வெள்ளி, நவம்பர் 27, 2009

மனதை ஆய்வு செய்தல்

மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அமைதியானவர்கள் திடீரென ஆர்ப்பாட்டம் ஆகலாம். ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் திடீரென அமைதியாகலாம். எனவே சமூகத்தில் நாம் எதையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும் என்பதே நமது நிலைமை. எது நடந்தாலும் நன்மைக்கே என்ற கீதாசாரத்தை நாமும் பின்பற்றுவோம்.


அதுபற்றி தமிழ்மணக் கட்டுரை ஒன்று.

மனதை ஆய்வு செய்தல் -நல்ல எண்ணங்களை மனதில் விதைப்போம்
Krishnakumar

மனதை ஆய்வு செய்தல்

மனதை பற்றி பலதரப்பட்ட ஆராய்சிகள் நடந்துள்ளன .ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக வளர்வதும் அவனுடைய வளர்க்கப்படும் சூழ்நிலையே என்பது மனவியல் நிபுணர்கள் கருத்து.ஒரு மனிதனுக்குள் வன்முறை என்பது எப்போதும் தூங்கி கொண்டு இருக்கும்.அது எதாவது ஒரு ரூபத்தில் வார்த்தைகளாக அல்லது தாக்குதலாக வெளிவருகிறது என்பதும் அவர்கள் ஆராய்ச்சி முடிவு .ஆனால் அப்படிப்பட்ட மனதையும் மிகவும் அழகான நறுமணம் வீசும் தோட்டமாக ஆன்மிகத்தின் மூலவும் யோக போன்ற பயிற்சிகளின் மூலவும் மாற்ற முடியும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து .

மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையைய் மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களை கட்டி விட்டு, எதிரில் தலையணையைய் வைத்து இதை எதிரி என்று நினைத்து குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்து சிரித்தார்… தலையணையைய் எப்படி குத்துவது? என்று. இந்த தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.

வன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைய் காற்றிடம் காற்றலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிபடுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கி குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருப்பித்தாக்கலாம்.ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.

“நமது பகைமையைய் காற்றிடம் காட்டலாம். தலையணையிடம் காட்டலாம்.
அவை நம்மை எதிர்க்காது. நமக்கு மற்றொருவரின் பகைமையைய் உருவாக்காது”.

நமது மனதை திடபடுதுவோம் .நல்ல எண்ணங்களை விதைப்போம் ....விதைகள் நறுமணம் வீசும் பூக்களாக மலரட்டும் ...வாழ்த்துக்கள்

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக