நொய்யல் ஆறு
நொய்யல் ஆறு , அதன் தன்மையை பற்றியும் குறைந்தபட்சம் 2 கிமீ ஆவது
சுத்தப்படுத்துவது பற்றி 10 ஆவது மாதம் (2009) எழுதியிருந்தோம். அது என்ன நேரமோ தெரியவில்லை. அனேகமாக நல்ல நேரமாகத்தான் இருக்க வேண்டும்.
http://voipadi.blogspot.com/2009/10/blog-post_22.html
தற்போது வளம் அமைப்பு (கோவையின் சிறுதுளி போன்று) இந்த வேலையை
ஏற்று அதன் பணிகள் மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.
வளம் அமைப்பின் பணிகள் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.
நொய்யலை தூர்வார வளம் அமைப்பு முடிவு
First Published : 06 Dec 2009 01:54:15 AM IST
Last Updated :
திருப்பூர்,டிச.5: திருப்பூர் நொய்யல் ஆற்றை தூர்வார உள்ளதாக வளம் அமைப்பு தெரிவித்துள்ளது.
திருப்பூர் நொய்யல் ஆற்றில் முட்புதர் மண்டிக் கிடப்பதால் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. மேலும் போதிய பராமரிப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்ட வளம் அமைப்பு, நொய்யலைத் தூர்வார முடிவு செய்துள்ளது.
இது குறித்து வளம் அமைப்பின் நிர்óவாகி ரத்தினசாமி கூறியது:
திருப் பூர் நகரின் மையப்பகுதியில் செல்லும் நொய்யல் ஆற்றில் முட்புதர்கள் நிரம்பியுள்ளதால், குமரன் சாலை பாலம் முதல் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக