வியாழன், டிசம்பர் 24, 2009
அவினாசி அத்திக்கடவு திட்டம்
நீண்ட நெடுங்காலமாக அவினாசி அத்திக்கடவு திட்டம் என்பது திருப்பூர் ,ஈரோடு மாவட்ட மக்களின் கனவாகவே இருந்து வருகிறது. இத்திட்டம் நிறைவேற பலகோடிகள் செலவாகும் என அரசால் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் நம்மால் சொல்ல முடிந்த ஒரு எளிய வழி :
தற்போது 100 நாள் வேலைத்திட்டம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு மாநில அரசால் நிர்வகிக்கப்படும் ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நடைபெற்றுவருகிறது.
தேவையில்லாமல் ரோட்டோரத்தில் மண்ணை அள்ளூவதும் கொட்டுவதுமாக ஒரு நாளுக்கு இரண்டு மணீ நேரம் மட்டும் நடைபெறுகிறது.
இதையே கோவை ,ஈரோடு , திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சற்றே மாறுதல் செய்து , அத்திக்கடவு முதல் ஊத்துக்குளி , பெருந்துறை வரை ஒவ்வொரு பஞ்சாயத்திலும் வாய்க்கால் வெட்டச் செய்தால் ஒரு ஆண்டோ அல்லது இரு ஆண்டோ திட்டம் நிறைவு பெறும் என்பதில் அய்யமில்லை.
மாற்றுக்கருத்துடையவர்கள் பின்னூட்டம் இடலாம்.
பட உதவி : பிளிக்கர்
....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக