இன்னிக்கு வழக்கம் போல திருப்பூர்க்கு கவர்ன்மென்ட் பஸ்ஸுல வந்துட்டு
இருந்தம். பஸ் ஸ்டாண்ட்க்குள்ள போயி ஈரோடு ரேக்குக்கு பஸ் போகும் போது வழக்கமா எப்பவும் டிராபிக் இருக்கும்.
எப்பவுமே திருப்பூர்க்குள்ள நுழையும்போதே டிராபிக்கில சலிச்சுப்போயித்தான்
டிரைவருங்க பஸ் ஸ்டாண்டுக்குள்ள வருவாங்க. இன்னைக்கும் அதேதான் நடந்தது.
இதுல காலைல ஒன்பது மணிங்கறதால சன நெரிசல் வேற. எல்லாருக்கும்
வேலைக்கு போற அவசரம். நம்ம டிரைவருக்கு ரேக்குல போட்டுட்டு உச்சா
போற அவசரம். மழை வேற.
போட்டாரு ஒரு ஹாரன, அட சும்மா போயிட்டுருந்த பெண் போலிஸ் , 2 ஆண் போலிஸ் , அப்புறம் ஒரு 40 வயசு மதிக்கதக்க ஒருத்தர் திரும்பி பார்த்தாங்க. வயசானவர் டிரைவர பாத்து "தம்பி ஹாரன ஒருக்கா அடி"
அப்படின்னாரு. நம்மாளும் புரியாம அடிச்சாரு.
அதுக்குள்ள ஒரு நாலு பேரு பஸ்ஸுக்கு முன்னாடி வந்து அட ஹெட்லைட்
நாலு இருக்கு அப்படின்னு கழட்ட ஆரம்பிச்சாங்க. ஒரு ஆளு உள்ள புகுந்து ஹாரன கழட்ட "அப்புறந்தான் தெரிஞ்சது "ஆர்டிஓ" ரெய்டு அப்படின்னு".
கவர்ன்மென்டு பஸ்ஸுதான் எரியுதா, இல்லையானுகூட பாக்காம இதென்ன
வெளையாட்டு அப்படின்னு கண்டக்டர் ஓடியோடி ஆர்டிஒ கிட்ட சார் ரெண்டு
பல்பு எரியாதுங்க, ஒண்ணாச்சும் குடுங்க அப்படின்னு கெஞ்ச
அந்த நேரம் பாத்து இன்னொரு பஸ்காரரு "பாம் பாம்" ஹாரன அடிக்க
எல்லோரும் அந்த வண்டிய நோக்கி ஓட அங்கிருந்த ஹாரன பிடுங்கி
கீழ போட்டு கால்ல போட்டு ஒருத்தரு மிதிக்க ஹாரனு ரெண்டாப் போச்சு.
அப்ப பாத்து ரெண்டு பஸ்ஸு இன்னொரு சந்துல புகுந்து நாலு ஹெட்லைட்டோட போக நம்ம கண்டக்டர்க்கு வயிரெல்லாம் ஒரெ எரிச்சல்.
அவனுத பிடுங்கல , நம்மளுது மட்டும் போச்சேனு.
ஏன்னா ஹாரனும் போச்சு, லைட்டும் போச்சு ,ரெண்டுமே வாங்குனதுல்ல
அவருக்கும் பங்குத்தொகை உண்டு,
"ஆமாமா ,கவர்ன்மெண்ட் பஸ்ஸுல ஏதாவது ஸ்பெசலா வேணுமின்னா டிரைவரும், கண்டக்டரும் கைக்காசு போட்டுக்க வேண்டியதுதான்."
இதையெல்லாம் விட இன்னொரு கூத்து,
நம்ம பிரண்டுக்கு நடந்தது.
ஒரு நாள் கம்பெனி மானேஜர் வேலையா சான்ட்ரோவில் கோவை போகும் போது அண்ணா சிலை சிக்னல்ல நம்மாளு நிக்க அப்பப்பாத்து ரெண்டு போலிஸ் ( ஒரு ஆணும் ஒரு பெண்ணும் )
"ஹலோ ஹலோ "அப்படின்னு சன்னல தட்ட, நாம்மாளு என்னமோ ஏதோனு
சன்னல நீக்க "என்ன முன்னாடி நாலு ஹெட்லைட் போட்டு வெச்சிருக்கீங்க "
அப்படின்னு சொல்ல , நம்மாளு நாலு ஹெட்லைட்டா இது என்ன வம்பாயிருக்கு , நம்ம மேனேஜரு எப்ப நாலு லைட்டு மாட்டுனாரு முழிக்க
அதுக்குள்ள அவிய ரெண்டு அய்யா கூப்புடுறாரு ,அங்க நிக்கிறாரு அப்ப்டினு
சொல்ல ,செரியாப்போச்சு அப்படின்ன்னு வண்டிய அப்படியே இன்ஸ்பெக்டரு ஓரமா கொண்டுவந்து நிறுத்தி இவரும் இறங்கிப்போக
அங்க இதுதான் நடந்தது ,
ஏய்யா அறிவிருக்கா இல்லையா உனக்கு , பார்க்கிங் லைட்டப்போயி ஹெட்லைட் அப்படின்னு கொண்டு வர்றியே அப்படின்னு இன்ஸ்பெக்டரு கான்ஸ்டபிள திட்டி நம்மாள பாத்து
" நீங்க போங்க சார் ,இந்த ஆளுக்கு எது லைட்டு, எது இண்டிகேட்டருனே தெரியாம உங்கள கூப்பிட்டு போட்டாப்புல, சாரி சார் " அப்படின்னு சொல்ல
நம்மாளு அடக்கருமமே அப்படினு விதிய நொந்து வந்துட்டாப்புல.
(இப்படித்தான் இன்னைக்கு ரெய்டு பஸ் ஸ்டாண்டுல நடந்தது. ஒரு பஸ்ஸூல நாலு லைட்டுல மூணு லைட்ட பிடுங்கிட்டாங்க. ஒரு பஸ்ஸ டிரைவர் கழட்ட வேண்டாமுன்னு சொல்ல ஆர்டிஒவே அந்த பஸ்ஸ எடுத்து சீஸ் பண்ணிட்டு அவரு ஆபிஸுக்கு போயிட்டாரு.)
....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக