சனி, அக்டோபர் 09, 2010

திருப்பூர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஏழு காரணங்கள்

1.எனக்கு ரெஸ்ட் எடுக்கப் பிடிக்காது.

2.நான் என்னோட குழந்தைப்பருவத்திலேயே வாழ்க்கையை போதுமான அளவு அனுபவித்து விட்டேன்

3.எனக்கு டென்சன் ரொம்ப பிடிக்கும்.

4.பேமிலியுடன் டைம் செலவழிப்பது எனக்குப் பிடிக்காது

5.அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமைகளிலும்,விடுமுறை நாட்களிலும் வேலை பார்ப்பது எனக்குப் பிடிக்கும்

6.என்னை அடிமைப்படுத்திக் கொள்வது எனக்கு விருப்பமான ஒன்று.

7. மரியாதையே இல்லாமலும் இந்த உலகத்தில் வாழமுடியுமா? அப்படின்னு வாழ்க்கையை ஒரு ஸ்டடி செய்வதற்க்காகவும் இந்த லைப்ப நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்

இந்த ஏழு காரணங்களை திருப்பூர் வாழ்க்கை அப்படிங்கறத விட டெக்ஸ்டைல் லைப் அப்படின்னு வச்சுப் படிச்சீங்கன்னா இன்னும் நல்லாருக்கும்.

..

6 கருத்துகள்:

 1. என்ன செய்வது, நண்பரே! வெளிநாட்டு வர்த்தகம் என்பது, கால மேலாண்மையைச் சார்ந்துள்ளது! உழைப்பைப் பழியாதீர்!கடும் உழைப்பு, மேன்மையைக் கொடுக்கும்!
  அண்ணாமலைப் படத்தில், வரும் சங்கதிகள், திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் மட்டுமே, சாத்தியம்!
  ஆம் நண்பரே! திருப்பூர் உழைப்பை உறிஞ்சும் நகர்தான்! ஆனால் அள்ளிக் கொடுக்கும் நகர்!
  உழைத்தவன் இங்கு சோடை போனதில்லை!
  தொழிலாளர் மட்டுமல்ல, தொழில் முனைவரும் சேர்ந்தே உழைக்கும் நகர் இது!

  பதிலளிநீக்கு
 2. நண்பர் குமார். வணக்கம் நலமா .. இன்று தான் உங்களுக்கு முதன் முதல் பின்னூட்டம் இடுகிறேன். உங்களின் ஏழு காரணங்களை நான் மதிக்கிறேன். அந்த காரணங்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி சொல்கிறேன். நன்று. அதே சமயத்தில், இந்த காரணங்கள் மாறும் - குறையும் , கூடும், மாறுபடும் அல்லது எதிர் நிலையை கூட அடையும் என்பதை நீங்கள் அறிந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன். மிக சில காரணங்களில் உங்களுடன் நான் உடன்படுகிறேன் நண்பரே, என்னுடைய களம் வேறாக இருந்தாலும்...
  ஒரு சிறு திருத்தம் /தெர்ந்தெடுத்து/ தேர்ந்தெடுத்து - என்று வர வேண்டும் நினைக்கிறேன்.
  ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னாலும் பல காரணங்கள் வலித்தது நண்பரே..
  (உ.ம்)
  //என்னை அடிமைப்படுத்திக் கொள்வது எனக்கு விருப்பமான ஒன்று// ஏன் நண்பரே ..?

  பதிலளிநீக்கு
 3. திருப்பூரில் ஒரு வேலையில் நீடிப்பதென்றால் இந்த காரணங்கள் கண்டிப்பாக இருந்தால் மட்டுமே முடியும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. அதுவுமில்லாமல் அண்ணாமலை படத்தில் வருவது போல ஓவர் நைட்டில் ஹீரோவாவதும், இந்த மாதிரியான ஒரு சில காரணங்களால் மட்டுமே முடியும்.

  "அடிமைப்படுத்திக் கொள்வது என்பது எனக்கு விருப்பமான ஒன்று" இது எடுக்கும் காரியத்தில் ஒன்றிக்கொள்வது என்ற அர்த்தத்தில் வந்த வார்த்தை. தொழில் நிமித்தம் , முதல் நாள் இரவு வேலைக்கு வந்து பகல் வேலையும் கன்டினியூ செய்து ,விடிந்தால் தீபாவளி இருந்தாலும் இரவு 10.30 மணிக்கு போனஸ் வாங்கி காலை 6.00 மணி வரை டையிங்கில் வேலை செய்த அனுபவம் நமக்கு உண்டு . இந்த மாதிரி வேலை செய்வது என்பது அடிமைப்படுத்திக்கொள்தல் என்றுதான் புரியப்படும் என்று நினைக்கிறேன்.

  நன்றி வேல் கண்ணன் அவர்களே. வாமுகோமுவின் வலையை நாம்தான் நிர்வகிப்பதால் இடையிடையே எனக்குத் தோன்றும் சில விசயங்களை அந்த தளத்தில் பகிர்ந்து கொள்வது நல்லதாக இருக்காது என்பதால் இந்த வலை அமைத்துள்ளோம்.


  தெர்ந்தெடுத்து என்பது தேர்ந்தெடுத்து என மாற்றப்பட்டுள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. "ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , பரிசல்காரன்-வலைப்பதிவர்க்கு,ரோஜா பூந்தோட்டம் வலைப்பதிவர்கள் கொலை மிரட்டல்..
  மேலும் படிக்க http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 5. tirupur life... machine life... you told the truth

  பதிலளிநீக்கு