செவ்வாய், டிசம்பர் 06, 2011

முல்லைப்பெரியாறு- ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

முல்லைப்பெரியாறு அணையைக்கட்டிய" பென்னிகுயிக்" ஆத்மா சாந்தியடைந்திருக்கும்.இல்லையென்றால் இன்னைக்கு கண்டிப்பாக வருத்தப்பட்டிருக்கும்.

சொத்தை விற்றுக்கட்டிய அணையை நாம் எவ்வளவு தூரம் மதிக்கிறோம் என்பதை அவரின் ஆத்மா கண்டிப்பாக மன்னிக்காது..

1978இல் நீர்மின்சக்திக்காக கட்டிய இடுக்கி அணை முல்லைப்பெரியாறின் கொள்ளளவை விட 70 மடங்கு பெரியது..ஆனால் அதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? முல்லைப்பெரியாறு நிரம்பி வழிந்து வரும் தண்ணீர்தான் ..அதற்கு என்ன வழி..தமிழகத்திற்கு செல்லும் நீரை மறித்து இங்கே அனுப்ப வேண்டும்.

இந்த காரணங்களை முன்னிறுத்தி மறைமுகமாக 1978 ‍ல் மனோரமாவில் ஒரு கட்டுரை வெளிவந்தது..அந்தகட்டுரை முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது..கூடிய விரைவில் மூன்று மாவட்டமக்கள் நீரில் மிதப்பார்கள் என பீதியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதனை மற்ற ஊடகங்களும் ஊதிப் பெரிது பண்ணிவிட்டன..கேரள அரசியல்வாதிகளும் வேறு வழியில்லாமல் புலிவாலைப் பிடித்து விட்டு இன்று வரை தொங்கி கொண்டிருக்கின்றனர்..

அன்று அவர்கள் சொன்ன காரணம் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அணையின் ஆயுள் காலம் வெறும் 50 ஆண்டுகள் என்று..ஆனால் சொல்லும்காலத்திலேயே 100 ஆண்டுகள் ஆகி விட்டது..

இன்றோ நாளையோ உடைந்துவிடும் என்று 78களில் சொல்லப்பட்டு இன்று 35 ஆண்டுகள் ஆகியும் அணை நன்றாகத்தான் உள்ளது..மேலும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அணையில் இரும்புக்கம்பிகளையும் காங்கிரிட் கலவையும் கொண்டு பில்லர் ஏற்படுத்தியும்,அணையை தண்ணீர் தேங்கும் பகுதியில் 3 அடி அளவில் காங்கிரிட் கலவையை கொண்டு தொப்பி அமைப்புகொண்டு பலப்படுத்தி உள்ளனர்,,,

இதற்கு மேலும் அணையை பல வல்லுனர்கள் ஆராய்ந்து அணை நல்ல நிலையில் உள்ளது என்று சர்டிபிகேட் கொடுத்தாலும் 136 இல் இருந்து நீர்மட்டத்தை 142க்கு உயர்த்த அனுமதிக்காத காரணம் நீர்மட்டம் குறைந்தகாலங்களில் தண்ணீர் இல்லாத இடங்களை ஆக்ரமித்த அரசியல்வாதிகளின் நிரந்தரவருமானம் தடை பட்டுவிடும் என்பதே..

அணையை ஏன் உடைக்கவேண்டும் ..அதற்கு காரணம் அணை உடைந்தால் இடுக்கி,குமுளி,எல்லப்பாரா மக்கள் தண்ணீரில் மிதப்பார்கள் என்று..ஆனால் உண்மை வேறு..இந்த மூன்று இடங்களும் அணையின் தண்ணீர் வெளியேறும் பகுதியை விட அதிக உயரத்தில் இருக்கின்றன ..

இவர்களுக்காக வேதனைப்பட்டும்,அச்சத்திலும் இருப்பதாக காட்டும் கேரள அரசு ஏன் டேமில் நடைபெறும் படகுசவாரியை இது வரை நிறுத்தவில்லை..அணை உடைந்தால் அவர்கள் அதே படகுகளில் அரபிக்கடல் வரை பாதுகாப்பாக போய்விடுவார்களா?

இதற்கு எல்லாம் யார் காரணம் வரலாற்றை ஆராய்ந்தால் சற்று விளங்கும்..

காமராஜர்தான் இதற்கு காரணம்..கேரள அரசாங்கம் தேவிகுளம்,பீர்மேடு,மூணாறு ஆகிய பகுதிகளை கேட்டபோது தமிழர்கள் இருந்தாலும் அந்த பகுதி கேரளாவிற்கு போனாலும் இந்தியாவிற்குள்ளேதானே இருக்குது என கூறியதே..

இதற்கு தீர்வுதான் என்ன?

முல்லைப்பெரியாறின் மூலம் நம் தென்மாவட்ட மக்கள் பெறும் தண்ணீர் அளவு 1850 டிஎம்சிதான்..ஆனால் சென்னையில் மலையாளிகளின் டீக்கடைகள் 40000 இருக்கின்றது..அவர்கள் தமிழகத்தில் இருந்து எடுக்கும் தண்ணீர் அளவு 8500 டிஎம்சி..இதைக் கணக்கிட்டால் அவர்கள் முல்லைப்பெரியாறு பற்றி வாயே திறக்கக்கூடாது.

மேலும் புதிய டேம் கட்டுவதுதான் தீர்வு என்றால் அந்த டேம் கட்டும்போது அந்த அணையின் பராமரிப்பு,பாதுகாப்பு விடயத்தில் தமிழகத்துக்கு உரிமை இல்லை என்ற சரத்து நீக்கப்பட்டு அணையின் மீதான அனைத்து உரிமைகளும் தமிழகத்துக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும்..இல்லையெனில் தமிழகத்துக்கு சொட்டுத்தண்ணீர்கூட கிடைக்காது..

அவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களையும்,வருமானம் கொடுக்கும் அய்யப்ப பக்தர்களையுமே தாக்கும் அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்பதே உண்மை..

வன்முறையை தமிழ் மக்கள் கையில் எடுக்கமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்டு மூலைக்கு மூலை டீக்கடைகளையும்,நகைக்கடைகளையும்,வட்டிக்கடைகளையும் திறந்து வைத்திருக்கும் சேட்டன்களுக்கு நேரம் கொஞ்சம் கெட்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது..

கடவுள் தேசம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதை அந்த அய்யப்பனும் கூட மன்னிக்கமாட்டான் என்பதை கடந்த ஆண்டு ஜோதி தரிசனக்கதையிலேயே தமிழ்மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இல்லையெனில் நாமும்,அவர்களைப் போல் மூணாறு,பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டியதுதான்..பதிலுக்கு பதில் வேறு வழியில்லை.

...

3 கருத்துகள்:

  1. சரியாய் சொன்னிர்கள்.காவிரிக்கு கை ஏந்துவது போல இவர்களிடம் ஏந்த வேண்டும் என்று நினைக்கின்றனர்...

    பதிலளிநீக்கு
  2. வோர்ட் வெரிபிகேசன் நீக்குங்கள் ..

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோவை நேரம் அவர்களே

    பதிலளிநீக்கு