புதன், நவம்பர் 10, 2010
மறக்கப்பட்ட மரணம்- தவமணி
தவமணி :
கோவை குழந்தைகள் கடத்திக்கொள்ளப்பட்ட அடுத்த நாளில் கோவை மாவட்டத்திலேயே ஏழாவது படிக்கும் ஒரு பெண் துர்மரணமடைந்துள்ளாள். காரணம் முந்தைய நாள் போல அல்ல , இது ஒரு விபத்து, ஆனால் தெரிந்தே நடத்தப்பட்ட கொலை.
ஆம் ,பொள்ளாச்சியை ஒட்டிய ஆனைமலை ஆழியாறுவால்பாறை ரோட்டில் ரமண முதலிப்புதூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தை ஒட்டிய தென்னந்தோப்பின் இரும்புக்கம்பி வேலிக்கு மின்சாரம் கொக்கி மூலமாக தோட்டத்தைப்பார்த்துக்கொள்பவர்கள் பாய்ச்சியிருக்கிறார்கள், . பள்ளியின் சுவற்றை ஒட்டியே அந்த இரும்புக்கம்பி வேலி உள்ளதால் காலையில் குப்பை கொட்டச் சென்ற அந்தப்பெண் மழை ஈரத்தின் காரணமாக கால் வழுக்கி கம்பியின் மீதே விழுந்ததால் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டாள்.
இது எப்படி கொலை ஆகும் ?
கம்பிவேலியின் அருகிலேயே குழந்தைகள் விளையாடும் பள்ளி என்பதை அறிந்தும் , எந்த வித அறிவிப்பும் இல்லாமல் கொடுக்கப்பட்ட மின் இணைப்பின் காரணமாக குழந்தை இறந்தது கொலைதானே அன்றி வேறென்ன?
மக்கள் இதன் காரணமாக ஆனைமலை , வால்பாறை ரோடுகளில் நான்கு மணீ நேர போராட்டம் நடத்தியும் தோட்டத்தின் ஓனர் வரவேயில்லை. தோட்டக்காரர் ஒரு மெத்தைக்கம்பெனி முதலாளி.
ஞாயிறன்று அந்த ஊர் சென்ற போது ஊர் முழுக்கு அஞ்சலி போஸ்டர்களை காணமுடிந்தது.
கோவை கொடூரத்தால் மக்கள் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டதாலும், சென்னைச் சம்பவமும் அதனை ஒட்டியே நடந்ததாலும் இந்த விசயம் மக்கள் மனதை அவ்வளவாக எட்ட வில்லை. அரசாங்கமும் ரூ 1 இலட்சம் அறிவித்து விட்டதுடன் வேறு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை.
தத்துப்பிள்ளை;
குழந்தை இல்லாத காரணத்தால் தத்து எடுத்து வளர்த்தப்பட்ட தவமணீ எவனோ ஒருவனின் விளையாட்டால் காலனிடம் சென்று விட்டாள், சொந்த குழந்தைக்கு மனம் பதைபதைத்த கோவைக்காரர்களுக்கு இந்த குழந்தை தத்துப்பிள்ளை என்று தெரிந்தால் என்ன நடக்குமோ? வளர்ப்புப் பெற்றோர்களுக்கு எப்படி இந்த இழப்பை !?
குழந்தையின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை வணங்குவோம்.
..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வன்மையாக கண்டிக்க தகுந்த நிகழ்வு
பதிலளிநீக்குதவமணி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்