரம் எதிர் மறை எண்ணம் கொண்டது.
    எனவே தான் இன்னமும் airtel super சிங்கர் ஐ நெருங்க கூட முடிய வில்லை.
    புதிதாக தொடங்க உள்ள போட்டிக்கு காலை நாலு மணிக்கே பாடகர்கள் வரிசையில் வந்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா இது இப்போதான் எனக்கு தெரியும்

    நல்ல செய்தி

    பதிலளிநீக்கு