அண்மையில் ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் வரை கோவிலுக்கு செல்லலாம் என்று ஈரோட்டில் இருந்து இருக்கும் பஸ்ஸுக்கு ஒரு வாரம் முன்பே புக் செய்து டிக்கட்டும் பெற்றாகி விட்டது.
கிளம்ப வேண்டிய தினத்தன்று எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஆடியோ, வீடீயொ சாங்க் காசட்டுகளையும் எடுத்து வைத்திருந்தேன். பஸ் இரவு 7.40 மணீக்கெல்லாம் கிளம்பியது. படம் எதுவும் போடாமல் இருந்த நிலையில் டிக்கட் கொடுத்து முடித்த பின்பு கண்டக்டர் "மாயாவி" படத்தை போட்டார்,
வீடியோ நன்றாக இருந்தாலும் ஆடியோ ஏதோ திருவிழாவுக்காக கட்டிய குடை ஸ்பீக்கரில் வரும் ஒலியைப் போன்று நாரசமாக இருந்தது.கொஞ்சதூரம்தான் படத்தை நிறுத்திவிட்டு கரூர் தாண்டும்வரை படம் எதுவும் இல்லாமல் வந்தது.
கரூர் தாண்டியவுடன் கண்டக்டர் எழுந்து எம் ஜி ஆர் படப்பாடல்களை போட்டு விட்டார்.
சவுண்ட் ?
அய்யோ ! காதுகளை ரணமாக்கி விட்டார். எத்தனையோ எம் ஜிஆர் பாடல்கள் இருந்தாலும் " நான் ஏன் பிறந்தேன் " டைப் பாடல்களை போட்டு குழந்தை குட்டிகளை தூங்கவிடாமலும் , நம்மையும் தூங்கவிடாமலும் செய்துவிட்டார்.
சிறிது தூரத்தில் ஒரு டீக்கடையில் நிறுத்திவைத்தனர். அப்போது கண்டக்டரிடம் நாம் "சார் புதுப்பாடல்கள் , மீடியம் சாங்க் கேசட் இருக்கிறது .போடுகிறீர்களா ? " என்று கேட்டதிற்கு " இன்னும் சிறீது தூரம் சென்றதும் நானே உங்களிடம் கேட்டு வாங்கி போட்டுவிடுகிறேன்" என்று கூறி விட்டார்.
சவுண்ட்டையாவது குறைக்கலாமே என்று கேட்டதிற்கு சற்றும் குறைக்கவில்லை.
அவரும் கேசட்டை கேட்பார் என்று பார்த்தால் , எம்ஜிஆர் படப்பாடல் முடிந்தது சிவாஜி படப்பாடல்களை போட்டு விட்டார். இப்படியே கொடுமையினும் கொடுமையாக காலை 4.30 மணீக்கு திருச்செந்தூர் கொண்டு போய் விட்டே விட்டார்.
இப்பத்தான் தெரியுது, ஏன் பிரைவேட் ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று .
எல்லாமே புக்கிங் டிக்கெட்தான் , நிம்மதியா தூங்கிட்டு காலையில போயி முருகனை தரிசிக்கலாமுன்னு நினைச்சா இவனுங்க கொடுமை ரொம்பத்தான் இருக்குது. லாங் ரூட் வண்டியில எல்லாம் வீடியோ வைக்கல அப்படின்னு எவனாவது இவங்ககிட்ட கேட்டாங்களா ?
என்ன செய்ய ! எல்லாம் நம்ம தலையெழுத்து!
இதைப்பற்றி இன்னும் தெளீவா ஒரு கம்ளெயிண்ட் அனுப்ப இருக்கேன் ,நீங்க என்ன சொல்லறீங்க ?
..
unga pudhu pattu cd potta mattum okaaaa?????
பதிலளிநீக்குபெயரில்லாமல் ஏன் வந்தீங்க ? ஒன்னும் கொறவலிய கடிச்சிரமாட்டோம்.
பதிலளிநீக்குபுதுப்பாட்டு அல்லது படம் அல்லது மீடியம் ஏதேனும் ஒன்று , ஏன்னா வகை வகையா சிடி வச்சிருந்தோம். ஆனா அவரு நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுனு ஒரே சிடியை போட்டு கொன்னே போட்டாரு.
இந்த மாதிரி அனுபவங்களை நீங்களும் அனுபவித்தால்தான் தெரியும் எப்படின்னு!
திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,
பதிலளிநீக்குநாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.
அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)
தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.
வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..
அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...
நன்றிகள் , நம்மை நினைவில் வைத்து நம் வலைக்கு வந்ததற்கு. தங்கள் வலையமைப்பு பற்றிக் கேட்டதும், நண்பர்கள் குழுவாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மகளிர் பள்ளி சார்பாக என்பது அறிந்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி இன்னும் சற்று கூடுதலே.மேலும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாமும் ஒரு படிக்கல்லாக அமைந்ததில் எங்களுக்குமேலும் ஒரு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வாய்ப்பாடி குமார்.